என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    ஆசிய கோப்பை தொடரில் ஷ்ரேயாஸ் ஐயருக்கு ஏன் இடமில்லை? யாரும் எதிர்பார்க்காத பதில் அளித்த அகர்கர்
    X

    ஆசிய கோப்பை தொடரில் ஷ்ரேயாஸ் ஐயருக்கு ஏன் இடமில்லை? யாரும் எதிர்பார்க்காத பதில் அளித்த அகர்கர்

    • ஆசிய கோப்பைக்கான இந்திய அணியில் ஷ்ரேயாஸ் ஐயர் இடம் பெறவில்லை.
    • ஷ்ரேயஸை நாங்கள் மதிக்கிறோம்.

    மும்பை:

    17-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி (20 ஓவர்) அடுத்த மாதம் (செப்டம்பர்) 9-ந்தேதி முதல் 28-ந்தேதி வரை துபாய் மற்றும் அபுதாபியில் நடக்கிறது. இதில் பங்கேற்கும் 8 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன.

    'ஏ' பிரிவில் அங்கம் வகிக்கும் நடப்பு சாம்பியன் இந்தியாவுடன் பாகிஸ்தான், ஓமன், ஐக்கிய அரபு அமீரகம் அணிகளும் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் தங்களுக்குள் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் முடிவில் டாப்-2 இடத்தை பிடிக்கும் அணிகள் சூப்பர்4 சுற்றுக்கு முன்னேறும். இந்திய அணி பரம எதிரியான பாகிஸ்தானை செப்.14-ந்தேதி துபாயில் சந்திக்கிறது.

    இந்த தொடருக்கான இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டது. இதில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ஷ்ரேயாஸ் ஐயர் இடம் பெறாதது குறித்து அஜித் அகர்கரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

    அதற்கு அஜித் அகர்கர் கூறியதாவது:-

    ஷ்ரேயஸை நாங்கள் மதிக்கிறோம். ஆனால் யாருக்கு பதிலாக அவரை அணியில் எடுப்பது? அது அவருடைய தவறும் அல்ல, எங்களுடைய தவறும் அல்ல.

    அதேபோல் ஜெய்ஸ்வாலை தேர்வு செய்யாததும் துரதிஷ்டவசமானது. அபிஷேக் தற்போது நன்றாக பேட்டிங் மற்றும் பவுலிங் செய்து வருவதாலேயே அவரை அணியில் சேர்த்தோம்.

    என கூறினார்.

    Next Story
    ×