என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "எச்எஸ் பிரனோய்"

    • ஆண்களுக்கான முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் பிரனோய், ராஸ்மஸ் கெம்கேவுடன் மோதினார்.
    • இந்த ஆட்டத்தில் பிரனோய் முதல் செட்டில் தோல்வியடைந்தார்.

    சிங்கப்பூர் ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி சிங்கப்பூர் உள்விளையாட்டு அரங்கில் இன்று முதல் ஜூன் 1-ந் தேதி வரை நடக்கிறது. இதில் ஆண்களுக்கான முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் இந்தியாவின் பிரனோய், டென்மார்க் வீரரான ராஸ்மஸ் கெம்கேவுடன் மோதினார்.

    இந்த ஆட்டத்தில் பிரனோய் முதல் செட்டில் தோல்வியடைந்தார். இதனையடுத்து சுதாரித்து கொண்ட பிரனோய் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த அடுத்த 2 செட்களையும் கைப்பற்றினார். இதனால் 19-21, 21-16, 21-14 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று 2-வது சுற்றுக்கு முன்னேறினார். 

    • உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி டோக்கியோவில் நடைபெற்று வருகிறது.
    • இன்று நடைபெறும் காலிறுதியில் பிரனோய், சீன வீரர் ஜாவோ ஜுன்பெங்குடன் மோதுகிறார்.

    டோக்கியோ:

    உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடந்து வருகிறது.

    இதில் நேற்று நடைபெற்ற காலிறுதிக்கு முந்தைய சுற்றில் காமன்வெல்த் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற இந்திய இளம் வீரர் லக்‌ஷயா சென், தரவரிசையில் 18-வது இடத்தில் இருக்கும் மற்றொரு இந்திய வீரரான எச்.எஸ்.பிரனோய் உடன் மோதினார்.

    இதில் பிரனோய் 17-21, 21-16, 21-17 என்ற செட் கணக்கில் லக்‌ஷயா சென்னை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார்.

    இன்று நடைபெற உள்ள காலிறுதிப் போட்டியில் பிரனாய், சீன வீரர் ஜாவோ ஜுன்பெங்குடன் மோதுகிறார்.

    ×