என் மலர்
கிரிக்கெட் (Cricket)

பாக்சிங் டே டெஸ்ட்.. வரலாற்று சாதனை படைத்த இந்தியா - ஆஸ்திரேலியா போட்டி
- இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான நான்காவது டெஸ்ட் போட்டி மெல்போர்னில் நடைபெற்று வருகிறது.
- இந்த டெஸ்ட் போட்டியின் முதல் 4 நாட்களில் 2.99 லட்சம் ரசிகர்கள் மைதானத்தில் ஆட்டத்தை கண்டு ரசித்துள்ளனர்.
ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகள் இடையிலான நான்காவது டெஸ்ட் போட்டி மெல்போர்னில் நடைபெற்று வருகிறது.
இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 474 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. பின்னர் களமிறங்கிய இந்திய அணி முதல் இன்னிங்சில் 369 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
டெஸ்ட் போட்டியின் நான்காம் நாளில் இரண்டாவது இன்னிங்ஸில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா அணி இன்றைய ஆட்ட நேர முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 228 ரன்களை எடுத்துள்ளது. இதன் மூலம் அந்த அணி 333 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. கடைசி நாள் இன்னும் மீதமுள்ளதால் ஆட்டம் டிராவை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.
மெல்போர்னில் நடந்து வரும் இந்த டெஸ்ட் போட்டியின் முதல் 4 நாட்களில் 2.99 லட்சம் ரசிகர்கள் மைதானத்தில் ஆட்டத்தை கண்டு ரசித்துள்ளனர். பாக்சிங் டே டெஸ்ட் வரலாற்றில் இத்தனை ரசிகர்கள் பங்கேற்பது இதுவே முதல்முறை என்று ஐசிசி தலைவர் ஜெய் ஷா தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.






