என் மலர்
விளையாட்டு
- சன்ரைசர்ஸ் ஐதராபாத் தனது தொடக்க லீக் ஆட்டத்தில் 4 ரன் வித்தியாசத்தில் கொல்கத்தாவிடம் போராடி தோற்றது.
- மும்பை இந்தியன்ஸ் அணி தன்னுடைய முதல் ஆட்டத்தில் 6 ரன் வித்தியாசத்தில் குஜராத்திடம் பணிந்தது.
ஐதராபாத்:
ஐபிஎல் தொடரின் 8-வது லீக் போட்டியில் இன்று சன்ரைசர்ஸ் ஐதராபாத்- மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகிறது. முன்னாள் சாம்பியனான சன்ரைசர்ஸ் ஐதராபாத் தனது தொடக்க லீக் ஆட்டத்தில் 4 ரன் வித்தியாசத்தில் கொல்கத்தாவிடம் போராடி தோற்றது.
இதேபோல் 5 முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணி தன்னுடைய முதல் ஆட்டத்தில் 6 ரன் வித்தியாசத்தில் குஜராத்திடம் பணிந்தது. இதனால் முதல் வெற்றியை பெற இரு அணிகளும் போராடும்.
இந்நிலையில் இந்த போட்டியில் விளையாடுவதன் மூலம் ரோகித் சர்மா புதிய சாதனை ஒன்றை படைக்கவுள்ளார். அது என்னவென்றால் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக 200-வது போட்டியில் களமிறங்க உள்ளார். இதற்கு முன்பு விராட் கோலி மற்றும் டோனி மட்டுமே ஐபிஎல் தொடரில் ஒரு அணிக்காக 200 போட்டியில் விளையாடிய வீரர்கள் ஆவர். அந்த பட்டியலில் ரோகித் சர்மாவும் இணையவுள்ளார்.
ஐபிஎல் தொடரில் 2008-ம் ஆண்டு அறிமுகமான ரோகித் முதலில் டெக்கான் சார்ஜர்ஸ் அணிக்காக விளையாடினார். அந்த அணிக்காக 2008-ம் ஆண்டு முதல் 2010-ம் ஆண்டும் வரை டெக்கான் சார்ஜர்ஸ் அணியில் இருந்தார். 2009-ம் அந்த அணி கோப்பையை வெல்ல ரோகித் சர்மா முக்கிய பங்காற்றினார். அந்த அணிக்காக 45 போட்டியில் விளையாடி 1170 ரன்கள் குவித்தார். அதன் பிறகு 2011-ம் ஆண்டில் மும்பை இந்தியன்ஸ் அணியில் இணைந்து தற்போது வரை விளையாடி வருகிறார்.
2013-ல் ரிக்கி பாண்டிங்கிடம் இருந்து கேப்டன் பொறுப்பை ஏற்றுக் கொண்ட ரோகித், கடந்த 10 ஆண்டுகளாக மும்பை இந்தியன்ஸ் அணிக்காக 5 முறை ஐபிஎல் கோப்பைகளை வென்று கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
- ஐபிஎல் தொடரின் நேற்றைய போட்டியில் சென்னை - குஜராத் அணிகள் மோதின.
- இந்த போட்டியில் சிஎஸ்கே 63 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ஐபிஎல் தொடரின் 7-வது லீக் போட்டி நேற்று நடைபெற்றது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ்- குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற குஜராத் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் ஆடிய சென்னை அணி 6 விக்கெட்டுகளை இழந்து 206 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக சிவம் துபே 52 ரன்கள் விளாசினார். இதனை தொடர்ந்து விளையாடிய குஜராத் அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 143 ரன்கள் எடுத்தது. இதனால் சென்னை அணி 63 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
முன்னதாக குஜராத் அணி மெதுவாக பந்து வீசியதாக அந்த அணியின் கேப்டனான சுப்மன் கில்லுக்கு 12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
- இந்தியா- பாகிஸ்தான் இருதரப்பு கிரிக்கெட் தொடர் 2012-13-க்குப் பிறகு நடைபெறவில்லை.
- நவம்பர் மாதம் இரண்டு அணிகளும் ஆஸ்திரேலியா செல்ல இருக்கிறது. அப்போது நடத்த ஆஸ்திரேலியா விரும்புகிறது.
இந்தியா- பாகிஸ்தான் இடையிலான கிரிக்கெட் போட்டி ரசிகர்களுக்கு விருந்து அளிப்பதாக இருக்கும். இங்கிலாந்து- ஆஸ்திரேலியா இடையிலான ஆஷஸ் தொடருக்கு இணையாக இந்தத் தொடர் பார்க்கப்படுகிறது. கிரிக்கெட் ரசிகர்களுக்கு மட்டுமல்ல போட்டியை நடத்தும் நாட்டிற்கு பொருளாதார ரீதியில் சிறந்ததாக இருக்கும்.
ஆனால் இந்தியா- பாகிஸ்தான் எல்லையில் பயங்கரவாதத்தை பாகிஸ்தான் ஊக்குவிப்பதாக இந்தியா தொடர்ந்த குற்றம்சாட்டியது. மேலும், எல்லையில் பயங்கரவாதத்தை நிறுத்தும் வரையில் இருநாடுகளுக்கு இடையில் கிரிக்கெட் தொடர் கிடையாது என இந்தியா தெரிவித்தது.
இதன்காரணமாக 2012-13-க்குப் பிறகு இரு நாடுகளுக்கு இடையில் கிரிக்கெட் தொடர் நடத்தப்படவில்லை. உலகக் கோப்பை, ஆசிய கோப்பை போன்ற ஐசிசி தொடர்பான தொடர்களில் மட்டுமே இரு அணிகளும் மோதிக் கொள்கின்றன.
இந்த நிலையில் இருநாட்டு கிரிக்கெட் போர்டுகளும் சம்மதம் தெரிவித்தால், நாங்கள் இரு நாடுகளுக்கு இடையிலான கிரிக்கெட் தொடரை நடத்த தயாராக இருக்கிறோம் என ஆஸ்திரேலியா கிரிக்கெட் போர்டின் சிஇஓ தனது விருப்பத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
இதற்கு காரணமும் உள்ளது. ஏனென்றால் இந்த மாதம் நவம்பர் மாதம் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் ஆஸ்திரேலியா செல்கின்றன. இந்தியா ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. முதல் டெஸ்ட் பெர்த்தில் நவம்பர் 22-ந்தேதி தொடங்குகிறது. அதேவேளையில் பாகிஸ்தான் அணி மூன்று ஒருநாள் மற்றும் மூன்று டி20 போட்டிகளில் விளையாடுகின்றன.
அப்போது இந்தியா- பாகிஸ்தான் இடையிலான தொடரை நடத்திவிடலாம் என ஆஸ்திரேலியா விரும்புகிறது. 2022 டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின்போது இந்தியா- பாகிஸ்தான் இடையிலான போட்டி மெல்போர்ன் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியை 90,293 ரசிகர்கள் போட்டியை கண்டு ரசித்தனர்.

ஆஸ்திரேலியா கிரிக்கெட் சிஇஓ நிக் ஹாக்லி
மீண்டும் இந்தியா- பாகிஸ்தான் இடையிலான போட்டி நடைபெற்றால் நிதி ரீதியாக சிறந்த நடவடிக்கையாக இருக்கும் என விக்டோரியா அரசும் தனது விருப்பத்தை தெரிவித்துள்ளது. விக்டோரியாவில்தான் மெல்போர்ன் மைதானம் உள்ளது.
நாங்கள் பாகிஸ்தானுக்காக இந்த போட்டியை நடத்துவதிலும் மகிழ்ச்சி அடைகிறோம். இந்தியாவுக்காக போட்டியை நடத்துவதிலும் மகிழ்ச்சியாக இருக்கிறோம். எங்களால் உதவ முடியும் என்றால் அது சிறப்பானது. ஆனால், இது இரு நாடுகளுக்கு இடையிலான தொடர். இது மற்றவர்களுக்காகத்தான் (இந்தியா அல்லது பாகிஸ்தான்) நடத்தப்படும் என ஆஸ்திரேலியா கிரிக்கெட்டின் சிஇஓ நிக் ஹாக்லி தெரிவித்துள்ளார்.
- ஷிவம் துபே 23 பந்தில் 51 ரன்னும் ரச்சின் ரவீந்திரா 20 பந்தில் 46 ரன்னும் விளாசினர்.
- தீபக் சாஹர், முஸ்டாபிஜூர் ரகுமான், துஷார் தேஷ்பாண்டே தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
ஐ.பி.எல் போட்டியில் குஜராத் அணியை வீழ்த்தி சி.எஸ்.கே. தொடர்ந்து 2-வது வெற்றியை பெற்றது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த இந்த ஆட்டத்தில் முதலில் விளையாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 206 ரன் குவித்தது.
ஷிவம் துபே 23 பந்தில் 51 ரன்னும் (2 பவுண்டரி, 5 சிக்சர்), ரச்சின் ரவீந்திரா 20 பந்தில் 46 ரன்னும் (6 பவுண்டரி, 3 சிக்சர்), கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் 36 பந்தில் 46 ரன்னும் (5 பவுண்டரி, 1 சிக்சர்) எடுத்தனர். ரஷித் கான் 2 விக்கெட்டும், சாய் கிஷோர், ஸ்பென்சர் ஜான்சன், மோகித் சர்மா தலா 1 விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.
பின்னர் ஆடிய குஜராத் டைட்டன்ஸ் 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 143 ரன் எடுத்தது. இதனால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 63 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
சாய் சுதர்சன் அதிகபட்சமாக 31 பந்தில் 37 ரன் (3 பவுண்டரி ) எடுத்தார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்னில் வெளியேறினார்கள். தீபக் சாஹர், முஸ்டா பிசுர் ரகுமான், துஷார் தேஷ்பாண்டே தலா 2 விக்கெட்டும், டேரில் மிட்செல், பதிரனா தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.
சென்னை சூப்பர் கிங்ஸ் பெற்ற 2-வது வெற்றியாகும். முதல் ஆட்டத்தில் பெங்களூரு அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இருந்தது.
இந்த வெற்றி குறித்து சி.எஸ்.கே. கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் கூறியதாவது:-
பேட்டிங், பந்து வீச்சு, பீல்டிங் என அனைத்து துறைகளிலும் நாங்கள் சிறப்பாக செயல்பட்டோம். குஜராத் போன்ற அணிக்கு எதிராக இது மாதிரியான ஆட்டத்தை நாங்கள் செயல்படுத்த வேண்டி இருந்தது.
சேப்பாக்கம் ஆடுகளம் (முதல் 10 ஓவரில் 104 ரன்) எப்படி இருக்கும் என்று உங்களுக்கு தெரியாதபோது நீங்கள் எப்படி பேட்டிங் செய்கிறீர்கள் என்பதை பொருட்படுத்தாமல் நன்றாக பேட்டிங் செய்ய வேண்டும். பவர் பிளேயில் ரச்சின் அற்புதமாக பேட்டிங் செய்து ஆட்டத்தை முன்னோக்கி கொண்டு சென்றார்.
ஷிவம் துபேயின் அதிரடி ஆட்டத்தை பார்த்து டோனி வியந்தார். அவர் சி.எஸ்.கே.வுக்கு வந்ததில் இருந்து அவருடன் டோனி இணைந்துப் பணியாற்றினார். மேலும் அவரது நம்பிக்கை அதிகமாக இருந்தது. எங்களது பீல்டிங் மிகவும் சிறப்பாக இருந்தது.
இவ்வாறு ருதுராஜ் கெய்க்வாட் கூறியுள்ளார்.
குஜராத் அணி முதல் தோல்வியை தழுவியது. தோல்வி குறித்து அந்த அணி கேப்டன் சுப்மன் கில் கூறும்போது 'இந்த தோல்வி மூலம் நாங்கள் பாடம் கற்றோம். மாறுபட்ட அனுபவம் கிடைத்தது' என்றார்.
சென்னை சூப்பர் கிங்ஸ் 3-வது ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்சை 31-ந்தேதி விசாகப்பட்டினத்தில் சந்திக்கிறது. குஜராத் 3-வது போட்டியில் அதே தினத்தில் ஐதராபாத்தை எதிர்கொள்கிறது.
- போட்டி முடிவில் 63 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.
- ரஹானே 12 ரன்களில் பெவிலியன் திரும்பினார்.
ஐ.பி.எல். 2024 கிரிக்கெட் தொடரின் நேற்றைய (மார்ச் 26) ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்த குஜராத் அணி போட்டி முடிவில் 63 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.
இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 206 ரன்களை குவித்தது. சென்னை சார்பில் துவக்க வீரர்களான கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் ரச்சின் ரவீந்திரா தலா 46 ரன்களை குவித்து நல்ல துவக்கம் கொடுத்தனர். அடுத்து வந்த ரஹானே 12 ரன்களில் பெவிலியன் திரும்பினார்.

அடுத்து வந்த ஷிவம் தூபே அதிரடியாக ஆடி 23 பந்துகளில் 51 ரன்களை குவித்தார். போட்டி முடிவில் டேரில் மிட்செல் 24 ரன்களுடன் களத்தில் இருந்தார். இந்த நிலையில், 207 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய குஜராத் அணி சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தது.
சேசிங்கில் குஜராத் அணி 55 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்திருந்த நிலையில் மிட்செல் பந்து வீச்சை எதிர்கொண்டார் விஜய் சங்கர். இந்த பந்து அவரது பேட்-இல் டிப் ஆகி விக்கெட் கீப்பருக்கு கேட்ச் ஆக மாறியது. கீப்பிங்கில் நின்றிந்த எம்.எஸ். டோனி தன்னை விட பந்து சற்று விலகியே சென்ற போதிலும், அபாரமாக பாய்ந்து கேட்ச் பிடித்தார்.
இந்த சீசன் துவங்கும் முன்பிருந்தே, எம்.எஸ். டோனி இந்த சீசனுடன் ஓய்வு பெறுவாரோ என்ற பேச்சும், அவரது உடல்நிலை குறித்த சந்தேகமும் நெட்டிசன்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பெரும் கேள்விக்குறியாக இருந்தது வந்தது. இவற்றுக்கு பதில் அளிக்கும் வகையில், எம்.எஸ். டோனியின் நேற்றைய கேட்ச் அமைந்தது. இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.
- பொறுப்புடன் விளையாடிய சாய் சுதர்சன் 37 ரன்னில் அவுட் ஆனார்.
- சென்னை அணி தரப்பில் தீபக் சாஹர், தேஷ்பாண்டே 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
ஐபிஎல் தொடரின் இன்றைய 7-வது லீக் போட்டியில் சென்னை - குஜராத் அணிகள் மோதியது. இதில் டாஸ் வென்ற குஜராத் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் ஆடிய சென்னை அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 206 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக துபே 51, ரச்சின், ருதுராஜ் ஆகியோர் 46 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர்.
இதனையடுத்து 207 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் குஜராத் அணி களமிறங்கியது. தொடக்க வீரரான கில் 8 ரன்னில் ஆட்டமிழந்தார். இதனை தொடர்ந்து இம்பேக்ட் பிளேயராக சாய் சுதர்சன் இறங்கினார். சாஹா மற்றும் சுதர்சன் இருவரும் சிறப்பாக விளையாடி ரன்களை சேர்த்தனர்.
சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சாஹாவுக்கு பவுன்சர் பந்தை வீசி தலையில் அடிபட வைத்த தீபக் சாஹர் அடுத்த பந்திலேயே அவரது (21) விக்கெட்டை வீழ்த்தினார். அடுத்து வந்த விஜய் சங்கர் 12, மில்லர் 21 ரன்னில் நடையைக் கட்டினர்.
பொறுப்புடன் விளையாடிய சாய் சுதர்சன் 37 ரன்னில் அவுட் ஆனார். இதனையடுத்து வந்த வீரர்கள் சொற்ப ரன்னில் வெளியேற 20 ஓவர் முடிவில் குஜராத் அணி 8 விக்கெட்டுகளை இழந்து 143 ரன்கள் எடுத்தது. இதனால் 63 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை வெற்றி பெற்றது. சென்னை அணி தரப்பில் தீபக் சாஹர், தேஷ்பாண்டே 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
- ஆண்ட்ரிச் நோர்ட்ஜேவுக்கு இந்த ஒப்பந்தத்தில் இடம் கிடைக்கவில்லை.
- டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவித்துள்ள டீன் எல்கரும் இப்பட்டியலில் இருந்து விலக்கப்பட்டுள்ளார்.
தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் தங்கள் அணியின் வீரர் வீராங்கனைகளுக்கான 2024-25 ஆம் ஆண்டிற்கான ஒப்பந்த பட்டியலை இன்று வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்த நட்சத்திர வீரர் குயின்டன் டி காக் பெயர் இடம்பெறவில்லை. முன்னதாக டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வை அறிவித்த அவர் தற்போது டி20 கிரிக்கெட்டில் மட்டுமே விளையாடி வருகிறார்.
மேலும் காயம் காரணமாக கடந்த ஓராண்டாக விளையாடமல் இருந்துவரும் வேகப்பந்து வீச்சாள் ஆண்ட்ரிச் நோர்ட்ஜேவுக்கு இந்த ஒப்பந்தத்தில் இடம் கிடைக்கவில்லை. அதேபோல் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவித்துள்ள டீன் எல்கரும் இப்பட்டியலில் இருந்து விலக்கப்பட்டுள்ளார். மேலும் கடந்த ஓராண்டாக தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணிக்காக விளையாடிய சிசாண்டா மகாலா, வெய்ன் பார்னெல், கீகன் பீட்டர்சென் ஆகியோருக்கும் ஒப்பந்தத்தில் இடம் கிடைக்கவில்லை.
மேலும் ஜெரால்ட் கோட்ஸி, நந்த்ரே பர்கர், டோனி டி ஸோர்ஸி ஆகியோர் தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரிய ஒப்பந்தத்தைப் பெற்றுள்ளார்.
அவர்களுடன் நட்சத்திர வீரர்களான ஐடன் மார்க்ரம், ஹென்ரிச் கிளாசென், டெம்பா பவுமா, டேவிட் மில்லர், லுங்கி இங்கிடி, தப்ரைஸ் ஸம்ஸி, காகிசோ ரபாடா ஆகியோரும் ஒப்பந்த பட்டியலில் தொடர்கின்றனர். தென் ஆப்பிரிக்க மகளிர் அணியை பொறுத்தவரையில் கடந்தாண்டு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்த ஷப்னிம் இஸ்மாயில் மட்டும் ஒப்பந்த பட்டியலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.
- ஐபிஎல் தொடரின் இன்றைய 7-வது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ்- குஜராத் அணிகள் மோதுகிறது.
- தல டோனியை பார்க்க ஆவலுடன் காத்திருக்கிறேன் என்று சூரி பதிவிட்டுள்ளார்
ஐபிஎல் தொடரின் இன்றைய 7-வது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ்- குஜராத் அணிகள் மோதுகிறது. இதில் டாஸ் வென்ற குஜராத் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.
போட்டியில் அதிரடியாக ஆடிய ரச்சின் 46 ரன்கள் விளாசினார். 5 சிக்சர்களை பறக்கவிட்ட துபே அரை சதம் கடந்து 51 ரன்னில் ஆட்டமிழந்தார். இறுதியில் சென்னை அணி 6 விக்கெட்டுகளை இழந்து 206 ரன்கள் குவித்தது.
குஜராத் அணி தரப்பில் ரஷித் கான் 2 விக்கெட்டுகளையும் சாய் கிஷோர், ஜான்சன், மோகித் சர்மா ஆகியோர் தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.
இந்த போட்டியை நடிகர் சூரி நேரில் கண்டு கழித்தார். இது தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளார். அதில்,
"முதல் முறை சேப்பாக்கம் மைதானத்தில். Fantastic Atmosphere. அற்புதமான ரசிகர்கள். சென்னை என்றாலே தனி கெத்து தான். நம்மாளுங்க மைதானத்தில் பட்டைய கிளப்புறாங்க...தல டோனியை பார்க்க ஆவலுடன் காத்திருக்கிறேன்" என்று சூரி பதிவிட்டுள்ளார்.
- 20 பந்துகளில் 46 ரன்கள் குவித்த ரச்சின் எதிர்பாரதவிதமாக ஸ்டெம்பிங் முறையில் ஆட்டமிழந்தார்.
- 5 சிக்சர்களை பறக்கவிட்ட துபே அரை சதம் கடந்து 51 ரன்னில் ஆட்டமிழந்தார்.
ஐபிஎல் தொடரின் இன்றைய 7-வது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ்- குஜராத் அணிகள் மோதுகிறது. இதில் டாஸ் வென்ற குஜராத் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.
அதன்படி சென்னை அணியின் தொடக்க வீரர்களாக ரச்சின் ரவீந்திரா- ருதுராஜ் களமிறங்கினர். ருதுராஜ் 1 ரன்னில் கொடுத்த கேட்ச் வாய்ப்பை தமிழக வீரர் சாய் கிஷோர் மிஸ் செய்தார். முதல் ஓவரில் 2 ரன்களை மட்டுமே எடுத்த சிஎஸ்கே அதன்பிறகு அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தனர்.
20 பந்துகளில் 46 ரன்கள் குவித்த ரச்சின் எதிர்பாரதவிதமாக ஸ்டெம்பிங் முறையில் ஆட்டமிழந்தார். இதனால் பவர்பிளே முடிவில் சிஎஸ்கே அணி 1 விக்கெட் இழப்பிற்கு 69 ரன்கள் குவித்தது. அடுத்து வந்த ரகானே 12 ரன்னிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ருதுராஜ் 46 ரன்னிலும் வெளியேறினார்.
இதனையடுத்து துபே- மிட்செல் ஜோடி சேர்ந்து குஜராத் பந்து வீச்சை நாலாபுறமும் விளாசினார். 5 சிக்சர்களை பறக்கவிட்ட துபே அரை சதம் கடந்து 51 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்த வந்த இளம் வீரர் ரிஸ்வி அடுத்தடுத்து 2 சிக்சர்களை விளாசி ரசிகர்களை உற்சாகப்படுத்தினார்.
இறுதியில் சென்னை அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 206 ரன்கள் குவித்தது. குஜராத் அணி தரப்பில் ரஷித் கான் 2 விக்கெட்டுகளையும் சாய் கிஷோர், ஜான்சன், மோகித் சர்மா ஆகியோர் தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.
- அகர்வால் விக்கெட் வீழ்த்திய கொல்கத்தா வீரர் ராணா அகர்வால் முகத்து முன்னாள் பிளையிங் கிஸ் கொடுத்து கேலி செய்வார்.
- மயங்க அகர்வாலுக்கு ரோகித் சர்மா பிளையிங் கிஸ் கொடுத்து கலாய்த்த புகைப்படம் வைராலாகி வருகிறது.
ஐபிஎல் 2024 தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று கொண்டிருக்கிறது. நாளைய போட்டியில் மும்பை இந்தியன்ஸ்- சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதுகிறது. இதற்காக இரு அணி வீரர்களும் ஐதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி மைதானத்தில் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இரு அணி வீரர்களும் பயிற்சியில் ஈடுப்பட்ட போது மும்பை அணி வீரர் ரோகித் சர்மாவும் ஐதராபாத் அணி வீரர் மயங்க் அகர்வாலும் சந்தித்து கொண்டனர். அப்போது மயங்க அகர்வாலுக்கு ரோகித் சர்மா பிளையிங் கிஸ் கொடுத்து கலாய்த்தார்.
எதற்காக ரோகித் அப்படி செய்தார் என்றால், ஐபிஎல் தொடரின் 3-வது லீக் போட்டியில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ்- சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி 4 ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது.
இந்த போட்டியின் போது ஐதராபாத் அணி வீரர் அகர்வால் விக்கெட் வீழ்த்திய கொல்கத்தா வீரர் ராணா அகர்வால் முகத்து முன்னாள் பிளையிங் கிஸ் கொடுத்து கேலி செய்வார். அதனை வைத்து ரோகித் மயங்க் அகர்வாலை கிண்டல் செய்துள்ளார். இது தொடர்பான புகைப்படம் வைரலாகி வருகிறது.
மயங்க் அகர்வாலை கிண்டல் செய்த ராணாவுக்கு போட்டி கட்டணத்தில் இருந்து 60 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
- பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் யாஷ் தயாள் 4 ஓவரில் 23 ரன்கள் விட்டு கொடுத்து 1 விக்கெட் வீழ்த்தியிருந்தார்.
- கடந்த வருடம் குஜராத்துக்காக விளையாடிய யாஷ் தயாள் தற்போது பெங்களூரு அணிக்காக விளையாடி வருகிறார்.
ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடரில் 6-வது லீக் போட்டியில் பஞ்சாப் பெங்களூரு அணிகள் மோதின. இந்த போட்டியில் முதலாவதாக பேட்டிங் செய்த பஞ்சாப் 6 விக்கெட்டுகளை இழந்து 176 ரன்கள் எடுத்தது. அதைத் தொடர்ந்து ஆடிய பெங்களூரு அணி 19.2 ஓவரில் 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த போட்டியில் பெங்களூரு அணிக்காக விளையாடிய யாஷ் தயாள் 4 ஓவரில் 23 ரன்கள் மட்டும் கொடுத்து 1 விக்கெட் வீழ்த்தியிருந்தார்.
இந்நிலையில் யாரோ ஒருவரின் குப்பை யாரோ ஒருவருக்கு புதையலாகிறது என இந்திய அணியின் முன்னாள் வீரரும் தமிழக வீரருமான முரளி கார்த்திக் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. கடந்த வருடம் குஜராத்துக்காக விளையாடிய யாஷ் தயாள் கொல்கத்தாவுக்கு எதிரான போட்டியில் ரிங்கு சிங்கிடம் கடைசி ஓவரில் 5 சிக்சர்களை கொடுத்து தோல்விக்கு காரணமாக அமைந்தார். அதன் காரணமாக அடுத்த போட்டியிலேயே நீக்கப்பட்டு குஜராத் அணியிலிருந்து கழற்றி விடப்பட்ட அவரை தற்போது பெங்களூரு வாங்கியுள்ளது.
இது குறித்து அவர் கூறியதாவது:-
குஜராத் அணியில் குப்பையை போல் செயல்பட்ட யாஷ் தயாள் பெங்களூரு அணியில் புதையலை போல் செயல்படுவதாக வர்ணித்த முரளி கார்த்திகை தற்போது ரசிகர்கள் சமூக வலைதளங்களில் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்தியாவுக்காக நீங்கள் எந்தளவுக்கு புதையலை போல் செயல்பட்டீர்கள்? என்றும் யுவராஜ் சிங்கிடம் 6 சிக்சர்கள் கொடுத்தாலும் கடைசியில் 600 டெஸ்ட் விக்கெட்டுகள் ஸ்டுவர்ட் பிராட் எடுத்தவர். அவரை பற்றி உங்களுக்கு தெரியுமா என்றும் ரசிகர்கள் அவருக்கு கேள்வி எழுப்பியுள்ளனர்.
ஒரு இளம் வீரரை குறைத்து மதிப்பிட்டு அவமானப்படுத்தும் பேசிய முரளி கார்த்திக் ஒன்று மன்னிப்பு கேட்க வேண்டும் அல்லது ஸ்டார் ஸ்போர்ட்ஸ் வர்ணனையாளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட வேண்டும் என்று சமூக வலைதளங்களில் ரசிகர்கள் விமர்சித்து வருவது குறிப்பிடத்தக்கது.
- இவ்விரு அணிகளும் இதுவரை 5 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன.
- இதில் குஜராத் அணி 3 முறையும், சென்னை அணி 2 முறையும் வென்று இருக்கின்றன.
சென்னை:
17-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியின் 7-வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ்- லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதுகிறது. இந்த போட்டி சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் நடைபெறுகிறது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற குஜராத் பந்து வீச்சை தேர்வு செய்தது. சென்னை அணி தனது தொடக்க லீக் ஆட்டத்தில் 6 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூரு அணியை வீழ்த்தியது. இதேபோல் குஜராத் அணி தொடக்க ஆட்டத்தில் மும்பை அணியை வீழ்த்தியது.
இவ்விரு அணிகளும் இதுவரை 5 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் குஜராத் அணி 3 முறையும், சென்னை அணி 2 முறையும் வென்று இருக்கின்றன.
தசைப்பிடிப்பு காயத்தில் இருந்து மீண்ட இலங்கை வேகப்பந்து வீச்சாளர் பதிரானா சென்னை அணியினருடன் இணைந்து இருக்கிறார். அவர் இம்பேக்ட் வீரராக விளையாட வாய்ப்புள்ளது.






