search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட்

    ஐபிஎல் 2024: விராட்- டோனிக்கு அடுத்தப்படியாக புதிய சாதனை படைக்கவிருக்கும் ரோகித்
    X

    ஐபிஎல் 2024: விராட்- டோனிக்கு அடுத்தப்படியாக புதிய சாதனை படைக்கவிருக்கும் ரோகித்

    • சன்ரைசர்ஸ் ஐதராபாத் தனது தொடக்க லீக் ஆட்டத்தில் 4 ரன் வித்தியாசத்தில் கொல்கத்தாவிடம் போராடி தோற்றது.
    • மும்பை இந்தியன்ஸ் அணி தன்னுடைய முதல் ஆட்டத்தில் 6 ரன் வித்தியாசத்தில் குஜராத்திடம் பணிந்தது.

    ஐதராபாத்:

    ஐபிஎல் தொடரின் 8-வது லீக் போட்டியில் இன்று சன்ரைசர்ஸ் ஐதராபாத்- மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகிறது. முன்னாள் சாம்பியனான சன்ரைசர்ஸ் ஐதராபாத் தனது தொடக்க லீக் ஆட்டத்தில் 4 ரன் வித்தியாசத்தில் கொல்கத்தாவிடம் போராடி தோற்றது.

    இதேபோல் 5 முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணி தன்னுடைய முதல் ஆட்டத்தில் 6 ரன் வித்தியாசத்தில் குஜராத்திடம் பணிந்தது. இதனால் முதல் வெற்றியை பெற இரு அணிகளும் போராடும்.

    இந்நிலையில் இந்த போட்டியில் விளையாடுவதன் மூலம் ரோகித் சர்மா புதிய சாதனை ஒன்றை படைக்கவுள்ளார். அது என்னவென்றால் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக 200-வது போட்டியில் களமிறங்க உள்ளார். இதற்கு முன்பு விராட் கோலி மற்றும் டோனி மட்டுமே ஐபிஎல் தொடரில் ஒரு அணிக்காக 200 போட்டியில் விளையாடிய வீரர்கள் ஆவர். அந்த பட்டியலில் ரோகித் சர்மாவும் இணையவுள்ளார்.

    ஐபிஎல் தொடரில் 2008-ம் ஆண்டு அறிமுகமான ரோகித் முதலில் டெக்கான் சார்ஜர்ஸ் அணிக்காக விளையாடினார். அந்த அணிக்காக 2008-ம் ஆண்டு முதல் 2010-ம் ஆண்டும் வரை டெக்கான் சார்ஜர்ஸ் அணியில் இருந்தார். 2009-ம் அந்த அணி கோப்பையை வெல்ல ரோகித் சர்மா முக்கிய பங்காற்றினார். அந்த அணிக்காக 45 போட்டியில் விளையாடி 1170 ரன்கள் குவித்தார். அதன் பிறகு 2011-ம் ஆண்டில் மும்பை இந்தியன்ஸ் அணியில் இணைந்து தற்போது வரை விளையாடி வருகிறார்.

    2013-ல் ரிக்கி பாண்டிங்கிடம் இருந்து கேப்டன் பொறுப்பை ஏற்றுக் கொண்ட ரோகித், கடந்த 10 ஆண்டுகளாக மும்பை இந்தியன்ஸ் அணிக்காக 5 முறை ஐபிஎல் கோப்பைகளை வென்று கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×