என் மலர்tooltip icon

    விளையாட்டு

    கொல்கத்தாவில் நடைபெற்று வரும் முதல் பகல்-இரவு டெஸ்ட் போட்டியில் இந்திய பந்துவீச்சாளர்களின் துல்லியமான பந்துவீச்சில் சிக்கி வங்காளதேசம் அணி விக்கெட்டுகளை இழந்து திணறி வருகிறது.
    கொல்கத்தா:

    இந்தியா மற்றும் வங்காளதேசம் அணிகள் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி பகல் இரவு டெஸ்ட் போட்டியாக கொல்கத்தாவில் நடைபெற்று வருகிறது.

    டாஸ் வென்ற வங்காளதேசம் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஷத்மாம் இஸ்லாம், இம்ருல் கயேஸ் ஆகியோர் களமிறங்கினர்.

    இஸ்லாம் ஓரளவு தாக்குப்பிடித்தார். அவர் 29 ரன்னில் அவுட்டானார். அடுத்து வந்த வீரர்கள் விரைவில் அவுட்டாகினர். இந்திய பந்துவீச்சாளர்களின் துல்லிய பந்து வீச்சில் சிக்கி வங்காளதேச வீரர்கள் வெளியேறினர்.

    போட்டியை பார்க்க திரண்ட கூட்டம்

    இதையடுத்து, வங்காளதேசம் அணி உணவு இடைவேளை வரை 73 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து திணறி வருகிறது.

    இந்தியா சார்பில் உமேஷ் யாதவ் 3 விக்கெட்டும், இஷாந்த் சர்மா 2 விக்கெட்டும், மொகமது ஷமி ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.
    பிரிஸ்பேன் டெஸ்டில் டேவிட் வார்னர் 151 ரன்களும், ஜோ பேர்ன்ஸ் 97 ரன்களும் விளாச ஆஸ்திரேலியா 1 விக்கெட் இழப்பிற்கு 312 ரன்கள் குவித்துள்ளது.
    ஆஸ்திரேலியா - பாகிஸ்தான் அணிகள் மோதும் முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நேற்று பிரிஸ்பேனில் தொடங்கியது. முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி தொடக்கம் சிறப்பாக இருந்தது. ஆனால் தொடக்க ஜோடி பிரிந்ததும் விக்கெட்டுகள் சரிந்தது.

    அந்த அணி 86.2 ஓவரில் 240 ரன்னுக்கு ஆல்-அவுட் ஆனது. அதிகபட்சமாக ஆசாத் ‌ஷபிக் 76 ரன் எடுத்தார். கேப்டன் அசார் அலி 39 ரன்னும், முகமது ரிஸ்வான் 37 ரன்னும், ஷான் மசூத் 27 ரன்னும் எடுத்தனர். ஆஸ்திரேலிய தரப்பில் ஸ்டார்க் 4 விக்கெட்டும் கம்மின்ஸ் 3 விக்கெட்டும் வீழ்த்தினர். பாகிஸ்தான் ஆல்-அவுட் ஆனதுடன் நேற்றைய முதல் நாள் ஆட்டம் முடிவடைந்தது.

    இன்று 2-வது நாள் ஆட்டம் தொடங்கியதும் ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் பேட்டிங் செய்தது. தொடக்க வீரர்களாக டேவிட் வார்னர், ஜோ பேர்ன்ஸ் களம் இறங்கினர். இருவரும் சிறப்பான தொடக்கம் கொடுத்தனர். அவர்கள் பாகிஸ்தான் பந்துவீச்சை திறம்பட சமாளித்து ரன்களை சேர்த்தனர்.

    இந்த ஜோடியை பிரிக்க முடியாமல் பாகிஸ்தான் பவுலர்கள் திணறினார்கள். ஆஸ்திரேலியா 25-வது ஓவரில் 100 ரன்களை தொட்டது. டேவிட் வார்னர் 56 ரன்னில் இருந்தபோது 16 வயது வேகப்பந்து வீச்சாளர் நசீம்ஷா பந்தில் கேட்ச் ஆனார். ஆனால் அது நோ-பால் என்று அறிவிக்கப்பட்டது.

    அவுட்டானதில் இருந்து தப்பிய சிறப்பாக விளையாடி சதம் அடித்தார். ஜோ பேர்ன்ஸ் சதம் அடிப்பார் என்ற நிலையில் 97 ரன்னில் ஆட்டமிழந்தார். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 60.5 ஓவர்களில் 222 ரன்கள் குவித்தது.

    அடுத்து டேவிட் வார்னருடன் மார்னஸ் லாபஸ்சாக்னே ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடியும் சிறப்பாக விளையாடியது. லாபஸ்சாக்னே சிறப்பாக விளையாடி அரைசதம் அடித்தார். வார்னர் 150 ரன்னைக் கடந்தார்.

    மார்னஸ் லாபஸ்சாக்னே

    இருவரும் இன்றைய 2-வது நாள் ஆட்டம் முடியும் வரை விக்கெட் கொடுக்காமல் பார்த்துக் கொண்டனர். இதனால் ஆஸ்திரேலியா 2-வது நாள் ஆட்ட முடிவில் 1 விக்கெட் இழப்பிற்கு 312 ரன்கள் குவித்துள்ளது. டேவிட் வார்னர் 151 ரன்னுடனும், ஜோ பேர்ன்ஸ் 97 ரன்னுடனும் களத்தில் உள்ளனர்.

    தற்போது வரை ஆஸ்திரேலியா 72 ரன்கள் முன்னிலைப் பெற்றுள்ளது. நாளை 3-வது நாள் முழுவதும் பேட்டிங் செய்தால் பாகிஸ்தானை விட 300 ரன்களுக்கு மேல் முன்னிலை வகிக்க வாய்ப்புள்ளது. 300 ரன்களுக்கு மேல் முன்னிலைப் பெற்றால் இன்னிங்ஸ் வெற்றி பெற வாய்ப்புள்ளது.
    இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 353 ரன்னில் ஆல்அவுட் ஆக, நியூசிலாந்து 2-வது நாள் ஆட்ட முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 144 ரன்கள் அடித்துள்ளது.
    • இங்கிலாந்து 353 ரன்னில் ஆல்அவுட். பென் ஸ்டோக்ஸ் 91 ரன், டிம் சவுத்தி நான்கு விக்கெட்
    • கேன் வில்லியம்சன் அரைசதம்
    • நியூசிலாந்து 4 விக்கெட் இழப்பிற்கு 144
    நியூசிலாந்து - இங்கிலாந்து அணிகள் மோதும் முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நேற்று மவுண்ட் மவுங்கானுயில் தொடங்கியது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து நேற்றைய முதல் நாள் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 241 ரன் எடுத்திருந்தது. பேர்ன்ஸ் 52 ரன்னும், ஜோ டென்லி 74 ரன்னும் எடுத்தனர். பென் ஸ்டோக்ஸ் 67 ரன்னுடனும், போப் 18 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

    இன்று 2-வது நாள் ஆட்டம் நடந்தது. பென் ஸ்டோக்ஸ் 91 ரன்களில் ஆட்டமிழந்து சதம் அடிக்கும் வாய்ப்பை இழந்தார். போப் 29 ரன்னும், ஜோஸ் பட்லர் 48 ரன்னிலும் அவுட் ஆனார்கள். இங்கிலாந்து 124 ஓவரில் 353 ரன்னும் ஆல்-அவுட் ஆனது. நியூசிலாந்து தரப்பில் டிம் சவுத்தி 4 விக்கெட்டும், வாக்னர் 3 விக்கெட்டும், கிராண்ட் ஹோம் 2 விக்கெட்டும், போல்ட் ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.

    பின்னர் நியூசிலாந்து முதல் இன்னிங்சை விளையாடியது. தொடக்க வீரர் டாம் லாதம் 8 ரன்னிலும், ஜீத் ராவல் 19 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.

    இங்கிலாந்து வீரர்கள்

    அடுத்து கேப்டன் வில்லியம்சன்- ராஸ் டெய்லர் ஜோடி நிதானமாக விளையாடியது. என்றாலும் இந்த ஜோடியால் நீண்ட நேரம் நீடிக்க முடியவில்லை. ராஸ் டெய்லர் 25 ரன்னில் ஆட்டமிழந்தார். கேன் வில்லியம்சன் 51 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.

    நிக்கோல்ஸ் 26 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருக்க நியூசிலாந்து 2-வது நாள் ஆட்ட முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 144 ரன்கள் எடுத்துள்ளது.
    இந்தியா - வங்காளதேச அணிகள் மோதும் 2வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கொல்கத்தாவில் இன்று தொடங்கியது. இதன்மூலம் இந்திய அணி முதல் முறையாக பகல்-இரவு டெஸ்ட் போட்டியில் விளையாடுகிறது.
    கொல்கத்தா:

    இந்தியா வங்காளதேச கிரிக்கெட் அணிகளுக்கிடையிலான 2வது டெஸ்ட் போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் இன்று மதியம் தொடங்கியது. இந்திய கிரிக்கெட் வரலாற்றில் முதல் முறையாக, சர்வதேச டெஸ்ட் போட்டி பகல் இரவு போட்டியாக நடத்தப்படுகிறது. அத்துடன் பிங்க் நிற பந்து முதல் முறையாக பயன்படுத்தப்படுகிறது. 

    இப்போட்டிக்கான டாஸ் சுண்டப்பட்டதில், வங்காளதேச அணி கேப்டன் வெற்றி பெற்று பேட்டிங்கை தேர்வு செய்தார். இதன்மூலம், பிங்க் நிற பந்தை முதலில் இந்திய அணி வீசுகிறது. வங்காளதேச பிரதமர் ஷேக் ஹசினா, மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி ஆகியோர் மைதானத்திற்கு வந்து வீரர்களை வாழ்த்தி, போட்டியை தொடங்கி வைத்தனர். 

    போட்டியை தொடங்கி வைத்த ஷேக் ஹசினா, மம்தா பானர்ஜி

    வங்காளதேச அணியில் 2 மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அல் அமின், நயீம் ஆகியோர் அணிக்கு அழைக்கப்பட்டுள்ளனர். தாய்ஜூல், மெகிடி ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர். இந்திய அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.

    இந்திய அணி: மயங்க் அகர்வால், ரோகித் சர்மா, புஜாரா, விராட் கோலி,  ரகானே, ரவீந்திர ஜடேஜா, அஷ்வின், சகா, இஷாந்த் சர்மா, உமேஷ் யாதவ், முகமது ஷமி.

    வங்காளதேச அணி: ஷத்மான் இஸ்லாம், இம்ரல் கயீஸ், மொமினுல் ஹக், முகமது மிதுன், முஷ்பிகுர் ரகிம், மஹ்முதுல்லா, லித்தன் தாஸ், நயீம் ஹசன், அபு ஜாயேத், அல்அமின் ஹூசைன், எபாதத் ஹூசைன்.
    பிங்க் பந்தில் பீல்டிங் செய்வது கடினம் என்றும், பகல்-இரவு டெஸ்டை அடிக்கடி நடத்தக்கூடாது என்றும் இந்திய கேப்டன் விராட் கோலி கூறியுள்ளார்.
    பகல்-இரவு டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இன்று தொடங்குவதையொட்டி இந்திய கேப்டன் விராட் கோலி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    சில தினங்களாக பிங்க் நிற பந்தில் பீல்டிங் பயிற்சி மேற்கொண்டதில் இருந்து எனக்கே சில விஷயங்கள் ஆச்சரியமாக தெரிந்தன. ‘ஸ்லிப்’ பகுதியில் நின்றபடி பிங்க் பந்தை பிடிக்கும்போது அது கைகளை கடினமாக தாக்குகிறது. அதை கிட்டத்தட்ட கனமான ஆக்கி பந்து போன்று உணர்ந்தோம். பளபளப்புக்காக பந்து மீது பூசப்பட்டிருக்கும் அரக்கு காரணமாக நிச்சயமாக கடினமாகத்தான் இருக்கிறது.

    சிவப்பு நிற பந்தை காட்டிலும் இந்த வகை பந்தை எல்லைக்கோட்டில் இருந்து விக்கெட் கீப்பர் நோக்கி வீசுவதற்கு கூடுதல் சக்தி தேவைப்படுகிறது. பகல்வேளையில் உயரமான கேட்ச்சுகளை பிடிப்பது மிகவும் கஷ்டமாக இருக்கும். சிவப்பு அல்லது வெள்ளை நிற பந்துகள் உயரத்தில் இருந்து கீழ்நோக்கி வரும்போது, அதன் வேகத்தை கண்டுபிடித்து விட முடியும். ஆனால் பிங்க் பந்து எவ்வளவு வேகத்தில் நம் கையை வந்தடையும் என்பது தெரியவில்லை. பயிற்சியின்போது பீல்டிங் பகுதி எனக்கு மிகவும் சவாலாக அமைந்தது. பிங்க் பந்து எவ்வளவு சவால் மிக்கது என்பதை பார்த்து மக்களும் ஆச்சரியப்படப்போகிறார்கள்.

    இதே போல் சூரியன் மறையும் சமயத்தில் பந்தை தெளிவாக பார்க்க முடியவில்லை. பந்து தூரத்தில் வருவது போல் தான் தெரிகிறது. ஆனால் துரிதமாக வந்து பதம் பார்த்து விடுகிறது. கூடுதல் பளபளப்பு அதனை வேகமாக பயணிக்க வைக்கிறது. மொத்தத்தில் நாங்கள் மிகவும் துல்லியமாக கணித்து செயல்பட வேண்டி உள்ளது. எங்களது திறமையை சோதிக்கும் களமாக இந்த டெஸ்ட் இருக்கும்.

    இந்த டெஸ்டின்போது பனிப்பொழிவின் தாக்கம் முக்கிய பங்கு வகிக்கும். ஆனால் எந்த நேரத்தில் பனிபெய்ய ஆரம்பிக்கும் என்பது தெரியவில்லை. மற்ற நாடுகளில் நடக்கும் பகல்-இரவு டெஸ்டுக்கும் இந்தியாவில் நடக்கும் பகல்-இரவு டெஸ்டுக்கும் இது தான் வித்தியாசமாகும்.

    டெஸ்ட் கிரிக்கெட் என்பது பகல்-இரவில் மட்டும் நடக்கும் போட்டியாக மாறிவிடக்கூடாது என்பதே எனது கருத்து. ஏனெனில் காலையில் களம் இறங்கும்போது உருவாகும் அந்த பதற்றத்தை நீங்கள் இழந்து விடுவீர்கள்.

    டெஸ்ட் கிரிக்கெட்டில் சுவாரஸ்யத்தை கொண்டு வரலாம். அது முழுக்க முழுக்க பொழுதுபோக்கு அடிப்படையில் இருந்து விடக்கூடாது. ஒவ்வொரு பகுதியிலும் (செசன்) பேட்ஸ்மேன்கள் தாக்குப்பிடிக்க போராடுவதும், அவர்களை சீக்கிரம் வெளியேற்ற பந்து வீச்சாளர்கள் முயற்சிப்பதும், இவை தான் டெஸ்ட் கிரிக்கெட்டின் பொழுது போக்காக இருக்க வேண்டும்.

    ஒருவருக்கு டெஸ்ட் கிரிக்கெட்டை பார்க்க பிடிக்கவில்லை என்றால், அதை விரும்பும்படி அவரை கட்டாயப்படுத்தக்கூடாது டெஸ்ட் கிரிக்கெட்டை பார்த்து உற்சாகமும், பரவசமும் அடையக்கூடியவர்கள் இருக்கிறார்கள். அத்தகைய மனப்பான்மை கொண்டவர்கள் டெஸ்ட் போட்டியை பார்க்க வர வேண்டும் என்பதே எனது கருத்து. ஏனெனில் அவர்கள் தான் டெஸ்ட் கிரிக்கெட்டின் தன்மையை புரிந்து கொள்வார்கள்.

    இந்திய முன்னாள் கேப்டன் ராகுல் டிராவிட் சொன்னது போல், இந்தியாவில் டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு என்று நிரந்தரமான போட்டி அட்டவணை இருக்க வேண்டும். அப்போதுதான் டெஸ்ட் போட்டியை பார்க்க ரசிகர்கள் திட்டமிட்டு முன்கூட்டியே தயாராவார்கள். இதே போல் பகல்-இரவு டெஸ்ட் எப்போதாவது இருக்கலாம். அதுவே வழக்கமான நடைமுறையாகி விடக்கூடாது.

    அடுத்த ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு செல்லும்போது பகல்-இரவு டெஸ்டில் விளையாட தயாராக இருப்பீர்களா? என்று கேட்கிறீர்கள். எப்போதெல்லாம் பகல்-இரவு டெஸ்டுக்கு ஏற்பாடு செய்யப்படுகிறதோ, அதற்கு முன்பாக முறையான பயிற்சி ஆட்டம் இருக்க வேண்டும். அப்போது தான் விளையாட முடியும்.

    இவ்வாறு கோலி கூறினார்.
    வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ரோகித் சர்மாவுக்கு ஓய்வு கொடுக்கப்படவில்லை.
    இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையில் டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற இருக்கிறது.

    டி20 கிரிக்கெட் தொடர் டிசம்பர் 6-ந்தேதியில் இருந்து டிசம்பர் 11-ந்தேதி வரை நடக்கிறது. ஒருநாள் கிரிக்கெட் தொடர் டிசம்பர் 15-ந்தேதியில் இருந்து டிசம்பர் 22-ந்தேதி வரை நடக்கிறது.

    இதற்கான இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டது. துணைக் கேப்டன் ரோகித் சர்மாவுக்கு ஓய்வு கொடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவர் அணியில் இடம் பிடித்துள்ளார்.

    காயத்தால் விளையாடாமல் இருந்து புவனேஷ்வர் குமார் ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் கிரிக்கெட் தொடருக்கான அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

    முகமது ஷமி டி20 கிரிக்கெட் தொடருக்கான அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். வங்காளதேச தொடருக்கான அணியில் சேர்க்கப்பட்டிருந்த சஞ்சு சாம்சன் நீக்கப்பட்டுள்ளார். அதேபோல் குருணால் பாண்டியா நீக்கப்பட்டுள்ளார்.

    சஞ்சு சாம்சன்

    வேகப்பந்து வீச்சு ஆல்-ரவுண்டர் ஷிவம் டுபே இரண்டு தொடர்களுக்கான அணியில் இடம் பிடித்துள்ளார்.

    டி20 தொடருக்கான இந்திய அணியில் இடம் பிடித்துள்ள வீரர்கள் விவரம்:-

    1. விராட் கோலி, 2. ரோகித் சர்மா, 3. ஷிகர் தவான், 4. கே.எல். ராகுல், 5. ஷ்ரேயாஸ் அய்யர், 6. மணிஷ் பாண்டே, 7. ரிஷப் பந்த், 8. ஷிவம் டுபே, 9. வாஷிங்டன் சுந்தர், 10. ஜடேஜா, 11. சாஹல், 12. குல்தீப் யாதவ், 13. தீபக் சாஹர், 14. முகமது ஷமி, 15. புவனேஷ்வர் குமார்.

    ஷிவம் டுபே

    ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில் இடம் பிடித்துள்ள வீரர்கள் விவரம்:-

    1. விராட் கோலி, 2. ரோகித் சர்மா, 3. ஷிகர் தவான், 4. கே.எல். ராகுல், 5. ஷ்ரேயாஸ் அய்யர், 6. மணிஷ் பாண்டே, 7. ரிஷப் பந்த் (விக்கெட் கீப்பர்), 8. ஷிவம் டுபே, 9. கேதர் ஜாதவ், 10. ஜடேஜா, 11. சாஹல், 12. குல்தீப் யாதவ், 13. தீபக் சாஹர், 14. முகமது ஷமி, 15. புவனேஷ்வர் குமார்.
    சகாரா பாலைவனம் என்றாலும், ஐஸ்லாந்து பனி என்றாலும் இந்திய அணியால் வெற்றி பெற முடியும் என கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.
    இந்தியா - வங்காளதேசம் அணிகளுக்கு இடையிலான பகல்-இரவு டெஸ்ட் போட்டி கொல்கத்தா ஈடன் கார்டனில் நாளை தொடங்குகிறது. இந்தியா மற்றும் வங்காள தேசம் ஆகிய இரண்டு அணிகளுக்கும் பிங்க்-பால் மேட்ச் புதிது.

    இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, துணைக் கேப்டன் ரகானே மற்றும் சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் ஆகியோருக்கு பிங்க்-பாலில் விளையாடிய அனுபவம் கிடையாது. என்றாலும் தீவிரமாக பயிற்சி மேற்கொண்டனர்.

    அனுபவம் இல்லாத நிலையில் இந்திய அணி எப்படி விளையாடும் என்ற பார்வையும் உள்ளது. இந்நிலையில் இந்திய அணி எந்த சூழ்நிலையிலும் சிறப்பாக விளையாடும் என்ற கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து கவாஸ்கர் கூறுகையில் ‘‘இது மிகவும் சிறப்பு வாய்ந்த இந்திய அணி. ஐஸ்லாந்தில் உள்ள பனியில் விளையாடினாலும், சாகாரா பாலைவனத்தில் உள்ள மணலில் விளையாடினாலும் அவர்களால் வெற்றிக்கான வழிகளை தேட முடியும். இதனால் இதற்கு முன் பிங்க்-பாலில் விளையாடினார்களா? அல்லது இல்லையா? என்பது ஒரு விஷயமே அல்ல.

    பிங்க்-பால் டெஸ்ட் கிரிக்கெட்டை ரெட்-பால் டெஸ்டில் இருந்து தனிப்பட்ட முறையில் பாரமரிக்க வேண்டும். லிமிடெட் ஓவர்ஸ் கிரிக்கெட் ரெட் பால் கிரிக்கெட்டில் இருந்து எப்படி மாறுபட்டது என்பதற்கான புள்ளி விவரங்கள் இருக்கிறதோ, அதேபோன்று அல்லது வருங்கால சந்ததியினர் தெரிந்து கொள்ளும் வகையில் குறிப்பிட்ட வரையறையை உருவாக்க வேண்டும்’’ என்றார்.
    கண்ணீர் சிந்தி பிறர் முன் அழுவது அவமானத்துக்குரிய ஒன்றல்ல. உங்களை வலிமைமிக்கவராக மாற்றும் ஒன்றை ஏன் ஒளித்துவைக்க வேண்டும்? ரசிகர்களுக்கு சச்சின் தெண்டுல்கர் கடிதம் எழுதி உள்ளார்.
    புதுடெல்லி:

    கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கர் எழுதி உள்ள கடித்ததில் கூறி இருப்பதாவது:-

    விரைவில் நீங்கள் தந்தையாக, கணவனாகக் கூடும். அண்ணனாக, தோழனாக, வழிகாட்டியாக, ஆசிரியராக இருப்பீர்கள். முன்மாதிரியாக வாழ்ந்து காட்டப் போகும் நீங்கள் தைரியமிக்கவராக, உறுதி உடையவராக, வீரமும், வலிகளைத் தாங்கும் வல்லமை உள்ளவராக உருவெடுக்க உள்ளீர்கள். நீங்கள் அச்சம், சந்தேகங்களை எதிர்கொள்ள நேரிடும். பெரும் துயரங்களை அனுபவிப்பீர்கள்.

    நீங்கள் நிச்சயமாகச் சில வேளைகளில் தோற்றுப்போவீர்கள். உடைந்து அழுது விட வேண்டும் எனத்தோன்றும். எல்லாவற்றையும் கொட்டித்தீர்த்து விடலாம் எனத்துடிப்பீர்கள்.

    ஆனால், கண்டிப்பாகக் கண்ணீரை கட்டுப்படுத்திக் கொண்டு உறுதிமிக்கவராக நடிப்பீர்கள். ஏனெனில், அதைத்தான் ஆண்கள் செய்ய வேண்டும். ஆண் பிள்ளைகள் அழக்கூடாது என்று சொல்லி சொல்லியே வளர்க்கப்பட்டிருக்கிறோம்.

    ஆண்மகன் அழுதால் பலமிழந்து விடுவான் என நம்ப வைக்கப்படுகிறோம். நானும் இதை நம்பி வளர்ந்தேன். அத்தகைய நம்பிக்கை தவறென நான் உணர்ந்து கொண்டதாலே உனக்கு இம்மடலை எழுதுகிறேன். என் போராட்டங்கள், வலிகள்தான் நீங்கள் அறிந்த சச்சினை உருவாக்கின. அவையே என்னைச் செதுக்கின.

    16-11-2013. நான் ஆடுகளத்தில் நின்ற அந்நாளை இன்னமும் மறக்கவில்லை. அதைக்குறித்து நீண்ட காலமாக யோசித்துக் கொண்டிருந்தேன் என்றாலும் எதுவும் பெவிலியன் நோக்கி கடைசியாக நடைபோடும் அக்கணத்திற்கு என்னை எதுவும் தயார்படுத்தவில்லை. ஒவ்வொரு அடியை எடுத்து வைக்கும்போதும் நான் மூழ்கிக்கொண்டிருந்தேன். தொண்டையை அடைத்துக் கொண்டு வந்தது.

    எல்லாம் முடியப்போகிறது எனும் அச்சவுணர்வு சூழ்ந்தது. மண்டையில் என்னென்னவோ ஓடிக்கொண்டிருந்தன. எதையும் உள்ளேயே அடக்கி வைத்துக்கொள்ள இயலவில்லை. நான் அதைத்தடுக்கத் துளியும் போராடவில்லை.

    உலகத்தின் முன் உடைந்து அழுதேன். ஆச்சரியப்படும்வகையில், ஒரு வகையான அமைதியை உணர்ந்தேன். அப்படி என்னை வெளிக்காட்டியதால் இன்னமும் வலிமை கூடியவனாக, எனக்குக் கிடைத்தவற்றுக்கெல்லாம் நன்றியுடையவனாக உணர்ந்தேன். நான் போதுமான அளவு ஆணாக உணர்ந்தேன்.

    கண்ணீர் சிந்தி பிறர் முன் அழுவது அவமானத்துக்குரிய ஒன்றல்ல. உங்களை வலிமைமிக்கவராக மாற்றும் ஒன்றை ஏன் ஒளித்துவைக்க வேண்டும்? ஏன் கசிந்தொழுகும் கண்ணீரை மறைக்க முயல்கிறீர்கள்.

    உங்களின் வலியை, நீங்கள் காயப்பட்டிருப்பதை வெளிக்காட்ட அதீத தைரியம் வேண்டும். அன்றைய காலையைப் போல நீங்களும் தீரமிக்கவராக, மேம்பட்டவராக வெளிப்படுவீர்கள்.

    ஆண்கள் இவற்றைச் செய்யலாம், செய்யக்கூடாது என விதிக்கப்பட்டிருப்பவற்றை, நம்புபவற்றைக் கடந்து வாருங்கள் என உங்களை அழைக்கிறேன். நீங்கள் யாராக இருந்தாலும், எங்கிருந்தாலும் இத்தகைய அச்சமின்மை உங்களுக்கு வாய்க்கட்டும் என வாழ்த்துகிறேன் என கூறி உள்ளார்.
    கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறும் போட்டியின்போது வேகப்பந்து வீச்சாளர்களை வித்தியாசமாக பயன்படுத்த வேண்டும் என கவுதம் கம்பிர் தெரிவித்துள்ளார்.
    இந்தியா - வங்காளதேசம் அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடக்கிறது. முதன்முதலாக இரு அணிகளும் பிங்க்-பாலில் விளையாடுகின்றன.

    ‘பிங்க்-பால்’ பேட்டிங் செய்ய சாதகமாக இருக்கும். சுழற்பந்து வீச்சார்களுக்கு சவாலாக இருக்கும். பனிப்பொழிவு முக்கிய பங்கு வகிக்கும் என்று கூறப்படுகிறது.

    இந்நிலையில் கவுதம் காம்பிர் பிங்க்-பால் டெஸ்ட் குறித்து கூறுகையில் ‘‘பிங்க்-பால் எப்படி செயலாற்றுகிறது என்பதை காண ஆவலாக இருக்கிறேன். ஏனென்றால் நான் கூக்கபுர்ரா பந்தில் விளையாடிள்ளேன். அது முற்றிலும் வித்தியாசமானது. ஒரு விஷயம், ஒளி வெளிச்சத்தின் கீழ் விளையாடும்போது ரிஸ்ட் ஸ்பின்னரை எதிர்கொள்வது கடினமான என்பதை நான் உணர்ந்தேன்.

    மற்றொரு விஷயம் கேப்டன்கள் வேகப்பந்து வீச்சாளர்களை வித்தியாசமாக கையாள வேண்டியது தேவை. ரெட்-பாலில் அவர்களை காலையில் முன்னதாகவே வேகப்பந்து வீச்சாளர்களை பயன்படுத்துவார்கள். ஆனால், டே-நைட் போட்டிகளில் பொதுவாக அவர்களை ஒளி வெளிச்சத்தின்போது பயன்படுத்துவது சிறந்ததாக இருக்கும்’’ என்றார்.
    பள்ளிகளுக்கு இடையிலான போட்டியில் எதிர் அணி 7 ரன்களில் ஆல் அவுட் ஆகியதால் விவேகானந்தா பள்ளி 754 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
    மும்பை

    ஹாரிஸ் ஷீல்டுக்கான பள்ளிகளுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டி மும்பையில் நடந்து வருகிறது. இதில் ஒரு போட்டியில் சுவாமி விவேகானந்தா இண்டர்நேஷனல் பள்ளியும், குழந்தைகள் நலப் பள்ளியும் ஆசாத் மைதானத்தில் மோதின. இதில் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்த சுவாமி விவேகானந்தா பள்ளி 39 ஓவர்களில் நான்கு விக்கெட் இழப்பிற்கு 761 ரன்கள் எடுத்திருந்தது.

    அதிகபட்சமாக மீட் மாயேகர் என்ற மாணவர் அவுட் இல்லாமல் 134 பந்துகளுக்கு 338 ரன்கள் ( 56X4 7X6) எடுத்து இருந்தார்.கிருஷ்ணா பார்ட்டே 95 , இஷான் ராய் 67 ரன்களும் எடுத்து இருந்தனர். இந்த அணியின் சிறந்த வீரர்கள் மும்பை 16 வயதுக்குட்பட்ட அணி முகாமில் இருப்பதால் இந்த ரன்களை குவிக்க முடிந்தது. இந்த பள்ளியின் பழைய மாணவர்களில் இந்தியாவின் சிறந்த பேட்ஸ்மேன் ரோஹித் சர்மாவும் ஒருவர் ஆவார் என்பது குறிப்பிடத்தக்கது.

    சுவாமி விவேகானந்தா பள்ளி ஸ்கோர் விபரம்


    அடுத்து விளையாடிய குழந்தைகள் நலபள்ளி 7 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இந்த ரன்களும் 6 ஓய்டு மற்றும் ஒரு பை எக்ஸ்ட்ரா மூலம் கிடைத்தது ஆகும். பேட்டால் இந்த அணி பந்தை தொடக்கூட இல்லை. இதனால் விவேகானந்தா பள்ளி அணி 754 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. விவேகானந்தா பள்ளியின் அலோக் பால் 3 ஓவர்கள் வீசி 6 விக்கெட்டுளை எடுத்தார். விரோத் வசி 3 ஓவர்கள் வீசி 2 விக்கெட்டுகள் எடுத்தார். மற்றும் 2 ரன் அவுட்டுகள்.

    குழந்தைகள் நலப் பள்ளியின் ஸ்கோர் விபரம்


    சுருக்கமான ஸ்கோர்: 39 ஓவர்களில் விவேகானந்தா பள்ளி 761/4 (மாயேகர் 338 ஆட்டமிழக்காமல், கிருஷ்ணா பார்ட்டே 95, இஷான் ராய் 67) குழந்தைகள் நல பள்ளி 7 (அலோக் பால் 6/3, வரோட் வேஸ் 2/3) ஐ 754 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தினார்.
    அபுதாபியில் நடைபெற்ற டி10 போட்டியில் மழை குறுக்கிட்டதால் டக்வொர்த் லீவிஸ் விதியை கடைபிடிக்க முடியாததால் போட்டி கைவிடப்பட்டுள்ளது.
    கிரிக்கெட் போட்டி மழை, ஆடுகளம் மோசம், மைதானம் பீல்டிங் செய்வதற்கு உகந்ததாக இல்லை, மின்கம்பம் பழுது போன்ற காரணங்களால் பாதியில் கைவிடப்பட்டுள்ளதை அறிந்திருப்போம்.

    டக்வொர்த் லீவிஸ் விதிப்படி வரையறுக்கப்பட்ட ரன்கள் விகித விவரம் கிடைக்காததால் போட்டி கைவிடப்பட்டதை அறிந்திருக்கிறீர்களா?... ஆம்... அபுதாபியில் நடைபெற்ற டி10 போட்டியில் நடந்துள்ளது.

    நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் டெக்கான் கிளாடியேட்டர்ஸ் - டீம் அபு தாபி அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த டீம் அபு தாபி 10 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 118 ரன்கள் குவித்தது. பின்னர் 118 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் டெக்கான் கிளாடியேட்டர்ஸ் களம் இறங்கியது.

    அந்த அணி 2.2 ஓவரில் 1 விக்கெட் இழப்பிற்கு 25 ரன்கள் எடுத்திருந்தது. அப்போது மழை குறுக்கிட்டது. தொடர்ந்து மழை பெய்ததால் டக்வொர்த் லீவிஸ் விதிப்படி முடிவை அறிவிக்க போட்டி நடுவர் முடிவு செய்தார்.

    அந்த விதிப்படி ஒவ்வொரு ஓவருக்கும் எவ்வளவு ரன்கள் அடிக்க வேண்டும் என கண்க்கிட்டு இரு அணி வீரர்களுக்கும் பிரிண்ட் அவுட் எடுத்து கொடுக்கப்படும். அந்த போட்டிக்கான அந்த பிரிண்ட் எடுத்துக் கொள்ள முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் போட்டி வெற்றித் தோல்வியின்றி கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
    சையத் முஷ்டாக் அலி டிராபி சூப்பர் லீக்கில் மகாராஷ்டிராவை 90 ரன்னில் சுருட்டி டெல்லி 77 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
    இந்தியாவில் நடைபெறும் முக்கியமான டி20 கிரிக்கெட் தொடரான சையத் முஷ்டாக் அலி டிராபி தொடர் நடைபெற்று வருகிறது.

    லீக் ஆட்டங்கள் முடிவில் தமிழ்நாடு, கர்நாடகா உள்பட 10 அணிகள் சூப்பர் லீக் சுற்றுக்கு முன்னேறின. 10 அணிகளும் ‘ஏ’, ‘பி’ என இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு குரூப்பிலும் உள்ள அணிகள் அந்த குரூப்பில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். ஒவ்வொரு குரூப்பிலும் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும்.

    ஏ’ பிரிவில் இடம் பிடித்துள்ள டெல்லி - மகாராஷ்டிரா அணிகள் சூரத்தில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் மோதின. டாஸ் வென்ற மகாராஷ்டிரா பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி டெல்லி அணியின் தவான், தலால் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். தவான் 22 பந்தில் 24 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தனர்.

    தலால் 13 பந்தில் 16 ரன்கள் சேர்த்தார். கேப்டன் ஷோரே 37 பந்தில் 48 ரன்களும், ஹிம்மத் சிங் 16 பந்தில் 32 ரன்களும் அடிக்க டெல்லி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 167 ரன்கள் குவித்தது.

    பின்னர் 168 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் மகாராஷ்டிரா களம் இறங்கியது. தொடக்க வீரர் கெய்க்வாட் சிறப்பாக விளையாடி 32 பந்தில் 42 ரன்கள் அடித்தார். மற்ற வீரர்கள் ஒற்றையிலக்க ரன்னில் வெளியேற மகாராஷ்டிரா 90 ரன்னில் சுருண்டது. இதனால் டெல்லி 77 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
    ×