என் மலர்
ஐ.பி.எல்.(IPL)

மும்பை தோல்வி: ஷ்ரேயாஸ் ஐயரை கண்டுகொள்ளாமல் சென்ற ஹர்திக்- வைரலாகும் வீடியோ
- ஐபிஎல் தொடரின் நேற்றைய போட்டியில் மும்பை - பஞ்சாப் அணிகள் மோதின.
- இந்த போட்டியில் பஞ்சாப் அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ஐபிஎல் தொடரின் 69-வது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் - பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின. இதில் முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி 20 ஓவரில் 184 ரன்கள் எடுத்தது.
இதனையடுத்து களமிறங்கிய பஞ்சாப் அணி தொடக்கம் முதலே அதிரடி காட்டியது. இதனால் 18.3 ஓவரில் 187 ரன்கள் எடுத்து 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் குவாலிபையர் சுற்றுக்கு பஞ்சாப் அணி முன்னேறியது.
இந்நிலையில் இந்த போட்டி முடிவடைந்த பின்னர் ஹர்திக் மற்றும் ஷ்ரேயாஸ் தொடர்பான வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில், போட்டி முடிந்ததும் இரு அணி வீரர்களும் கைகுலுக்கி கொண்டனர். அப்போது ஹர்திக் மற்றும் ஷ்ரேயாஸ் இருவரும் கைகுலுக்கி கொள்ளாமல் சென்றனர். ஒருவரை ஒருவர் பார்க்க கூட இல்லை.
இரண்டு முறை ஷ்ரேயாஸ் ஐயரை நோக்கி வரும் ஹர்திக் அவரை கண்டுகொள்ளாமல் சென்றார். இது சமூக வலைதளங்களில் பேசும் பொருளாக உள்ளது.
இருவரும் முன்னரே கைகுலுக்கி கொண்டிருக்கலாம். அதனால் மற்ற வீரர்களுடன் மட்டும் கைகுலுக்கி சென்றிருக்கலாம். ஆனாலும் இந்த வீடியோவை வைத்து மும்பை மற்றும் பஞ்சாப் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.






