என் மலர்
விளையாட்டு
- சிங்கப்பூர் ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி இன்று முதல் ஜூன் 1-ந் தேதி வரை நடக்கிறது.
- பெண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் பி.வி.சிந்து, வென் யு ஜாங்குடன் மோதினார்.
மொத்தம் ரூ.8½ கோடி பரிசுத் தொகைக்கான சிங்கப்பூர் ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி சிங்கப்பூர் உள்விளையாட்டு அரங்கில் இன்று முதல் ஜூன் 1-ந் தேதி வரை நடக்கிறது.
உலகின் முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்கும் இந்த போட்டியில் இந்தியா சார்பில் பிரனாய், லக்ஷயா சென், பி.வி.சிந்து, சாத்விக்- சிராக் உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர்.
இந்நிலையில் பெண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்று ஆட்டத்தில் இந்திய நட்சத்திர வீராங்கனை பி.வி.சிந்து, கனடாவின் வென் யு ஜாங்குடன் மோதினார்.
இந்த ஆட்டத்தில் 21-14, 21-9 என்ற செட் கணக்கில் எளிதில் வென்று அடுத்து சுற்றுக்கு பிவி சிந்து முன்னேறினார்.
- ஆண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்றில் இந்திய வீரர் பிரியான்ஷு ராஜாவத் தோல்வியடைந்தார்.
- பெண்கள் ஒற்றையர் பிரிவில் அன்மோல் கார்ப், மாள்விகா பான்சோத், ரக்ஷிதா ராம்ராஜ் ஆகியோர் தோல்வியடைந்தனர்.
சிங்கப்பூர்:
மொத்தம் ரூ.8½ கோடி பரிசுத் தொகைக்கான சிங்கப்பூர் ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி சிங்கப்பூர் உள்விளையாட்டு அரங்கில் இன்று முதல் ஜூன் 1-ந் தேதி வரை நடக்கிறது. உலகின் முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்கும் இந்த போட்டியில் இந்தியா சார்பில் பிரனாய், லக்ஷயா சென், பி.வி.சிந்து, சாத்விக்- சிராக் உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர்.
இந்நிலையில் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்றில் இந்திய வீரர் பிரியான்ஷு ராஜாவத்- ஜப்பான் வீரர் நரோகாவுடன் மோதினார்.
முதல் செட்ட இந்திய வீரரும் அடுத்த 2 செட்டை ஜப்பான் வீரரும் வென்றனர். இதன்மூலம் ராஜாவத் 21-14, 10-21, 14-21 என்ற செட் கணக்கில் தோல்வியடைந்தார்.
பெண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்றில் இந்திய வீராங்கனைகள் தோல்வியடைந்தனர். அதன்படி இந்தியாவின் அன்மோல் கார்ப், முன்னாள் ஒலிம்பிக் சாம்பியன் சென் யு பெய்யுடன் மோதினார். இதில் 11-21, 24-22 என்ற செட் கணக்கில் வெளியேறினார்.
ரக்ஷிதா ராம்ராஜ் 14-8, 8-21 என்ற செட் கணக்கில் படுமோசமாக தோல்வியடைந்தார்.
மற்றொரு இந்திய வீராங்கனையான மாள்விகா பான்சோத், தாய்லாந்து வீராங்கனை சுபனிதாவுடன் மோதினார். முதல் செட்டை கைப்பற்றிய மாள்விகா அடுத்த 2 செட்டுகளையும் இழந்தார். இதனால் 21-14, 18-21, 11-21 என்ற செட் கணக்கில் தோல்வியடைந்தார்.
- ஐபிஎல் தொடரின் நேற்றைய போட்டியில் மும்பை - பஞ்சாப் அணிகள் மோதின.
- இந்த போட்டியில் பஞ்சாப் அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ஐபிஎல் தொடரின் 69-வது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் - பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின. இதில் முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி 20 ஓவரில் 184 ரன்கள் எடுத்தது.
இதனையடுத்து களமிறங்கிய பஞ்சாப் அணி தொடக்கம் முதலே அதிரடி காட்டியது. இதனால் 18.3 ஓவரில் 187 ரன்கள் எடுத்து 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் குவாலிபையர் சுற்றுக்கு பஞ்சாப் அணி முன்னேறியது.
இந்நிலையில் இந்த போட்டி முடிவடைந்த பின்னர் ஹர்திக் மற்றும் ஷ்ரேயாஸ் தொடர்பான வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில், போட்டி முடிந்ததும் இரு அணி வீரர்களும் கைகுலுக்கி கொண்டனர். அப்போது ஹர்திக் மற்றும் ஷ்ரேயாஸ் இருவரும் கைகுலுக்கி கொள்ளாமல் சென்றனர். ஒருவரை ஒருவர் பார்க்க கூட இல்லை.
இரண்டு முறை ஷ்ரேயாஸ் ஐயரை நோக்கி வரும் ஹர்திக் அவரை கண்டுகொள்ளாமல் சென்றார். இது சமூக வலைதளங்களில் பேசும் பொருளாக உள்ளது.
இருவரும் முன்னரே கைகுலுக்கி கொண்டிருக்கலாம். அதனால் மற்ற வீரர்களுடன் மட்டும் கைகுலுக்கி சென்றிருக்கலாம். ஆனாலும் இந்த வீடியோவை வைத்து மும்பை மற்றும் பஞ்சாப் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
- இங்கிலீஸ் மட்டுமே இடம் மாறி மாறி விளையாடினார்.
- ரிக்கி பாண்டிங்கும், நானும் கடந்த சில ஆண்டுகளாக நல்ல நட்புறவை பராமரித்து வருகிறோம்.
ஜெய்ப்பூர்:
ஐபிஎல் தொடரின் நேற்றைய ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ்- பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் முதலில் விளையாடிய மும்பை அணி 20 ஓவரில் 184 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து விளையாடிய பஞ்சாப் அணி 18.3 ஓவரில் 187 ரன்கள் எடுத்து 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மேலும் குவாலிபையர் சுற்றுக்கு தகுதி பெற்றது.
மும்பை இந்தியன்சை வீழ்த்திய பிறகு பஞ்சாப் அணி கேப்டன் ஷ்ரேயாஸ் அய்யர் கூறியதாவது:-
ஒவ்வொரு வீரரும் சரியான நேரத்தில் முன்னேறினர். முதல் போட்டியில் இருந்தே எந்த சூழ்நிலையிலும் வெற்றி பெற வேண்டும் என்ற மனநிலையில் இருந்தோம். பயிற்சியாளர்கள் குழு மற்றும் அணி நிர்வாகத்திற்கு எனது பாராட்டுக்கள்.
ரிக்கி பாண்டிங் வீரர்களை நிர்வகிப்பதில் மிகவும் சிறப்பாக செயல்பட்டார். நம்பிக்கை பெறுவதும் முக்கியம். தொடக்க வெற்றிகளால் அது நடந்தது. பிரியான்ஷ் தொடங்கிய விதம் அற்புதமாக இருந்தது. இளம் வீரர்கள் பயமற்றவர்கள்.
இங்கிலீஸ் மட்டுமே அவரது இடம் மாறி மாறி விளையாடினார். அவர் புதிய பந்தை விளையாடுவதை விரும்புவதால், அவரை அதிக பந்துகள் விளையாட வைக்க விரும்பினேன். அது அற்புதமாக வேலை செய்தது. ரிக்கி பாண்டிங்கும், நானும் கடந்த சில ஆண்டுகளாக நல்ல நட்புறவை பராமரித்து வருகிறோம். அவர் எனக்கு முழு சுதந்திரம் அளிக்கிறார்.
இவ்வாறு அவர் கூறினார்.
- பஞ்சாப் அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் சூர்யகுமார் யாதவ் 57 ரன்கள் விளாசினார்.
- தென் ஆப்பிரிக்காவின் பவுமா தொடர்ந்து 13 ஆட்டங்களில் 25 ரன்கள் எடுத்ததே சாதனையாக இருந்தது.
ஐபிஎல் தொடரின் நேற்றைய ஆட்டத்தில் பஞ்சாப் - மும்பை அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் பஞ்சாப் அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
நேற்றைய ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் வீரர் சூர்யகுமார் யாதவ் 57 ரன்கள் விளாசினார். இந்த சீசனில் களம் இறங்கிய அனைத்து ஆட்டங்களிலும் (14 ஆட்டம்) குறைந்தது 25 ரன்கள் எடுத்துள்ளார். இதன் மூலம் 20 ஓவர் கிரிக்கெட் வரலாற்றில் தொடர்ந்து 14 ஆட்டங்களில் 25 ரன்களுக்கு மேல் எடுத்த முதல் வீரர் என்ற சாதனையை படைத்தார். இதற்கு முன்பு தென் ஆப்பிரிக்காவின் பவுமா தொடர்ந்து 13 ஆட்டங்களில் 25 ரன்கள் எடுத்ததே சாதனையாக இருந்தது. அதனை சூர்யகுமார் யாதவ் முறியடித்தார்.
அத்துடன் ஆரஞ்சு நிற தொப்பிக்கான போட்டியில் 3-வது இடத்தில் உள்ள சூர்யகுமார் யாதவ் நடப்பு தொடரில் 5 அரைசதம் உள்பட 640 ரன்கள் குவித்துள்ளார். மேலும் ஒரு சீசனில் மும்பை அணிக்காக அதிக ரன்கள் எடுத்தவர் என்ற சிறப்பையும் வசப்படுத்தினார். இதற்கு முன்பு சச்சின் டெண்டுல்கர் 618 ரன்கள் (2010-ம் ஆண்டு) எடுத்ததே அதிகபட்சமாக இருந்தது.
- 26-வது ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டி தென் கொரியாவில் இன்று தொடங்குகிறது.
- தமிழகத்தை சேர்ந்த 9 பேர் (6 வீரர், 3 வீராங்கனைகள்) இந்திய அணிக்கு தேர்வாகி உள்ளனர்.
சென்னை:
26-வது ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டி தென் கொரியாவில் இன்று தொடங்குகிறது. 31-ந்தேதி வரை நடக்கிறது. இந்தப் போட்டிக்காக இந்திய அளவில் 64 வீரர், வீராங்கனைகள் இடம்பெற்றுள்ளனர். தமிழ்நாடு தடகள சங்க செயலாளர் சி.லதா இந்திய அணியின் மேலாளராக சென்றுள்ளார். தமிழகத்தை சேர்ந்த 9 பேர் (6 வீரர், 3 வீராங்கனைகள்) இந்திய அணிக்கு தேர்வாகி உள்ளனர்.
அதன் விவரம் வருமாறு:-
பிரவீன் சித்ரவேல் (டிரி பிள் ஜம்ப்), செர்வின் (20 கி.மீ. நடைபந்தயம்), தமிழரசு, ராகுல்குமார் (4x100 மீட்டர் தொடர் ஓட்டம்), விஷால், சந்தோஷ் கமார் (4x400 மீட்டர், 4x400 மீட்டர் கலப்பு தொடர் ஓட்டம்), வித்யா (400 மீட்டர் ஒட்டம், 400 மீட்டர் தடை தாண்டுதல்), அபினயா (4x100 மீட்டர் தொடர் ஓட்டம்), சுபா (4x100 மீட்டர், 4x400 மீட்டர் தொடர் ஓட்டம்)
- பெங்களூரு அணி இதுவரை 13 ஆட்டங்களில் ஆடி 8 வெற்றி, 4 தோல்வி, ஒரு முடிவில்லை என 17 புள்ளிகள் பெற்றுள்ளது.
- லக்னோ அணி தொடரை வெற்றியுடன் நிறைவு செய்யவும், புள்ளி பட்டியலில் ஏற்றம் காணவும் முயற்சிக்கும்.
லக்னோ:
10 அணிகள் இடையிலான 18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இறுதி கட்டத்தை எட்டி விட்டது. இன்றுடன் லீக் சுற்று முடிவுக்கு வருகிறது. உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் இன்று நடைபெறும் 70-வது மற்றும் கடைசி லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியை எதிர்கொள்கிறது.
ஏற்கனவே அடுத்த சுற்றுக்கு (பிளே-ஆப்) தகுதி பெற்று விட்ட பெங்களூரு அணிக்கு இது முக்கியமான ஆட்டமாகும். இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்றால் பெங்களூரு 2016-ம் ஆண்டுக்கு பிறகு முதல்முறையாக புள்ளிபட்டியலில் டாப்-2 இடத்தை பிடிக்க முடியும். மாறாக தோற்றால் 3-வது இடத்திலேயே இருக்கும். ஐ.பி.எல். கிரிக்கெட்டை பொறுத்தமட்டில் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகளுக்கு இறுதிப்போட்டிக்கு தகுதி பெற இரண்டு வாய்ப்பு கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
பெங்களூரு அணி இதுவரை 13 ஆட்டங்களில் ஆடி 8 வெற்றி, 4 தோல்வி, ஒரு முடிவில்லை என 17 புள்ளிகள் பெற்றுள்ளது. இந்தியா- பாகிஸ்தான் இடையே நிலவிய சண்டையால் போட்டி தொடர் 9 நாட்கள் தடைபடுவதற்கு முன்பு தொடர்ச்சியாக 4 ஆட்டங்களில் வெற்றி கண்டு வீறுநடைபோட்ட பெங்களூரு அணி மீண்டும் போட்டி தொடங்கிய பிறகு உத்வேகத்தை இழந்து நிற்கிறது. அதன் பின்னர் கொல்கத்தாவுக்கு எதிரான ஆட்டம் மழையால் ஒரு பந்து கூட வீசப்படாமல் கைவிடப்பட்டது. கடந்த ஆட்டத்தில் 42 ரன் வித்தியாசத்தில் ஐதராபாத்திடம் பணிந்தது. 232 ரன் இலக்கை நோக்கி ஆடிய அந்த ஆட்டத்தில் பெங்களூரு 189 ரன்னில் அடங்கியது.
பெங்களூரு அணியில் பேட்டிங்கில் விராட் கோலி (548 ரன்), பில் சால்ட், கேப்டன் ரஜத் படிதாரும், பந்து வீச்சில் குருணல் பாண்ட்யா, புவனேஷ்வர் குமார், யாஷ் தயாள், நல்ல நிலையில் உள்ளனர். தோள்பட்டை காயத்தால் தாயகத்துக்கு சென்று இருந்த ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் ஹேசில்வுட் திரும்பி இருக்கிறார். 10 ஆட்டங்களில் ஆடி 18 விக்கெட்டுகள் வீழ்த்தி இருக்கும் அவரது வருகை நிச்சயம் பெங்களூருவுக்கு வலுசேர்க்கும்.
அடுத்த சுற்று வாய்ப்பை இழந்து விட்ட லக்னோ அணி 13 ஆட்டங்களில் ஆடி 6 வெற்றி, 7 தோல்வியுடன் 12 புள்ளிகள் பெற்று 7-வது இடத்தில் உள்ளது. கடந்த ஆட்டத்தில் குஜராத்துக்கு எதிராக 235 ரன்கள் குவித்த லக்னோ அணி 33 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அந்த உற்சாகத்துடன் இந்த ஆட்டத்தில் களம் இறங்குகிறது. அந்த அணியில் பேட்டிங்கில் மிட்செல் மார்ஷ் (ஒரு சதம், 5 அரைசதம் உள்பட 560 ரன்), நிகோலஸ் பூரன் (511), மார்க்ரம் (445), ஆயுஷ் பதோனி (329) அசத்துகின்றனர். பந்து வீச்சில் ஆவேஷ் கான், ரவி பிஷ்னோய், தற்காலிக மாற்று வீரர் வில்லியம் ஓ ரூர்கே நம்பிக்கை அளிக்கின்றனர். ஐதராபாத் வீரர் அபிஷேக் ஷர்மாவுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் ஒரு ஆட்டத்தில் விளையாட தடை விதிக்கப்பட்ட சுழற்பந்து வீச்சாளர் திக்வேஷ் ரதி (14 விக்கெட்) மீண்டும் களம் காண்பது பந்துவீச்சை பலப்படுத்தும்.
டாப்-2 இடத்தை பிடிக்க பெங்களூரு அணி தனது முழுபலத்தையும் வெளிப்படுத்தும். அதேநேரத்தில் லக்னோ அணி தொடரை வெற்றியுடன் நிறைவு செய்யவும், புள்ளி பட்டியலில் ஏற்றம் காணவும் முயற்சிக்கும். எனவே ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சமிருக்காது.
இவ்விரு அணிகளும் இதுவரை 5 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் பெங்களூரு 3 ஆட்டத்திலும், லக்னோ 2 ஆட்டத்திலும் வெற்றி பெற்று இருக்கின்றன.
போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-
லக்னோ: மார்க்ரம், மிட்செல் மார்ஷ், நிகோலஸ் பூரன், ரிஷப் பண்ட் (கேப்டன்), ஆயுஷ் பதோனி, அப்துல் சமத், திக்வேஷ் ரதி, ஹிமாத் சிங், ஆவேஷ் கான், ஆகாஷ் தீப், வில்லியம் ஓ ரூர்கே, ஆகாஷ் சிங்.
பெங்களூரு: பில் சால்ட், விராட் கோலி, மயங்க் அகர்வால், ரஜத் படிதார் (கேப்டன்), ஜிதேஷ் ஷர்மா, ரொமாரியோ ஷெப்பர்டு, குருணல் பாண்ட்யா, லிவிங்ஸ்டன், புவனேஷ்வர் குமார், யாஷ் தயாள், ஹேசில்வுட், சுயாஷ் ஷர்மா.
இரவு 7.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.
- அதிரடியாக விளையாடிய ஜோஸ் இங்கிலிஷ் 73 ரன்கள் அடித்து ஆட்டநாயகன் விருதை வென்றார்.
- இந்த வெற்றியின் மூலம் புள்ளிப்பட்டியலில் முதல் இடத்திற்கு பஞ்சாப் முன்னேறியது.
ஐபிஎல் தொடரின் நேற்றைய ஆட்டத்தில் மும்பை - பஞ்சாப் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் களமிறங்கிய மும்பை அணி 20 ஓவரில் 184 ரன்கள் குவித்தது. சிறப்பாக விளையாடிய சூர்யகுமார் 57 ரன்களுடன் கடைசி பந்தில் ஆட்டமிழந்தார். பஞ்சாப் தரப்பில் விஜயகுமார், மார்கோ யான்சன் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
இதனையடுத்து, 185 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய பஞ்சாப் அணி 18.3 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 187 ரன்கள் அடித்து வெற்றி பெற்றது. அதிரடியாக விளையாடிய ஜோஸ் இங்கிலிஷ் 73 ரன்கள் அடித்து ஆட்டநாயகன் விருதை வென்றார்.
இந்த வெற்றியின் மூலம் புள்ளிப்பட்டியலில் முதல் இடத்திற்கு முன்னேறிய பஞ்சாப் அணி குவாலிபையர் 1 போட்டியில் விளையாடுவதற்கான தகுதியை பெற்றது.
பஞ்சாப் அணிக்கு எதிராக தோல்வி அடைந்ததன் மூலம் புள்ளிப்பட்டியலில் 4 ஆம் இடத்தை பிடித்து எலிமினேட்டர் போட்டியில் மும்பை விளையாடவுள்ளது.
- விராட் கோலி, ரோகித் சர்மா ஆகியோர் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தனர்.
- டெஸ்ட் கிரிக்கெட்டில் எங்களின் பார்ட்னர்ஷிப்பை நினைத்து எப்போதும் மகிழ்வேன்.
இந்திய அணியின் டெஸ்ட் அணி கேப்டனாக இருந்த ரோகித் சர்மா ஓய்வு பெறுவதாக அறிவித்தார். அதனை தொடர்ந்து நட்சத்திர வீரர் விராட் கோலியும் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக் அறிவித்தார்.
இதனையடுத்து இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் இந்திய டெஸ்ட் அணியின் புதிய கேப்டனாக சுப்மன் கில் அறிவிக்கப்பட்டார். அவருக்கு பலர் வாழ்த்து தெரிவித்தாலும் சிலர் அவருக்கு கேப்டன்ஷிப் கொடுத்தது தவறு என கருத்து தெரிவித்து வருகின்றனர். ஆனால் கில் மீது நம்பிக்கை உள்ளதாக தேர்வுக்குழு தலைவர் அஜித் அகாகர் கூறினார்.
இந்நிலையில் இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விராட் கோலியை நான் அதிகம் மிஸ் செய்வேன் என புதிய கேப்டன் கில் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விராட் கோலியை நான் அதிகம் மிஸ் செய்வேன். டெஸ்ட் கிரிக்கெட்டில் எங்களின் பார்ட்னர்ஷிப்பை நினைத்து எப்போதும் மகிழ்வேன். அவர் பேட்டிங் செய்வதை டிவியில் பார்த்த நான், அவருடன் இணைந்து களத்தில் விளையாடியவை என் வாழ்வின் அழியா நினைவுகள்.
என கில் கூறினார்.
- பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சூர்யகுமார் 57 ரன்னில் ஆட்டமிழந்தார்.
- 2010-ம் ஆண்டு சச்சின் 618 ரன்கள் எடுத்ததே ஒரு சீசனில் மும்பைக்காக எடுத்த அதிகபட்ச ரன்னாக இருந்தது.
ஐபிஎல் தொடரின் இன்றைய ஆட்டத்தில் மும்பை - பஞ்சாப் அணிகள் விளையாடி வருகிறது. இதில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.
அதன்படி களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவரில் 184 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக சூர்யகுமார் 57 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
இந்நிலையில் நடப்பு தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக சூர்யகுமார் யாதவ் 619 ரன்கள் குவித்துள்ளார். இதன் மூலம் 15 வருட சச்சினின் சாதனையை சூர்யகுமார் முறியடித்துள்ளார். 2010-ம் ஆண்டு சச்சின் 618 ரன்கள் எடுத்ததே ஒரு சீசனில் மும்பைக்காக எடுத்த அதிகபட்ச ரன்னாக இருந்தது.
மும்பை அணிக்காக ஒரு சீசனில் அதிக ரன்கள் எடுத்த வீரர்கள்:-
619* - சூர்யகுமார் யாதவ் (2025)
618 - சச்சின் டெண்டுல்கர் (2010)
605 - சூர்யகுமார் யாதவ் (2023)
553 - சச்சின் டெண்டுல்கர் (2011)
540 - லென்டில் சிம்மன்ஸ் (2015)
538 - ரோஹித் சர்மா (2013)
- மும்பை தரப்பில் சூர்யகுமார் 57 ரன்கள் எடுத்தார்.
- பஞ்சாப் தரப்பில் விஜயகுமார், மார்கோ யான்சன் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
ஐபிஎல் தொடரின் இன்றைய ஆட்டத்தில் மும்பை - பஞ்சாப் அணிகள் விளையாடி வருகிறது. இதில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.
அதன்படி மும்பை அணியின் தொடக்க வீரர்களாக ரோகித் சர்மா, ரியான் ரிக்கெல்டன் களமிறங்கினர். தொடக்கம் முதலே ரியான் அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தார். அவர் 27 ரன்னில் ஆட்டமிழந்தார்.
மந்தமாக விளையாடிய ரோகித் சர்மா 24 ரன்னில் வெளியேறினார். அடுத்து வந்த திலக் வர்மா 1 ரன்னில் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார். அடுத்த வந்த வந்த வேகத்தில் அதிரடியாக விளையாடி 8 பந்தில் 17 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
இதனையடுத்து பாண்ட்யா மற்றும் சூர்யகுமார் ஜோடி சேர்ந்து அணியின் ஸ்கோரை கணிசமாக உயர்த்தினர். ஹர்திக் 26 ரன்னில் வெளியேறினார்.
அடுத்து வந்த நமன் தீர் - சூர்யாகுமாருடன் ஜோடி சேர்ந்து அதிரடியாக விளையாடினார். அவர் 11 பந்தில் 20 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
இறுதியில் மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவரில் 184 ரன்கள் குவித்தது. சூர்யகுமார் 57 ரன்களுடன் கடைசி பந்தில் ஆட்டமிழந்தார். பஞ்சாப் தரப்பில் விஜயகுமார், மார்கோ யான்சன் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
- கங்குலியின் மூத்த சகோதரர் ஸ்னேஹாசிஷ் கங்குலி மற்றும் அவரது மனைவி அர்பிதா ஆகியோர் படகு சாகசத்தில் ஈடுபட்டனர்.
- அவர்கள் சென்ற படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
முன்னாள் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் சவுரவ் கங்குலி. அவரது மூத்த சகோதரர் ஸ்னேஹாசிஷ் கங்குலி மற்றும் அவரது மனைவி அர்பிதா கங்குலி ஆகியோர் ஒடிசாவின் பூரி கடற்கரையில் ஒரு படகு சாகசத்தில் ஈடுபட்டிருந்தபோது, அவர்கள் சென்ற படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
அதிர்ஷ்டவசமாக இருவரும் சிறிய காயங்களுடன் உயிர் தப்பினர். இந்தச் சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
ஸ்னேஹாசிஷ் கங்குலி மற்றும் அர்பிதா கங்குலி ஆகியோர் கடல் நீரில் படகு சவாரி செய்து கொண்டிருந்தபோது, திடீரென ஒரு பெரிய அலை படகைத் தாக்கியது. இதனால் படகு நிலைதடுமாறி கவிழ்ந்தது. இதில் படகில் இருந்த அனைவரும் கடலில் விழுந்தனர்.
உடனடியாக அங்கிருந்த லைஃப் கார்டுகள் விரைந்து செயல்பட்டு, நீரில் தத்தளித்துக் கொண்டிருந்த ஸ்னேஹாசிஷ் மற்றும் அர்பிதா உட்பட அனைவரையும் மீட்டு பாதுகாப்பாக கரைக்குக் கொண்டு வந்தனர்.






