என் மலர்tooltip icon

    விளையாட்டு

    • பெர்த் டெஸ்டில் ஹர்ஷித் ராணாவுடன் ஸ்டார்க் ஸ்லெட்ஜிங்கில் ஈடுபட்டார்.
    • ஜெய்ஸ்வால் ஸ்டார்க்கிற்கு பதிலடி கொடுத்திருந்தார்.

    இந்தியா- ஆஸ்திரேலியா இடையில் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. இந்தியா- ஆஸ்திரேலியா இடையிலான போட்டியின்போது வார்த்தை போர் (ஸ்லெட்ஜ்- sledge) அதிகமான நடக்கும்.

    பெர்த்தில் நடைபெற்ற முதல் டெஸ்டின்போது, ஹர்ஷித் ராணா மிட்செல் ஸ்டார்க்கை பவுன்சர் மூலம் மிரட்டி முறைத்து பார்ப்பார். அப்போது ஸ்டார்க், நான் இதைவிட அதிக வேகத்தில் பந்து வீசுவேன். எனக்கு இதுபோன்ற அனுபவம் உள்ளது என்பார்.

    இந்தியா 2-வது இன்னிங்சில் விளையாடும்போது ஜெய்ஸ்வால் ஸ்டார்க் பந்தில் சிக்சர் விளாசுவார். பின்னர் ஸ்டார்க் வீசிய பந்தை ஸ்மார்ட்டாக தடுத்து ஆடுவார். பின்னர் உங்கள் பந்து மிகவும் வேகமாக வரவில்லை. ஸ்லோவாக உள்ளது என பதிலடி கொடுப்பார். இது மிகப்பெரிய விசயமாக பேசப்பட்டது.

    இந்த நிலையில் போட்டியின்போது ஜெய்ஸ்வால் என்னையும் ஸ்லெட்ஜ் செய்தார் என நாதன் லயன் தெரிவித்துள்ளார்.

    2-வது இன்னிங்சில் 120 ரன்கள் அடித்தபோது தசைப்பிடிப்பு காரணமாக பிசியோ பெற்றார். பின்னர் நான் பந்து வீசும்புாது என்னை நோக்கி நீங்கள் லெஜண்ட்தான். ஆனால் நீங்கள் வயதானவர் என ஜெய்ஸ்வால் என்னிடம் தெரிவித்தார் என நாதன் லயன் தெரிவித்துள்ளார்.

    டெஸ்ட் போட்டியில் அதிக விக்கெட் வீழ்த்தியவர்கள் பட்டியலில் நாதன் லயன் 3-வது இடத்தில் உள்ளார். அவர் 130 போட்டிகளில் 532 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார்.

    • இந்தியா பாகிஸ்தான் செல்ல மறுப்பு தெரிவிப்பதால் பொதுவான இடத்தில் போட்டியை நடத்த திட்டம்.
    • இந்தியா விளையாடும் போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

    ஐசிசி நடத்தும் சாம்பியன்ஸ் டிராபி தொடர் அடுத்த வருடம் பாகிஸ்தானில் நடைபெற இருக்கிறது. நாங்கள் பாகிஸ்தான் சென்று விளையாடமாட்டோம் என இந்திய அணி (பிசிசி) தெரிவித்தது.

    இதனால் போட்டியை ஹைபிரிட் மாடல் (பாகிஸ்தான் மற்றும் மற்றொரு நாடு) என்ற வகையில் நடத்த ஐசிசி விரும்பியது. ஆனால் பாகிஸ்தான் அதற்கு ஒத்துக்கொள்ளவில்லை. இதனால் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.

    பேச்சுவார்த்தையின் போது ஹைபிரிட் மாடலுக்கு நாங்கள் சம்மதம். அதேபோல் இந்தியாவில் 2031 வரை நடைபெறும் ஐசிசி தொடர்களும் ஹைபிரிட் மாடலாக நடத்தப்பட வேண்டும் என பாகிஸ்தான் கோரிக்கை வைத்தது.

    இதை பிசிசிஐ ஏற்கவில்லை. நேற்று ஐசிசி தலைவர் ஜெய் ஷா தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு தலைவர் உள்ளிட்ட அனைத்து கிரிக்கெட் போர்டு தலைவர்களும் கலந்து கொண்டனர்.

    இதில் பாகிஸ்தான் ஹைபிரிட் மாடலுக்கு சம்மதம் தெரிவித்துள்ளது. இறுதி அறிவிப்பு விரைவில் வெளியாகும். அதனைத் தொடர்ந்து போட்டி அட்டவணை வெளியாகும். பாகிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் (UAE) ஆகிய நாடுகளில் போட்டி நடத்தப்படுகிறது. இந்தியா விளையாடும் போட்டிகளில் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும்.

    அதேவேளையில் 2027 வரை இந்தியாவில் நடைபெற இருக்கும் ஐசிசி தொடர்கள் ஹைபிரிட் மாடலாக நடத்தப்படும் என முடிவு எடுக்கப்பட்டதாக தெரிகிறது.

    இந்த காலக்கட்டத்தில் இந்தியா பெண்கள் ஒருநாள் உலகக் கோப்பை போட்டியை நடத்த இருக்கிறது. 2026 டி20 உலகக் கோப்பை (ஆண்கள்) இலங்கையுடன் சேர்ந்து நடத்துகிறது.

    பெண்கள் போட்டிகள் ஹைபிரிட் மாடலாக நடத்தப்பட வேண்டும். 2026 டி20 உலகக் கோப்பையில் பாகிஸ்தான் விளையாடும் போட்டிகள் இலங்கையில் நடத்தப்படும். ஒருவேளை அரையிறுதி, இறுதிப் போட்டிக்கு பாகிஸ்தான் தகுதிப் பெற்றால் இந்த போட்டிகளும் இலங்கையில் நடத்தப்படும்.

    கிரிக்கெட் வெற்றி பெற வேண்டும், அது மிக முக்கியமானது. ஆனால் அனைவருக்குமான மரியாதையுடன் இருக்க வேண்டும். கிரிக்கெட்டுக்கு சிறந்ததைச் செய்வோம். நாம் எந்த வடிவிலான கிரிக்கெட்டிற்கு சென்றாலும், அது சமமானதாக இருக்க வேண்டும் என பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு தலைவர் நக்வி தெரிவித்துள்ளார்.

    • இரு அணிகளுக்கு இடையிலான 2வது டெஸ்ட் வெல்லிங்டனில் தொடங்கியது.
    • டாஸ் வென்ற நியூசிலாந்து பவுலிங் தேர்வு செய்தது.

    வெல்லிங்டன்:

    இங்கிலாந்து அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் டெஸ்டில் இங்கிலாந்து அபார வெற்றி பெற்றது.

    இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 2வது டெஸ்ட் வெல்லிங்டனில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற நியூசிலாந்து பவுலிங் தேர்வு செய்தது.

    அதன்படி, இங்கிலாந்து அணி முதலில் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் பென் டக்கெட் டக் அவுட்டானார். ஜாக் கிராலி 17 ரன்னிலும், ஜோ ரூட் 3 ரன்னிலும், ஜேக்கப் பெத்தேல் 16 ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தனர்.

    இதனால் இங்கிலாந்து அணி 43 ரன்கள் எடுப்பதற்குள் முன்னணி வீரர்களின் விக்கெட்டுகளை இழந்து திணறி வருகிறது.

    நியூசிலாந்து சார்பில் மேட் ஹென்றி, நாத்ன் ஸ்மித் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

    • நவம்பர் மாதத்திற்கான சிறந்த வீரர், வீராங்கனைகளுக்கான பரிந்துரை பட்டியலை ஐ.சி.சி அறிவித்தது.
    • இந்தப் பட்டியலில் இந்தியாவின் ஜஸ்பிரித் பும்ரா இடம் பிடித்துள்ளார்.

    துபாய்:

    ஒவ்வொரு மாதமும் சிறந்த வீரர் மற்றும் வீராங்கனையை தேர்வு செய்து ஐ.சி.சி கவுரவித்து வருகிறது.

    அதன்படி, நவம்பர் மாதத்திற்கான சிறந்த வீரர் மற்றும் வீராங்கனையை தேர்வு செய்ய தலா 3 வீரர் மற்றும் வீராங்கனைகளை ஐ.சி.சி அறிவித்துள்ளது.

    சிறந்த வீரர்களுக்கான பரிந்துரை பெயர்ப்பட்டியலில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா, பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் ஹரிஸ் ரவூப், தென் ஆப்பிரிக்க ஆல் ரவுண்டர் மார்கோ ஜான்சன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

    ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் வெற்றிபெற காரணமாக இருந்து ஆட்ட நாயகன் விருது பெற்றவர் பும்ரா என்பது குறிப்பிடத்தக்கது.

    சிறந்த வீராங்கனை விருதிற்கான பரிந்துரை பெயர்ப்பட்டியலில் தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த நாடின் டி கிளர்க், இங்கிலாந்து வீராங்கனை டேனி வியாட்-ஹாட்ஜ், வங்கதேசத்தை சேர்ந்த ஷர்மின் அக்தர் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

    • கவுகாத்தி மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் போட்டி கவுகாத்தியில் நடந்து வருகிறது.
    • இதில் இந்தியாவின் ரஜாவத் 2வது சுற்றில் தோல்வி அடைந்தார்.

    கவுகாத்தி:

    கவுகாத்தியில் மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் போட்டி கவுகாத்தியில் நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில், ஆண்கள் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில் இந்தியாவின் தருண், சக வீரரான பிரியான்ஷு ரஜாவத்துடன் மோதினார்.

    இதில் தருண் 24-22, 15-21, 21-13 என்ற புள்ளிக்கணக்கில் வென்று காலிறுதிக்கு முன்னேறினார். இந்தப் போட்டி சுமார் ஒரு மணி நேரம் 10 நிமிடங்களில் முடிவுக்கு வந்தது.

    • புரோ கபடி லீக் போட்டி இந்தியாவில் நடந்து வருகிறது.
    • இதில் டெல்லி, உ.பி. அணிகள் இடையிலான ஆட்டம் டிராவில் முடிந்தது.

    புனே:

    11-வது புரோ கபடி லீக் தொடர் கடந்த அக்டோபர் 18-ம் தேதி ஐதராபாத்தில் தொடங்கியது. இந்த தொடரின் இரண்டாம் கட்ட லீக் ஆட்டங்கள் உத்தர பிரதேசத்தின் நொய்டாவில் நடைபெற்றது.

    புரோ கபடி லீக்கின் மூன்றாம் கட்ட லீக் ஆட்டங்கள் மகாராஷ்டிராவின் புனே நகரில் நடந்து வருகிறது.

    இதில் இன்று நடைபெற்ற முதல் லீக் ஆட்டத்தில் தபாங் டெல்லி, உ.பி. யோதாஸ் அணிகள் மோதின. பரபரப்பாக நடந்த இந்த போட்டி 32-32 என்ற புள்ளிக்கணக்கில் சமனில் முடிந்தது. உபி யோதாஸ் அணி 4வது இடத்தில் உள்ளது.

    மற்றொரு ஆட்டத்தில் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ், யு மும்பா அணிகளுக்கு இடையிலான போட்டியும் 22-22 என சமனில் முடிந்தது.

    இதன்மூலம் யு மும்பா அணி 2வது இடத்துக்கு முன்னேறியது.

    புள்ளிப்பட்டியலில் அரியானா ஸ்டீலர்ஸ் அணி முதல் இடத்தில் நீடிக்கிறது.

    • முதல் டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்கா வென்று தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது.
    • முதல் நாள் முடிவில் தென் ஆப்பிரிக்கா 7 விக்கெட்டுக்கு 269 ரன்கள் எடுத்துள்ளது.

    கெபேஹா:

    தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்துள்ள இலங்கை கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்கா வெற்றி பெற்று தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது.

    இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இன்று தொடங்கியது. டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணியின் தொடக்க ஆட்டக்காரர் டோனி-டி-சோர்சி முதல் பந்தில் டக் அவுட் ஆகி அதிர்ச்சி அளித்தார். ஸ்டப்ஸ் 4 ரன்னும், எய்டன் மார்க்ரம் 20 ரன்னும் எடுத்து அவுட்டாகினர்.

    அடுத்து இறங்கிய ரியான் ரிக்கல்டன்-பவுமா ஜோடி பொறுப்புடன் விளையாடியது. அரைசதம் அடித்து அசத்திய பவுமா 78 ரன்களில் ஆட்டமிழந்தார்.

    சிறப்பாக ஆடி சதமடித்த ரிக்கல்டன் 101 ரன்களில் ஆட்டமிழந்தார். மார்கோ ஜான்சன் 4 ரன்னில் ஆட்டமிழக்க முதல் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது.

    இறுதியில், முதல் நாள் முடிவில் தென் ஆப்பிரிக்கா 7 விக்கெட்டுக்கு 269 ரன்கள் எடுத்துள்ளது. கைல் வெர்ரைன் 48 ரன்னுடன் அவுட்டாகாமல் உள்ளார்.

    இலங்கை சார்பில் லஹிரு குமாரா 3 விக்கெட்டும், அசிதா பெர்னண்டோ 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    • ஜிம்பாப்வே அணிக்கு கடைசி 2 ஓவரில் 21 ரன்கள் தேவைப்பட்டது.
    • 19-வது ஓவரில் 9 ரன்களும், கடைசி ஓவரில் 12 ரன்களும் அடித்து வெற்றி பெற்றது.

    பாகிஸ்தான்- ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான 3-வது மற்றும் கடைசி டி20 போட்டி இன்று நடைபெற்றது. முதலில் விளையாடிய பாகிஸ்தான் அணியால் 20 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 132 ரன்கள் மட்டுமே அடிக்க முடிந்தது.

    பின்னர் 133 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் ஜிம்பாப்வே அணி களம் இறங்கியது. அந்த அணி முதல் 9.4 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 73 ரன்கள் விளாசியது. இதனால் எளிதாக வெற்றிபெறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. 18 ஓவர் முடிவில் 112 ரன்னுக்குள் 6 விக்கெட்டுகளை இழந்தது.

    கடைசி 2 ஓவரில் 21 ரன்கள் தேவைப்பட்டது. ஜிம்பாப்வே முதல் 3 பந்தில் நான்கு ரன்கள் சேர்த்தது. 5-வது பந்தை மசகட்சா பவுண்டரிக்கு விரட்டினார். என்றாலும் அடுத்த பந்தில் ஆட்டமிழந்தார். கடைசி பந்தில் ஒரு ரன் கிடைத்தது. இந்த ஓவரில் 9 ரன்கள் கிடைத்தது.

    இதனால் கடைசி ஓவரில் 12 ரன்கள் தேவைப்பட்டது. அறிமுக வீரரான மபோசா முதல் பந்தை பவுண்டரிக்கும், 2-வது பந்தை சிக்சருக்கும் தூக்கினார். இதனால் கடைசி 4 பந்தில் 2 ரன்கள் தேவைப்பட்டது.

    3-வது பந்தில் ஒரு ரன் அடிக்க, 4-வது பந்தில் விக்கெட்டை இழந்தது. 5-வது பந்தில் ஒரு ரன் அடிக்க ஜிம்பாப்வே 19.5 ஓவரில் இலக்கை எட்டி 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    முதல் இரண்டு போட்டிகளிலும் பாகிஸ்தான் வெற்றி பெற்றிருந்ததால் தொடரை 2-1 எனக் கைப்பற்றியது,

    • முதல் சுற்றில் டிங் லிரென் வெற்றி பெற்றார்.
    • 3-வது சுற்றில் குகேஷ் வெற்றி பெற்றார்.

    சிங்கப்பூரில் நடைபெற்று வரும் உலக செஸ் சாம்பியன்ஷிப்பில் குகேஷ்- டிங் லிரென் இடையிலான 9-வது சுற்று ஆட்டமும் டிராவில் முடிந்தது/ World Chess Championship as the ninth game between Indian challenger D Gukesh and defending champion Ding Liren of China ended in yet another draw to still level on points here on Thursdayஉலக செஸ் சாம்பியன்ஷிப் இந்தியாவின் ஜி. குகேஷ்- சீனாவின் டிங் லிரென் இடையே சிங்கப்பூரில் நடைபெற்று வருகிறது. 8 சுற்றுகள் முடிவில் இரண்டு பேரும் 4 புள்ளிகளுடன் சமநிலையில் இருந்தனர். 8 சுற்று போட்டிகளில் இருவரும் தலா ஒரு சுற்றில் வெற்றி பெற்றிருந்தனர். மற்று 4 சுற்றுகளும் டிராவில் முடிந்திருந்தனர்.

    இந்த நிலையில் இன்று நடைபெற்ற 9-வது சுற்றும் டிராவில் முடிந்துள்ளது. இதனால் இருவரும் தலா 4.5 புள்ளிகள் பெற்றுள்ளனர்.

    நாளை ஓய்வு நாளாகும். நாளைமறுதினம் 9-வது சுற்று போட்டி நடைபெறுகிறது. இதில் வெற்றி பெறும் வீரருக்கு 2.5 மில்லியன் அமெரிக்க டாலர் பரிசாக வழங்கப்படும். மொத்தம் 14 சுற்றுகள் வரை போட்டி நடைபெறும். 14 சுற்றுகள் முடிவில் இருவரும் சமமான புள்ளிகள் பெற்றிருந்தால், அதன்பின் வெற்றியை தீர்மானிக்க faster time control கடைபிடிகக்ப்படும். இதில் வெற்றி பெறுபவர்கள் சாம்பியன் பட்டம் வெல்வார்கள்.

    முதல் சுற்றில் டின் லிரென் வெற்றி பெற்றிருந்தார். குகேஷ் 3-வது சுற்றில் வெற்றி பெற்றிருந்தார். 2-வது, 4வது, 5-வது, 6-வது, 7-வது மற்றும் 8-வது சுற்றுகள் ஏற்கனவே டிராவில் முடிந்திருந்தன.

    54-வது காய் நகர்த்தலுக்குப் பிறகு இருவரும் போட்டியை முடித்துக் கொள்ள ஒப்புக்கொண்டனர். இதனால் போட்டி டிராவில் முடிந்ததாக அறிவிக்கப்பட்டது.

    • அடிலெய்டு டெஸ்டில் இந்திய அணி ஹர்ஷித் ராணா உடன் களம் இறங்கும் என எதிர்பார்ப்பு.
    • அதேவேளையில் ஆகாஷ் தீப் உடனம் களம் இறங்கினால் நன்றாக இருக்கும் என ரவி சாஷ்திரி தெரிவித்துள்ளார்.

    இந்தியா- ஆஸ்திரேலியா இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நாளை அடிலெய்டில் தொடங்குகிறது. இது பகல்-இரவு போட்டியாக நடக்கிறது. இந்த போட்டியில் பிங்க்-பால் பயன்படுத்தப்பட இருக்கிறது. பிங்க்-பால் இரவு நேரத்தில் லைட் வெளிச்சத்தில் அதிக அளவில் ஸ்விங் ஆகும்.

    இந்தியா முதல் (பெர்த்) டெஸ்டில் பும்ரா, ஹர்ஷித் ராணா, முகமது சிராஜ் ஆகிய மூன்று வேகப்பந்து வீச்சாளர்களுடன் களம் இறங்கியது. நிதிஷ் ரெட்டி ஆல்-ரவுண்டர் வேகப்பந்து வீச்சாளரான அணியில் உள்ளார். அறிமுகமான பெர்த் டெஸ்டில் ஹர்ஷித் ராணா சிறப்பாக பந்து வீசினார். பிங்க்-பால் பயிற்சி ஆட்டத்திலும் விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

    இதனால் நாளை தொடங்கும் டெஸ்ட் போட்டியில் ஹர்ஷித் ராணா களம் இறங்க வாய்ப்புள்ளது. அதேவேளையில் பிங்க்-பால் போட்டியில் ஆகாஷ் தீப்பை களம் இறக்க வேண்டும் என ரவி சாஷ்திரி தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக ரவி சாஷ்திரி கூறுகையில் "ஒரு முக்கியமான விசயம் என்றவென்றால், இது பிங்க்-பால் டெஸ்ட் என்பதை நாம் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும் என்பதுதான். ஹர்ஷித் ராணா அறிமுக டெஸ்ட் போட்டியில் சிறப்பாக பந்து வீசினார் என்பது எனக்குத் தெரியும்.

    ஆனால் பிங்க் பால் சற்று கூடுதல் அரக்கு- வார்னீஷ் (Lacquer) இருக்கும். இதனால் பந்து ஸ்விங் செய்யவும், சீம் செய்யவும் கொஞ்சம் கடினமாக இருக்கும். இதனால் ஆகாஷ் தீப் அணியில் இருக்க வேண்டும் என நினைக்கிறேன்" என்றார்.

    • எஸ்டோனியா வீரர் 27 பந்தில் சதம் விளாசி சாதனைப் படைத்துள்ளார்.
    • அபிஷேக் சர்மா 28 பந்தில் சதம் விளாசி 2-வது இடத்தை பிடித்துள்ளார்.

    இந்திய கிரிக்கெட் அணியின் இளம் அதிரடி வீரர் அபிஷேக் சர்மா. இவர் டி20 கிரிக்கெட்டில் அணியில் இந்திய அணிக்காக விளையாடி வருகிறார். தற்போது நடைபெற்று வரும் சையத் முஷ்டாக் அலி டிராபியில் பஞ்சாப் அணிக்காக விளையாடி வருறார். இன்று நடைபெற்ற போட்டி ஒன்றில் பஞ்சாப்- மேகாலயா அணிகள் மோதின.

    முதலில் விளையாடிய மேகாலயா 20 ஓவில் 7 விக்கெட் இழப்பிற்கு 142 ரன்கள் சேர்த்தது. பின்னர் 143 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் பஞ்சாப் அணி களம் இறங்கியது.

    தொடக்க வீரராக களம் இறங்கிய அபிஷேக் சர்மா அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். பந்தை பவுண்டரிக்கும், சிக்சருக்கும் பறக்கவிட்டார். இதனால் அவர் 28 பந்தில் சதம் விளாசினார். 29 பந்தில் 8 பவுண்டரி, 11 சிக்சருடன் 106 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருக்க பஞ்சாப் அணி 9.3 ஓவரிலேயே 144 ரன்கள் எடுதது 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

    28 பந்தில் சதம் அடித்ததன் மூலம் டி20 கிரிக்கெட்டில் அதிவேகமாக சதம் விளாசிய 2-வது வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.

    முன்னதாக எஸ்டோனியா வீரர் சஹில் சவுகான் சைப்ரஸ் அணிக்கெதிராக 27 பந்தில் சதம் அடித்து டி20 கிரிக்கெட் வரலாற்றில் அதிவேக சதத்தை பதிவு செய்திருந்தார். தற்போது அபிஷேக் சர்மா இந்த சாதனை ஒரு பந்தில் மிஸ் செய்தாலும் 2-வது வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.

    இதே தொடரில் உர்வில் பட்டேலும் 27 பந்தில் சதம் விளாசியுள்ளார். இவருவரும் 2-வது இடத்தை பகிர்ந்துள்ளனர்.

    • சமிந்தா வாஸ் 355 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார்.
    • லசித் மலிங்கா 101 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார்.

    தென்ஆப்பிரிக்கா- இலங்கை அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் போர்ட் எலிசபெத்தில் உள்ள செயின்ட் ஜார்ஜ் பார்க் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற தென்ஆப்பிரிக்கா பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி முதலில் பேட்டிங் செய்த தென்ஆப்பிரிக்கா அணி 44 ரன்கள் எடுப்பதற்குள் 3 விக்கெட்டுகளை இழந்தது. தொடக்க வீரர் மார்க்கிராம் (20), 4-வது வீரர் ட்ரிஸ்டன் ஸ்டப்ஸ் (4) ஆகியோரை வேகப்பந்து வீச்சாளர் லஹிரு குமாரா வீழ்த்தினார்.

    இந்த இரண்டு விக்கெட் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் 101 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார். இதன்மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் 100 விக்கெட்டுக்கு மேல் வீழ்த்திய 5-வது இலங்கை வேகப்பந்து வீச்சாளர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

    முன்னதாக சமிந்தா வாஸ் (355), சுரங்கா லக்மல் (171), லசித் மலிங்கா (101), தில்கரா பெர்னாண்டோ (100) ஆகிய இலங்கை வேகப்பந்து வீச்சாளர்கள் 100 விக்கெட் அல்லது அதற்கு மேல் வீழ்த்தியுள்ளனர்.

    ×