search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "steyn"

    தென் ஆப்பிரிக்கா- இலங்கை அணிகள் மோதும் முதல் டெஸ்ட் நேற்று டர்பனில் தொடங்கியது. இந்த போட்டியின் போது திரிமானே விக்கெட்டை ஸ்டெய்ன் வீழ்த்தியபோது கபில்தேவின் சாதனையை அவர் சமன் செய்தார். #Steyn #SAvSL #kapildev

    டர்பன்:

    இலங்கை கிரிக்கெட் அணி 2 டெஸ்ட், 5 ஒருநாள் போட்டி மற்றும் மூன்று 20 ஓவரில் விளையாடு வதற்காக தென் ஆப்பிரிக்கா சென்றுள்ளது.

    தென் ஆப்பிரிக்கா- இலங்கை அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி டர்பனில் நேற்று தொடங்கியது. முதலில் விளையாடிய தென் ஆப்பிரிக்கா இலங்கையுடன் அனுபவமற்ற பந்து வீச்சால் திணறியது. அந்த அணி 235 ரன்னில் சுருண்டது. குயின்டன் டி காக் அதிகபட்சமாக 80 ரன்னும், பவுமா 47 ரன்னும் எடுத்தனர். பெர்னாண்டோ 4 விக்கெட்டும், ரஜினதா 3 விக்கெட்டும் எடுத்தனர்.

    பின்னர் முதல் இன்னிங்சை விளையாடிய இலங்கை நேற்றைய முதல் நாள் ஆட்டத்தின் முடிவில் 1 விக்கெட் இழப்புக்கு 49 ரன் எடுத்து இருந்தது. திரிமானே ரன் எதுவும் எடுக்காமல் ஸ்டெய்ன் பந்தில் ஆட்டம் இழந்தார்.

    இந்த விக்கெட் மூலம் கபில்தேவின் சாதனையை ஸ்டெய்ன் சமன் செய்தார். கபில்தேவ் 131 டெஸ்டில் 434 விக்கெட் கைப்பற்றி அதிக விக்கெட் வீழ்த்திய வீரர்களில் 8-து இடத்தில் இருந்தார். ஸ்டெய்ன் 92 டெஸ்டில் 434 விக்கெட் கைப்பற்றி அவரை சமன் செய்துள்ளார்.

    அதிக விக்கெட் கைப்பற்றிய வேகப்பந்து வீரர்களில் 5-வது இடத்துக்கும், ஒட்டு மொத்தமாக 8-வது இடத்துக்கும் முன்னேறி உள்ளார்.

    இன்றைய ஆட்டத்தில் அவர் விக்கெட்டுகளை கைப்பற்றும் போது மேலும் முன்னேற்றம் அடைவார். #Steyn #SAvSL #kapildev

    செஞ்சூரியனில் இன்று தொடங்கிய முதல் டெஸ்டில் தென்ஆப்பிரிக்காவின் வேகப்பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 181 ரன்னில் சுருண்டது பாகிஸ்தான் #SAvPAK
    தென்ஆப்பிரிக்கா - பாகிஸ்தான் இடையிலான முதல் டெஸ்ட் செஞ்சூரியனில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற பாகிஸ்தான் பேட்டிங் தேர்வு செய்தது.

    இமாம்-உல்-ஹக், பகர் சமான் ஆகியோர் தொடக்க வீரர்களான களம் இறங்கினார்கள். முதல் ஓவரை ஸ்டெயின் வீசினார். 2-வது ஓவரை ரபாடா வீசினார். 2-வது ஓவரின் முதல் பந்தில் ரன்ஏதும் எடுக்காமல் இமாம்-உல்-ஹக் எல்பிடபிள்யூ ஆகி வெளியேறினார்.

    அடுத்து பகர் சமான் உடன் ஷான் மசூத் ஜோடி சேர்ந்தார். பகர் சமான் 12 ரன்கள் எடுத்த நிலையில் ஸ்டெயின் பந்தில் ஆட்டமிழந்தார். இந்த விக்கெட்டை வீழ்த்தியதன் மூலம் 422 விக்கெட்டுக்களுடன் டெஸ்ட் போட்டியில் அதிக விக்கெட்டுக்கள் வீழ்த்திய தென்ஆப்பிரிக்கா வீரர் என்ற சாதனையைப் படைத்தார்.

    ஷான் மசூத் 19 ரன்னில் வெளியேறினார். அசார் அலி தாக்குப்பிடித்து விளையாட ஆசாத் ஷபிக் 7 ரன்னில் வெளியேறினார். தென்ஆப்பிரிக்காவின் வேகப்பந்து வீச்சை தாக்குப் பிடிக்க முடியாமல் பாகிஸ்தான் வீரர்கள் சீரான இடைவெளியில் வெளியேறிக் கொண்டே இருந்தார்கள்.

    பாகிஸ்தான் அணியின் ஸ்கோர் 86 ரன்னாக இருக்கும்போது அசார் அலி 36 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அதன்பின் வந்த கேப்டன் சர்பிராஸ் அகமது (0), முகமது அமிர் (1) அடுத்தடுத்து வெளியேற, பாகிஸ்தான் 111 ரன்கள் எடுப்பதற்குள் 8 விக்கெட்டுக்களை இழந்து தத்தளித்தது.

    மறுமுனையில் நின்றிருந்த பாபர் ஆசம் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதனால் ஸ்கோர் மளமளவென உயர்ந்தது. பாபர் ஆசம் 58 பந்தில் 10 பவுண்டரியுடன் அரைசதம் அடித்தார். ஸ்டெயின் வீசிய ஓவரில் நான்கு பவுண்டரிகள் விரட்டினார்.



    அணியின் ஸ்கோர் 178 ரன்னாக இருக்கும்போது பாபர் ஆசம் 79 பந்தில் 15 பவுண்டரியுடன் 71 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். 9-வது விக்கெட்டுக்கு பாபர் ஆசம் ஹசன் அலி உடன் இணைந்து 67 ரன்கள் சேர்த்தார். ஹசன் அலி 21 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழக்க பாகிஸ்தான் 47 ஓவர்களில் 181 ரன்கள் சேர்த்து ஆல்அவுட் ஆனது. பாபர் ஆசம் அதிரடி ஆட்டத்தால் பாகிஸ்தான் கவுரவமான ஸ்கோரை எட்டியது.

    தென்ஆப்பிரிக்கா அணி சார்பில் வேகப்பந்து வீச்சாளர் ஆலிவியர் 6 விக்கெட்டுக்களும், ரபாடா 3 விக்கெட்டுக்களும் வீழ்த்தினார்கள். ஸ்டெயின் ஒரு விக்கெட் வீழ்த்தினார். பின்னர் தென்ஆப்பிரிக்கா முதல் இன்னிங்ஸை தொடங்கியுள்ளது.
    டெஸ்ட் போட்டியில் அதிக விக்கெட்டுக்கள் வீழ்த்திய தென்ஆப்பிரிக்கா வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார் வேகப்பந்து வீச்சாளர் ஸ்டெயின் #SAvPAK
    தென்ஆப்பிரிக்கா அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் டேல் ஸ்டெயின். இவர் டெஸ்ட் போட்டியில் 421 ரன்கள் வீழ்த்தி பொல்லாக் உடன் அதிக விக்கெட்டுக்கள் வீழ்த்திய வீரர் என்ற சாதனையை சமன் செய்திருந்தார்.

    கடந்த ஜூலை மாதம் இலங்கையில் நடைபெற்ற டெஸ்டில் ஸ்டெயின் விளையாடினார். ஆனால் இரண்டு இன்னிங்சிலும் ஒரு விக்கெட் கூட அவரால் வீழ்த்த முடியவில்லை. இதனால் பொல்லாக் சாதனையை முறியடிக்க முடியாமல் இருந்தார் ஸ்டெயின்.



    இந்நிலையில் தென்ஆப்பிரிக்கா - பாகிஸ்தான் இடையிலான முதல் டெஸ்ட் செஞ்சூரியனில் இன்று தொடங்கியது. இந்த போட்டியில் ஸ்டெயின் தனது 4-வது ஓவரின் முதல் பந்தில் தொடக்க வீரர் பகர் சமானை 12 ரன்னில் வீழ்த்தினார். இதன்மூலம் அதிக விக்கெட்டுக்கள் வீழ்த்திய தென்ஆப்பிரிக்கா வீரர் என்ற சாதனையை படைத்தார்.
    டெஸ்ட் கிரிக்கெட்டில் சாதனைப் படைத்துள்ள ஜேம்ஸ் ஆண்டர்சன் மெக்ராத் மற்றும் டேல் ஸ்டெயின் என்னைவிட சிறந்தவர்கள் என்று தெரிவித்துள்ளார். #Anderson
    இங்கிலாந்து - இந்தியா இடையிலான கடைசி டெஸ்டில் இந்தியாவின் கடைசி விக்கெட்டாக முகமது ஷமியை வீழ்த்தியன் மூலம் ஜேம்ஸ் ஆண்டர்சன் மெக்ராத்தை பின்னுக்கு தள்ளி 564 விக்கெட்டுக்களுடன் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அதிக விக்கெட்டுக்கள் வீழ்த்திய வீரர் என்ற சாதனையைப் படைத்துள்ளார்.

    564 விக்கெட்டுக்கள் வீழ்த்திய ஜேம்ஸ் ஆண்டர்சன் 600 விக்கெட்டுக்கள் வீழ்த்துவார் என்று மெக்ராத் தெரிவித்திருந்தார். இந்நிலையில் என்னைவிட மெக்ராத் மற்றும் தென்ஆப்பிரிக்காவின் டெல் ஸ்டெயின் ஆகியோர் சிறந்த பந்து வீச்சாளர்கள் என்று ஜேம்ஸ் ஆண்டர்சன் தெரிவித்துள்ளார்.



    இதுகுறித்து ஜேம்ஸ் ஆண்டர்சன் கூறுகையில் ‘‘நான் மெக்ராத்தை பற்றி சில விஷயங்களை உங்களுக்கு சொல்லியாக வேண்டும். அவர் என்னைவிட சிறந்த பந்து வீச்சாளர். இது தவறான தன்னடக்கம் இல்லை’’ என்றார்.
    இலங்கை தொடருக்கான பயிற்சி ஆட்டத்தில் தென்ஆப்பிரிக்கா சுழற்பந்து வீச்சாளர் ஷாமிசி ஐந்து விக்கெட் வீழ்த்தி அசத்தியுள்ளார். #SLvSA
    தென்ஆப்பிரிக்கா கிரிக்கெட் அணி மூன்று வகை கிரிக்கெட் தொடரிலும் விளையாடுவதற்காக இலங்கை சென்றுள்ளது. இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் வருகிற 12-ந்தேதி காலேயில் தொடங்குகிறது. இதற்கு முன் இலங்கை கிரிக்கெட் போர்டு லெவன் அணிக்கெதிராக இரண்டு நாட்கள் கொண்ட பயிற்சி ஆட்டத்தில் விளையாட முடிவு செய்தது. அந்த பயிற்சி ஆட்டம் இன்று தொடங்கியது.

    டாஸ் வென்ற இலங்கை போர்டு லெவன் அணி பேட்டிங் தேர்வு செய்தது. அந்த அணியின் தொடக்க வீரர் குணதிலகா 53 ரன்னும், சில்வா 76 ரன்னும் அடித்து சிறப்பான தொடக்கத்தை ஏற்படுத்திக் கொடுத்தனர். கேப்டன் மேத்யூஸ் 92 ரன்கள் சேர்த்து மேலும் வலுவூட்டினார். ஒரு கட்டத்தில் இலங்கை போர்டு லெவன் அணி 161 ரன்கள் எடுத்திருக்கும்போது இரண்டு விக்கெட்டுக்களை மட்டுமே இழந்திருந்தது. அதன்பின் வந்த வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க 78.2 ஒவர்களில் 287 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது.



    தென்ஆப்பிரிக்கா அணியில் சுழற்பந்து வீச்சாளர் ஷாம்சி சிறப்பாக பந்து வீசு 13.2 ஓவரில் 45 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து ஐந்து விக்கெட்டுக்கள் வீழ்த்தினார். காயத்தில் இருந்து மீண்டு வந்துள்ள ஸ்டெயின் 12 ஓவர்கள் வீசி விக்கெட் ஏதும் கைப்பற்றவில்லை.

    பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய தென்ஆப்பிரிக்கா முதல் நாள் ஆட்ட முடிவில் 1 விக்கெட் இழப்பிற்கு 17 ரன்கள் எடுத்துள்ளது.
    ×