என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    இங்கிலாந்து தொடரில் கோலியை அதிகம் மிஸ் செய்வேன்.. புதிய கேப்டன் கில் உருக்கம்
    X

    இங்கிலாந்து தொடரில் கோலியை அதிகம் மிஸ் செய்வேன்.. புதிய கேப்டன் கில் உருக்கம்

    • விராட் கோலி, ரோகித் சர்மா ஆகியோர் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தனர்.
    • டெஸ்ட் கிரிக்கெட்டில் எங்களின் பார்ட்னர்ஷிப்பை நினைத்து எப்போதும் மகிழ்வேன்.

    இந்திய அணியின் டெஸ்ட் அணி கேப்டனாக இருந்த ரோகித் சர்மா ஓய்வு பெறுவதாக அறிவித்தார். அதனை தொடர்ந்து நட்சத்திர வீரர் விராட் கோலியும் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக் அறிவித்தார்.

    இதனையடுத்து இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் இந்திய டெஸ்ட் அணியின் புதிய கேப்டனாக சுப்மன் கில் அறிவிக்கப்பட்டார். அவருக்கு பலர் வாழ்த்து தெரிவித்தாலும் சிலர் அவருக்கு கேப்டன்ஷிப் கொடுத்தது தவறு என கருத்து தெரிவித்து வருகின்றனர். ஆனால் கில் மீது நம்பிக்கை உள்ளதாக தேர்வுக்குழு தலைவர் அஜித் அகாகர் கூறினார்.

    இந்நிலையில் இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விராட் கோலியை நான் அதிகம் மிஸ் செய்வேன் என புதிய கேப்டன் கில் கூறியுள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விராட் கோலியை நான் அதிகம் மிஸ் செய்வேன். டெஸ்ட் கிரிக்கெட்டில் எங்களின் பார்ட்னர்ஷிப்பை நினைத்து எப்போதும் மகிழ்வேன். அவர் பேட்டிங் செய்வதை டிவியில் பார்த்த நான், அவருடன் இணைந்து களத்தில் விளையாடியவை என் வாழ்வின் அழியா நினைவுகள்.

    என கில் கூறினார்.

    Next Story
    ×