என் மலர்tooltip icon

    விளையாட்டு

    • நடப்பு ஆண்டின் சிறந்த ஒருநாள் வீரர் விருதுக்கு ஐ.சி.சி. 4 பெயர்களை பரிந்துரைத்துள்ளது.
    • இந்தப் பரிந்துரைப் பட்டியலில் 2 இலங்கை வீரர்கள் இடம்பிடித்துள்ளனர்.

    துபாய்:

    ஒவ்வொரு வருடமும் சிறந்த வீரர், சிறந்த வீராங்கனை, சிறந்த ஒரு நாள் அணி, டி20 அணி, டெஸ்ட் அணி உள்ளிட்ட பல்வேறு விருதுகளை வழங்கி ஐ.சி.சி. கவுரவித்து வருகிறது. அந்த வரிசையில் இந்த வருடமும் விருது வழங்கும் வகையில் பரிந்துரை பட்டியலை வெளியிட்டு வருகிறது.

    இந்நிலையில், நடப்பு ஆண்டிற்கான 'சிறந்த ஒருநாள் கிரிக்கெட் வீரர்' விருதுக்கு தகுதியான வீரரை தேர்வு செய்ய 4 பெயர்களை ஐ.சி.சி. பரிந்துரைத்துள்ளது.

    அதில் இலங்கை வீரர்களான வனிந்து ஹசரங்கா மற்றும் குசால் மெண்டிஸ், ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த அஸ்மத்துல்லா உமர்சாய் மற்றும் வெஸ்ட் இண்டீசின் ஷெர்பான் ரூதர்போர்டு ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

    கடந்த ஆண்டு இந்த விருதை இந்தியாவின் விராட் கோலி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • புரோ கபடி லீக் போட்டி இந்தியாவில் நடந்து வருகிறது.
    • இதில் பாட்னா பைரேட்ஸ் அணி தோற்று 2வது இடம் பிடித்தது.

    புனே:

    11-வது புரோ கபடி லீக் தொடர் கடந்த அக்டோபர் 18-ம் தேதி ஐதராபாத்தில் தொடங்கியது. இந்த தொடரின் இரண்டாம் கட்ட லீக் ஆட்டங்கள் உத்தர பிரதேசத்தின் நொய்டாவில் நடைபெற்றது. புரோ கபடி லீக்கின் மூன்றாம் கட்ட லீக் ஆட்டங்கள் மகாராஷ்டிராவின் புனே நகரில் நடந்தது.

    பிளே ஆப் ஆட்டங்களில் அரியானா ஸ்டீலர்ஸ், தபாங் டெல்லி, உ.பி.யோதாஸ், பாட்னா பைரேட்ஸ் ஆகிய அணிகள் அரையிறுதிக்கு முன்னேறின.

    அரையிறுதிகளில் அரியானா ஸ்டீலர்ஸ், பாட்னா பைரேட்ஸ் அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறின.

    இந்நிலையில், இன்று நடந்த இறுதிப்போட்டியில் அரியானா ஸ்டீலர்ஸ், 3 முறை சாம்பியனான பாட்னா பைரேட்ஸ் அணிகள் மோதின.

    பரபரப்பாக நடந்த இந்த ஆட்டத்தில் அரியானா அணி 32-23 என்ற புள்ளிக்கணக்கில் பாட்னா அணியை வீழ்த்தி முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்று அசத்தியது.

    • ரோகித் தனது கடைசி 14 இன்னிங்சில் ஒழுங்காக விளையாடவில்லை.
    • அனைத்து சிறந்த வீரர்களும் ஒரு கட்டத்தில் முடிவுக்கு வருகிறார்கள்.

    ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகள் இடையிலான நான்காவது டெஸ்ட் போட்டி மெல்போர்னில் நடைபெற்று வருகிறது.

    இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 474 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. பின்னர் களமிறங்கிய இந்திய அணி முதல் இன்னிங்சில் 369 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

    டெஸ்ட் போட்டியின் நான்காம் நாளில் இரண்டாவது இன்னிங்ஸில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா அணி இன்றைய ஆட்ட நேர முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 228 ரன்களை எடுத்துள்ளது. இதன் மூலம் அந்த அணி 333 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. கடைசி நாள் இன்னும் மீதமுள்ளதால் ஆட்டம் டிராவை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.

    இந்த பார்டர்-கவாஸ்கர் டிராபியில் ரன்கள் அடிக்காத இந்திய கேப்டன் ரோகித் சர்மா கடும் விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளார்.

    இந்த தொடரில் ரோகித் இதுவரை 22 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். ரோகித்தை விடவும் ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர் போலாண்ட் அதிக ரன்களை எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்நிலையில் பாக்சிங் டே டெஸ்டின் 2 ஆவது இன்னிங்சில் ரன்கள் அடிக்க வில்லை என்றால் ரோகித்தை நான் ஓய்வு பெற சொல்லுவேன் என்று முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் மார்க் வாக் தெரிவித்துள்ளார்.

    மேலும் பேசிய அவர், "நான் ரோகித்திற்கு நன்றி கூறுவேன். நீங்கள் ஒரு சிறந்த வீரராக இருந்தீர்கள். ஆனால் உங்கள் கிரிக்கெட் வாழ்க்கையின் முடிவில் கேப்டனாக பும்ராவைக் கொண்டு வரப் போகிறோம்.

    ரோகித் விடைபெற்று செல்வது மிகவும் கடினமான வழியாக இருக்கும். அவர் தனது கடைசி 14 இன்னிங்சில் ஒழுங்காக விளையாடவில்லை. இது எல்லா வீரர்களுக்கும் நடக்கும். அனைத்து சிறந்த வீரர்களும் ஒரு கட்டத்தில் முடிவுக்கு வருகிறார்கள்" என்று தெரிவித்துள்ளார்.

    • பாகிஸ்தான் - தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி செஞ்சுரியனில் நடைபெற்றது
    • ரபடா - யான்சன் ஜோடி அதிரடியாக விளையாடி தென் ஆப்பிரிக்கா அணியை வெற்றி பெற வைத்தனர்.

    பாகிஸ்தான் அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது.

    இரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி செஞ்சுரியனில் நடந்து வருகிறது. டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் பேட் செய்த பாகிஸ்தான் அணி 57.3 ஓவரில் 211 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதனை அடுத்து ஆடிய தென் ஆப்பிரிக்கா முதல் இன்னிங்சில் 301 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

    90 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2வது இன்னிங்சில் விளையாடிய பாகிஸ்தான் அணி 2வது இன்னிங்சில் 237 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

    இதையடுத்து, 148 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் 2வது இன்னிங்சில் களமிறங்கிய தென் ஆப்பிரிக்கா அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து திணறியது.

    ஒருகட்டத்தில் 99 ரன்களுக்கு 8 விக்கெட்டுகளை இழந்து தோல்வியின் விளிம்பில் தென் ஆப்பிரிக்கா அணி தத்தளித்தது. அந்த சமயத்தில் ரபாடா - யான்சன் ஜோடி அதிரடியாக விளையாடினர். இறுதியில் தென் ஆப்பிரிக்கா அணி 150 ரன்கள் அடுத்து வெற்றி பெற்றது.

    இந்த வெற்றியின் மூலம் டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு முதல் அணியாக தென் ஆப்பிரிக்கா அணி தகுதி பெற்றுள்ளது.

    இப்போட்டியின் 2 ஆவது இன்னிங்சில் அதிரடியாக விளையாடிய ரபாடா 31 ரன்களை அடித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இதன்மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் 1000 ரன்கள் மற்றும் 300 விக்கெட்டுகளுக்கு மேல் வீழ்த்திய 3 ஆவது தென் ஆப்பிரிக்க வீரர் என்ற சாதனையை ரபாடா படைத்துள்ளார்.

    டெஸ்டில் 300 விக்கெட்டுகள் மற்றும் 1000 ரன்கள் எடுத்த தென்னாப்பிரிக்க வீரர்கள்

    ஷான் பொல்லாக் - 3,781 ரன்கள் மற்றும் 421 விக்கெட்டுகள்

    டேல் ஸ்டெய்ன் - 1,251 ரன்கள் மற்றும் 439 விக்கெட்டுகள்

    ககிசோ ரபாடா - 1,024 ரன்கள் மற்றும் 321 விக்கெட்டுகள்

    • இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான நான்காவது டெஸ்ட் போட்டி மெல்போர்னில் நடைபெற்று வருகிறது.
    • இந்த டெஸ்ட் போட்டியின் முதல் 4 நாட்களில் 2.99 லட்சம் ரசிகர்கள் மைதானத்தில் ஆட்டத்தை கண்டு ரசித்துள்ளனர்.

    ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகள் இடையிலான நான்காவது டெஸ்ட் போட்டி மெல்போர்னில் நடைபெற்று வருகிறது.

    இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 474 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. பின்னர் களமிறங்கிய இந்திய அணி முதல் இன்னிங்சில் 369 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

    டெஸ்ட் போட்டியின் நான்காம் நாளில் இரண்டாவது இன்னிங்ஸில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா அணி இன்றைய ஆட்ட நேர முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 228 ரன்களை எடுத்துள்ளது. இதன் மூலம் அந்த அணி 333 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. கடைசி நாள் இன்னும் மீதமுள்ளதால் ஆட்டம் டிராவை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.

    மெல்போர்னில் நடந்து வரும் இந்த டெஸ்ட் போட்டியின் முதல் 4 நாட்களில் 2.99 லட்சம் ரசிகர்கள் மைதானத்தில் ஆட்டத்தை கண்டு ரசித்துள்ளனர். பாக்சிங் டே டெஸ்ட் வரலாற்றில் இத்தனை ரசிகர்கள் பங்கேற்பது இதுவே முதல்முறை என்று ஐசிசி தலைவர் ஜெய் ஷா தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

    • பாகிஸ்தான் - தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி செஞ்சுரியனில் நடைபெற்றது.
    • முதல் டெஸ்டில் பாகிஸ்தானை வீழ்த்தி தென் ஆப்பிரிக்கா வெற்றி பெற்றது.

    செஞ்சுரியன்:

    பாகிஸ்தான் அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது.

    இரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி செஞ்சுரியனில் நடந்து வருகிறது. டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் பேட் செய்த பாகிஸ்தான் அணி 57.3 ஓவரில் 211 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதனை அடுத்து ஆடிய தென் ஆப்பிரிக்கா முதல் இன்னிங்சில் 301 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

    90 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2வது இன்னிங்சில் விளையாடிய பாகிஸ்தான் அணி 2வது இன்னிங்சில் 237 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

    இதையடுத்து, 148 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் 2வது இன்னிங்சில் களமிறங்கிய தென் ஆப்பிரிக்கா அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து திணறியது.

    ஒருகட்டத்தில் 99 ரன்களுக்கு 8 விக்கெட்டுகளை இழந்து தோல்வியின் விளிம்பில் தென் ஆப்பிரிக்கா அணி தத்தளித்தது. அந்த சமயத்தில் ரபாடா - யான்சன் ஜோடி அதிரடியாக விளையாடினர். இறுதியில் தென் ஆப்பிரிக்கா அணி 150 ரன்கள் அடுத்து வெற்றி பெற்றது.

    இந்த வெற்றியின் மூலம் டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு முதல் அணியாக தென் ஆப்பிரிக்கா அணி தகுதி பெற்றுள்ளது.

    மேலும் முதல் முறையாக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு தென் ஆப்பிரிக்கா அணி தகுதி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • உலக ராபிட் செஸ் சாம்பியன்ஷிப் தொடரில் இந்தியாவின் கொனேரு ஹம்பி சாம்பியன் பட்டம் வென்றார்.
    • 2019 ஆம் ஆண்டு ஜார்ஜியாவில் நடைபெற்ற தொடரிலும் ஹம்பி சாம்பியன் பட்டம் வென்றிருந்தார்.

    அமெரிக்காவின் நியூ யார்க்கில் நடைபெற்ற உலக ராபிட் செஸ் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டியில் இந்தியாவின் கொனேரு ஹம்பி சாம்பியன் பட்டம் வென்று அசத்தியுள்ளார். இறுதிப் போட்டியில் இந்தோனேசியாவை சேர்ந்த ஐரீன் சுகந்தரை எதிர்கொண்டு விளையாடிய கொனேரு ஹம்பி 11 புள்ளிகளில் 8.5 புள்ளிகளுடன் போட்டியை முடித்தார்.

    இந்த வெற்றியின் மூலம் சீனாவின் ஜூ வென்ஜூனுக்கு பிறகு அதிக முறை சாம்பியன் பட்டம் வென்றவர்கள் பட்டியலில் கொனேரு ஹம்பி இரண்டாவது இடத்தில் உள்ளார். முன்னதாக 2019 ஆம் ஆண்டு ஜார்ஜியாவில் நடைபெற்ற தொடரிலும் ஹம்பி சாம்பியன் பட்டம் வென்றது குறிப்பிடத்தக்கது.

    இந்நிலையில், உலக ராபிட் செஸ் சாம்பியன்ஷிப் தொடரில் வெற்றி பெற்ற இந்திய வீராங்கனை கொனேரு ஹம்பிக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பான அவரது எக்ஸ் பதிவில், "2வது முறையாக உலக ரேபிட் செஸ் சாம்பியன் பட்டம் பெற்றுள்ளார் கொனேரு ஹம்பி. இதன்மூலம் இப்படி ஒரு நம்பமுடியாத, மகத்தான சாதனையை நிகழ்த்திய ஒரே இந்தியர் என்ற பெருமையை பெற்றுள்ளார். உங்களின் புத்திசாலித்தனம் பலரையும் ஊக்குவிக்கட்டும்" என்று பதிவிட்டுள்ளார்.

    • பாக்சிங் டே டெஸ்ட் போட்டியில் இந்திய வீரர் நிதிஸ் குமார் சதம் விளாசி அசத்தினார்.
    • 2 ஆவது இன்னிங்சில் ஆஸ்திரேலியா அணி 333 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.

    ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகள் இடையிலான நான்காவது டெஸ்ட் போட்டி மெல்போர்னில் நடைபெற்று வருகிறது.

    இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 474 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. பின்னர் களமிறங்கிய இந்திய அணி முதல் இன்னிங்சில் 369 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

    டெஸ்ட் போட்டியின் நான்காம் நாளில் இரண்டாவது இன்னிங்ஸில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா அணி இன்றைய ஆட்ட நேர முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 228 ரன்களை எடுத்துள்ளது. இதன் மூலம் அந்த அணி 333 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. கடைசி நாள் இன்னும் மீதமுள்ளதால் ஆட்டம் டிராவை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.

    இப்போட்டியின் முதல் இன்னிங்சில் 8 ஆவது விக்கெட்டுக்கு களமிறங்கிய இந்திய வீரர் நிதிஸ் குமார் சதம் விளாசி அசத்தினார்.

    இதனையடுத்து மெல்போர்ன் மைதானத்தில் உள்ள HONOURS BOARD-ல் நிதிஷ் குமார் பெயர் இடம் பெற்றது.

    மெல்போர்ன் மைதானத்தில் நடைபெறும் டெஸ்ட் போட்டியில் சதம் மற்றும் 5 விக்கெட் எடுக்கும் வெளிநாட்டு வீரர்களை கௌரவிக்கும் விதமாக இப்பலகையில் அவர்களின் பெயர்கள் இடம்பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

    முன்னதாக மெல்போர்ன் டெஸ்டில் சதமடித்து அசத்திய நிதிஷ் குமாருக்கு ரூ.25 லட்சம் பரிசுத்தொகை வழங்குவதாக ஆந்திர கிரிக்கெட் வாரியம் அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

    • நான்காவது டெஸ்ட் போட்டி மெல்போர்னில் நடைபெற்று வருகிறது.
    • ஆஸ்திரேலியா அணி 333 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.

    ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகள் இடையிலான நான்காவது டெஸ்ட் போட்டி மெல்போர்னில் நடைபெற்று வருகிறது.

    நான்காவது டெஸ்ட் போட்டியின் நான்காம் நாளில் இரண்டாவது இன்னிங்ஸில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா அணி இன்றைய ஆட்ட நேர முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 228 ரன்களை எடுத்துள்ளது. இதன் மூலம் அந்த அணி 333 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.

    பேட்டிங்கில் ஆஸ்திரேலியா சார்பில் மார்னஸ் லபுஷேன் 70 ரன்களையும், பேட் கம்மின்ஸ் 41 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தனர். கடைசி விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த நேதன் லயன் 41 ரன்களை அடித்துள்ளார். இவருடன் ஆடிய ஸ்காட் போலண்ட் 10 ரன்களுடன் களத்தில் உள்ளனர்.

    இன்றைய ஆட்டநேர முடிவில் இந்தியா சார்பில் ஜஸ்பிரித் பும்ரா நான்கு விக்கெட்டுகளையும், முகமது சிராஜ் மூன்று விக்கெட்டுகளையும், ரவீந்திர ஜடேஜா ஒரு விக்கெட் கைப்பற்றினர்.

    • ஜஸ்பிரித் பும்ரா நான்கு விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.
    • நான்காம் நாள் ஆட்டத்தில் பும்ரா இந்த சாதனையை படைத்துள்ளார்.

    இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா. ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சிறப்பான பந்துவீச்சை பதிவு செய்து வருகிறார். அந்த வகையில், ஆஸ்திரேலியா - இந்தியா அணிகள் இடையிலான நான்காவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் ஜஸ்பிரித் பும்ரா நான்கு விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.

    தொடர்ந்து இரண்டாவது இன்னிங்ஸில் சிறப்பாக பந்துவீசிய பும்ரா, சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் 200 விக்கெட்டுகள் எனும் புதிய மைல்கல்லை கடந்து அசத்தியுள்ளார். மெல்போர்னில் நடைபெற்று வரும் நான்காவது டெஸ்ட் போட்டியின் நான்காம் நாள் ஆட்டத்தில் பும்ரா இந்த சாதனையை படைத்துள்ளார்.

    ஏற்கனவே இந்த தொடரில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர் என்ற பெருமையை பெற்றுள்ள பும்ரா 200 விக்கெட்டுகளை கைப்பற்றிய சாதனையோடு, சர்வதேச கிரிக்கெட்டில் புகழ்பெற்ற மால்கோம் மார்ஷல், ஜோயல் கார்னர் மற்றும் கர்ட்லி ஆம்ப்ரோஸ் ஆகியோரை முந்தியுள்ளார். சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் 200 விக்கெட்டுகளை வீழ்த்திய பந்துவீச்சாளர்கள் யாரும் பும்ரா அளவுக்கு சிறப்பான சராசரியை வைத்திருந்ததில்லை.

    200 விக்கெட்டுகளை கடந்தும், 201 மற்றும் 202வது விக்கெட்டுகளை கைப்பற்றிய பும்ராவின் சராசரி 19.5 மட்டும் தான். இதன் மூலம் அவர் மால்கோம் மார்ஷல் (20.9), கோயல் கார்னர் (21.0) மற்றும் கர்ட்லி ஆம்ப்ரோஸ் (21.0) ஆகியோரை விட சிறப்பான சராசரியை வைத்துக் கொண்டு 200 விக்கெட்டுகளை கைப்பற்றி பும்ரா சாதனை படைத்துள்ளார்.

    இதுவரை சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் எந்த பந்துவீச்சாளரும் பும்ரா அளவுக்கு 19.56 எனும் சராசரியுடன் 200 விக்கெட்டுகளை கைப்பற்றியது இல்லை. சர்வதேச டெஸ்ட் கிரிக்கெடெ்டில் பும்ராவின் 200வது விக்கெட் டிராவிஸ் ஹெட் ஆக அமைந்தது. 

    • கொனேரு ஹம்பி 8.5 புள்ளிகளுடன் போட்டியை முடித்தார்.
    • ஜார்ஜியாவில் நடைபெற்ற தொடரிலும் ஹம்பி சாம்பியன் பட்டம் வென்றிருந்தார்.

    அமெரிக்காவின் நியூ யார்க்கில் நடைபெற்ற உலக ராபிட் செஸ் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டியில் இந்தியாவின் கொனேரு ஹம்பி சாம்பியன் பட்டம் வென்று அசத்தியுள்ளார். இறுதிப் போட்டியில் இந்தோனேசியாவை சேர்ந்த ஐரீன் சுகந்தரை எதிர்கொண்டு விளையாடிய கொனேரு ஹம்பி 11 புள்ளிகளில் 8.5 புள்ளிகளுடன் போட்டியை முடித்தார்.

    இந்த வெற்றியின் மூலம் சீனாவின் ஜூ வென்ஜூனுக்கு பிறகு அதிக முறை சாம்பியன் பட்டம் வென்றவர்கள் பட்டியலில் கொனேரு ஹம்பி இரண்டாவது இடத்தில் உள்ளார். முன்னதாக 2019 ஆம் ஆண்டு ஜார்ஜியாவில் நடைபெற்ற தொடரிலும் ஹம்பி சாம்பியன் பட்டம் வென்றது குறிப்பிடத்தக்கது.

    சமீபத்தில் சிங்கப்பூரில் நடைபெற்ற உலக செஸ் சாம்பியன்ஷிப் தொடரில் இந்தியாவின் குகேஷ் சீனாவின் டிங் லிரனை தோற்கடித்து சாம்பியனாக வெற்றி பெற்றார். இதைத் தொடர்ந்து தற்போது ராபிட் செஸ் சாம்பியன்ஷிப் தொடரில் கொனேரு ஹம்பி சாதனை படைத்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

    ஏற்கனவே 2012 ஆம் ஆண்டு மாஸ்கோவில் நடைபெற்ற ராபிட் செஸ் உலக தொடரில் கொனேரு ஹம்பி வெண்கல பதக்கம் வென்று இருந்தார். மேலும், கடந்த ஆண்டு உஸ்பெகிஸ்தானில் நடைபெற்ற போட்டியில் வெள்ளி பதக்கம் வென்று இருந்தார்.

    • ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் அடுத்த மாதம் நடைபெறுகிறது.
    • இந்தத் தொடரில் இருந்து ருமேனியா முன்னணி வீராங்கனை விலகியுள்ளார்.

    சிட்னி:

    அடுத்த ஆண்டின் முதல் கிராண்ட்ஸ்லாம் போட்டியான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் அடுத்த மாதம் 12-ம் தேதி தொடங்கி 26-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதற்கான தகுதிச்சுற்று ஜனவரி 6 முதல் 9-ம் தேதி வரை நடைபெற உள்ளது.

    இந்நிலையில், இந்தத் தொடரிலிருந்து 2 கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றவரும், முன்னாள் நம்பர் 1 வீராங்கனையான ருமேனியாவின் சிமோனா ஹாலெப் விலகுவதாக அறிவித்துள்ளார்.

    கால்முட்டி மற்றும் தோள்பட்டை வலியால் அவதிப்படும் அவர் அதிலிருந்து முழுமையாக மீளாததால் இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிவித்தார்.

    ×