என் மலர்
விளையாட்டு
- பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடைபெறுகிறது.
- பெண்கள் ஒற்றையரில் கோகோ காப் முதல் சுற்றில் வெற்றி பெற்றார்.
பாரீஸ்:
கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடந்து வருகிறது.
இந்நிலையில், பெண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் அமெரிக்காவின் கோகோ காப், ஆஸ்திரேலியாவின் ஒலிவியா கடேகி உடன் மோதினார்.
இதில் சிறப்பாக ஆடிய கோகோ காப் 6-2, 6-2 என்ற செட்களில் வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.
மற்றொரு போட்டியில் அமெரிக்காவின் ஜெசிகா பெகுலா 6-2, 6-4 என்ற செட் கணக்கில் ரோமானியாவின் அன்கா டுடோனியை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.
- பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடைபெறுகிறது.
- இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் மெத்வதேவ் தோல்வி அடைந்தார்.
பாரீஸ்:
கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடந்து வருகிறது.
இந்நிலையில், ஆண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் ரஷியாவின் டேனில் மெத்வதேவ், பிரிட்டனின் கேமரூன் நூரி உடன் மோதினார்.
ஆரம்பம் முதலே இருவரும் சிறப்பாக ஆடினர். முதல் இரு செட்களை 7-5, 6-3 என நூரி வென்றார். இதில் சுதாரித்துக் கொண்ட மெத்வதேவ் அடுத்த இரு செட்களை 6-4, 6-1 என கைப்பற்றினார்.
வெற்றியாளரை நிர்ணயிக்கும் 5வது செட்டை 5-7 என இழந்த மெத்வதேவ், நடப்பு தொடரில் இருந்து வெளியேறினார். இந்தப் போட்டி 3 மணி நேரம் 54 நிமிடங்கள் நடந்தது.
- பெங்களூரு அணிக்கெதிரான ஆட்டத்தில் பண்ட் சதம் விளாசினார்.
- தான் சதம் அடித்ததை ரிஷப் பண்ட் பல்டி அடித்துக் கொண்டாடினார்.
லக்னோ:
ஐ.பி.எல். தொடரின் கடைசி லீக் ஆட்டம் லக்னோவில் நேற்றிரவு நடைபெற்றது. இதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற பெங்களூரு பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட் செய்த லக்னோ 20 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 227 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக ரிஷப் பண்ட் 118 ரன்னும், மிட்செல் மார்ஷ் 67 ரன்னும் அடித்தனர்.
இந்நிலையில், நடப்பு ஐ.பி.எல். தொடரில் மோசமான பேட்டிங்கை வெளிப்படுத்தியதால் பெரும் விமர்சனத்திற்கு உள்ளான ரிஷப் பண்ட் இந்த ஆட்டத்தில் சதமடித்து அனைத்திற்கும் பதிலடி கொடுத்துள்ளார்.
மேலும் தான் சதமடித்ததை ரிஷப் பண்ட் பல்டி அடித்து கொண்டாடினார். இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
- நடப்பு ஐபிஎல் தொடரில் லீக் சுற்று ஆட்டங்கள் முடிவடைந்தது.
- பிளே ஆப் சுற்றுக்கு பஞ்சாப், பெங்களூரு, குஜராத், மும்பை அணிகள் தகுதி பெற்றன.
புதுடெல்லி:
நடப்பு ஐ.பி.எல். தொடரில் லீக் சுற்று ஆட்டங்கள் முடிவடைந்தன. லீக் போட்டிகளின் முடிவில் பிளே ஆப் சுற்றுக்கு பஞ்சாப், பெங்களூரு, குஜராத், மும்பை ஆகிய அணிகள் தகுதி பெற்றன.
சென்னை, ராஜஸ்தான், ஐதராபாத், கொல்கத்தா, லக்னோ, டெல்லி ஆகிய அணிகள் தொடரில் இருந்து வெளியேறின.
இந்நிலையில், புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடித்த பஞ்சாப், 2வது இடம் பிடித்த ஆர்சிபி அணியுடன் குவாலிபையர் 1 சுற்றில் வரும் வியாழக்கிழமை மோதுகிறது. வெள்ளிக்கிழமை நடைபெறும் எலிமினேட்டர் சுற்றில் குஜராத், மும்பை அணிகள் மோதவுள்ளன.
இந்த குவாலிபையர் 1 மற்றும் எலிமினேட்டர் போட்டிகள் பஞ்சாப்பின் முல்லன்பூரில் நடைபெறுகிறது. குவாலிபையர்2 சுற்று மற்றும் இறுதிப்போட்டி அகமதாபாத்தில் நடைபெறுகிறது.
- டாஸ் வென்ற ஆர்சிபி அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
- முதலில் ஆடிய லக்னோ 20 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 227 ரன்கள் குவித்தது.
லக்னோ:
ஐ.பி.எல். தொடரின் கடைசி லீக் போட்டி லக்னோவில் நடைபெற்றது. இதில் ஆர்சிபி, லக்னோ அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்ற ஆர்சிபி அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட்டிங் செய்த லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 227 ரன்கள் குவித்தது. தொடக்க வீரர் பிரீட்ஸ்கே 12 பந்தில் 14 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
அடுத்து மிட்செல் மார்ஷ் உடன் ரிஷப் பண்ட் ஜோடி சேர்ந்தார். இருவரும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
மிட்செல் மார்ஷ் அரை சதம் கடந்து 37 பந்தில் 67 ரன்களுக்கு அவுட்டானார். தொடர்ந்து சிறப்பாக ஆடிய ரிஷப் பண்ட் சதமடித்து 118 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இதையடுத்து, 228 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆர்சிபி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் பிலிப் சால்ட் 30 ரன்னில் ஆட்டமிழந்தார்.
விராட் கோலி அதிரடியாக ஆடி 54 ரன்னில் வெளியேறினார். 4 விக்கெட்டுக்கு 123 ரன்கள் எடுத்திருந்தது.
அப்போது 5வது விக்கெட்டுக்கு மயங்க் அகர்வால்-ஜித்தேஷ் குமார் ஜோடி இணைந்து அதிரடியாக ஆடியது. கிடைத்த பந்துகளை சிக்சர், பவுண்டரிகளாக விளாசியது. ஜித்தேஷ் சர்மா அரை சதம் கடந்தார்.
இறுதியில், ஆர்.சி.பி. அணி 18.4 ஓவரில் 230 ரன்களை எடுத்து அபார வெற்றி பெற்றதுடன், புள்ளிப்பட்டியலில் 2வது இடம்பிடித்து குவாலிபையர் 1 சுற்றுக்கு முன்னேறியது. ஜித்தேஷ் சர்மா 33 பந்தில் 85 ரன்னும், மயங்க் அகர்வால் 41 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளனர்.
- பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடைபெறுகிறது.
- இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் சக்காரி, ஜபேர் தோல்வி அடைந்தனர்.
பாரீஸ்:
கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடந்து வருகிறது.
இந்நிலையில், பெண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் கிரீஸ் வீராங்கனை மரியா சக்காரி, பிரான்சின் எல்சா ஜாக்யூமோட் உடன் மோதினார்.
இதில் சிறப்பாக ஆடிய எல்சா 6-3, 7-6 (7-4) என்ற நேர் செட்களில் வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.
மற்றொரு போட்டியில் போலந்தின் மக்டலேனா 7-6 (7-4), 6-0 என்ற செட் கணக்கில் துனீசியாவின் ஓன்ஸ் ஜபேரை எளிதில் வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.
- 29 பந்தில் அரைசதம் அடித்த ரிஷப் பண்ட், 54 பந்தில் 10 பவுண்டரி, 6 சிக்சருடன் சதம் விளாசினார்.
- மிட்செல் மார்ஷ் 37 பந்தில் 67 ரன்கள் விளாசினார்.
ஐபிஎல் 2025 சீசனின் கடைசி லீக் போட்டி லக்னோவில் நடைபெற்று வருகிறது. இதில் ஆர்சிபி- லக்னோ அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. டாஸ் வென்ற ஆர்சிபி அணி கேப்டன் ஜித்தேஷ் சர்மா பந்து வீச்சை தேர்வு செய்தார். அதன்படி லக்னோ அணியின் மிட்செல் மார்ஷ், மேத்யூ பிரீட்ஸ்கே ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். பிரீட்ஸ்கே 12 பந்தில் 14 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
அடுத்து மிட்செல் மார்ஷ் உடன் ரிஷப் பண்ட் ஜோடி சேர்ந்தார். ரிஷப் பண்ட் தொடக்க முதலே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். மிட்செல் மார்ஷ் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
லக்னோ அணி பவர்பிளேயில் 1 விக்கெட் இழப்பிற்கு 55 ரன்கள் எடுத்திருந்தது. 9.5 ஓவரில் 100 ரன்னைத் தொட்டது. ரிஷப் பண்ட் 29 பந்திலும், மிட்செல் மார்ஷ் 31 பந்திலும் அரைசதம் அடித்தனர். லக்னோ அணி 14.2 ஓவரில் 150 ரன்னைத் தொட்டது.
16ஆவது ஓவரை புவனேஷ்வர் குமார் வீசினார். இந்த ஓவரில் அடுத்தடுத்து இரண்டு சிக்ஸ் விளாசிய மிட்செல் மார்ஷ் 3ஆவது பந்தில் ஆட்டமிழந்தார். அவர் 37 பந்தில் 67 ரன்கள் விளாசினார். அவரது ஸ்கோரி 4 பவுண்டரி, 5 சிக்சர் அடங்கும். அப்போது லக்னோ 15.3 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 177 ரன்கள் குவித்திருந்தது.
3ஆவது விக்கெட்டுக்கு ரிஷப் பண்ட் உடன் நிக்கோலஸ் பூரன் ஜோடி சேர்ந்தார். 17ஆவது ஓவரை துஷாரா வீசினார். இந்த ஓவரில் லக்னோ 7 ரன்கள் அடித்தது. இதனால் 191 ரன்கள் எடுத்திருந்தது.
18ஆவது ஓவரை புவனேஷ்வர் குமார் வீசினார். இந்த ஓவரின் 5ஆவது பந்தை பவுண்டரிக்கு விரட்டி 54 பந்தில் சதம் விளாசினார் ரிஷப் பண்ட். இந்த தொடரில் தொடர்ந்து மோசமாக விளையாடி வந்த நிலையில் சதம் விளாசியுள்ளார். இந்த ஓவரில் லக்னோ அணிக்கு 10 ரன்கள் கிடைத்தது. அத்துடன் 201 ரன்கள் சேர்த்தது.
19ஆவது ஓவரை யாஷ் தயால் வீசினார். இந்த ஓவரில் 13 ரன்கள் அடித்தது லக்னோ. கடைசி ஓவரை ரொமாரியோ ஷெப்பர்டு வீசினார். இந்த ஓவரின் 5ஆவது பந்தில் நிக்கோலஸ் பூரன் 13 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். இந்த ஓவரில் 13 ரன்கள் கிடைக்க லக்னோ 227 ரன்கள் குவித்துள்ளது. ரிஷப் பண்ட் 61 பந்தில் 11 பவுண்டரி, 8 சிக்சருடன் 118 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
- ஆர்சிபி வெற்றி பெற்றால் குவாலிபையர் 1-க்கு முன்னேறும்.
- தோல்வியடைந்தால் எலிமினேட்டர் சுற்றில் மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்கொள்ளும்.
ஐபிஎல் 2025 சீசனின் கடைசி லீக் போட்டி லக்னோவில் நடக்கிறது. இதில் ஆர்சிபி- லக்னோ அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதில் வெற்றி பெற்றால் ஆர்சிபி குவாலிபையர்-1க்கு முன்னேறும். லக்னோ ஏற்கனவே பிளேஆஃப் வாய்ப்பை இழந்துள்ளது. இதில் வெற்றி பெற்றால் ஆறுதல் வெற்றியாக இருக்கும்.
இந்த போட்டிக்கான டாஸ் சுண்டப்பட்டதில் ஆர்சிபி கேப்டன் ஜித்தேஷ் சர்மா டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.
லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி:-
ரிஷப் பண்ட், நிக்கோலஸ் பூரன், மிட்செல் மார்ஷ், பிரீட்ஸ்கே, ஆயுஷ் படோனி, அப்துல் சமாத், ஹிமாத் சிங், ஷபாஷ் அகமது, திக்வேஷ் ரதி, ஆவேஷ் கான், வில்லியம் ஓ'ரூர்கே.
ஆர்சிபி அணி:-
பில் சால்ட், விராட் கோலி, மயங்க் அகர்வால், லிவிங்ஸ்டன், ஜித்தேஷ் சர்மா, ரொமாரியோ ஷெப்பர்டு, குருணால் பாண்ட்யா, புவி, யாஷ் தயால், நுவான் துஷாரா.
- மூத்த வீரருக்கு என்ன மரியாதை கொடுக்கப்படுமோ, அதே மரியாதை பஸ் டிரைவர் வரையில் கொடுக்கப்படும்.
- ஷ்ரேயாஸ், பாண்டிங் என்ன சொன்னார்களோ அதை இன்று வரையில் காப்பாற்றி வருகிறார்கள்.
ஜெய்ப்பூர்:
ஐ.பி.எல். தொடரில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் - பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில்
பஞ்சாப் கிங்ஸ் 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் பஞ்சாப் அணி முதலாவது தகுதி சுற்றில் விளையாட உள்ளது.
இந்நிலையில். இந்த போட்டியில் வெற்றி பெற்ற பின்னர் பஞ்சாப் அதிரடி வீரர் ஷஷாங் சிங் பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
இந்த ஐ.பி.எல் தொடரில் நாங்கள் சேர்ந்த முதல் நாளில் ஷ்ரேயாஸ் ஐயர் மற்றும் ரிக்கி பாண்டிங் இருவரும் எங்கள் மொத்த அணிக்கும் ஒரு வாக்குறுதி கொடுத்தார்கள். அதாவது இந்த அணியின் மூத்த வீரர் சாஹலுக்கு என்ன மரியாதை கொடுக்கப்படுமோ, அதே மரியாதை பஸ் டிரைவர் வரையில் எல்லோருக்கும் சமமாக கொடுக்கப்படும் என்று கூறினார்கள்.
அவர்கள் என்ன சொன்னார்களோ அதை இன்று வரையில் காப்பாற்றி வருகிறார்கள். அவர்கள் பஸ் டிரைவர் முதல் அணியின் சீனியர் வீரர் வரை ஒரே மரியாதையை இதுவரையில் கொடுத்து இருக்கிறார்கள். பாண்டிங் எங்கள் அணியின் கலாச்சாரத்தை மாற்றி இருக்கிறார்.
அவர் எங்களின் மனநிலை மற்றும் நம்பிக்கைகளை மாற்றியிருக்கிறார். எனவே, இந்த விஷயத்திற்கு அனைத்து பெருமையும் அவருக்கே போய் சேர வேண்டும். ஏனென்றால் வெளிப்படையாக விளையாட்டுப் பற்றிய எங்களது பார்வையை மாற்றியவர் அவர்தான்.
நான் கலாச்சாரம் என்று சொல்வது, நாங்கள் ஒருவருக்கு ஒருவர் அக்கறை காட்டிக் கொள்ளுதல், ஒருவருக்கு ஒருவர் மரியாதை செலுத்துதல் போன்றவை. இதுவெல்லாம் சொல்வதற்கு மிகவும் எளிதாக இருக்கும் ஆனால் செய்வதற்கு மிகவும் கடினமானது. இதைத்தான் எங்கள் அணியில் ரிக்கி பாண்டிங் வளர்த்து எடுத்து இருக்கிறார்.
இவ்வாறு அவர் கூறினார்.
- ஜானிக் சின்னர் 6-4, 6-3, 7-5 என்ற நேர் செட் கணக்கில் ஆர்தர் ரிண்டர்க்னெக்கை வீழ்த்தி 2-வது சுற்றுக்கு முன்னேறினார்.
- அசரென்கா 6-0, 6-0 என்ற கணக்கில் எளிதில் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.
பாரீஸ்:
'கிராண்ட்ஸ்லாம்' போட்டிகளில் ஒன்றான பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடைபெற்று வருகிறது.
இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று நடைபெற்ற முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் இத்தாலி வீரர் ஜானிக் சின்னர் மற்றும் பிரெஞ்சு வீரர் ஆர்தர் ரிண்டர்க்னெக் ஆகியோர் மோதினர்.
இந்த போட்டியில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய ஜானிக் சின்னர் 6-4, 6-3, 7-5 என்ற நேர் செட் கணக்கில் ஆர்தர் ரிண்டர்க்னெக்கை வீழ்த்தி 2-வது சுற்றுக்கு முன்னேறினார்.
பெண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் பெலரசைச் சேர்ந்த விக்டோரியா அசரென்கா மற்றும் பெல்ஜிய வீராங்கனை யானினா விக்மேயர் மோதினர். இந்த ஆட்டத்தில் அசரென்கா 6-0, 6-0 என்ற கணக்கில் எளிதில் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.
- ஆண்களுக்கான முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் பிரனோய், ராஸ்மஸ் கெம்கேவுடன் மோதினார்.
- இந்த ஆட்டத்தில் பிரனோய் முதல் செட்டில் தோல்வியடைந்தார்.
சிங்கப்பூர் ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி சிங்கப்பூர் உள்விளையாட்டு அரங்கில் இன்று முதல் ஜூன் 1-ந் தேதி வரை நடக்கிறது. இதில் ஆண்களுக்கான முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் இந்தியாவின் பிரனோய், டென்மார்க் வீரரான ராஸ்மஸ் கெம்கேவுடன் மோதினார்.
இந்த ஆட்டத்தில் பிரனோய் முதல் செட்டில் தோல்வியடைந்தார். இதனையடுத்து சுதாரித்து கொண்ட பிரனோய் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த அடுத்த 2 செட்களையும் கைப்பற்றினார். இதனால் 19-21, 21-16, 21-14 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று 2-வது சுற்றுக்கு முன்னேறினார்.
- திக்வேஷ் ரதிக்கு பலமுறை அபராதம் விதிக்கப்பட்டது.
- இதன் காரணமாக இவர் ஒரு போட்டியில் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது.
லக்னோ:
10 அணிகள் பங்கேற்றுள்ள 18-வது ஐ.பி.எல். தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. லீக் சுற்றுகள் ஆட்டங்கள் இன்றுடன் முடிவடைகிறது. நடப்பு ஐபிஎல் தொடரில் பல இளம் வீரர்கள் பேட்டிங், மற்றும் பந்து வீச்சு மூலம் மற்றும் ஆக்ரோஷமான கொண்டாட்டத்தின் மூலம் பிரபலமாகினர். அந்த வகையில் லக்னோ அணியில் இடம் பிடித்த சுழற்பந்து வீச்சாளர் திக்வேஷ் ரதி, நோட்புக் கொண்டாட்டத்தின் மூலம் பிரபலமானார்.
தொடர்ந்து அந்த கொண்டாட்டத்தினால் பலமுறை அவருக்கு அபராதம் விதிக்கப்பட்டது. கடைசியாக ஐதராபாத்துக்கு எதிரான போட்டியில் அபிஷேக் சர்மா விக்கெட் எடுத்து அதே கொண்டாட்டத்தில் ஈடுபட்டார். மேலும் வாக்குவாதத்திலும் ஈடுபட்டார். பின்னர் நடுவர்கள் இருவரையும் சமாதானப்படுத்தினர்.
இந்த சம்பவம் குறித்து திக்வேஷ் ரதிக்கு 2 தகுதி இழப்பு புள்ளிகள் ஐ.பி.எல். நிர்வாகம் வழங்கியது. இவர் ஏற்கனவே நடப்பு தொடரில் இரண்டு முறை விதிமுறைகளை மீறியதற்காக 3 தகுதி இழப்பு புள்ளிகள் பெற்றுள்ளார். இதனையும் சேர்த்து மொத்தம் 5 தகுதி இழப்பு புள்ளிகள் பெற்றுள்ளார்.
இதன் காரணமாக இவர் ஒரு போட்டியில் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் குஜராத் டைட்டன்சுக்கு எதிரான அடுத்த போட்டியில் அவர் விளையாட முடியாமல் போனது.
இந்நிலையில் திக்வேஷ் ரதியின் நோட்புக் கொண்டாட்டத்திற்கான காரணத்தை தெரிவித்துள்ளார். அதில், போட்டி நடக்கும் போதெல்லாம், நான் ஒரு நோட்டுப் புத்தகத்தை எடுத்துச் சென்று எல்லா பெயர்களையும் எழுதுவேன் என்று ரதி தெரிவித்தார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.






