என் மலர்
விளையாட்டு
- ரிஷப் பண்ட் 43 பந்தில் 8 சிக்ஸ், 5 பவுண்டரியுடன் 88 ரன்கள் விளாசினார்.
- மோகித் சர்மா 4 ஓவரில் 73 ரன்கள் விட்டுக்கொடுத்தார்.
ஐபிஎல் கிரிக்கெட்டில் டெல்லியில் நடைபெற்று வரும் போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ்- குஜராத் டைட்டன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. டாஸ் வென்ற குஜராத் டைட்டன்ஸ் பந்து வீச்சை தேர்வு செய்தது.
அதன்படி டெல்லி அணியின் பிரித்வி ஷா, மெக்கர்க் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். மெக்கர்க் வழக்கும்போல் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். என்றாலும் 14 பந்தில் 23 ரன்கள் எடுத்த நிலையில் சந்தீப் வாரியர் பந்தில் ஆட்டமிழந்தார்.
அடுத்து யாரும் எதிர்பார்க்காத வகையில் அக்சர் பட்டேல் களம் இறங்கினார். பிரித்வி ஷா 7 பந்தில் 11 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ஷாய் ஹோப் 5 ரன்னில் ஏமாற்றம் அடைந்தார். இதனால் டெல்லி அணி பவர்பிளேயில் 3 விக்கெட் இழப்பற்கு 44 ரன்கள் மட்டுமே அடித்தது. 3 விக்கெட்டுகளையும் சந்தீப் வாரியர் கைப்பற்றினார்.
4-வது விக்கெட்டுக்கு அக்சர் பட்டேல் உடன் ரிஷப் பண்ட் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி முதலில் நிதானமாக விளையாடியது. ஓவர் செல்ல செல்ல அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தியது. டெல்லி 10 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 80 ரன்கள் எடுத்தது.
அக்சார் பட்டேல் 37 பந்தில் அரைசதம் அடித்தார். அத்துடன் 15 ஓவரில் டெல்லி 127 ரன்னைத் தொட்டது. அக்சார் பட்டேல் 43 பந்தில் 66 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அப்போது டெலலி 17 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 157 ரன்கள் எடுத்திருந்தது.
அதன்பின் ரிஷப் பண்ட் உடன் ஸ்டப்ஸ் ஜோடி சேர்ந்தார். 18-வது ஓவரில் 14 ரன்களும், 19-வது ஓவரில் 22 ரன்களும் டெல்லி அணி விளாசியது. இதற்கிடையே 18-வது ஓவரில் ரிஷப் பண்ட் 34 பந்தில் அரைசதம் விளாசினார்.
கடைசி ஓவரை மோகித் சர்மா வீசினார். முதல் பந்தில் பண்ட் 2 ரன் எடுத்தார். 2-வது பந்தில் சிக்ஸ், 3-வது பந்தில் பவுண்டரி, அதன்பின் கடைசி மூன்று பந்துகளையும் சிக்சருக்கு தூக்கினார் ரிஷிப் பண்ட்.
இதனால் டெல்லி கேப்பிட்டல்ஸ் 20 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 224 ரன்கள் குவித்தது.
கடைசி ஓவரில் 31 ரன்கள் டெல்லி அணிக்கு கிடைத்தது. கடைசி 3 ஓவரில் மட்டும் 67 ரன்கள் விட்டுக்கொடுத்தது குஜராத் டைட்டன்ஸ்.
ரிஷப் பண்ட் 43 பந்தில் 88 ரன்கள் எடுத்தும், ஸ்டப்ஸ் 7 பந்தில் 26 ரன்கள் எடுத்தும் ஆட்டமிழக்காமல் இருந்தார். குஜராத் அணியின் மோகித் சர்மா 4 ஓவரில் 73 ரன்கள் விட்டுக்கொடுத்தார்.
- இந்த போட்டி சுப்மன் கில்லுக்கு 100-வது போட்டியாகும்.
- டாஸ் தோற்றது நல்லதுதான் எனத் தெரிவித்துள்ளார் ரிஷப் பண்ட்.
டெல்லியில் இன்று நடைபெறும் ஐபிஎல் தொடரின் 40-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ்- குஜராத் டைட்டன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. டெல்லி மைதானத்தில் நடைபெறும் 2-வது போட்டி இதுவாகும்.
இந்த போட்டிக்கான டாஸ் சுண்டப்பட்டதில் குஜராத் டைட்டன்ஸ் அணி டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது. இந்த போட்டி சுப்மன் கில்லுக்கு 100-வது ஐபிஎல் போட்டியாகும்.
டாஸ் தோற்றது குறித்து ரிஷப் பண்ட் கூறுகையில் "டாஸ் தோற்றது நல்லதுதான். நாங்கள் முதலில்தான் பேட்டிங் செய்ய விரும்பினோம்" என்றார்.
டாஸ் வென்ற சுப்மன் கில் "இது சிறந்த ஆடுகளம் போன்று தெரிகிறது. நாங்கள் கடந்த இரண்டு போட்டிகளில் சிறந்த வகையில் சேஸிங் செய்தோம்" என தெரிவித்துள்ளார்.
- லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் சென்னை அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
- சென்னை அணியில் அதிகபட்சமாக ருதுராஜ் 108 ரன்கள் குவித்தார்.
ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் 39-வது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி- லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் விளையாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 210 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ருதுராஜ் கெய்க்வாட் (108) சதம் அடித்து அசத்தினார். அதனை தொடர்ந்து விளையாடிய லக்னோ அணி 19.3 ஓவரில் வெற்றி பெற்று அசத்தியது. அதிகபட்சமாக ஸ்டோய்னிஸ் 63 பந்துகளில் 124 ரன்கள் குவித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இந்த தொடரில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த போட்டியில் இதுவரை சிஎஸ்கே அணி தோல்வியை சந்தித்ததில்லை. இதன் மூலம் சேப்பாக்கத்தில் முதல் தோல்வியை சந்தித்துள்ளது.
சென்னை அணி தோல்வியை சந்தித்தாலும் கேப்டன் ருதுராஜ் சிஎஸ்கே அணிக்காக மிரட்டலான சாதனை ஒன்றை படைத்துள்ளார். சிஎஸ்கே அணியின் கேப்டனாக டோனி படைக்காத சாதனையை ருதுராஜ் படைத்துள்ளார். சிஎஸ்கே அணியின் கேப்டனாக முதல் சதத்தை அவர் படைத்து அசத்தியுள்ளார்.
சிஎஸ்கே அணியின் கேப்டனாக 2019-ம் ஆண்டில் டோனி 84 ரன்கள் குவித்ததே அதிகபட்சம் என்பது குறிப்பிடத்தக்கது.
- 2025-ம் ஆண்டுக்கான ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி போட்டியை நடத்தும் வாய்ப்பு பாகிஸ்தானுக்கு அளிக்கப்பட்டுள்ளது.
- 2024 முதல் 2031-ம் ஆண்டுவரையிலான கால கட்டத்தில் நடைபெறவுள்ள ஐ.சி.சி. போட்டி விவரங்களை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அறிவித்தது.
துபாய்:
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி) ஒருநாள் போட்டி உலகக் கோப்பை, 20 ஓவர் உலக கோப்பை மற்றும் சாம்பியன்ஸ் டிராபி ஆகிய 3 போட்டிகளை நடத்துகிறது.
2024 முதல் 2031-ம் ஆண்டுவரையிலான கால கட்டத்தில் நடைபெறவுள்ள ஐ.சி.சி. போட்டி விவரங்களை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அறிவித்தது. அந்த வகையில் 2025-ம் ஆண்டுக்கான ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி போட்டியை நடத்தும் வாய்ப்பு பாகிஸ்தானுக்கு அளிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 30 ஆண்டுகளுக்கு பிறகு ஐ.சி.சி.யின் பெரிய போட்டியை அந்த நாடு நடத்துகிறது.
கடைசியாக 1996-ம் ஆண்டு ஒருநாள் போட்டி உலகக் கோப்பையை இந்தியா, இலங்கையுடன் இணைந்து பாகிஸ்தான் நடத்தி இருந்தது.
இந்த நிலையில் சாம்பியன்ஸ் டிராபி போட்டி பாகிஸ்தானில் நடப்பதால் இந்திய அணி அங்கு சென்று விளையாட வாய்ப்பு இல்லை என தகவல் வெளியாகி உள்ளது. பாகிஸ்தானுக்கு சென்று விளையாட இந்தியா மறுத்து வருகிறது. சமீபத்தில் நடந்த ஆசிய கோப்பையில் இந்தியா மோதிய ஆட்டங்கள் இலங்கையில் நடத்தப்பட்டன.
மேலும் இந்திய அணி மோதும் போட்டி மட்டும் வேறு ஒரு இடங்களில் நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியா அணி விளையாடும் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் நடக்க அதிக வாய்ப்பு இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
இந்தியா - பாகிஸ்தான் அணிகள் இருதரப்பு தொடரில் விளையாட வேண்டும் என இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா விருப்பம் தெரிவித்திருந்தார். பாகிஸ்தானுடன் இரு தரப்பு தொடரை மறந்து விடுங்கள் எனவும் பிசிசிஐ தரப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளனர்.
- அணிகள் திறமை வாய்ந்த பேட்ஸ்மேன்களை ஏழாவது அல்லது எட்டாவது இடத்தில் கூட பெறுகின்றன.
- இது கிரிக்கெட்டை மேலும் பொழுதுபோக்காக மாற்றும்.
தொழில்முறை கிரிக்கெட்டில் சுவாரஸ்யத்தை அதிகரிக்க புதிய புதிய விதிகள் கொண்டு வரப்படுகின்றன. பீல்டிங் கட்டுப்பாடுகள் போன்ற விதிகள் இருக்கும் நிலையில் தற்போது இம்பேக்ட் பிளேயர் விதி ஐபிஎல் தொடரில் அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த விதியின்படி ஒரு வீரருக்கு மாற்று வீரராக களம் இறங்கும் நபர் பந்து வீசலாம், பேட்டிங் செய்யலாம். முன்னதாக பீல்டிங் மட்டுமே செய்ய முடியும். இந்த விதியின்படி சேஸிங் செய்யும்போது ஒரு பந்து வீச்சாளருக்குப் பதிலாக மேலும் ஒரு தரமான பேட்ஸ்மேனை களம் இறக்க முடியும். அதேபோல் பந்து வீசும்போது நட்சத்திர பேட்ஸ்மேன்களுக்கு பதில் தரமான பந்து வீச்சாளர்களை தெர்வு செய்யமுடியும்.
நேற்றைய போட்டியில் சென்னை அணியில் சிவம் துபே முதலில் களம் இறங்கினார். ஆனால் 2-வது பேட்டிங் செய்யும்போது இவருக்குப் பதிலாக இம்பேக்ட் பிளேயராக சர்துல் தாகூர் களம் இறங்கினார். எல்எஸ்ஜி அணியில் டி காக் இம்பேக்ட் பிளேயராக களம் இறங்கினார்.
இம்பேக்கட் பிளேயர் விதிக்கு இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா ஏற்கனவே அதிருப்தி தெரிவித்திருந்தார். மேலும் பலர் தங்களது எதிர்ப்பு கருத்து தெரிவித்திருந்தனர்.
இந்த நிலையில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியின் ஆலோசகராக இருக்கும் ஆடம் வோக்ஸ் இம்பேக்ட் பிளேயர் விதி, ஆல்-ரவுண்டர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் எனத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ஆடம் வோக்ஸ் கூறுகையில் "அணியின் ஸ்கோர்கள் உயர்ந்த வண்ணம் உள்ளன. அணிகள் திறமை வாய்ந்த பேட்ஸ்மேன்களை ஏழாவது அல்லது எட்டாவது இடத்தில் கூட பெறுகின்றன. இது கிரிக்கெட்டை மேலும் பொழுதுபோக்காக மாற்றும். ஆனால், ஆல்-ரவுண்டர்களின் திறமைகளை வெளிப்படுத்த முடியாமல் ஆட்டத்தில் இருந்து வெளியேற்றுகிறது. ஆல்-ரவுண்டர் எப்போதுமே அணியை சமநிலைப்படுத்துபவராக இருப்பார். ஒருவேளை இம்பேக்ட் பிளேயரோடு முக்கியத்துவம் இல்லாமல் போகலாம்.
இதேபோல் ஆஸ்திரேலியாவில் பிக்பாஷ் லீக்கில் பவர் சர்ஜ் (Power Surge) கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த விதிப்படி நான்கு ஓவர்தான் பவர்பிளே. அதன்பின் 11-வது ஓவரில் இருந்து இன்னிங்ஸ் முடியும் வரை பேட்டிங் செய்யும் அணி மீதமுள்ள இரண்டு ஓவர்களை எந்த நேரத்திலும் பயன்படுத்திக் கொள்ளலாம்.
இந்த விதியால், சேஸிங் செய்யும்போது எந்த அணியும் போட்டியில் இருந்து வெளியேறியதாக நினைக்க தேவையில்லை. ஆனால், இந்த நேரங்களில் அதிகமாக விக்கெட்டுகளை அணிகள் இழந்துள்ளதை நாம் பார்த்து இருக்கிறோம்.
இவ்வாறு ஆடம் வோக்ஸ் தெரிவித்துள்ளார்.
- சேவாக், ராயுடு தேர்வு செய்த அணியில் ஹர்திக் பாண்ட்யா இடம்பெறவில்லை.
- கீப்பராக ரிஷப் பண்டை சேவாக்கும் தமிழக வீரர் தினேஷ் கார்த்திக்கை ராயுடுவும் தேர்வு செய்துள்ளனர்,
புதுடெல்லி:
ஐ.சி.சி. டி20 உலகக் கோப்பை வரும் ஜூன் மாதம் 1-ம் தேதி முதல் 29-ம் தேதி வரை வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெற உள்ளது.
இதற்கிடையே, டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியை தேர்வு செய்வதற்கான கூட்டம் வரும் 27-ம் தேதி டெல்லியில் நடைபெறுகிறது. இதில் தேர்வுக்குழுத் தலைவர் அஜித் அகர்கர், கேப்டன் ரோகித் சர்மா ஆகியோர் பங்கேற்கின்றனர்.
இந்நிலையில் டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியை இந்திய முன்னாள் வீரர்களான சேவாக், அம்பதி ராயுடு ஆகியோர் அறிவித்துள்ளனர். சேவாக் தேர்வு செய்த அணியில் சுப்மன் கில், ஹர்திக் பாண்ட்யா மற்றும் சஞ்சு சாம்சன் ஆகியோர் இடம்பெறவில்லை. கீப்பராக ரிஷப் பண்டை தேர்வு செய்துள்ளார்.
இதே போல ராயுடு தேர்வு செய்த அணியிலும் ஹர்திக் பாண்ட்யா இடம் பெறவில்லை. கீப்பராக தமிழக வீரர் தினேஷ் கார்த்திக்கை தேர்வு செய்துள்ளார். இவரது அணியில் ரியான் பராக் இடம் பிடித்துள்ளார்.
மேலும் சிவம் துபேவை இந்திய டி20 அணியில் சேர்க்க வேண்டும் என அஜித் அகர்கரிடம் சிஎஸ்கே அணியின் முன்னாள் அதிரடி பேட்ஸ்மேனான சுரேஷ் ரெய்னா கோரிக்கை வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
சேவாக் தேர்வு செய்யப்பட்ட இந்திய அணி:-
ஜெய்ஸ்வால், ரோகித் சர்மா, விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ரிங்கு சிங், சிவம் துபே, ரிஷப் பண்ட், ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், சந்தீப் சர்மா, முகமது சிராஜ், ஜஸ்பிரிட் பும்ரா.
அம்பதி ராயுடு தேர்வு செய்யப்பட்ட இந்திய அணி:-
ரோகித் சர்மா, ஜெய்ஸ்வால், விராட் கோலி, ரியான் பராக், சூர்யகுமார் யாதவ், ரிங்கு சிங், தினேஷ் கார்த்திக், சிவம் துபே, மயங்க் யாதவ், ஜஸ்பிரிட் பும்ரா, சாஹல், ரவீந்திர ஜடேஜா, அர்ஸ்தீப் சிங், குல்தீப் யாதவ்.
- டெண்டுல்கர் 6 உலக கோப்பை போட்டிகளில் விளையாடியுள்ளார்
- மொத்தம் 34,347 ரன்களை பதிவு செய்து சாதனை படைத்துள்ளார்
சச்சின் டெண்டுல்கருக்கு இன்று 51 - வது பிறந்த நாள். இதையொட்டி அவருக்கு கிரிக்கெட் உலக வீரர்கள்,மற்றும் நண்பர்கள் பிறந்த நாள் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகிறார்கள்.
டெண்டுல்கர் 24- 4- 1973-ம் ஆண்டு மும்பையில் பிறந்தார். டெண்டுல்கருக்கு தற்போது 51 வயதாகிறது. கிரிக்கெட்டின் கடவுள் என்று சச்சின் அழைக்கப்படுகிறார்.சச்சின் டெண்டுல்கரின் வாழ்க்கை மற்றும் சாதனைகள் வருமாறு :-

டெண்டுல்கர் 11 வயதில் கிரிக்கெட் விளையாட்டில் தனது ஆர்வத்தை வளர்த்துக் கொண்டார். அவரது மூத்த சகோதரர் அஜித் டெண்டுல்கர் அவரை ஊக்குவித்தார்.
1988 -ல், 15 வயதில் சச்சின் டெண்டுல்கர், குஜராத்திற்கு எதிராக ரஞ்சி டிராபி ஆட்டத்தில் பம்பாய்க்காக முதல் தடவையாக கிரிக்கெட் போட்டியில் அறிமுகமானார். இந்தப் போட்டியில் சதம் அடித்த அவர், முதல்தர போட்டியில் சதம் அடித்த இளம் இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றார்.

ரஞ்சி டிராபி, இரானி டிராபி மற்றும் தியோதர் டிராபி ஆகிய 3 உள்நாட்டுப் போட்டிகளிலும் அறிமுகத்திலேயே சதம் அடித்த ஒரே இந்திய கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர். டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் இந்திய அணிக்காக அறிமுகமான இளம் வீரர் இவர்.
டெண்டுல்கர் 6 உலக கோப்பை போட்டிகளில் விளையாடியுள்ளார். சர்வதேச கிரிக்கெட்டில் அதிக போட்டிகளில் விளையாடியவர் சச்சின் டெண்டுல்கர். அவர் 664 போட்டிகளில் ஆடியுள்ளார்.
மொத்தம் 34,347 ரன்களை பதிவு செய்து சாதனை படைத்துள்ளார். சர்வதேச வரலாற்றில் 100 சதங்கள் அடித்த ஒரே வீரர் இவர் தான். 20 ஆண்டுகளுக்கு மேலாக தனது இணையற்ற பேட்டிங் நுட்பங்களால் கிரிக்கெட் உலகில் ஜொலித்தார்.

இவரது சாதனைகளுக்காக இந்திய அரசு டெண்டுல்கருக்கு பல விளையாட்டு விருதுகளை வழங்கி கவுரவித்தது. 1994 -ல் அர்ஜுனா விருது, 1997 -ல் கேல் ரத்னா விருது, 1998 -ல் பத்மஸ்ரீ, 2008 -ல் பத்ம விபூஷன் ,2013 -ல் பாரத ரத்னா விருதுகளை பெற்றுள்ளார்.
- கேன்டிடேட் செஸ் போட்டியில் தமிழக வீரர் குகேஷ் சாம்பியன் பட்டம் கைப்பற்றினார்.
- உலக செஸ் சாம்பியன்ஷிப்பில் நடப்பு சாம்பியனான சீனாவின் டிங் லிரனுடன் மோதுகிறார்.
புதுடெல்லி:
கனடாவின் டொரோன்டோ நகரில் நடந்த கேன்டிடேட் செஸ் போட்டியில் 14 சுற்றுகள் முடிவில் இந்திய வீரர் தமிழகத்தைச் சேர்ந்த குகேஷ் 9 புள்ளிகளுடன் சாம்பியன் பட்டம் கைப்பற்றி வரலாறு படைத்தார். இதன்மூலம் இந்த ஆண்டின் இறுதியில் நடக்க உள்ள உலக செஸ் சாம்பியன்ஷிப்பில் நடப்பு சாம்பியனான சீனாவின் டிங் லிரனுடன் மோத உள்ளார்.
ரஷிய செஸ் ஜாம்பவான் கேரி காஸ்பரோவ் தனது 20 வயதில் 1984-ம் ஆண்டில் கேன்டிடேட் செஸ் போட்டியில் பட்டம் வென்றதே முந்தைய இளம் வயது வீரர் ஒருவரின் சாதனையாக இருந்தது. அவரது 40 ஆண்டுகால சாதனையை தற்போது குகேஷ் தகர்த்துள்ளார்.
இந்நிலையில் முன்னாள் உலக சாம்பியனான காஸ்பரோவ் எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், குகேசுக்கு வாழ்த்துகள். செஸ் உலகில் புவியின் மேல்தட்டுகளை மாற்றி அமைத்து டொரோன்டோவில் உச்சத்தைத் தொட்டு இருக்கிறார், இந்த இந்தியாவின் பூகம்பம். உயரிய பட்டத்துக்காக அவர் சீன சாம்பியன் டிங் லிரனுடன் விளையாட உள்ளார். இந்தப் போட்டியை நாங்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்நோக்கி உள்ளோம் என பதிவிட்டுள்ளார்.
- தொடர்ச்சியாக இரண்டு போட்டிகளில் தோல்வியை தழுவியுள்ளது.
- லக்னோ அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.
ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் 39 ஆவது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் சென்னை அணி லக்னோவிடம் தொடர்ச்சியாக இரண்டு போட்டிகளில் தோல்வியை தழுவியுள்ளது.
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் சூப்பர் கிங்ஸ் அணி தோல்வி அடைந்த நிலையில், தோல்வி குறித்து பேசிய சென்னை கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் லக்னோ அணி வீரர் ஸ்டோயினிஸ்-க்கு பாராட்டு தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், "13 ஆவது ஓவர் வரை போட்டி எங்களின் கையில் தான் இருந்தது, ஆனால் ஸ்டோயினிஸ் சிறப்பாக விளையாடினார். எங்களது தோல்விக்கு பனி முக்கிய காரணமாக அமைந்தது."
"பனி அதிகம் இருந்ததால், பந்துவீச்சாளர்கள் தங்களது திட்டத்தை செயல்படுத்த முடியவில்லை. போட்டியை இன்னும் சிறப்பாக கொண்டு சென்றிருக்கலாம். ஆனால் இதுவும் போட்டின் ஒரு பகுதி தான். இதை கட்டுப்படுத்த முடியாது. போட்டி முடிவில் லக்னோ அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது," என்று தெரிவித்தார்.
- ஐபிஎல் புள்ளிப்பட்டியலில் ராஜஸ்தான் ராயல்ஸ் 14 புள்ளிகளுடன் முதலிடத்தில் நீடிக்கிறது.
- பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் ஒரு வெற்றியுடன் 2 புள்ளிகள் பெற்று கடைசி இடத்தில் உள்ளது.
புதுடெல்லி:
ஐபிஎல் கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பான கட்டத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. இதுவரை 39 லீக் ஆட்டங்கள் நடைபெற்றுள்ளது.
இந்நிலையில், ஐபிஎல் புள்ளிப் பட்டியலில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 7 வெற்றிகளுடன் 14 புள்ளிகளுடன் முதலிடத்தில் நீடிக்கிறது.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 5 வெற்றியுடன் 10 புள்ளிகளுடன் 2வது இடத்தில் உள்ளது.
சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 10 புள்ளிகள் பெற்று 3-வது இடம் பிடித்துள்ளது.
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 4 வெற்றியுடன் 4வது இடத்தில் உள்ளது.
சென்னை மற்றும் குஜராத் அணிகள் தலா 8 புள்ளிகள் பெற்று 5, 6-வது இடங்களில் உள்ளன.
பெங்களூரு ராயல் சேலஞ்ரஸ் அணி ஒரு வெற்றியுடன் 2 புள்ளிகள் பெற்று கடைசி இடத்தில் உள்ளது.
- ஸ்டோய்னிஸ் 124 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
- லக்னோ அணி 19.3 ஓவரில் 4 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 213 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
சென்னை:
ஐ.பி.எல். 2024 கிரிக்கெட் தொடரின் 39-வது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதியது. இதில் டாஸ் வென்ற லக்னோ அணி பந்துவீச்சு தேர்வு செய்தது.
அதன்படி சிஎஸ்கே அணியின் தொடக்க வீரர்களாக ரகானே- ருதுராஜ் களமிறங்கினர். ரகானே முதல் ஓவரிலேயே 1 ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார். அடுத்து வந்த டேரில் மிட்செல் 11 ரன்களிலும், ஜடேஜா 17 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.
இதனையடுத்து ருதுராஜ் - துபே ஜோடி அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தனர். பொறுப்புடன் விளையாடிய கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் சதம் விளாசி அசத்தினார். அதிரடி காட்டிய துபே 27 பந்துகளில் 66 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.
இறுதியில் சென்னை அணி 4 விக்கெட்டுகளை இழந்து 210 ரன்களை குவித்தது. லக்னோ சார்பில் மேட் ஹென்ரி, மொசின் கான், யாஷ் தாக்கூர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.
211 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் லக்னோ அணி களமிறங்கியது. தொடக்க வீரரான டிகாக் 3 பந்துகள் சந்தித்து 0 ரன்னில் ஆட்டமிழந்தார். அவரை தொடர்ந்து கேஎல் ராகுல் 16 ரன்னிலும் படிக்கல் 13 ரன்னிலும் வெளியேறினர்.
அந்த நேரத்தில் ஸ்டோய்னிஸ் மற்றும் பூரன் ஜோடி சேர்ந்து சென்னை அணியின் பந்து வீச்சை விளாசினர். குறிப்பாக ஷர்துல் தாகூர் வீசிய 16-வது ஓவரில் பூரன் 2 சிக்சர் 1 பவுண்டரி என 17 ரன்கள் குவித்தார். சென்னை அணிக்கு பயத்தை காட்டிய பூரனை (15 பந்தில் 34 ரன்கள்) பத்திரனா வீழ்த்தினார்.
கடைசி ஓவரில் லக்னோ அணிக்கு 17 ரன்கள் தேவைப்பட்டது. களத்தில் நின்ற ஸ்டோய்னிஸ் நான்கு பந்துகளில் 18 ரன்கள் குவித்து அணிக்கு வெற்றியை தேடி தந்தார். ஸ்டோய்னிஸ் 124 ரன்னிலும் தீபக் ஹூடா 17 ரன்னிலும் களத்தில் இருந்தனர்.
லக்னோ அணி 19.3 ஓவரில் 4 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 213 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. சென்னை அணி தரப்பில் பத்திரனா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
- ருதுராஜ் கெய்க்வாட் சிறப்பாக ஆடி 108 ரன்களை குவித்தார்.
- மேட் ஹென்ரி, மொசின் கான், யாஷ் தாக்கூர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.
ஐ.பி.எல். 2024 கிரிக்கெட் தொடரின் 39 ஆவது போட்டியில் இன்று சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதுகின்றன. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டியில் டாஸ் வென்ற லக்னோ அணி பந்துவீச்சு தேர்வு செய்தது.
அதன்படி பேட்டிங்கை துவங்கிய சென்னை அணிக்கு அஜிங்க்யா ரஹானே 1 ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார். இவருடன் களமிறங்கிய கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் சிறப்பாக ஆடி 108 ரன்களை குவித்தார். அடுத்து வந்த டேரில் மிட்செல் 11 ரன்களிலும், ஜடேஜா 17 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.
போட்டி முடிவில் சென்னை அணி 4 விக்கெட்டுகளை இழந்து 210 ரன்களை குவித்தது. சென்னை சார்பில் ருதுராஜ் கெய்க்வாட் 60 பந்துகளில் 108 ரன்களையும், துபே 27 பந்துகளில் 66 ரன்களை குவித்தனர். லக்னோ சார்பில் மேட் ஹென்ரி, மொசின் கான், யாஷ் தாக்கூர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.






