என் மலர்
விளையாட்டு

வீடியோ: கலப்பு 400 மீட்டர் தொடர் ஓட்டம் - இந்திய அணிக்கு தங்கப் பதக்கம்
- கலப்பு 400 மீட்டர் தொடர் ஓட்டத்தில் இந்திய அணி சார்பாக சந்தோஷ் குமார், ரூபால், விஷால், சுபா ஆகியோர் கலந்து கொண்டனர்.
- இவர்கள் பந்தய தூரத்தை 3 நிமிடங்கள் 18.12 வினாடிகளில் கடந்து தங்கப் பதக்கத்தை வென்றனர்.
26-வது ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டி தென்கொரியாவின் குமி நகரில் நேற்று முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. 43 நாடுகளை சேர்ந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்கிறார்கள். இதில் 59 பேர் கொண்ட இந்திய அணியில் 9 தமிழக வீரர்களும் அடங்கும்.
இந்நிலையில் இன்று நடைபெற்ற கலப்பு 400 மீட்டர் தொடர் ஓட்டத்தில் இந்திய அணி தங்கப்பதக்கம் வென்றுள்ளது. இந்திய அணி சார்பாக சந்தோஷ் குமார், ரூபால், விஷால், சுபா ஆகியோர் கலந்து கொண்டனர். இவர்கள் பந்தய தூரத்தை 3 நிமிடங்கள் 18.12 வினாடிகளில் கடந்து தங்கப் பதக்கத்தை வென்றனர்.
சீன அணி 3 நிமிடம் 20.52 வினாடிகளில் கடந்து வெள்ளிப் பதக்கத்தையும், இலங்கை அணி 3 நிமிடம் 21.95 வினாடிகளில் கடந்து வெண்கலப் பதக்கத்தையும் வென்றது.
Next Story






