என் மலர்
கிரிக்கெட் (Cricket)

மெல்போர்ன் மைதானத்தில் உள்ள HONOURS BOARD-ல் இடம் பெற்ற நிதிஷ் குமார் பெயர்
- பாக்சிங் டே டெஸ்ட் போட்டியில் இந்திய வீரர் நிதிஸ் குமார் சதம் விளாசி அசத்தினார்.
- 2 ஆவது இன்னிங்சில் ஆஸ்திரேலியா அணி 333 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.
ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகள் இடையிலான நான்காவது டெஸ்ட் போட்டி மெல்போர்னில் நடைபெற்று வருகிறது.
இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 474 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. பின்னர் களமிறங்கிய இந்திய அணி முதல் இன்னிங்சில் 369 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
டெஸ்ட் போட்டியின் நான்காம் நாளில் இரண்டாவது இன்னிங்ஸில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா அணி இன்றைய ஆட்ட நேர முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 228 ரன்களை எடுத்துள்ளது. இதன் மூலம் அந்த அணி 333 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. கடைசி நாள் இன்னும் மீதமுள்ளதால் ஆட்டம் டிராவை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.
இப்போட்டியின் முதல் இன்னிங்சில் 8 ஆவது விக்கெட்டுக்கு களமிறங்கிய இந்திய வீரர் நிதிஸ் குமார் சதம் விளாசி அசத்தினார்.
இதனையடுத்து மெல்போர்ன் மைதானத்தில் உள்ள HONOURS BOARD-ல் நிதிஷ் குமார் பெயர் இடம் பெற்றது.
மெல்போர்ன் மைதானத்தில் நடைபெறும் டெஸ்ட் போட்டியில் சதம் மற்றும் 5 விக்கெட் எடுக்கும் வெளிநாட்டு வீரர்களை கௌரவிக்கும் விதமாக இப்பலகையில் அவர்களின் பெயர்கள் இடம்பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக மெல்போர்ன் டெஸ்டில் சதமடித்து அசத்திய நிதிஷ் குமாருக்கு ரூ.25 லட்சம் பரிசுத்தொகை வழங்குவதாக ஆந்திர கிரிக்கெட் வாரியம் அறிவித்தது குறிப்பிடத்தக்கது.






