என் மலர்
விளையாட்டு
- இவ்விரு அணிகளும் இதுவரை 5 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன.
- இதில் குஜராத் அணி 3 முறையும், சென்னை அணி 2 முறையும் வென்று இருக்கின்றன.
சென்னை:
17-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியின் 7-வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ்- லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதுகிறது. இந்த போட்டி சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் நடைபெறுகிறது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற குஜராத் பந்து வீச்சை தேர்வு செய்தது. சென்னை அணி தனது தொடக்க லீக் ஆட்டத்தில் 6 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூரு அணியை வீழ்த்தியது. இதேபோல் குஜராத் அணி தொடக்க ஆட்டத்தில் மும்பை அணியை வீழ்த்தியது.
இவ்விரு அணிகளும் இதுவரை 5 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் குஜராத் அணி 3 முறையும், சென்னை அணி 2 முறையும் வென்று இருக்கின்றன.
தசைப்பிடிப்பு காயத்தில் இருந்து மீண்ட இலங்கை வேகப்பந்து வீச்சாளர் பதிரானா சென்னை அணியினருடன் இணைந்து இருக்கிறார். அவர் இம்பேக்ட் வீரராக விளையாட வாய்ப்புள்ளது.
- இன்று பெண்கள் ஒற்றையர் பிரிவில் காலிறுதிக்கு முந்தைய சுற்றான ரவுண்ட் ஆப் 16 சுற்று நடைபெற்று வருகிறது.
- இதில் இன்று நடைபெற்ற ஒரு ஆட்டத்தில் முன்னணி வீராங்கனையான போலந்தின் இகா ஸ்வியாடெக் ரஷியாவின் எகடெரினா அலெக்ஸாண்ட்ரோவாவை எதிர்கொண்டார்.
மியாமி:
அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள மியாமி நகரில் 1000 தரவரிசை புள்ளிகளை கொண்ட மியாமி ஓபன் சர்வதேச டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் இன்று பெண்கள் ஒற்றையர் பிரிவில் காலிறுதிக்கு முந்தைய சுற்றான ரவுண்ட் ஆப் 16 சுற்று நடைபெற்று வருகிறது.
இதில் இன்று நடைபெற்ற ஒரு ஆட்டத்தில் முன்னணி வீராங்கனையான போலந்தின் இகா ஸ்வியாடெக் ரஷியாவின் எகடெரினா அலெக்ஸாண்ட்ரோவாவை எதிர்கொண்டார். இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறுவார் என எதிர்பார்க்கப்பட்ட இகா ஸ்வியாடெக் யாரும் எதிர்பார்க்காத வண்ணம் 4-6, 2-6 என்ற செட் கணக்கில் எகடெரினா அலெக்ஸாண்ட்ரோவாவிடம் தோல்வி கண்டு வெளியேறினார்.
ரவுண்டா ஆப் 16 சுற்றில் இன்று நடைபெற்ற மற்றொரு ஆட்டத்தில் அமெரிக்காவின் கோகோ காப் பிரான்சின் கரோலின் கார்சியாவிடம் 3-6, 6-1, 2-6 என்ற செட் கணக்கில் தோல்வி கண்டு தொடரில் இருந்து வெளியேறினார்.
- குறைந்தபட்சம் ரூ.5,200 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
- குஜராத்துக்கு எதிராக சேப்பாக்கத்தில் இன்று நடைபெறும் போட்டிக்கான குறைந்தபட்ச டிக்கெட் விலை ரூ.1,700, அதிகபட்சம் ரூ.6 ஆயிரம் ஆகும்.
பெங்களூர்:
ஐ.பி.எல். போட்டிக்கான டிக்கெட்டுகள் ஒவ்வொரு நகரங்களில் வெவ்வேறு விலைகளில் விற்பனையாகிறது. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி நிர்வாகம் தான் ஐ.பி.எல். டிக்கெட்டுகளின் விலையை அதிக பட்சத்துக்கு விற்பனை செய்தது.
பெங்களூரு- பஞ்சாப் அணிகள் மோதிய நேற்றைய ஆட்டத்துக்கு அதிகபட்ச டிக்கெட் விலையாக ரூ.55,055 விற்பனையானது. இந்த டிக்கெட் பகுதி அதிநவீன வசதிகளுடன் கொண்டது. எல்லா விதமான உணவு பொருட்களும் இந்த டிக்கெட் பாக்சில் கிடைக்கும். இதே டிக்கெட் ரூ.42,300 ஆக உள்ளது. டைனமிக் விலையில் ரூ.55 ஆயிரத்துக்கு விற்பனையானது.
குறைந்தபட்ச டிக்கெட் விலை ரூ.2,300 ஆகும். டைனமிக் விலையில் ரூ.5,200 ஆக நிர்ணயிக்கப்பட்டது. அதே நேரத்தில் லக்னோ அணி நிர்வாகம் மிக குறைந்த பட்ச விலையில் டிக்கெட்டுகளை விற்கிறது. பஞ்சாப்புக்கு எதிராக வருகிற 30-ந் தேதி நடைபெறும் போட்டிக்கான குறைந்தபட்ச டிக்கெட் விலை ரூ.399 ஆகும். அதிக பட்சமாக ரூ.20 ஆயிரத்துக்கு விற்கிறது.
ராஜஸ்தான் அணியின் குறைந்தபட்ச விலை ரூ.1,200, அதிகபட்சம் ரூ.15 ஆயிரம் (டெல்லிக்கு எதிரான போட்டி) , மும்பை அணி ரூ.990- ரூ.15 ஆயிரம், (ராஜஸ்தான்), ஐதராபாத் அணி ரூ.750-ரூ.30 ஆயிரம், (சென்னை), குஜராத் அணி ரூ.499- ரூ.12 ஆயிரம், (ஐதராபாத்), டெல்லி அணி ரூ.2 ஆயிரம்- ரூ.5 ஆயிரம் (கொல்கத்தா), விலைகளில் டிக்கெட்டை நிர்ணயித்துள்ளது.
குஜராத்துக்கு எதிராக சேப்பாக்கத்தில் இன்று நடைபெறும் போட்டிக்கான குறைந்தபட்ச டிக்கெட் விலை ரூ.1,700, அதிகபட்சம் ரூ.6 ஆயிரம் ஆகும்.
- ஒவ்வொருவரும் எப்போதும் மிகப்பெரிய ஸ்கோரை எடுக்க இயலாது.
- ருதுராஜ் கெய்க் வாட்- ரச்சின் ரவீந்திராவின் தொடக்கம் நீடிக்கும்.
சென்னை:
17-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கடந்த 22-ந்தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் கோலாகலமாக தொடங்கியது. முதல் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவை வீழ்த்தியது.
சென்னை சூப்பர் கிங்ஸ் 2-வது ஆட்டத்தில் குஜராத் டைட்டன்சை இன்று எதிர்கொள்கிறது. இரவு 7.30 மணிக்கு சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இந்த ஆட்டம் நடக்கிறது. குஜராத் அணி நேற்று முன்தினம் அகமதாபாத்தில் நடந்த ஆட்டத்தில் மும்பை இந்தியன்சை 6 ரன்னில் வீழ்த்தியது. இதனால் 2-வது வெற்றியை பெறப் போவது சென்னையா? குஜராத்தா? என்று ஆவலுடன் எதிர் பார்க்கப்படுகிறது.
சி.எஸ்.கே. மோதும் ஆட் டத்தை ரசிகர்கள் ஆர்வத்துடன் எதிர்நோக்கியுள்ளனர்.
குஜராத்துடன் இன்று மோதும் ஆட்டம் தொடர்பாக சென்னை சூப்பர் கிங்ஸ் பயிற்சியாளர் ஸ்டீ பன் பிளமிங் கூறியதாவது:-
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ஒவ்வொரு வீரரின் பங்களிப்பும் முக்கியத்துவம் பெற்றது. ஒவ்வொருவரும் எப்போதும் மிகப்பெரிய ஸ்கோரை எடுக்க இயலாது. ஒரு வீரர் 75 ரன்னை எடுக்கும் போது அணிக்கு உதவியாக இருக்கும். ருதுராஜ் கெய்க் வாட்- ரச்சின் ரவீந்திராவின் தொடக்கம் நீடிக்கும்.
தாக்கத்தை (இம்பேக்ட்) ஏற்படுத்தும் விதி அணியின் பேட்டிங்கை மேம்படுத்த உதவியது. அதை நாம் செயல்படுத்தும் விதம் மிகவும் முக்கியமானது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- போபண்ணா ஜோடி முதல் செட்டை 7-5 எனக் கைப்பற்றியது.
- 2-வது செட் டை பிரேக்கர் வரை சென்றது. இறுதியில் 7-6 எனக் கைப்பற்றியது.
மியாமி ஓபன் டென்னிஸ் போட்டியின் ஆண்கள் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் முன்னணி வீரரான ரோகன் போபண்ணா, ஆஸ்திரேலியாவின் மேத்யூ எப்டன் உடன் இணைந்து களம் இறங்கினார். இந்த ஜோடி மொனாக்கோவின் ஹுகோ நிஸ்- போலந்தின் ஜியேலின்ஸ்கி ஜோடியை எதிர்கொண்டது.
இதில் நம்பர் ஒன் ஜோடியான போபண்ணா- எப்டன் ஜோடி 7-5, 76 (3) என வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறியது. இந்த வெற்றியை பெற போபண்ணா ஜோடிக்கு ஒரு மணி நேரம் 39 நிமிடங்கள் தேவைப்பட்டது.
போபண்ணா ஜோடி காலிறுதியில் ஜான் பாட்ரிக் (ஆஸ்திரேலியா)- செம் வீர்பீக் (நெதர்லாந்து) ஜோடியை எதிர்கொள்கிறது.
போபண்ணா ஜோடி இந்த போட்டியில் கடும் சவாலை எதிர்கொண்டது. முதல் செட்டில் 6-5 என முன்னிலையில் இருந்தபோது இரண்டு பிரேக் பாயின்ட்ஸ்களை சேவ் செய்ததன் மூலம் 7-5 என முதல் செட்டை கைப்பற்றியது.
2-வது செட்டில் 6-6 என சமநிலை பெற்றதால் டை-பிரேக்கர் கடைபிடிக்கப்பட்டது. இதில் எதிர்ஜோடி டபுள் ஃபால்ட்-க்கு உட்பட்டதால் போபண்ணா ஜோடி முன்னிலை பெற்று 7-6(3) என கைப்பற்றியது.
- இதுவரை ஆறு போட்டிகளிலும் போட்டியை நடத்தும் அணிகள்தான் வெற்றி பெற்றுள்ளது.
- இன்று சென்னையில் சிஎஸ்கே- குஜராத் டைட்டன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
ஐபிஎல் 2024 கிரிக்கெட் திருவிழா கடந்த 22-ந்தேதி சென்னை சேப்பாக்கத்தில் கடந்த 22-ந்தேதி தொடங்கியது. இதில் சிஎஸ்கே-ஆர்சிபி அணிகள் மோதின. இதில் சிஎஸ்கே 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
2-வது போட்டி முல்லன்புரில் உள்ள பஞ்சாப் மாநில கிரிக்கெட் சங்கத்திற்கு சொந்தமான புதிய மைதானத்தில் நடைபெற்றது. இதில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கெதிராக பஞ்சாப் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
3-வது போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்றது. இதில் கொல்கத்தா 208 ரன்கள் குவித்தது. ஆனால் சன்ரைசர்ஸ் ஐதராபாத் இலக்கை எட்டி வீறுநடை போட்டது. எனினும் 4 ரன்னில் வெற்றி வாய்ப்பை தழுவியது.
4-வது போட்டி ஜெய்ப்பூரில் நடைபெற்றது. இதில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கெதிராக எல்.எஸ்.ஜி. 20 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.
5-வது போட்டி குஜராத் மாநில அகமதாபாத்தில் நடைபெற்றது. முதலில் விளையாடிய குஜராத் டைட்டன்ஸ் 168 ரன்கள் அடித்தது, மும்பை அணிக்கு கடைசி 5 ஓவரில் 43 ரன்கள் தேவைப்பட்டது. கைவசம் 7 விக்கெட்டுகள் இருந்த போதிலும் சேஸிங் செய்ய முடியாமமல் 6 ரன்னில் தோல்வியைத் தழுவியது.
6-வது போட்டி நேற்று பெங்களூருவில் நடைபெற்றது. இதில் விராட் கோலி, தினேஷ் கார்த்திக் அதிரடியால் ஆர்சிபி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இதில் ஒரு விஷேசம் என்னவென்றால், சொந்த மைதானத்தில் (Home Ground- அணிக்குரிய சொந்த மைதானமாக கருதப்படும் இடம்) விளையாடிய அணிகள் அனைத்தும் வெற்றி பெற்றுள்ளன.
இன்றைய போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறுகிறது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ்- குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்த மைதானம் சிஎஸ்கே-யின் சொந்த மைதானம் (Home Ground) ஆகும். இதனால் "ஹோம் டீம் வின்" டிரெண்ட் இன்றைய போட்டியிலும் தொடர வேண்டும் என சிஎஸ்கே ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள்.

சிஎஸ்கே-ஆர்சிபி போட்டி (கோப்புப்படம்)
அதேவேளையில் பனிப்பொழிவு அதிகமாக இருந்த நிலையில் கூட குஜராத் டைட்டன்ஸ் அணி பந்து வீச்சாளர்கள் மும்பைக்கு எதிராக சிறப்பாக பந்து வீசினார்கள். இதனால் இன்றைய போட்டியிலும் அவர்கள் சிஎஸ்கே அணிக்கு கடும் சவாலாக விளங்குவார்கள் என எதிர்பார்க்கலாம்.
குஜராத் அணியில் சாய் சுதர்சன், சாய் கிஷோர், விஜய் சங்கர் என மூன்று தமிழ்நாட்டு வீரர்கள் இடம் பிடித்துள்ளனர். இவர்களுக்கு சேப்பாக்கம் மைதானம் அத்துப்பிடி. அதை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள வாய்ப்புள்ளது.
மும்பை இந்தியன்ஸ் அணிக்கெதிராக சாய் சுதர்சன் ஆட்டநாயகன் விருது வென்று என்பது குறிப்பிடத்தக்கது.
- பஞ்சாப் அணிக்கெதிராக 11 பவுண்டரி, 2 சிக்ஸ் உடன் 77 ரன்கள் விளாசினார்.
- 50 ரன்களுக்கு மேல் 100 முறை அடித்த இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.
இந்திய அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் விராட் கோலி. இவர் இங்கிலாந்துக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவில்லை. தற்போது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இந்தத் தொடர் முடிந்த உடன் டி20 உலகக் கோப்பை வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெற இருக்கிறது.
இந்த டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் விராட் கோலிக்கு இடம் கிடைப்பது சந்தேகம் எனக் கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று பஞ்சாப் அணிக்கெதிராக 49 பந்தில் 11 பவுண்டரி, 2 சிக்ஸ் உடன் 77 ரன்கள் விளாசினார்.
இதனால் ஆட்ட நாயகன் விருதை வென்றார். அத்துடன் 50 ரன்களுக்கு மேல் 100 முறை அடித்த முதல் இந்திய வீரர் என்ற சாதனையைப் படைத்துள்ளார்.
போட்டி முடிந்த பின் விராட் கோலி பேசும்போது கூறியதாவது:-
டி20 கிரிக்கெட் என வரும்போது உலகின் பல்வேறு இடங்களில் போட்டியை விளம்பரப்படுத்துவற்கு என்னுடைய பெயர் இணைக்கப்பட்டுள்ளது என்று எனக்குத் தெரியும். நான் இன்னும் அதை பெற்றுள்ளேன் என யூகிக்கிறேன்.
நான் ஆரஞ்ச் தொப்பியை எதிர்பார்த்து விளையாடவில்லை. இந்த உறுதியை என்னால் உறுதியாக கொடுக்க முடியும். என்னுடைய சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த முயற்சி செய்கிறேன். நான் அணிக்கு அட்டகாசமான அதிரடி தொடக்கம் கொடுக்க முயற்சி செய்தேன். விக்கெட் வீழ்ந்தால் அதற்கு ஏற்ப மதிப்பீடு செய்ய வேண்டும். இது வழக்கமான பிளாட் பிட்ச் அல்ல. போட்டியை முடித்துக் கொடுக்க முடியாதது ஏமாற்றம் அளிக்கிறது. பந்து அடிக்கக்கூடிய ஸ்லாட்டில் விழுந்தது. ஆனால், டீப் பாய்ன்ட் பகுதிக்கு சென்று விட்டது.
இவ்வாறு விராட் கோலி தெரிவித்தார்.
- பஞ்சாப் அணி தரப்பில் ரபாடா, ஹர்ப்ரீத் ப்ரார் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
- ஆர்சிபி அணி தரப்பில் விராட் கோலி 77 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
பெங்களுரு:
17-வது ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரின் இன்று நடைபெற்ற 6-லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு- பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதியது. இதில் டாஸ் வென்ற பெங்களூரு அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.
அதன்படி களமிறங்கிய பஞ்சாப் அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 176 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக தவான் 45 ரன்கள் எடுத்தார். மேலும் கடைசி ஓவரில் அதிரடி காட்டிய ஷஷாங்க் சிங்கால் இந்த ரன்களை பஞ்சாப் அணி எடுக்க முடிந்தது. ஆர்சிபி அணி தரப்பில் சிராஜ், மேக்ஸ்வெல் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
இதனையடுத்து ஆர்சிபி அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக டுபிளிசிஸ்- விராட் கோலி களமிறங்கினர். டுபிளிசிஸ் 3, க்ரீன் 3, பட்டிதார் 18, மேக்ஸ்வெல் 3 என விக்கெட்டுகளை பறிகொடுத்தது ஆர்சிபி. இதனையடுத்து விராட் கோலி - அனுஜ் ராவத் ஜோடி சேர்ந்து ரன்களை குவித்தனர். அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய கோலி அரை சதம் அடித்து அசத்தினார்.
தொடர்ந்து அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய விராட் கோலியை ஸ்கெட்ச் போட்டு ஹர்சல் படேல் அவுட் ஆக்கினார். அந்த ஓவரில் 2 பவுண்டரி விளாசிய நிலையில் கடைசி பந்தில் கோலி (77) விக்கெட்டை வீழ்த்தினார். அவர் அவுட் ஆன அடுத்த ஓவரில் அனுஜ் ராவத் 11 ரன்னில் வெளியேறினார்.
அடுத்து வந்த தினேஷ் கார்த்திக் மற்றும் லாம்ரோர் வெற்றிக்காக போராடினார். இறுதியில் ஆர்சிபி அணி 19.2 ஓவரில் 6 விக்கெட்டுகளை இழந்து 178 ரன்கள் எடுத்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பஞ்சாப் அணி தரப்பில் ரபாடா, ஹர்ப்ரீத் ப்ரார் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இது ஆர்சிபி அணிக்கு முதல் வெற்றி ஆகும். பஞ்சாப் அணிக்கு முதல் தோல்வி ஆகும்.
- இப்போட்டியில் விராட் கோலி 2 கேட்சுகள் பிடித்ததன் மூலம் ஐபிஎல் தொடரில் புதிய சாதனை ஒன்றை பதிவு செய்துள்ளார்.
- இந்த பட்டியலில் மும்பை இந்தியன்ஸ் அணியின் முன்னாள் கேப்டன் ரோகித் சர்மா 167 கேட்சுகளை பிடித்து மூன்றாம் இடத்தில் உள்ளார்.
ஐபிஎல் தொடரின் இன்றைய 6-வது லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதியது. வருகின்றன. இதில் டாஸ் வென்ற ஆர்சிபி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய பஞ்சாப் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 176 ரன்களைச் சேர்த்தது.
அதிகபட்சமாக தவான் 45 ரன்கள் விளாசினார். ஆர்சிபி அணி தரப்பில் முகமது சிராஜ் மற்றும் கிளென் மேக்ஸ்வெல் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதைத்தொடர்ந்து ஆர்சிபி அணி விளையாடி வருகிறது.
இந்நிலையில் இப்போட்டியில் விராட் கோலி 2 கேட்சுகள் பிடித்ததன் மூலம் ஐபிஎல் தொடரில் புதிய சாதனை ஒன்றை பதிவு செய்துள்ளார். ஐபிஎல் தொடர் வரலாற்றில் அதிக கேட்சுகளை பிடித்த விக்கெட் கீப்பர் அல்லாத வீரர் எனும் சாதனையை விராட் கோலி படைத்துள்ளார்.
முன்னதாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா 172 கேட்சுகளை பிடித்ததே சாதனையாக இருந்த நிலையில், 174 கேட்சுகளைப் பிடித்து விராட் கோலி முதலிடத்தைப் பிடித்துள்ளார். இந்த பட்டியலில் மும்பை இந்தியன்ஸ் அணியின் முன்னாள் கேப்டன் ரோகித் சர்மா 167 கேட்சுகளை பிடித்து மூன்றாம் இடத்தில் உள்ளார்.
- இந்தியாவில் ஒரு வீரருக்கு எதிராக ரசிகர்கள் இப்படி எதிர்ப்பு தெரிவிப்பதை பார்ப்பது அரிதாக உள்ளதாக கெவின் பீட்டர்சன் கூறியுள்ளார்.
- இந்தியாவில் இதை நான் கேட்டதில்லை என பீட்டர்சன் கூறினார்.
அகமதாபாத்:
நடப்பு ஐ.பி.எல். தொடரின் 5-வது லீக் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் நேற்று மோதின. இதில் மும்பை அணியை 6 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி குஜராத் வெற்றி பெற்றது.
முன்னதாக இந்த சீசனில் கேப்டன் பதவியிலிருந்து ரோகித் சர்மாவை நீக்கிய மும்பை அணி நிர்வாகம் அவருக்கு பதிலாக குஜராத் அணியிலிருந்து ஹர்திக் பாண்ட்யாவை வாங்கி அவரை கேப்டனாக நியமித்தது ரசிகர்கள் மத்தியில் விமர்சனங்களை ஏற்படுத்தியது.
அந்த சூழ்நிலையில் நடைபெற்ற இப்போட்டியில் மும்பையின் கேப்டனாக முதல் முறையாக டாஸ் போட வந்தபோது மைதானத்தில் இருந்த அனைத்து ரசிகர்களும் சேர்ந்து பாண்ட்யாவுக்கு எதிராக கூச்சலிட்டு எதிர்ப்பு தெரிவித்தனர். அத்துடன் பவுண்டரி எல்லைக்கு அருகே வந்தபோதெல்லாம் அவருக்கு எதிராக ரசிகர்கள் கோஷமிட்டனர்.
இந்நிலையில் இந்தியாவில் ஒரு வீரருக்கு எதிராக ரசிகர்கள் இப்படி எதிர்ப்பு தெரிவிப்பதை பார்ப்பது அரிதாக உள்ளதாக கெவின் பீட்டர்சன் கூறியுள்ளார். அதற்கு இந்தியாவுக்காக பாண்ட்யா தொடர்ந்து விளையாடினால் மட்டுமே மீண்டும் ரசிகர்களின் ஆதரவை பெற முடியும் என்று வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் பிரையன் லாரா கலாய்க்கும் வகையில் பதிலளித்தார்.
இது பற்றி நேரலையில் அவர்கள் பேசியது பின்வருமாறு:-
கெவின் பீட்டர்சன்: கேப்டனாக இருக்கும் பாண்ட்யா களத்தில் டைவ் அடித்து பந்தை தடுப்பதற்காக செல்லும் போதெல்லாம் ரசிகர்கள் எதிர்ப்பு கூச்சலிடுகின்றனர். இந்தியாவில் இதை நான் கேட்டதில்லை.
இயன் பிஷப்: பாண்டியா இங்கே ரசிகர்களை வெல்ல முடியுமா? அவர்களின் மனதை மீண்டும் வெல்வதற்கு அவர் என்ன செய்ய வேண்டும்?
பிரையன் லாரா: இந்தியாவுக்காக விளையாடுங்கள். அடுத்த முறை அவர்கள் இங்கே விளையாடுவார்கள் என்று பாண்ட்யாவை கலாய்க்கும் வகையில் பதிலளித்தார். இதற்கு கெவின் பீட்டர்சன் மற்றும் இயன் பிஷப் இருவரும் சிரித்தார்கள்.
- பஞ்சாப் அணி தரப்பில் தவான் 45 ரன்கள் எடுத்தார்.
- ஆர்சிபி அணி தரப்பில் சிராஜ், மேக்ஸ்வெல் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
பெங்களுரு:
17-வது ஐ.பி.எல் கிரிக்கெட் தொடர் கடந்த 22-ம் தேதி சென்னையில் தொடங்கி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெறும் 6-லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு- பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதுகிறது. இதில் டாஸ் வென்ற பெங்களூரு அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.
அதன்படி பஞ்சாப் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக தவான் - பேர்ஸ்டோவ் களமிறங்கினர். 9 ரன்னில் பேர்ஸ்டோவ் நடையை கட்டினார். அடுத்து வந்த பிரப்சிம்ரன் சிங் 2 பவுண்டரி 2 சிக்சர் விளாசி 25 ரன்களுடன் ஆட்டமிழந்தார்.
அடுத்து வந்த லிவிங்ஸ்டன் 17 ரன்னிலும் தவான் 45 ரன்னிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இதனையடுத்து ஜோடி சேர்ந்த சாம் கரண்- ஜிதேஷ் சர்மா அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தனர். யாஸ் தயால் ஓவரில் 2 பவுண்டரிகள் விளாசி சாம் கரண் 23 ரன்னில் வெளியேற அடுத்த ஓவரில் ஜிதேஷ் சர்மா 27 ரன்னில் ஆட்டமிழந்தார்.
இறுதியில் பஞ்சாப் 20 ஓவர் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 170 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக தவான் 45 ரன்கள் எடுத்தார். ஆர்சிபி அணி தரப்பில் சிராஜ், மேக்ஸ்வெல் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
- மும்பை இந்தியன்ஸ் அணி வீரரான ரோகித் குடும்பத்துடன் ஹோலி பண்டிகை கொண்டாடி உள்ளார்.
- இதே போன்று ஒவ்வொரு ஐபிஎல் அணி வீரர்களும் ஹோலி பண்டிகையை கொண்டாடி உள்ளனர்.
அகமதாபாத்:
ஹோலி பண்டிகை நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. சென்னையில் வட மாநிலத்தவர் அதிகம் வசிக்கும் பகுதிகளில் ஹோலி கொண்டாட்டம் கோலாகலமாக நடந்தது. பல வண்ணப் பொடிகளை ஒருவர் மீது ஒருவர் தூவி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
இந்நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணி வீரரான ரோகித் குடும்பத்துடன் ஹோலி பண்டிகையை உற்சாகத்துடன் கொண்டாடி உள்ளார்.
ஹோலி பண்டிகை கொண்டாட்டத்தை முடித்துவிட்டு வீரர்கள் மீது தண்ணீரை பீய்ச்சி அடித்து தன்னுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார் ரோகித் சர்மா.
இதே போன்று ராஜஸ்தான் அணி வீரர்களும் ஹோலி பண்டிகையை கொண்டாடி உள்ளனர்.
இது தொடர்பான வீடியோவை அந்தந்த அணியின் சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்து உள்ளனர். இதனைப் பார்த்த ரசிகர்கள் தங்களது கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.






