என் மலர்
கிரிக்கெட் (Cricket)
- ஷ்ரேயாஸ் ஐயருக்கு அணியின் இடமில்லை என அஜித் அகர்கர் கூறுவது அபத்தமாக உள்ளது.
- தற்போதைய பார்ம் வைத்து பார்த்தால் ஷ்ரேயஸ் கண்டிப்பாக அணியில் இருந்திருக்க வேண்டும்.
17-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி (20 ஓவர்) அடுத்த மாதம் (செப்டம்பர்) 9-ந்தேதி முதல் 28-ந்தேதி வரை துபாய் மற்றும் அபுதாபியில் நடக்கிறது. இதில் பங்கேற்கும் 8 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன.
'ஏ' பிரிவில் அங்கம் வகிக்கும் நடப்பு சாம்பியன் இந்தியாவுடன் பாகிஸ்தான், ஓமன், ஐக்கிய அரபு அமீரகம் அணிகளும் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் தங்களுக்குள் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் முடிவில் டாப்-2 இடத்தை பிடிக்கும் அணிகள் சூப்பர்4 சுற்றுக்கு முன்னேறும். இந்திய அணி பரம எதிரியான பாகிஸ்தானை செப்.14-ந்தேதி துபாயில் சந்திக்கிறது.
இந்த தொடருக்கான இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது. இதில் கேப்டனாக சூர்யகுமார் யாதவ், துணை கேப்டனாக சுப்மன் கில் நியமிக்கப்பட்டனர்.
இந்நிலையில் ஷ்ரேயாஸ் ஐயருக்கு அணியின் இடமில்லை என அஜித் அகர்கர் கூறுவது அபத்தமாக உள்ளது என இந்திய அணியின் முன்னாள் வீரர் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
ஷ்ரேயஸ்-க்கு அணியில் இடமில்லை என அஜித் அகர்கர் கூறுவது அபத்தமாக உள்ளது. தற்போதைய FORM வைத்து பார்த்தால் ஷ்ரேயஸ் கண்டிப்பாக அணியில் இருந்திருக்க வேண்டும். கடந்த IPL-ல் 600 ரன்களுக்கு மேல் எடுத்துள்ளார்.. பஞ்சாப் அணியை இறுதிப்போட்டிக்கு அழைத்துச் சென்றுள்ளார்.
என ஸ்ரீகாந்த் கூறினார்.
- இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரில், அக்சர் படேல் இந்திய அணியின் துணை கேப்டனாகச் செயல்பட்டிருந்தார்.
- ஓராண்டுக்கும் மேலாக டி20 அணியில் இடம்பெறாத கில்லுக்கு துணை கேப்டன் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
மும்பை:
ஆசிய கோப்பைக்கான இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது. இதில் கேப்டனாக சூர்யகுமார் யாதவும் துணை கேப்டனாக சுப்மன் கில் நியமிக்கப்பட்டனர். இதற்கு முன்பு, இந்த ஆண்டு பிப்ரவரியில் இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரில், அக்சர் படேல் இந்திய அணியின் துணை கேப்டனாகச் செயல்பட்டிருந்தார்.
தற்போது எந்த முன்னறிவிப்பும் இல்லாமல் அவர் பதவியிலிருந்து நீக்கப்பட்டு, ஓராண்டுக்கும் மேலாக டி20 அணியில் இடம்பெறாத கில்லுக்கு அந்தப் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், இந்திய அணியின் முன்னாள் வீரர் முகமது கைப், இந்த விவகாரம் குறித்து தனது கடும் அதிருப்தியைத் தெரிவித்துள்ளார்.
இந்த முடிவு குறித்து தனது எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில் முகமது கைப் கூறியதாவது:-
துணை கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்டது குறித்து அக்சர் படேலுக்கு தேர்வுக்குழு முன்கூட்டியே தகவல் தெரிவிக்கப்பட்டு இருக்கும் என்று நம்புகிறேன்.
பத்திரிகையாளர் சந்திப்பைப் பார்த்து அவர் இந்த விஷயத்தைத் தெரிந்து கொண்டிருக்கக் கூடாது. அக்சர் எந்தத் தவறும் செய்யவில்லை. எனவே அவருக்கு விளக்கம் கொடுக்கப்பட வேண்டும்.
என்று காட்டமாகப் பதிவிட்டுள்ளார்.
2024-ல் டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியில் அவரது பங்களிப்பு மிக முக்கியமானதாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
- சுப்மன் கில் சில வாரங்களுக்கு முன்பு தான் டெஸ்டில் 750 ரன்களுக்கு மேல் குவித்தார்.
- துணை கேப்டன் பதவி எதிர்கால கேப்டன் பதவிக்கான தெளிவான அறிகுறியாகும்.
புதுடெல்லி:
ஆசிய கோப்பை 20 ஓவர் கிரிக்கெட் போட்டி அடுத்த மாதம் (செப்டம்பர்) 9-ந் தேதி முதல் 28-ந்தேதி வரை ஐக்கிய அரபு எமிரேட்சில் உள்ள துபாய், அபுதாபியில் நடக்கிறது.
இந்தப் போட்டிக்கான 15 பேர் கொண்ட இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது. ஐ.பி.எல். போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஷ்ரேயாஸ் ஐய்யருக்கு அணியில் வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவரை தேர்வு செய்யாமல் நிராகரித்தனர்.
அதேநேரத்தில் டெஸ்ட் கேப்டன் சுப்மன் கில்லுக்கு 20 ஓவர் அணியில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அவருக்கு துணை கேப்டன் பதவி வழங்கப்பட்டுள்ளது. அக்க்ஷர் படேலின் துணை கேப்டன் பதவி பறிக்கப்பட்டது. 20 ஓவர் அணியில் ஷ்ரேயாஸ் ஐய்யருக்கு வாய்ப்பு கொடுக்காததால் முன்னாள் வீரர்கள் பலர் அஜித் அகர்கர் தலைமையிலான தேர்வு குழுவை விமர்சித்துள்ளனர்.
இந்த நிலையில் 20 ஓவர் அணிக்கு சுப்மன் கில் தேர்வு செய்யப்பட்டதை முன்னாள் கேப்டனும், டெலிவிசன் வர்ணனையாளருமான கவாஸ்கர் ஆதரவு தெரிவித்துள்ளார். அவருக்கு துணை கேப்டன் பதவி கொடுத்தது சரியே என்றும் கூறியுள்ளார்.
இது தொடர்பாக கவாஸ்கர் கூறியதாவது:-
சுப்மன் கில் சில வாரங்களுக்கு முன்பு தான் டெஸ்டில் 750 ரன்களுக்கு மேல் குவித்தார். அதுமாதிரி நல்ல நிலையில் இருக்கும் ஒரு வீரரை நீங்கள் ஒதுக்கி வைக்க முடியாது. துணை கேப்டன் பதவி வழங்குவது எதிர்காலத்தில் 20 ஓவர் அணியை வழி நடத்த முடியும் என்பதை அவருக்கு உணர்த்தும் ஒரு வழிமுறையாகும். இது மிகவும் சிறந்த தேர்வு என்று நான் நினைக்கிறேன்.
இங்கிலாந்தில் முதல் முறையாக டெஸ்ட் அணியை வழி நடத்தி 750-க்கும் மேற்பட்ட ரன்களை சுப்மன் கில் குவித்தது பாராட்டதக்கதாகும். அவர் நெருக்கடியை எப்படி கையாண்டார் என்பதை பார்த்தோம். துணை கேப்டன் பதவி எதிர்கால கேப்டன் பதவிக்கான தெளிவான அறிகுறியாகும்.
இவ்வாறு கவாஸ்கர் கூறியுள்ளார்.
இதற்கிடையே சுப்மன் கில்லை தேர்வு செய்வது தொடர்பாக தமிழக முன்னாள் வீரர் ஸ்ரீகாந்த் கேள்வி எழுப்பியுள்ளார். எந்த அடிப்படையில் அவர் 20 ஓவரில் தேர்வு செய்யப்பட்டார் என்று தெரிவித்துள்ளார்.
- அணித் தேர்வை பொறுத்தவரை யாரையும் முழுமையாக திருப்திப்படுத்த முடியாது.
- ஷாட்பிட்ச் பந்தை எதிர்கொள்வதில் உள்ள பிரச்சினையை சரி செய்தார்.
ஆசிய கோப்பை கிரிக்கெட் அணிக்கான இந்திய அணியின் தேர்வு குறித்து இந்திய முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஆர்.அஸ்வின் தனது யூடியூப் சேனலில் பேசுகையில், 'அணித் தேர்வை பொறுத்தவரை யாரையும் முழுமையாக திருப்திப்படுத்த முடியாது. ஒன்றிரண்டு பேரை வெளியேற்ற வேண்டி இருக்கும். அவர்களிடம் பேசும் போது சோகமும், ஏமாற்றமும் தெரியும். தேர்வு குழுவினர் ஷ்ரேயாஸ் அய்யர் மற்றும் ஜெய்ஸ்வாலுடன் பேசி இருப்பார்கள் என்று நினைக்கிறேன். சுப்மன் கில் 20 ஓவர் போட்டி அணிக்கு திரும்பியிருப்பது மகிழ்ச்சி. அதே நேரம் ஷ்ரேயாஸ் அய்யர் மற்றும் ஜெய்வாலுக்காக மிகவும் வருந்துகிறேன். அவர்களை சேர்க்காதது நியாயமற்ற முடிவு.
குறிப்பாக ஷ்ரேயாஸ் அய்யர் கடந்த ஐ.பி.எல். போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியை 11 ஆண்டுக்கு பிறகு இறுதிப்போட்டிக்கு அழைத்து சென்றார். 'ஷாட்பிட்ச்' பந்தை எதிர்கொள்வதில் உள்ள பிரச்சினையை சரி செய்தார். ஐ.பி.எல்.-ல் ரபடா, பும்ரா போன்ற முன்னணி பந்து வீச்சாளர்களை அடித்து நொறுக்கினார். இந்திய அணிக்கு மீண்டும் திரும்பி வந்து சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட்டில் பிரமாதமாக பேட்டிங் செய்தார். அதில் நமக்கு கோப்பையை வென்று தந்தார். சுப்மன் கில் போன்று ஷ்ரேயாஸ் அய்யரும் மிகச்சிறந்த பார்மில் இருக்கிறார். அவரை மட்டும் விட்டது ஏன், அவர் என்ன தவறு செய்தார்?' என்று அஸ்வின் கேள்வி எழுப்பியுள்ளார்.
ஷ்ரேயாஸ் அய்யர் இந்த ஆண்டு நடந்த ஐ.பி.எல். போட்டியில் 17 ஆட்டங்களில் ஆடி 6 அரைசதம் உள்பட 604 ரன்னும், சாம்பியன்ஸ் கோப்பையில் 5 ஆட்டங்களில் ஆடி 243 ரன்களும் குவித்தது குறிப்பிடத்தக்கது.
- ஆசிய கோப்பைக்கு சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
- துணை கேப்டனாக சுப்மன் கில் இடம் பெற்றுள்ளார்.
17-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி (20 ஓவர்) அடுத்த மாதம் (செப்டம்பர்) 9-ந்தேதி முதல் 28-ந்தேதி வரை துபாய் மற்றும் அபுதாபியில் நடக்கிறது. இதில் பங்கேற்கும் 8 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன.
'ஏ' பிரிவில் அங்கம் வகிக்கும் நடப்பு சாம்பியன் இந்தியாவுடன் பாகிஸ்தான், ஓமன், ஐக்கிய அரபு அமீரகம் அணிகளும் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் தங்களுக்குள் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் முடிவில் டாப்-2 இடத்தை பிடிக்கும் அணிகள் சூப்பர்4 சுற்றுக்கு முன்னேறும். இந்திய அணி பரம எதிரியான பாகிஸ்தானை செப்.14-ந்தேதி துபாயில் சந்திக்கிறது.
இந்நிலையில் இந்த தொடருக்கான சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. துணை கேப்டனாக சுப்மன் கில் இடம் பெற்றுள்ளார். அவர் அணியில் இடம் பெறுவாரா என்ற சந்தேகம் எழுந்த நிலையில் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், இந்திய டி20 அணியின் எதிர்கால கேப்டனாக சுப்மன் கில்லை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் மற்றும் தேர்வுக்குழுவினர் தயார் செய்ய உள்ளதாகவும் இதற்காக தான் அவர் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
- ஆஸ்திரேலியா தரப்பில் மிட்செல் மார்ஷ் 88 ரன்கள் எடுத்து அவுட் ஆனார்.
- மகாராஜ் 10 ஓவரில் 33 ரன்கள் விட்டுக் கொடுத்து 5 விக்கெட் வீழ்த்தியுள்ளார்.
கெய்ன்ஸ்:
ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி தலா 3 போட்டிகள் கொண்ட டி20 மற்றும் ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதலில் நடைபெற்ற டி20 தொடரை 2-1 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா கைப்பற்றியது.
அடுத்ததாக இவ்விரு அணிகள் இடையே 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெற உள்ளது. அதன்படி ஆஸ்திரேலியா- தென் ஆப்பிரிக்கா இடையிலான முதலாவது ஒருநாள் போட்டி கெய்ன்ஸ் நகரில் இன்று நடைபெற்று வருகிறது.
இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்கா அணி 50 ஓவரில் 8 விக்கெட்டை இழந்து 296 ரன்கள் எடுத்தது. தென் ஆப்பிரிக்கா தரப்பில் அதிகபட்சமாக மார்க்ரம் 82 ரன் எடுத்தார். ஆஸ்திரேலியா தரப்பில் டிராவிஸ் ஹெட் 4 விக்கெட் வீழ்த்தினார்.
இதனை தொடர்ந்து ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர்களாக டிராவிஸ் ஹெட் மற்றும் கேப்டன் மிட்செல் மார்ஷ் களமிறங்கினர். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 60 ரன்கள் எடுத்தது. ஹெட் 27 ரன்னில் சுப்ரயென் பந்து வீச்சில் ஸ்டெம்பிக் ஆனார்.
இதனையடுத்து வந்த மார்னஸ் லாபுசாக்னே 1, கேமரூன் கிரீன் 3, ஜோஸ் இங்கிலீஸ் 5, அலெக்ஸ் ஹேரி 0, ஆரோன் ஹார்டி 4 ரன்னில் அடுத்தடுத்து மகாராஜ் பந்து வீச்சில் அவுட் ஆகி வெளியேறினர். இதனால் ஆஸ்திரேலிய அணி 89 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து திணறியது.
இதனை தொடர்ந்து மார்ஷ் மற்றும் பென் த்வார்ஷுயிஸ் ஜோடி சேர்ந்து பொறுப்புடன் விளையாடி அணியின் ஸ்கோரை கணிசமாக உயர்த்தினர். இந்த ஜோடி 7-வது விக்கெட்டுக்கு 71 ரன்கள் சேர்த்தது. பென் த்வார்ஷுயிஸ் 33 ரன்னில் ஆட்டமிழந்தார். இதனை தொடர்ந்து மார்ஷ் 88 ரன்னிலும் ஆடம் ஜாம்பா 11 ரன்னிலும் வெளியேறினார்.
இதனால் ஆஸ்திரேலிய அணி 40.5 ஓவர்களில் 198 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. தென் ஆப்பிரிக்கா தரப்பில் கேசவ் மகாராஜ் 5 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் தென் ஆப்பிரிக்கா 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இரு அணிகளுக்கு இடையேயான 2-வது ஒருநாள் போட்டி வருகிற 22-ந் தேதி நடைபெறுகிறது.
- நடப்பு ஐபிஎல் தொடரில் ஆர்.சி.பி. அணி 18 ஆண்டு கழித்து கோப்பை வென்றது.
- ஐ.பி.எல். கோப்பை வெல்வது எவ்வளவு கடினம் என இப்போது அவர்களுக்குப் புரிந்திருக்கும் என்றார்.
புதுடெல்லி:
நடப்பு ஆண்டுக்கான ஐ.பி.எல். தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 18 ஆண்டுக்கு பிறகு முதல் முறையாகக் கோப்பை வென்றது.
ஆர்சிபி அணி 18 ஆண்டுகள் கழித்து ஐபிஎல் கோப்பையை வென்றது தொடர்பாக ஆதரவான கருத்துகளும், எதிர் கருத்துகளும் அவ்வப்போது வெளியாகி வருகின்றன.
இந்நிலையில், முன்னாள் கிரிக்கெட் வீரரான அம்பதி ராயுடு தனியார் பாட்காஸ்ட் நிகழ்ச்சியில் அளித்த பேட்டியில் கூறியதாவது:
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 18 ஆண்டுகளில் ஒரு ஐ.பி.எல். கோப்பையை வென்றுள்ளது என்றால், 5 கோப்பைகளை வெல்ல அவர்களுக்கு 72 ஆண்டுகள் ஆகும்.
ஐ.பி.எல். கோப்பையை வெல்வது எவ்வளவு கடினம் என்று இப்போது அவர்களுக்குப் புரிந்திருக்கும். 5 கோப்பைகளை வெல்வது எவ்வளவு கடினம் என்பதை கற்பனை செய்து பாருங்கள் என தெரிவித்தார்.
- ஆசிய கோப்பைக்கான இந்திய அணியில் ஷ்ரேயாஸ் ஐயர் இடம் பெறவில்லை.
- ஷ்ரேயஸை நாங்கள் மதிக்கிறோம்.
மும்பை:
17-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி (20 ஓவர்) அடுத்த மாதம் (செப்டம்பர்) 9-ந்தேதி முதல் 28-ந்தேதி வரை துபாய் மற்றும் அபுதாபியில் நடக்கிறது. இதில் பங்கேற்கும் 8 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன.
'ஏ' பிரிவில் அங்கம் வகிக்கும் நடப்பு சாம்பியன் இந்தியாவுடன் பாகிஸ்தான், ஓமன், ஐக்கிய அரபு அமீரகம் அணிகளும் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் தங்களுக்குள் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் முடிவில் டாப்-2 இடத்தை பிடிக்கும் அணிகள் சூப்பர்4 சுற்றுக்கு முன்னேறும். இந்திய அணி பரம எதிரியான பாகிஸ்தானை செப்.14-ந்தேதி துபாயில் சந்திக்கிறது.
இந்த தொடருக்கான இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டது. இதில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ஷ்ரேயாஸ் ஐயர் இடம் பெறாதது குறித்து அஜித் அகர்கரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு அஜித் அகர்கர் கூறியதாவது:-
ஷ்ரேயஸை நாங்கள் மதிக்கிறோம். ஆனால் யாருக்கு பதிலாக அவரை அணியில் எடுப்பது? அது அவருடைய தவறும் அல்ல, எங்களுடைய தவறும் அல்ல.
அதேபோல் ஜெய்ஸ்வாலை தேர்வு செய்யாததும் துரதிஷ்டவசமானது. அபிஷேக் தற்போது நன்றாக பேட்டிங் மற்றும் பவுலிங் செய்து வருவதாலேயே அவரை அணியில் சேர்த்தோம்.
என கூறினார்.
- இந்திய மகளிர் அணி இதுவரை உலகக்கோப்பையை வென்றதில்லை.
- ஹர்மன்பிரீத் கவுர் கேப்டனாகவும் ஸ்மிருதி மந்தனா துணை கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மும்பை:
13-வது மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி அடுத்த மாதம் (செப்டம்பர்) 30-ந்தேதி முதல் நவம்பர் 2-ந்தேதி வரை இந்தியா மற்றும் இலங்கையில் நடக்கிறது. இந்தியாவில் மகளிர் உலகக்கோப்பை அரங்கேறுவது இது 4-வது முறையாகும்.
இதில் இந்தியா, நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், நியூசிலாந்து, இலங்கை, இங்கிலாந்து, தென்ஆப்பிரிக்கா, வங்காளதேசம் ஆகிய 8 அணிகள் பங்கேற்கின்றன. ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் முடிவில் டாப்-4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும்.
இந்தியாவில் பெங்களூரு, கவுகாத்தி, விசாகப்பட்டினம், இந்தூரிலும், இலங்கையின் தலைநகர் கொழும்பிலும் மொத்தம் 31 ஆட்டங்கள் நடத்தப்படுகின்றன. பாதுகாப்பு பிரச்சினை காரணமாக பாகிஸ்தான் அணிக்குரிய அனைத்து ஆட்டங்களும் இலங்கையில் இடம் பெறுகின்றன. இதன் தொடக்க ஆட்டத்தில் இந்தியா- இலங்கை அணிகள் மோதுகின்றன.
இந்த தொடருக்கான 15 பேர் கொண்ட இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஹர்மன்பிரீத் கவுர் கேப்டனாகவும் ஸ்மிருதி மந்தனா துணை கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
ஹர்மன்பிரீத் கவுர் (கேப்டன்), ஸ்மிருதி மந்தனா (துணை கேப்டன்), பிரதிகா ராவல், ஹர்லீன் தியோல், தீப்தி ஷர்மா, ஜெமிமா ரோட்ரிக்ஸ், ரேணுகா சிங் தாக்கூர், அருந்ததி ரெட்டி, ரிச்சா கோஷ் (விக்கெட் கீப்பர்), கிராந்தி கவுட், அமஞ்சோத் கவுர், ராதா யாதவ், ஸ்ரீ சரணி, யஸ்திகா (விக்கெட் கீப்பர்).
இந்திய மகளிர் அணி இதுவரை உலகக்கோப்பையை வென்றதில்லை. அதிகபட்சமாக 2005 மற்றும் 2017-ம் ஆண்டுகளில் இறுதிப்போட்டி வரை வந்து தோற்று இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
- மகாராஜ் முதல் 4.2 ஓவரில் 9 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்த 5 விக்கெட்டுகளை அள்ளினார்.
- மகாராஜ் 10 ஓவரில் 33 ரன்கள் விட்டுக் கொடுத்து 5 விக்கெட் வீழ்த்தியுள்ளார்.
கெய்ன்ஸ்:
ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி தலா 3 போட்டிகள் கொண்ட டி20 மற்றும் ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதலில் நடைபெற்ற டி20 தொடரை 2-1 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா கைப்பற்றியது.
அடுத்ததாக இவ்விரு அணிகள் இடையே 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெற உள்ளது. அதன்படி ஆஸ்திரேலியா- தென் ஆப்பிரிக்கா இடையிலான முதலாவது ஒருநாள் போட்டி கெய்ன்ஸ் நகரில் இன்று நடைபெற்று வருகிறது.
இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்கா அணி 50 ஓவரில் 8 விக்கெட்டை இழந்து 296 ரன்கள் எடுத்தது. தென் ஆப்பிரிக்கா தரப்பில் அதிகபட்சமாக மார்க்ரம் 82 ரன் எடுத்தார். ஆஸ்திரேலியா தரப்பில் டிராவிஸ் ஹெட் 4 விக்கெட் வீழ்த்தினார்.
இதனை தொடர்ந்து ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர்களாக டிராவிஸ் ஹெட் மற்றும் கேப்டன் மிட்செல் மார்ஷ் களமிறங்கினர். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 60 ரன்கள் எடுத்தது. ஹெட் 27 ரன்னில் சுப்ரயென் பந்து வீச்சில் ஸ்டெம்பிக் ஆனார்.
இதனையடுத்து வந்த மார்னஸ் லாபுசாக்னே 1, கேமரூன் கிரீன் 3, ஜோஸ் இங்கிலீஸ் 5, அலெக்ஸ் ஹேரி 0, ஆரோன் ஹார்டி 4 ரன்னில் அடுத்தடுத்து மகாராஜ் பந்து வீச்சில் அவுட் ஆகி வெளியேறினர்.
மகாராஜ் முதல் 4.2 ஓவரில் 9 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்த 5 விக்கெட்டுகளை அள்ளினார். அவர் அதன்பிறகு விக்கெட் வீழ்த்த முடியவில்லை. அவர் 10 ஓவரில் 33 ரன்கள் விட்டுக் கொடுத்து 5 விக்கெட் வீழ்த்தியுள்ளார்.
- டி20 போட்டியில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜெய்ஸ்வால் இடம் பெறவில்லை.
- அதிகம் எதிர்பார்த்த ஷ்ரேயாஸ் ஐயரும் இந்த அணியில் இடம் பெறவில்லை.
மும்பை:
17-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி (20 ஓவர்) அடுத்த மாதம் (செப்டம்பர்) 9-ந்தேதி முதல் 28-ந்தேதி வரை துபாய் மற்றும் அபுதாபியில் நடக்கிறது. இதில் பங்கேற்கும் 8 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன.
'ஏ' பிரிவில் அங்கம் வகிக்கும் நடப்பு சாம்பியன் இந்தியாவுடன் பாகிஸ்தான், ஓமன், ஐக்கிய அரபு அமீரகம் அணிகளும் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் தங்களுக்குள் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் முடிவில் டாப்-2 இடத்தை பிடிக்கும் அணிகள் சூப்பர்4 சுற்றுக்கு முன்னேறும். இந்திய அணி பரம எதிரியான பாகிஸ்தானை செப்.14-ந்தேதி துபாயில் சந்திக்கிறது.
இந்த தொடருக்கான இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் கேப்டனாக சூர்யகுமார் யாதவ், துணை கேப்டனாக சுப்மன் கில் நியமிக்கப்பட்டனர்.
மாற்று தொடக்க வீரர்களாக சுப்மன் கில், ஜெய்ஸ்வால் இடையே போட்டி நிலவிய நிலையில் சுப்மன் கில் தேர்வு செய்யப்பட்டுள்ளார். கில் இந்த அணியில் இடம்பெறுவாரா இல்லையா என்ற சந்தேகம் எழுந்த நிலையில் அவர் துணை கேப்டனாகவே அணியில் இடம் பிடித்துள்ளார்.
அவரை 3 வடிவிலான அணிக்கும் கேப்டனாக செயல்பட திட்டமிட்டுள்ளதால் அவர் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளதாக கிரிக்கெட் வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த அணியில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சில வீரர்கள் இந்திய அணியில் இடம் கிடைக்கவில்லை. அதில் முக்கிய வீரராக ஷ்ரேயாஸ் ஐயர் உள்ளார். இவர் நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தார். குறிப்பாக ஷாட் பந்தை அடிக்க தடுமாறுகிறார் என விமர்சனங்கள் அவர் மீது வைத்த நிலையில் ஷாட் பந்தை சிக்சர்களாக பறக்க விட்டு அந்த விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்தார்.
அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தியும் அவர் அணியில் இடம் பெறாதது ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் தமிழக வீரரான வாஷிங்டன் சுந்தரும் ஐபிஎல் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியிருந்தார். அவர் நியூ பந்தில் பந்து வீசும் திறன் உடையவர். அவரும் இடம் பெறாதது அதிர்ச்சியாக உள்ளது.
இவர்களை தவிர ரியான் பராக், துருவ் ஜூரல் அணியில் இடம்பெறாதது குறித்து ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். சிராஜ்-க்கு ஓய்வு வழங்கப்பட்டுள்ளாதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
- மும்பை மற்றும் புறநகரில் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது.
- சாலைகளில் மழை நீர் தேங்கி உள்ளதால் வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர்.
மும்பை:
மகாராஷ்டிரா தலைநகர் மும்பை மற்றும் புறநகரில் கடந்த சில நாட்களாக பலத்த மழை கொட்டி தீர்த்து வருகிறது. இன்று காலையிலும் மழை வெளுத்து வாங்கியது.
கொட்டித் தீர்த்த கனமழையால் மும்பை நகரமே வெள்ளக்காடாக மாறி உள்ளது.
சாலைகளில் மழை நீர் தேங்கி உள்ளதால் வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்தனர்.
இந்நிலையில், இந்திய அணியின் ஒருநாள் போட்டிக்கான கேப்டன் ரோகித் சர்மா, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், அனைவரும் பத்திரமாக, பாதுகாப்பாக இருங்கள் என பதிவிட்டுள்ளார்.