என் மலர்tooltip icon

    விளையாட்டு

    • ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரரான திரவிஸ் ஹெட் முதல் இடத்தை பிடித்துள்ளார்.
    • வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா பந்துவீச்சாளர் தரவரிசையில் 44வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

    டி20 உலகக்கோப்பை பேட்ஸ்மேன் தரவரிசையில் தொடர்ந்து நம்பர் 1 இடத்தில் நீடித்த இந்திய நட்சத்திர கிரிக்கெட் வீரரான சூர்ய குமார் 2வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்.

    சூர்யகுமார் யாதவை வீழ்த்திய ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரரான திரவிஸ் ஹெட் முதல் இடத்தை பிடித்துள்ளார்.

    இதேபோல், வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா பந்துவீச்சாளர் தரவரிசையில் 44வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

    சூர்யகுமார் யாதவ் கடந்த 2023ம் ஆண்டு டிசம்பர் முதல் ஆண்கள் தரவரிசையில் முதலிடத்தில் நீடித்தார்.

    ஆனால் டி20 உலகக் கோப்பையில் ஆஸ்திரேலிய அணியின் பேட்டிங்கைத் தொடங்கும் போது ஹெட்டின் போர்க்குணமிக்க ஆட்டம் தரவரிசையில் பெரும் மாற்றத்தைக் கொண்டு வந்தது.

    அந்த வகையில், ஹெட் நான்கு இடங்கள் முன்னேறி முதலிடத்தைப் பிடித்தார். சூர்யகுமார், பில் சால்ட், பாபர் ஆசம் மற்றும் முகமது ரிஸ்வான் ஆகியோர் ஒரு இடத்தைக் கீழே இறங்கி முதல் ஐந்து இடங்களைப் பிடித்தனர்.

    இந்தப் போட்டியில் ஆஸ்திரேலியாவின் கடைசி சூப்பர் எட்டு ஆட்டத்தில் 43 பந்துகளில் 76 ரன்கள் குவித்தனர்.

    ஹெட் ஏழு போட்டிகளில் 42 சராசரியாக 255 ரன்களை எடுத்தார். இந்த போட்டியில் 200 ரன்களுக்கு மேல் அடித்த பேட்ஸ்மேன்களில் அவரது ஸ்ட்ரைக் ரேட் 158 ஆகும். அங்கு ரன் குவிப்பது எளிதான பணியாக இல்லை.

    இந்த உலகக் கோப்பையில் 139 ஸ்டிரைக் ரேட்டில் 149 ரன்கள் எடுத்த சூர்யகுமார், வரும் வியாழன் அன்று நடைபெறும் இரண்டாவது அரையிறுதியில் இங்கிலாந்தை இந்தியா எதிர்கொள்ளும் போது, மீண்டும் தனது இடத்தைப் பிடிக்கும் வாய்ப்பைப் பெறுவார் என நம்பப்படுகிறது.

    சூர்யா ஹெட்டை விட இரண்டு ரேட்டிங் புள்ளிகள் மட்டுமே பின்தங்கி இருக்கிறார். அவர் இங்கிலாந்துக்கு எதிராக ஒரு நல்ல ஆட்டத்தை வெளிப்படுத்தி, சனிக்கிழமையன்று நடக்கும் இறுதிப் போட்டியில் மற்றுமொரு கிராக் இருந்தால், அவர் மீண்டும் நம்பர் 1 பேட்ஸ்மேன் ஆக முடியும்.

    மார்கஸ் ஸ்டோனிஸ், ஆல்-ரவுண்டர்கள் தரவரிசையில் அவர் நம்பர் 1 ஆக குறுகிய காலத்திற்குப் பிறகு முதல் இடத்தைப் பிடித்தார்.

    ஸ்டோனிஸ் நான்காவது இடத்துக்கும், இந்தியாவின் ஹர்திக் பாண்டியா மூன்றாவது இடத்துக்கும், ஆப்கானிஸ்தானின் முகமது நபி இரண்டாவது இடத்துக்கும், இலங்கையின் வனிந்து ஹசரங்கா மீண்டும் முதலிடத்துக்கும் உள்ளனர்.

    ஆல்-ரவுண்டர்களில் வெஸ்ட் இண்டீஸின் ரோஸ்டன் சேஸ் 17 இடங்கள் முன்னேறி 12-வது இடத்தைப் பிடித்துள்ளார்.

    • சூப்பர் 8 சுற்றில் இந்திய அணி ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது.
    • நாளை நடக்கும் அரையிறுதியில் இந்திய அணி இங்கிலாந்துடன் மோதுகிறது.

    செயின்ட் வின்சென்ட்:

    செயின்ட் வின்சென்ட் நகரில் நடந்த சூப்பர் 8 போட்டியில் இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் மோதின. முதலில் ஆடிய இந்தியா 205 ரன்களைக் குவித்தது. கேப்டன் ரோகித் சர்மா 92 ரன்கள் குவித்தார்.

    அடுத்து ஆடிய ஆஸ்திரேலியா 7 விக்கெட்டுக்கு 181 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி அடைந்து டி20 உலகக் கோப்பையில் இருந்து வெளியேறியது. டிராவிஸ் ஹெட் 76 ரன்கள் எடுத்தார்.

    இந்தியா சார்பில் அதிகபட்சமாக அர்ஷ்தீப் சிங் 3 விக்கெட் எடுத்தார்.

    நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரில் ஜஸ்ப்ரித் பும்ராவுக்கு நிகராக இடதுகை வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். இதுவரை 6 போட்டிகளில் விளையாடி 15 விக்கெட்டுகள் எடுத்துள்ள அவர், டி20 உலகக் கோப்பையில் அதிக விக்கெட்டுகள் எடுத்த இந்திய வீரராக சாதனை படைத்துள்ளார்.

    இந்நிலையில், தான் விக்கெட்டுகள் வீழ்த்தியது குறித்து அர்ஷ்தீப் சிங் கூறியதாவது:

    அனைத்து பாராட்டுகளும் ஜஸ்பிரீத் பும்ராவுக்கு செல்லவேண்டும் என நினைக்கிறேன். ஏனெனில் அவர் பேட்ஸ்மேன்கள் மீது அதிகப்படியான அழுத்தத்தை போடுகிறார்.

    அவர் தன்னுடைய ஓவரில் 3 அல்லது 4 ரன்கள் மட்டுமே கொடுக்கிறார். எனவே எதிரணி பேட்ஸ்மேன்கள் என்னுடைய ஓவரில் ரன்கள் அடிக்க வருகிறார்கள். அப்போது நான் என்னுடைய சிறந்த பந்தை வீச முயற்சிக்கிறேன். அதனால் எனக்கு விக்கெட் விழுவதற்கான வாய்ப்பு நிறைய கிடைக்கிறது.

    ஏனெனில் எதிர்ப்புறம் ரன்கள் வருவதில்லை. அதனால் ரன் ரேட் அதிகமாக உயர்கிறது. எனவே எதிரணியினர் எனக்கு எதிராக அதிக ரிஸ்க் எடுத்து விளையாட முயற்சிக்கின்றனர். அதனால் எனக்கு அங்கே விக்கெட்டுகள் கிடைப்பதற்கான வாய்ப்பு எப்போதும் இருக்கிறது. எனவே நான் எடுத்துள்ள விக்கெட்டுகளுக்கான அனைத்து பாராட்டுக்களும் பும்ராவை சேரும் என தெரிவித்தார்.

    • வங்காளதேசத்துக்கு எதிரான போட்டியில் குல்பாடின் நைப் காயமடைந்தது போல் அப்படியே மைதானத்தில் விழுந்தார்.
    • இதனை பலரும் கிண்டலடித்து வருகின்றனர்.

    கிங்ஸ்டவுன்:

    நடப்பு டி20 உலகக்கோப்பை தொடரில் சூப்பர் 8 சுற்றின் கடைசி ஆட்டத்தில் வங்காளதேசத்தை வீழ்த்தி ஆப்கானிஸ்தான் முதல் முறையாக அரையிறுதிக்கு தகுதி பெற்று அசத்தியுள்ளது.

    முன்னதாக இந்த போட்டியின் 2-வது இன்னிங்சில் மழை அவ்வப்போது வந்து ஆப்கானிஸ்தானுக்கு சோதனை கொடுத்தது. குறிப்பாக 12-வது ஓவர் வீசிக் கொண்டிருக்கும்போது மழை வருவது போல் தெரிந்தது. அப்போது டிஎல்எஸ் விதிமுறைப்படி வங்காளதேசத்தை விட ஆப்கானிஸ்தான் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு இருந்தது. அதன் காரணமாக பெவிலியனில் இருந்த ஆப்கானிஸ்தான் அணியின் பயிற்சியாளர் ஜோனதன் டிராட், எதையாவது செய்து போட்டியை கொஞ்சம் மெதுவாக்குங்கள் என்று சைகையில் ஆலோசனை வழங்கினார்.

    அதை முதல் ஸ்லிப் பகுதியில் நின்று கொண்டு பார்த்த ஆப்கானிஸ்தான் வீரர் குல்பாடின் நைப் உடனடியாக தம்முடைய தொடையில் தசைப்பிடிப்பு ஏற்பட்டு காயமடைந்தது போல் அப்படியே மைதானத்தில் விழுந்தார். அதன் காரணமாக ஆப்கானிஸ்தான் அணி மருத்துவ குழுவினர் அவரை சோதித்ததால் சில நிமிடங்கள் ஆட்டம் தடைப்பட்டது.

    அதனை தொடர்ந்து அடுத்த ஒரு ஓவர் இடைவெளியில் மீண்டும் களத்திற்கு வந்து 2 ஓவர்களை வீசி ஒரு விக்கெட்டும் வீழ்த்தினார். மேலும் வெற்றியை கொண்டாட குல்பாடின் நைப் முதல் ஆளாக ஓடி வந்தார்.

    குல்பாடின் நைபின் இந்த செயலை பலரும் கிண்டல் செய்து வந்த நிலையில், அந்த அணியின் வீரரான நவீன் உல் ஹக் இன்ஸ்டாகிராமில் கிண்டாலாக ஒரு வீடியோவை பதிவிட்டுள்ளார்.

    அதில் மன்னிக்கவும் நைப், ஆனால் இதை பதிவிட வேண்டியிருந்தது. அந்த வீடியோவில் போட்டியின் போது நைப் காயத்துடன் இருப்பதாகவும் ஆப்கானிஸ்தான் வெற்றி பெரும் போது சிரித்தபடி வேகமாக ஓடியதும் இதனை ஐசிசி பின் தொடர்ந்து வருவது போலவும் இருந்தது. இந்த வீடியோ பதிவுக்கு அந்த அணியின் வீரர்கள் பலர் சிரித்தபடி கமெண்ட் செய்துள்ளனர்.

    முக்கியமாக நைப், நண்பரே எனக்கு உடம்பு சரியில்லை. தசைப்பிடிப்பு என அந்த பதிவுக்கு ரிப்ளை கொடுத்தார். இந்த பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

    • ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியின் போது 15-வது ஓவரில் இருந்து பந்து ரிவர்ஸ் சுவிங் ஆனது.
    • இந்தியா- ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான போட்டியில் நடுவராக பணியாற்றிய ரிச்சர்ட் கெட்டில்பரோ அவருக்கு தக்க பதிலடி கொடுத்துள்ளார்.

    டி20 உலகக் கோப்பை தொடரின் சூப்பர் 8 சுற்று ஆட்டத்தில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதின. இந்த பரபரப்பான ஆட்டத்தில் இந்திய அணி 24 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் அரையிறுதிக்கு தகுதி பெற்றது. ஆஸ்திரேலிய அணி அடுத்த சுற்றுக்கு முன்னேறாமல் தொடரில் இருந்து வெளியேறியது.

    இந்த போட்டியின் போது இந்திய அணி பந்து வீச்சாளர்கள் பந்தை சேதப்படுத்தியதாக பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் இன்சமாம் உல் ஹக் கூறினார். அதனால்தான் 15-வது ஓவரில் இருந்து பந்து ரிவர்ஸ் சுவிங் ஆனது. மேலும் 12, 13-வது ஓவரில் இருந்தே பந்து ரிவர்ஸ் சுவிங்குக்கு தயாராகி விட்டது. இதனை நடுவர்கள் கவனித்திருக்க வேண்டும் என இன்சமாம் குற்றம் சாட்டினார்.

    இந்த நிலையில் இந்தியா - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான போட்டியில் நடுவராக பணியாற்றிய ரிச்சர்ட் கெட்டில்பரோ எக்ஸ் தளத்தில் அவருக்கு தக்க பதிலடி கொடுத்துள்ளார்.

    2022-ம் ஆண்டு இந்தியா -பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டியில் 2-வது பந்தில் பாபர் அசாம் எல்பிடபிள்யூ முறையில் அவுட் ஆவார். அந்த வீடியோவை பதிவிட்டு இதற்கு உங்கள் கருத்து என்ன என்று பதிவிட்டுள்ளார்.

    • 15-வது ஓவரிலிருந்தே பந்து ரிவர்ஸ் ஸ்விங் செய்யத் தொடங்கியதால் நடுவர்கள் கவனமாக இருந்திருக்க வேண்டும்.
    • இதை பாகிஸ்தானில் ஏதாவது ஒரு வீரர் செய்திருந்தால் ஒருவேளை கொந்தளிப்பு ஏற்பட்டிருக்கும்.

    டி20 உலகக்கோப்பை சூப்பர் 8 சுற்றின் லீக் ஆட்டத்தில் இந்தியா - ஆஸ்திரேலிய அணிகள் மோதின. இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியானது ரோகித் சர்மாவின் அதிரடியான ஆட்டத்தின் மூலம் 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 205 ரன்களைச் சேர்த்து.

    அதன்பின் இலக்கை நோக்கி விளையாடிய ஆஸ்திரேலிய அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 181 ரன்களை மட்டுமே சேர்த்தது. இதன்மூலம் இந்திய அணி 24 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது. இந்த தோல்வியின் மூலம் ஆஸ்திரேலிய அணியானது சுப்பர் 8 சுற்றுடன் தொடரிலிருந்தும் வெளியேறியுள்ளது.

    இந்நிலையில் இப்போட்டியின் போது இந்திய அணி வீரர்கள் பந்தை சேதப்படுத்தியுள்ளதாக பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் இன்சமாம் உல் ஹக் குற்றச்சாட்டி உள்ளார்.

    இதுகுறித்து அவர் கூறியதாவது:-

    இந்த போட்டியின் போது அர்ஷ்தீப் சிங் 15-வது ஓவரில் ரிவர்ஸ் ஸ்விங் செய்தார். 15-வது ஓவரிலிருந்தே பந்து ரிவர்ஸ் ஸ்விங் செய்யத் தொடங்கியதால் நடுவர்கள் கவனமாக இருந்திருக்க வேண்டும். இதை பாகிஸ்தானில் ஏதாவது ஒரு வீரர் செய்திருந்தால் ஒருவேளை கொந்தளிப்பு ஏற்பட்டிருக்கும் என்பதால் சொல்கிறேன்.

    ரிவர்ஸ் ஸ்விங் என்றால் என்ன என்பது எங்களுக்குத் தெரியும். ஆனால் அர்ஷ்தீப் போன்ற ஒரு வீரர் 15-வது ஓவரில் ரிவர்ஸ் ஸ்விங் செய்கிறார் என்றால், நிச்சயம் பந்தை சேதப்படுத்தி இருந்தால் மட்டுமே முடியும். அதனால் இதுகுறித்து நிச்சயம் நடுவர்கள் கவணிக்க வேண்டியது அவசியம்.

    இவ்வாறு இன்சமாம் உல் ஹக் கூறினார்.

    • டென்மார்க்-செர்பியா அணிகள் மோதிய போட்டியும் கோல் எதுவுமின்றி டிரா ஆனது.
    • பிரான்ஸ்-போலந்து அணிகள் மோதிய மற்றொரு போட்டி 1-1 என்ற கோல் கணக்கில் டிரா ஆனது.

    முனிச்:

    17-வது ஐரோப்பிய கோப்பை கால்பந்து போட்டி ஜெர்மனியில் நடைபெற்று வருகிறது.

    குரூப் 'சி' பிரிவில் கடைசி லீக் ஆட்டங்கள் இந்திய நேரப்படி நள்ளிரவு 12.30 மணிக்கு நடைபெற்றது.

    இங்கிலாந்து-சுலொவேனியா அணிகள் மோதிய ஆட்டமும், டென்மார்க்-செர்பியா அணிகள் மோதிய போட்டியும் கோல் எதுவுமின்றி டிரா ஆனது.

    இங்கிலாந்து அணி 1 வெற்றி, 2 டிராவுடன் 5 புள்ளிகள் பெற்று சி பிரிவில் முதல் இடத்தை பிடித்து 2-வது சுற்றுக்கு முன்னேறியது. டென்மார்க் 3 டிராவுடன் 3 புள்ளிகள் பெற்று 2-வது இடத்தை பிடித்து நாக் அவுட் சுற்றுக்கு தகுதி பெற்றது.

    மற்ற பிரிவுகளில் 3-வது இடத்தை பிடிக்கும் அணிகளின் நிலையை பொறுத்து சுலோவெனியா இருக்கிறது. அந்த அணிக்கு அதிகமான வாய்ப்பு இருக்கிறது. செர்பியா வெளியேற்றப்பட்டது.

    முன்னதாக 'டி' பிரிவில் நடந்த ஒரு ஆட்டத்தில் ஆஸ்திரியா 3-2 என்ற கோல் கணக்கில் நெதர்லாந்தை வீழ்த்தி அதிர்ச்சி கொடுத்தது. இதே பிரிவில் பிரான்ஸ்-போலந்து அணிகள் மோதிய மற்றொரு போட்டி 1-1 என்ற கோல் கணக்கில் டிரா ஆனது.

    ஆஸ்திரியா 6 புள்ளியும், பிரான்ஸ் 5 புள்ளியும், நெதர்லாந்து 4 புள்ளியும் பெற்று முதல் 3 இடங்களை பிடித்து 2-வது சுற்றில் நுழைந்தன.

    இன்று நடைபெறும் ஆட்டங்களில் இ பிரிவில் உள்ள ருமேனியா- சுலோவாக்கியா, பெல்ஜியம்- உக்ரைன் (இரவு 9.30) , எப் பிரிவில் இருக்கும் போர்ச்சுக்கல்-ஜார்ஜியா, துருக்கி- செக் குடியரசு (நள்ளிரவு 12.30) அணிகள் மோதுகின்றன.

    • கிரிக்கெட் ரசிகர்களால் கொண்டாடப்படும் ஜாம்பவான் வீரர் சச்சின் டெண்டுல்கர்.
    • இந்திய அணிக்காக 24 ஆண்டுகள் விளையாடியவர்.

    கிரிக்கெட் ரசிகர்களால் கொண்டாடப்படும் ஜாம்பவான் வீரர் சச்சின் டெண்டுல்கர். இந்திய அணிக்காக 24 ஆண்டுகள் விளையாடியவர். கிரிக்கெட்டில் இவர் படைத்த சாதனைகளை பற்றி பேசிக்கொண்டே போகலாம்.

    ஒருநாள் போட்டிகளில் 18 ஆயிரத்திற்கும் அதிகமான ரன்கள், டெஸ்ட் கிரிக்கெட்டில் 15 ஆயிரத்திற்கும் அதிக ரன்களை குவித்து தள்ளிய பெருமையும் இவரையே சாரும். தனது மனைவி அஞ்சலியை விட 6 வயது இளையவரான சச்சின் டெண்டுல்கர், 22 வயதிலேயே திருமணம் செய்துகொண்டார். இருவருக்கு சாரா டெண்டுல்கர் மற்றும் அர்ஜுன் டெண்டுல்கர் என்று இரு பிள்ளைகள் உள்ளனர்.

    இந்நிலையில் சமீப காலமாக குடும்பத்துடன் நேரத்தை செல்விடும் சச்சின் டெண்டுல்கர், குடுப்பத்துடன் சுற்றுலா செல்வது பொதுவெளியில் கிரிக்கெட் விளையாடுவது என சுற்றி வருகிறார். அந்த வகையில் தற்போது அவர் வெளிநாட்டில் உள்ளார். அங்கு உள்ள சாலையோர கடையில் சாப்பிடும் புகைப்படத்தை வெளியிட்டு, மும்பைக்காரன் எங்கு சென்றாலும் அவனது சாலையோர உணவை விரும்புவான் என பதிவிட்டுள்ளார்.

    • குரூப் டி-ல் ஆஸ்திரியா அணி முதலிடத்தை பிடித்து அசத்தியுள்ளது.
    • குரூப் டி-ல் பிரான்ஸ் அணி 2-வது இடத்தையும், போலந்து அணி 4-வது இடத்தையும் பிடித்தன.

    24 அணிகள் இடையிலான 17-வது ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப் (யூரோ) போட்டி ஜெர்மனியில் நடந்து வருகிறது. இந்த தொடரில் நேற்று இரவு நடைபெற்ற கடைசி லீக் ஆட்டத்தில் பிரான்ஸ் - போலந்து அணிகள் மோதின. பரபரப்பான இந்த ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் சமனில் முடிந்தது.

    இதன் மூலம் குரூப் டி-ல் பிரான்ஸ் அணி 2-வது இடத்தையும், போலந்து அணி 4-வது இடத்தையும் பிடித்தன.

    மற்றொரு ஆட்டத்தில் நெதர்லாந்து - ஆஸ்திரியா அணிகள் மோதியது. 6-வது நிமிடத்தில் ஆஸ்திரியா தனது முதல் கோலை அடித்தது. அதனை தொடர்ந்து நெதர்லாந்து 47-வது நிமிடத்தில் தனது முதல் கோலை அடித்து அசத்தியது. அதனை தொடர்ந்து 59-வது நிமிடத்தில் ஆஸ்திரியாவும் 75-வது நிமிடத்தில் நெதர்லாந்து அணியிம் கோல் அடித்தனர். இதனால் ஆட்டம் பரபரப்பானது.

    அடுத்த சிறிது நேரத்தில் (80-வது நிமிடம்) ஆஸ்திரியா ஒரு கோல் போட்டு அசத்தியது. இறுதி வரை நெதர்லாந்து அணியால் அடுத்த கோலை அடிக்க முடியவில்லை. இதனால் 2-3 என்ற கோல் கணக்கில் ஆஸ்திரியா வெற்றி பெற்றது. மேலும் குரூப் டி-ல் முதலிடத்தை பிடித்து அசத்தியுள்ளது.

    • யூகி பாம்ப்ரி ஜோடி ஸ்ரீராம் பாலாஜி ஜோடியை 6-3, 6-3 என நேர்செட் கணக்கில் வீழ்த்தியது.
    • நாளை காலிறுதியில் அமெரிக்க ஜோடியை எதிர்கொள்கிறது.

    ஸ்பெயின் நாட்டில் மல்லோர்கா சாம்பியன்ஷிப் ஓபன் டென்னிஸ் போட்டி நடைபெற்று வருகிறது. ஆண்கள் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் யூகி பாம்ப்ரி- அல்பனோ ஆலிவெட்டி (பிரான்ஸ்) ஜோடி மற்றொரு இந்தியாவின் என். ஸ்ரீராம் பாலாஜி- லூக் ஜான்சன் (இங்கிலாந்து) ஜோடியை எதிர்கொண்டது.

    பாம்ப்ரி ஜோடி 6-3, 6-3 என நேர்செட் கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறியது. நாளை நடைபெற இருக்கும் காலிறுதியில் பாம்ப்ரி- ஆலிவெட்டி ஜோடி அமெரிக்காவின் வித்ரோ- லம்மோன்ஸ் ஜோடியை எதிர்கொள்கிறது.

    • மகளிர் டி20 ஆசிய கோப்பை தொடர் இலங்கையில் அடுத்த மாதம் நடைபெறுகிறது.
    • குரூப் ஏ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், நேபாளம் மற்றும் யுஏஇ அணிகள் இடம்பெற்றுள்ளன.

    புதுடெல்லி:

    மகளிர் டி20 ஆசிய கோப்பை தொடர் இலங்கையில் அடுத்த மாதம் நடைபெறுகிறது.

    ஜூலை மாதம் 19-ம் தேதி தொடங்கி 28-ம் தேதி வரை இலங்கையின் தம்புல்லாவில் நடைபெறுகிறது.

    குரூப் ஏ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், நேபாளம் மற்றும் யுஏஇ அணிகளும், குரூப் பி பிரிவில் இலங்கை, வங்காளதேசம், தாய்லாந்து மற்றும் மலேசியா ஆகிய அணிகள் இடம்பெற்றுள்ளன. ஒவ்வொரு குழுவிலிருந்தும் முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகள் ஜூலை 26-ம் தேதி நடக்கும் அரையிறுதிக்கு முன்னேறும். இறுதிப்போட்டி ஜூலை 28-ம் தேதி நடைபெறுகிறது.

    இந்நிலையில், மகளிர் ஆசிய கோப்பைக்கான முதல் போட்டியில் இந்திய அணி ஜூலை 19-ம் தேதி பாகிஸ்தானுடன் மோதுகிறது.

    • 3 ஒருநாள் போட்டிகளிலும் தென் ஆப்பிரிக்கா பெண்கள் அணியை வீழ்த்தி இந்திய அணி வெற்றி பெற்றது.
    • டி20 போட்டிகளுக்கான டிக்கெட் விலை 150 ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    தென் ஆப்பிரிக்கா பெண்கள் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள், 1 டெஸ்ட், 3 டி20 போட்டிகளில் விளையாடுகிறது.

    அதில் முதலில் நடைபெற்ற 3 ஒருநாள் போட்டிகளிலும் தென் ஆப்பிரிக்கா பெண்கள் அணியை வீழ்த்தி இந்திய அணி வெற்றி பெற்றது.

    அடுத்தாக டெஸ்ட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஜூன் 28 ஆம் தேதி தொடங்கவுள்ளது.

    இந்நிலையில், சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஜூன் 28ம் தேதி முதல் 1ம் தேதி வரை நடைபெறவுள்ள இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையேயான மகளிர் டெஸ்ட் போட்டியை பார்க்க அனுமதி இலவசம் என தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் அறிவித்துள்ளது.

    இதேபோல், ஜூலை 5, 7, 9 ஆகிய தேதிகளில் நடைபெறும் டி20 போட்டிகளுக்கான டிக்கெட்டை, ஜூன் 29ம் தேதி PAYTM insider இணையத்தில் வாங்கி கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. டி20 போட்டிகளுக்கான டிக்கெட் விலை 150 ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 

     

    • கடந்த சீசனில் இரண்டு போட்டிகளில் 116 ரன்கள் அடித்துள்ளார்.
    • ஒரு அரைசதம் அவரது ஸ்கோரில் அடங்கும்.

    இந்தியாவின் இடது கை பேட்ஸ்மேனும், தமிழகத்தைச் சேர்ந்தவருமான சாய் சுதர்சன் கடந்த சீசனில் கவுன்ட்டி சாம்பியன்ஷிப்பில் சர்ரே அணிக்காக விளையாடினார். இரண்டு போட்டிகளில் விளையாடி 116 ரன்கள் அடித்தார். அதில் ஒரு அரைசதம் ஆகும். இது அந்த அணி 22-வது முறை சாம்பியன் பட்டம் வெல்ல உதவியாக இருந்தது.

    இந்த நிலையில் மீண்டும் சர்ரே அணிக்காக இந்த சீசனில் சில போட்டிகளில் விளையாடுவார் என சர்ரே அணி தெரிவித்துள்ளது.

    சென்னையை சேர்ந்த சாய் சுதர்சன் ஐபிஎல் கிரிக்கெட்டில் குஜராத் அணிக்காக விளையாடி வருகிறார். 2024 சீசனில் 527 ரன்கள் குவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    தென்ஆப்பிரிக்கா அணிக்கெதிராக கடந்த ஆண்டு ஒருநாள் கிரிக்கெட்டில் அறிமுகம் ஆனார். 3 போட்டிகளில் 127 ரன்கள் சேர்த்தார். இதில் 2 அரைசதங்கள் அடங்கும். முதல் தர போட்டிகளில் 29 இன்னிங்சில் 1118 ரன்கள் அடித்துள்ளார்.

    ×