என் மலர்
கிரிக்கெட் (Cricket)

டிஎன்பிஎல் 2025: சேப்பாக் சூப்பர் கில்லீஸ்க்கு 174 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது திருப்பூர் தமிழன்ஸ்
- துஷார் ராஹேஜா 43 பந்தில் 7 பவுண்டரி, 5 சிக்சருடன் 79 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.
- பிரதோஷ் ரஞ்சன் பால் 28 பந்தில் 38 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
தமிழ்நாடு பிரீமியர் லீக் (TNPL) 2025 சீசன் நேற்று தொடங்கியது. இன்று கோவையில் நடைபெறும் 2ஆவது போட்டியில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ்- ஐடிரீம் திருப்பூர் தமிழன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. டாஸ் வென்ற சேப்பாக் சூப்பர் கில்லீஸ் கேப்டன் பாபா அபரஜித் பந்து வீச்சை தெர்வு செய்தார்.
அதன்படி ஐடிரீம் திருப்பூர் தமிழன்ஸ் அணியின் அமித் சாத்விக், துஷார் ராஹேஜா ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். அமித் சாத்விக் ரன்ஏதும் எடுக்காமல் டக்அவுட் ஆனார்.
ஆனால் துஷார் ராஹேஜா சிறப்பாக விளையாடினார். 43 பந்தில் 7 பவுண்டரி, 5 சிக்சருடன் 79 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். இவருக்குத் துணையாக பிரதோஷ் ரஞ்சன் பாலும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதனால் 16 ஓவரில் திருப்பூர் தமிழன்ஸ் அணி 4 விக்கெட் இழப்பிற்கு 142 ரன்கள் சேர்த்திருந்தது. பிரதோஷ் ரஞ்சன் பால் 28 பந்தில் 38 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
17ஆவது ஓவரில் 10 ரன்களும், 18ஆவது ஓவரில் 8 ரன்களும் சேர்த்தது திருப்பூர் தமிழன்ஸ். 18 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 160 ரன்கள் சேர்த்தது.
19ஆவது ஓவரில் 8 ரன்களும், கடைசி ஓவரில் 5 ரன்களும் சேர்த்தது. இதனால் 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 173 ரன்கள் எடுத்துள்ளது. சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியின் அபிஷேக் தன்வர், விஜய் சங்கர் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.






