search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    போட்டிக்கான டாஸ் சுண்டப்பட்ட காட்சி.
    X
    போட்டிக்கான டாஸ் சுண்டப்பட்ட காட்சி.

    இந்தியாவின் முதல் பகல்-இரவு டெஸ்ட் கிரிக்கெட் தொடங்கியது: வங்காளதேச அணி பேட்டிங் தேர்வு

    இந்தியா - வங்காளதேச அணிகள் மோதும் 2வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கொல்கத்தாவில் இன்று தொடங்கியது. இதன்மூலம் இந்திய அணி முதல் முறையாக பகல்-இரவு டெஸ்ட் போட்டியில் விளையாடுகிறது.
    கொல்கத்தா:

    இந்தியா வங்காளதேச கிரிக்கெட் அணிகளுக்கிடையிலான 2வது டெஸ்ட் போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் இன்று மதியம் தொடங்கியது. இந்திய கிரிக்கெட் வரலாற்றில் முதல் முறையாக, சர்வதேச டெஸ்ட் போட்டி பகல் இரவு போட்டியாக நடத்தப்படுகிறது. அத்துடன் பிங்க் நிற பந்து முதல் முறையாக பயன்படுத்தப்படுகிறது. 

    இப்போட்டிக்கான டாஸ் சுண்டப்பட்டதில், வங்காளதேச அணி கேப்டன் வெற்றி பெற்று பேட்டிங்கை தேர்வு செய்தார். இதன்மூலம், பிங்க் நிற பந்தை முதலில் இந்திய அணி வீசுகிறது. வங்காளதேச பிரதமர் ஷேக் ஹசினா, மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி ஆகியோர் மைதானத்திற்கு வந்து வீரர்களை வாழ்த்தி, போட்டியை தொடங்கி வைத்தனர். 

    போட்டியை தொடங்கி வைத்த ஷேக் ஹசினா, மம்தா பானர்ஜி

    வங்காளதேச அணியில் 2 மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அல் அமின், நயீம் ஆகியோர் அணிக்கு அழைக்கப்பட்டுள்ளனர். தாய்ஜூல், மெகிடி ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர். இந்திய அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.

    இந்திய அணி: மயங்க் அகர்வால், ரோகித் சர்மா, புஜாரா, விராட் கோலி,  ரகானே, ரவீந்திர ஜடேஜா, அஷ்வின், சகா, இஷாந்த் சர்மா, உமேஷ் யாதவ், முகமது ஷமி.

    வங்காளதேச அணி: ஷத்மான் இஸ்லாம், இம்ரல் கயீஸ், மொமினுல் ஹக், முகமது மிதுன், முஷ்பிகுர் ரகிம், மஹ்முதுல்லா, லித்தன் தாஸ், நயீம் ஹசன், அபு ஜாயேத், அல்அமின் ஹூசைன், எபாதத் ஹூசைன்.
    Next Story
    ×