என் மலர்tooltip icon

    விளையாட்டு

    • சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன் தொடர் சிங்கப்பூரில் நடந்து வருகிறது.
    • இதில் இந்திய ஜோடி முதல் சுற்றில் வெற்றி பெற்றது.

    சிங்கப்பூர்:

    சிங்கப்பூர் ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி சிங்கப்பூர் உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்று வருகிறது.

    இதில் ஆண்கள் இரட்டையர் பிரிவின் முதல் சுற்று ஆட்டத்தில் இந்தியாவின் சிராக் ஷெட்டி-சாத்விக்ரங்கி ரெட்டி ஜோடி, மலேசியாவின் முகமது ஹைகல்-சூங் ஹான் ஜியான் ஜோடியுடன் மோதியது.

    இந்தப் போட்டியில் சிறப்பாக ஆடிய இந்திய ஜோடி 21-16, 21-13 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறியது.

    • பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடைபெறுகிறது.
    • பெண்கள் ஒற்றையரில் இகா ஸ்வியாடெக் 2வது சுற்றில் வெற்றி பெற்றார்.

    பாரீஸ்:

    கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடந்து வருகிறது.

    இந்நிலையில், பெண்கள் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில் போலந்தின் இகா ஸ்வியாடெக், பிரிட்டனின் எம்மா ராடுகானு உடன் மோதினார்.

    இதில் சிறப்பாக ஆடிய ஸ்வியாடெக் 6-1, 6-2 என்ற செட்களில் வென்று 3வது சுற்றுக்கு முன்னேறினார்.

    மற்றொரு போட்டியில் இத்தாலியின் ஜாஸ்மின் பவுலினி 6-3, 6-3 என்ற செட்கணக்கில் ஆஸ்திரேலியாவின் அஜ்லா டாம்ஜனோவிக்கை வீழ்த்தி 3வது சுற்றுக்கு முன்னேறினார்.

    • காஸ்பர் ரூட், போர்ச்சுகீசிய வீரர் நுனோ போர்ஜஸ் உடன் மோதினார்.
    • இந்த ஆட்டத்தில் நுனோ போர்ஜஸ் 2-6, 6-4, 6-1, 6-0 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார்.

    பாரீஸ்:

    கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடந்து வருகிறது.

    இந்நிலையில், ஆண்கள் ஒற்றையர் பிரிவு 2-வது சுற்றில் ஸ்பெயினின் கார்லோஸ் அல்கராஸ் மற்றும் ஹங்கேரிய வீரர் ஃபேபியன் மரோஸ்ஸன் மோதினர். இந்த ஆட்டத்தில் 6-1, 4-6, 6-1, 6-2 என்ற செட் கணக்கில் அல்காரஸ் வெற்றி பெற்று 3-வது சுற்றுக்கு முன்னேறினார்.

    மற்றொரு போட்டியில் நார்வேஜியன் வீரர் காஸ்பர் ரூட், போர்ச்சுகீசிய வீரர் நுனோ போர்ஜஸ் உடன் மோதினார். இந்த ஆட்டத்தில் நுனோ போர்ஜஸ் 2-6, 6-4, 6-1, 6-0 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார்.

    • லீக் போட்டிகளின் முடிவில் பிளே ஆப் சுற்றுக்கு பஞ்சாப், பெங்களூரு, குஜராத், மும்பை ஆகிய அணிகள் தகுதி பெற்றன.
    • குஜராத் -மும்பை அணிகள் எலிமினேட்டர் போட்டியில் வரும் வெள்ளிக்கிழமை மோதுகிறது.

    நடப்பு ஐ.பி.எல். தொடரில் லீக் சுற்று ஆட்டங்கள் முடிவடைந்தன. லீக் போட்டிகளின் முடிவில் பிளே ஆப் சுற்றுக்கு பஞ்சாப், பெங்களூரு, குஜராத், மும்பை ஆகிய அணிகள் தகுதி பெற்றன.

    புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடித்த பஞ்சாப், 2-வது இடம் பிடித்த ஆர்சிபி அணியுடன் குவாலிபையர் 1 சுற்றில் நாளை மோதுகிறது. புள்ளிப்பட்டியலில் 3-ம் இடம் பிடித்த குஜராத், 4 -ம் இடம்பிடித்த மும்பை அணியுடன் எலிமினேட்டர் போட்டியில் வரும் வெள்ளிக்கிழமை (மே 30) மோதுகிறது.

    இந்நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணி வீரர்கள் பயிற்சியின் போது அந்த அணியின் வேகப்பந்து வீச்சாளர் டிரெண்ட் போல்ட், சக வீரரான மிட்செல் சான்ட்னர் மாதிரி சுழற்பந்து வீசினார். அருகில் இருந்த பும்ரா இதனை சிரித்தப்படி பார்த்துக் கொண்டிருந்தார். கிட்ட தட்ட அவரே மாதிரி போல்ட் பந்து வீசினார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    • பேட்ஸ்மேன் தனக்கு இருக்கும் வாய்ப்பைப் பயன்படுத்தி கூடுதலாக ஒரு அடி முன்னே செல்கிறார்.
    • மன்கட் முறையில் செய்த ரன் அவுட் முறையீட்டை திரும்பப் பெற்றது திக்வேஷ் ரதிக்கு அவமானம்.

    2025 ஐபிஎல் தொடரின் கடைசி லீக் சுற்று ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின. இந்த போட்டியில் ஆர்சிபி அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இந்தப் போட்டியின் முக்கியமான கட்டத்தில் ஜிதேஷ் சர்மாவை லக்னோ அணியின் சுழற்பந்துவீச்சாளர் திக்வேஷ் ரதி, மன்கட் முறையில் ரன் அவுட் செய்தார். ஆனால் லக்னோ அணியின் கேப்டன் ரிஷப் பண்ட், இந்த அவுட் முறையீட்டை திரும்பப் பெறுவதாக அறிவித்தார். இதனை பலரும் பாராட்டி வந்தனர்.

    இந்நிலையில் மன்கட் செய்த பந்துவீச்சாளரை ரிஷப் பண்ட் அவமானப்படுத்தி விட்டதாகவும், இப்படி செய்தால் அந்தப் பந்துவீச்சாளர் எப்படி மீண்டும் மன்கட் முறையில் விக்கெட் எடுக்க முயற்சி செய்வார்? எனவும் அஸ்வின் கேள்வி எழுப்பியுள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    மன்கட் முறையில் செய்த ரன் அவுட் முறையீட்டை திரும்பப் பெற்றது திக்வேஷ் ரதிக்கு அவமானம். அந்தப் பந்துவீச்சாளர் கூனிக்குறுகிப் போயிருப்பார். இனி இதுபோல ரன் அவுட் செய்ய முயற்சிக்க மாட்டார். ஏன் அதை அவர் மீண்டும் செய்யக்கூடாது?

    இது விதி சார்ந்த ஒரு விஷயம். பேட்ஸ்மேன் தனக்கு இருக்கும் வாய்ப்பைப் பயன்படுத்தி கூடுதலாக ஒரு அடி முன்னே செல்கிறார். அதன் மூலம் இரண்டு ரன்களை வேகமாக ஓட முயற்சி செய்கிறார். இங்கே அவர் அவுட் ஆனாரா? இல்லையா? என்பது விஷயம் இல்லை. கேப்டன் அந்த முறையீட்டை திரும்பப் பெற்றாரா? இல்லையா? என்பதுதான் விஷயம். இங்கே நாம் கிரிக்கெட் ஆட்டத்தைப் பற்றி மட்டும் சில வினாடிகள் பேசுவோம்.

    விதிப்படி இந்த முடிவு மூன்றாவது நடுவருக்குச் சென்றது. நடுவர் 'நாட் அவுட்' என்று சொன்னார். அப்படி என்றால் இது 'நாட் அவுட்' தான். இதில் அந்த முறையீட்டை திரும்பப் பெறுவதற்கான அவசியமே இல்லை. ஒருவேளை ஜிதேஷ் சர்மா 'அவுட்' என தீர்ப்பு வந்திருந்தால், பந்துவீச்சாளர் தான் பந்து வீசி முடிக்கும் முன்பாகவே அவர் தனது கால்களை எடுத்து வெளியே வைத்திருந்தால் இது 'அவுட்' என தீர்ப்பாக இருந்திருக்கும்.

    அப்போதும் பந்துவீச்சாளர் பக்கமே நியாயம் இருந்திருக்கும். ஆனால் இது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி மற்றும் அந்த அணியின் ரசிகர்கள் பார்வையில் மோசமான விஷயமாக இருந்திருக்கும். அவர்கள் ரதி மற்றும் ரிஷப் பண்ட்டை விரும்பி இருக்க மாட்டார்கள்.

    இவ்வாறு அஸ்வின் கூறினார்.

    • இளம் அணி என்பதால் எதிர்பார்ப்பு இல்லாதது கில் தலைமையிலான இந்திய அணிக்கு உதவும்.
    • இங்கிலாந்துக்கு இதற்கு முன் சென்ற போது சுப்மன் கில் பேட்டிங் சராசரி என்ன? என்பது முக்கியமல்ல.

    இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் புதிய கேப்டனாக சுப்மன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவரது தலைமையில் இங்கிலாந்தில் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்தியா விளையாடுகிறது.

    ஆஸ்திரேலியா, இங்கிலாந்து போன்ற வெளிநாடுகளில் பெரியளவில் ரன்கள் குவிக்காத அவர், முதலில் பிளேயிங் லெவனில் இருப்பதற்கே பொருத்தமற்றவர் என்று சேவாக், ஸ்ரீகாந்த் போன்ற முன்னாள் வீரர்கள் விமர்சித்தனர்.

    இந்நிலையில் சுப்மன் கில் பற்றி எதிர்மறையான விஷயங்களை பேசுவதை விட நேர்மறையான விஷயங்களை பார்த்து ஆதரவு கொடுக்க வேண்டும் என்று ஜாம்பவான் கபில் தேவ் தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    இங்கிலாந்துக்கு இதற்கு முன் சென்ற போது சுப்மன் கில் பேட்டிங் சராசரி என்ன? என்பது முக்கியமல்ல. இப்போது நாம் எதிர்மறையாக பேச வேண்டாம். திறமையை வைத்து தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அவர் அசத்துவார் என்பது எனக்குத் தெரியும். இருப்பினும் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் விளையாடுவது எளிதாக இருக்காது.

    சுப்மன் கில் கேப்டன்ஷிப் பதவிக்கு பொருத்தமாக இருப்பார். தேர்வாளர்கள் அனைத்து விஷயங்களையும் கணக்கிட்ட பின்பே நீண்ட கால திட்டத்தின் அடிப்படையில் அவரை கேப்டனாக நியமித்துள்ளார்கள். அவருக்கு அணி மற்றும் ரசிகர்கள் ஆதரவு தேவை.

    இளம் அணி என்பதால் எதிர்பார்ப்பு இல்லாதது கில் தலைமையிலான இந்திய அணிக்கு உதவும். சில நேரங்களில் நீங்கள் எதிர்பார்ப்பு இல்லாமல் அசத்துவது நல்லது. பும்ரா உள்ளிட்டோர் அவருக்கு ஆதரவு கொடுத்து கேப்டனாக வளர உதவுவார்கள் என்று நம்புகிறேன்.

    சுப்மன் கில் பேட்டிங்கில் நல்ல ஃபார்மில் செயல்படுவது தன்னுடைய இலக்கை சாதிக்க உதவும். திடமான பேட்ஸ்மேனாக தெரியும் அவருக்காக மகிழ்ச்சியடைகிறேன்.

    என்று கபில்தேவ் கூறினார்.

    • கலப்பு 400 மீட்டர் தொடர் ஓட்டத்தில் இந்திய அணி சார்பாக சந்தோஷ் குமார், ரூபால், விஷால், சுபா ஆகியோர் கலந்து கொண்டனர்.
    • இவர்கள் பந்தய தூரத்தை 3 நிமிடங்கள் 18.12 வினாடிகளில் கடந்து தங்கப் பதக்கத்தை வென்றனர்.

    26-வது ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டி தென்கொரியாவின் குமி நகரில் நேற்று முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. 43 நாடுகளை சேர்ந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்கிறார்கள். இதில் 59 பேர் கொண்ட இந்திய அணியில் 9 தமிழக வீரர்களும் அடங்கும்.

    இந்நிலையில் இன்று நடைபெற்ற கலப்பு 400 மீட்டர் தொடர் ஓட்டத்தில் இந்திய அணி தங்கப்பதக்கம் வென்றுள்ளது. இந்திய அணி சார்பாக சந்தோஷ் குமார், ரூபால், விஷால், சுபா ஆகியோர் கலந்து கொண்டனர். இவர்கள் பந்தய தூரத்தை 3 நிமிடங்கள் 18.12 வினாடிகளில் கடந்து தங்கப் பதக்கத்தை வென்றனர்.

    சீன அணி 3 நிமிடம் 20.52 வினாடிகளில் கடந்து வெள்ளிப் பதக்கத்தையும், இலங்கை அணி 3 நிமிடம் 21.95 வினாடிகளில் கடந்து வெண்கலப் பதக்கத்தையும் வென்றது.

    • 26-வது ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டி தென்கொரியாவின் குமி நகரில் நேற்று முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.
    • இதில் 59 பேர் கொண்ட இந்திய அணியில் 9 தமிழக வீரர்களும் அடங்கும்.

    26-வது ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டி தென்கொரியாவின் குமி நகரில் நேற்று முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. 43 நாடுகளை சேர்ந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்கிறார்கள். இதில் 59 பேர் கொண்ட இந்திய அணியில் 9 தமிழக வீரர்களும் அடங்கும்.

    நேற்று நடந்த 10 ஆயிரம் மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் இந்தியாவின் குல்வீர் சிங் தங்கப்பதக்கமும் 20 கி.மீட்டர் நடைப்பந்தய போட்டியில் செர்வின் வெண்கலப்பதக்கமும் வென்றனர்.

    இந்நிலையில் இன்று நடைபெற்ற மும்முறை தாண்டுதல் விளையாட்டில் தமிழ்நாட்டைச் சேர்ந்த பிரவீன் சித்திரவேல் வெள்ளிப் பதக்கம் வென்று அசத்தியுள்ளார்.

    • ஆண்களுக்கான முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் இந்தியாவின் லக்‌ஷயா சென் மற்றும் தைவானை சேர்ந்த லின்னும் மோதினர்.
    • இந்த ஆட்டத்தில் முதல் செட்டை லக்‌ஷ்யா கைப்பற்றினார்.

    சிங்கப்பூர் ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி சிங்கப்பூர் உள்விளையாட்டு அரங்கில் நேற்று முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.

    இதில் இன்று நடைபெற்ற ஆண்களுக்கான முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் இந்தியாவின் லக்ஷயா சென் மற்றும் தைவானை சேர்ந்த லின்னும் மோதினர்.

    இந்த ஆட்டத்தில் முதல் செட்டை லக்ஷ்யா கைப்பற்றினார். 2-வது செட்டை லின் கைப்பற்றினார். வெற்றியாளரை தீர்மானிக்கும் கடைசி செட் விளையாடி கொண்டிருக்கும் போது லக்ஷயா காயம் காரணமாக பாதிலேயே வெளியேறினார்.

    • இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கு முன்பு பேட்டிங்கில் நல்ல நிலைக்கு திரும்பியது மகிழ்ச்சி அளிக்கிறது.
    • நான் ஒரு பெரிய இன்னிங்ஸ் விளையாட வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தேன்.

    நான் ஒரு பெரிய இன்னிங்ஸ் விளையாட வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தேன்/ I was determined to play a big innings.லக்னோ:

    ஐ.பி.எல். வரலாற்றில் அதிக (ரூ.27 கோடி ) தொகைக்கு ஏலத்தில் எடுக்கப்பட்ட ரிஷப்பண்ட் தனது மோசமான பேட்டிங்கால் கடும் விமர்சனத்துக்கு உள்ளாகி உள்ளார். நேற்றைய கடைசி லீக்கில் பெங்களூரு அணிக்கு எதிராக அவர் சதம் அடித்தார். ரிஷப்பண்ட் 61 பந்தில் 118 ரன் (11 பவுண்டரி, 8 சிக்சர்) எடுத்தார்.

    ஆனால் அவரது இந்த சதம் பலன் இல்லாமல் போனது. பெங்களூரு அணி 228 ரன் இலக்கை எடுத்து சாதித்தது.

    தோல்விக்கு பிறகு லக்னோ கேப்டன் ரிஷப் பண்ட் கூறியதாவது:-

    இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கு முன்பு பேட்டிங்கில் நல்ல நிலைக்கு திரும்பியது மகிழ்ச்சி அளிக்கிறது. சில நாட்களுக்கு ஓய்வு எடுக்க போகிறேன். கிரிக்கெட்டை பற்றி யோசிக்க வேண்டாம். இங்கிலாந்து டெஸ்ட் தொடர் வரப்போகிறது. அதற்காக நல்ல மனநிலையில் தயாராகி வருகிறேன்.

    பந்து வீச்சாளர்களின் காயம் (மயங்க் யாதவ், மோசின்கான்) குறித்த கவலைகள் இருந்தது. இந்த சீசன் முழுவதும் எங்களுக்கு வலியை ஏற்படுத்தியது.

    நான் ஒரு பெரிய இன்னிங்ஸ் விளையாட வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தேன். ஒவ்வொரு பந்தையும் தீவிரத்துடன் ஆடினேன். இன்னிங்ஸ் முழுவதும் அதே தீவிரத்துடன் விளையாடினேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இங்கிலாந்துக்கு எதிரான 5 டெஸ்ட் கொண்ட தொடருக்கான இந்திய அணியின் துணை கேப்டனாக ரிஷப் பண்டுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. ஜூன் 20-ந்தேதி டெஸ்ட் தொடர் தொடங்குகிறது.

    • விராட் கோலி ஆட்டமிழந்ததும், கடைசி வரை நின்று விளையாட வேண்டும் என்று தோன்றியது.
    • ஜித்தேஷ் சர்மா 33 பந்தில் 85 ரன்கள் குவித்து ஆட்டநாயகன் விருதை வென்றார்.

    ஐ.பி.எல். தொடரின் கடைசி லீக் போட்டி லக்னோவில் நடைபெற்றது. இதில் ஆர்சிபி, லக்னோ அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்ற ஆர்சிபி அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் பேட்டிங் செய்த லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 227 ரன்கள் குவித்தது. சிறப்பாக ஆடிய ரிஷப் பண்ட் சதமடித்து 118 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.

    இதையடுத்து, 228 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆர்சிபி அணி 18.4 ஓவரில் 230 ரன்களை எடுத்து அபார வெற்றி பெற்றது. இதன்மூலம் புள்ளிப்பட்டியலில் 2வது இடம்பிடித்து குவாலிபையர் 1 சுற்றுக்கு பெங்களூரு அணி முன்னேறியது. ஜித்தேஷ் சர்மா 33 பந்தில் 85 ரன்கள் குவித்து ஆட்டநாயகன் விருதை வென்றார்.

    ஆட்டநாயகன் விருதை வென்ற பின்பு பேசிய ஜித்தேஷ் சர்மா, "விராட் கோலி ஆட்டமிழந்ததும், கடைசி வரை நின்று விளையாட வேண்டும் என்பதுதான் மனதில் தோன்றியது. எனது குரு, வழிகாட்டி தினேஷ் கார்த்திக் அண்ணா அதைதான் என்னிடம் தொடர்ந்து கூறுவார். 'உன்னால் முடியும். எந்த ஒரு சூழலாக இருந்தாலும் ஆட்டத்தை முடித்துக் கொடுக்கும் சக்தி உன்னிடம் உள்ளது' என தினேஷ் கார்த்திக் என்னை ஊக்கப்படுத்தி வந்தார். அவரால் தான் இது சாத்தியமானது" என்று உருக்கமாக தெரிவித்தார்.

    • லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் கோலி 30 பந்துகளில் 54 ரன்கள் அடித்தார்.
    • பெங்களூரு அணி புள்ளிப்பட்டியலில் 2 ஆம் இடம் பிடித்தது.

    ஐ.பி.எல். தொடரின் கடைசி லீக் போட்டி லக்னோவில் நடைபெற்றது. இதில் ஆர்சிபி, லக்னோ அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்ற ஆர்சிபி அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் பேட்டிங் செய்த லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 227 ரன்கள் குவித்தது. சிறப்பாக ஆடிய ரிஷப் பண்ட் சதமடித்து 118 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.

    இதையடுத்து, 228 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆர்சிபி அணி 18.4 ஓவரில் 230 ரன்களை எடுத்து அபார வெற்றி பெற்றது.

    இப்போட்டியில் சிறப்பாக விளையாடிய கோலி 30 பந்துகளில் 54 ரன்கள் அடித்தார். இதன்மூலம் ஐபிஎல் வரலாற்றில் அதிக அரைசதம் அடித்த வீரர்களின் பட்டியலில் வார்னரை பின்னுக்கு தள்ளி முதலிடம் பிடித்தார். வார்னர் 62 அரைசதங்கள் நடித்துள்ள நிலையில் கோலி 63 அரைசதங்களை அடித்துள்ளார்.

    மேலும் டி20 கிரிக்கெட்டில் ஒரே அணிக்காக 9000 ரன்களை கடந்த முதல் வீரர் என்ற சாதனையையும் விராட் கோலி படைத்துள்ளார்.

    ஆண்கள் டி20 கிரிக்கெட்டில் ஒரே அணிக்காக அதிக ரன்கள் எடுத்தவர்கள்:

    9030 - விராட் கோலி (RCB)

    6060 - ரோகித் சர்மா (MI)

    5934 - ஜேம்ஸ் வின்ஸ் (ஹாம்ப்ஷயர்)

    5528 - சுரேஷ் ரெய்னா (CSK)

    5314 - எம்.எஸ். தோனி (CSK)

    மேலும், ஒரு ஐபிஎல் வரலாற்றில் 5 முறை ஒரு சீசனில் 600 ரன்களுக்கு மேல் குவித்த முதல் வீரர் என்ற சாதனையும் அவர் படைத்துள்ளார்.

    ஐபிஎல்: ஒரு சீசனில் 600+ ரன்கள்:

    5 - விராட் கோலி (2013, 2016, 2023, 2024, 2025)

    4 - கே.எல். ராகுல் (2018, 2020, 2021, 2022)

    3 - கிறிஸ் கெய்ல் (2011, 2012, 2013)

    3 - டேவிட் வார்னர் (2016, 2017, 2019)

    ×