என் மலர்
விளையாட்டு
சையத் முஷ்டாக் அலி டிராபி சூப்பர் லீக்கில் மகாராஷ்டிராவை 90 ரன்னில் சுருட்டி டெல்லி 77 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்தியாவில் நடைபெறும் முக்கியமான டி20 கிரிக்கெட் தொடரான சையத் முஷ்டாக் அலி டிராபி தொடர் நடைபெற்று வருகிறது.
லீக் ஆட்டங்கள் முடிவில் தமிழ்நாடு, கர்நாடகா உள்பட 10 அணிகள் சூப்பர் லீக் சுற்றுக்கு முன்னேறின. 10 அணிகளும் ‘ஏ’, ‘பி’ என இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு குரூப்பிலும் உள்ள அணிகள் அந்த குரூப்பில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். ஒவ்வொரு குரூப்பிலும் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும்.
ஏ’ பிரிவில் இடம் பிடித்துள்ள டெல்லி - மகாராஷ்டிரா அணிகள் சூரத்தில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் மோதின. டாஸ் வென்ற மகாராஷ்டிரா பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி டெல்லி அணியின் தவான், தலால் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். தவான் 22 பந்தில் 24 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தனர்.
தலால் 13 பந்தில் 16 ரன்கள் சேர்த்தார். கேப்டன் ஷோரே 37 பந்தில் 48 ரன்களும், ஹிம்மத் சிங் 16 பந்தில் 32 ரன்களும் அடிக்க டெல்லி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 167 ரன்கள் குவித்தது.
பின்னர் 168 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் மகாராஷ்டிரா களம் இறங்கியது. தொடக்க வீரர் கெய்க்வாட் சிறப்பாக விளையாடி 32 பந்தில் 42 ரன்கள் அடித்தார். மற்ற வீரர்கள் ஒற்றையிலக்க ரன்னில் வெளியேற மகாராஷ்டிரா 90 ரன்னில் சுருண்டது. இதனால் டெல்லி 77 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

வரலாற்று சிறப்புமிக்க பகல்-இரவு டெஸ்ட் போட்டியை வங்காளதேச பிரதமர் ஷேக்ஹசினா, மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி தொடங்கி வைக்கின்றனர்.
வரலாற்று சிறப்புமிக்க பகல்-இரவு டெஸ்ட் போட்டியை வங்காளதேச பிரதமர் ஷேக்ஹசினா, மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி ஆகியோர் மணி அடித்து தொடங்கி வைக்கிறார்கள்.

இதேபோல மற்ற பிரபல விளையாட்டு வீரர்களான பி.வி.சிந்து, விஸ்வநாதன் ஆனந்த், சானியா மிர்சா ஆகியோரும் கலந்து கொள்கிறார்கள். அவர்களை பி.சி.சி.ஐ தலைவரும், முன்னாள் கேப்டனுமான கங்குலி கவுரவப்படுத்துகிறார். தொடக்க விழாவின் போது இசை நிகழ்ச்சியும் நடக்கிறது.
இந்த டெஸ்ட் போட்டியை காண முன்னாள் பிரபல வீரர்கள் கபில்தேவ், தெண்டுல்கர், டிராவிட், கும்ப்ளே உள்ளிட்ட வீரர்கள் வருகிறார்கள்.

இதேபோல மற்ற பிரபல விளையாட்டு வீரர்களான பி.வி.சிந்து, விஸ்வநாதன் ஆனந்த், சானியா மிர்சா ஆகியோரும் கலந்து கொள்கிறார்கள். அவர்களை பி.சி.சி.ஐ தலைவரும், முன்னாள் கேப்டனுமான கங்குலி கவுரவப்படுத்துகிறார். தொடக்க விழாவின் போது இசை நிகழ்ச்சியும் நடக்கிறது.
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான ஐந்தாவது டி20 கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்ற இந்திய பெண்கள் அணி தொடரை 5-0 எனக் கைப்பற்றியது.
இந்திய பெண்கள் அணி வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப் பயணம் செய்து விளையாடியது. ஒருநாள் கிரிக்கெட் தொடரை இந்தியா கைப்பற்றிய நிலையில், ஐந்து போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடர் தற்போது நடைபெற்றது.
முதல் நான்கு போட்டிகளிலும் இந்திய பெண்கள் அணி வெற்றி பெற்றிருந்தது. இந்நிலையில் 5-வது மற்றும் கடைசி டி20 கிரிக்கெட் உள்ளூர் நேரப்படி நேற்று இரவு நடைபெற்றது.
பிரோவிடென்சில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் இந்தியா டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது. தொடக்க வீராங்கனைகளான ஷஃபாலி வர்மா 9 ரன்னிலும், ஸ்மிரிதி மந்தனா 7 ரன்னிலும் வெளியேறினர்.
அதன்பின் வந்த ஜேம்ஸ் ரோட்ரிக்ஸ் (50), வேதா கிருஷ்ணமூர்த்தி 57 ரன்களும் அடிக்க இந்திய பெண்கள் அணி 3 விக்கெட் இழப்பிற்கு 134 ரன்கள் சேர்த்தது.
பின்னர் 135 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் வீராங்கனைகள் களம் இறங்கினர். தொடக்க வீராங்கனை நைட் (22), விக்கெட் கீப்பர் கேம்ப்பெல் (19) மட்டுமே இரட்டை இலக்க ரன்களை எட்ட, 7 விக்கெட் இழப்பிற்கு 73 ரன்கள் மட்டுமே வெஸ்ட் இண்டீஸ் அணியால் அடிக்க முடிந்தது.
இதனால் இந்திய பெண்கள் அணி 61 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் வெஸ்ட் இண்டீஸை 5-0 என ஒயிட்வாஷ் செய்துள்ளது. சுஷ்மா வர்மா தொடர் நாயகி விருதையும், வேதா கிருஷ்ணமூர்த்தி ஆட்ட நாயகி விருதையும் பெற்றனர்.

பிரிஸ்பேன் டெஸ்டில் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்து பாகிஸ்தான், முதல் இன்னிங்சில் 240 ரன்களில் சுருண்டது.
- பாபர் அசாம், ஹாரிஸ் சோஹல் 1 ரன்னில் அவுட்
- ஆசாத் ஷபிக் அரைசதம்
- மிட்செல் ஸ்டார்க் 4 விக்கெட்
ஆஸ்திரேலியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் பிரிஸ்பேனில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற பாகிஸ்தான் பேட்டிங் தேர்வு செய்தது. பாகிஸ்தான் அணியில் 16 வயதே ஆன இளம் வேகப்பந்து வீச்சாளர் நசீம் ஷா அறிமுகம் ஆனார்.
அந்த அணியின் ஷான் மசூத், அசார் அலி ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். இருவரும் பொறுமையாக விளையாடினர். ஸ்டார்க், ஹசில்வுட், பேட் கம்மின்ஸ் வேகப்பந்து வீச்சை தாக்குப்பிடித்து சிறப்பாக விளையாடினர். இதனால் பாகிஸ்தான் முதல்நாள் உணவு இடைவேளை வரை விக்கெட் இழப்பின்றி 57 ரன்கள் எடுத்திருந்தது.
அந்த அணியில் ஆசாத் ஷபிக், பாபர் அசாம் போன்றோர் உள்ளதால் அதிக அளவில் ரன்கள் குவிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் உணவு இடைவேளை முடிந்து ஆட்டம் தொடங்கியதும் ஆஸ்திரேலியா பந்து வீச்சாளர்கள் ஆதிக்கம் செலுத்தினர்.

அசார் அலி 39 ரன்கள் எடுத்த நிலையிலும், ஷான் மசூத் 27 ரன்கள் எடுத்த நிலையிலும் ஆட்டமிழந்தனர். அதன்பின் வந்த ஹாரிஸ் சோஹைல், பாபர் அசாம் தலா ஒரு ரன்னில் ஆட்டமிழந்ததால் 78 ரன்னுக்குள் நான்கு விக்கெட்டுக்களை இழந்து தத்தளித்தது.
ஆஸ்திரேலியாவின் பந்து வீச்சை தாக்குப்பிடித்து ஆசாத் ஷபிக் அரைசதம் அடிக்க பாகிஸ்தான் ஸ்கோர் 200 ரன்னை தாண்டியது. ஷபிக் 76 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.

இஃப்திகார் அகமது 37 ரன்களும், யாசிர் ஷா 26 ரன்களும் அடித்தனர். மிட்செல் ஸ்டார்க் கடைநிலை வீரர்களை வீழ்த்த பாகிஸ்தான் 86.2 ஓவரில் 240 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது. அத்துடன் முதல்நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது. ஆஸ்திரேலிய அணி சார்பில் மிட்செல் ஸ்டார்க் நான்கு விக்கெட்டுக்களும், பேட் கம்மின்ஸ் இரண்டு விக்கெட்டுக்களும் வீழ்த்தினர்.
டாஸ் வென்று முதலில் பேட்டிங் தேர்வு செய்து 75 ரன்கள் வரை விக்கெட் இழக்காமல் இருந்து, அதன்பின் பேட்ஸ்மேன்கள் சொதப்பியது பாகிஸ்தானுக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.
பகல்-இரவு டெஸ்ட் போட்டி தொடங்கி 4 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய அணி தற்போது இதில் விளையாடுகிறது. இந்த வரலாற்று பெருமைக்கு கங்குலிதான் முக்கிய காரணமாகும்.
பகல்-இரவு டெஸ்ட் 2015-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டாலும் 4 ஆண்டுகளுக்கு பிறகுதான் இந்திய அணி தற்போது அதில் விளையாடுகிறது. இந்த வரலாற்று பெருமைக்கு எல்லாம் கங்குலிதான் காரணம்.
பகல்-இரவு டெஸ்டில் விளையாடுவதிலும், அந்த போட்டியை நடத்துவதிலும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பி.சி.சி.ஐ) விருப்பம் இல்லாமலேயே இருந்தது. முன்னாள் கேப்டனான கங்குலி கடந்த 1 மாதத்துக்கு முன்புதான் பி.சி.சி.ஐ.யின் புதிய தலைவராக பொறுப்பேற்றார். அவரது தீவிர முயற்சியால் இந்தியாவில் முதல் முறையாக பகல்-இரவு டெஸ்ட் நடத்தப்படுகிறது.
வங்காளதேச கிரிக்கெட் வாரியத்துடன் பேசி அந்நாட்டை இதில் விளையாட சம்மதிக்க வைத்தார். இந்திய அணி கேப்டன் விராட்கோலி 3 வினாடியில் இதை ஏற்றுக் கொண்டதாக கங்குலி தெரிவித்து இருந்தார். அவரது கிரிக்கெட் நிர்வாகத்தில் இந்த பகல்-இரவு டெஸ்ட் புதிய மைல் கல்லாகும்.
நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்டில் இங்கிலாந்து முதல் நாள் ஆட்ட முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 241 ரன்கள் சேர்த்துள்ளது.
- ஜோ பேர்ன்ஸ், டென்லி அரைசதம்
- பென் ஸ்டோக்ஸ் 67 ரன்கள் எடுத்து நாட்அவுட்
- ஜோ ரூட் 2 ரன்னில் ஏமாற்றம்
நியூசிலாந்து - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் மவுண்ட் மவுங்கானுயில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி ஜோ பேர்ன்ஸ், சிப்லே ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 50 ரன்களை கடந்தது. அணியின் ஸ்கோர் 52 ஆக இருக்கும்போது சிப்லே 22 ரன்னில் ஆட்டமிழந்தார்.

அடுத்து பேர்ன்ஸ் உடன் டென்லி ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி சிறப்பாக விளையாடியது. என்றாலும் நியூசிலாந்து பந்து வீச்சாளர்கள் கட்டுக்கோப்பாக பந்து வீசி ரன்கள் விட்டுக்கொடுக்காத வண்ணம் பார்த்துக் கொண்டனர். டென்லி 74 ரன்களும், பேர்ன்ஸ் 52 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.

அதன்பின் வந்த கேப்டன் ஜோ ரூட் 2 ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார். பென் ஸ்டோக்ஸ் சிறப்பாக விளையாடி அரைசதம் அடித்தார். இவரது ஆட்டத்தால் இங்கிலாந்து முதல் நாள் ஆட்ட முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 241 ரன்கள் அடித்துள்ளது. பென் ஸ்டோக்ஸ் 67 ரன்களுடனும், போப் 18 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.
உலகக்கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்திய வீரர் தங்கம் வென்றதையடுத்து, இந்தியா 3 தங்கப் பதக்கங்களுடன் பதக்க பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறியது.
புடியான் (சீனா):
சீனாவின் புடியான் நகரில் உலகக்கோபபை துப்பாக்கி சுடுதல் இறுதிச்சுற்று போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் இந்தியாவின் இளம் வீராங்கனை மனு பாக்கர் (வயது 17), 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில், 244.7 புள்ளிகளுடன் தங்கம் வென்று அசத்தினார். அத்துடன் ஜூனியர் பிரிவில் புதிய உலக சாதனையையும் படைத்துள்ளார். இந்த ஆண்டின் உலகக் கோப்பை போட்டியில் இந்தியாவுக்கு கிடைத்த முதல் தங்கம் இதுவாகும்.
அதன்பின்னர் தமிழக வீராங்கனை இளவேனில் வாலறிவன் (வயது 20), 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில், 250.8 புள்ளிகளுடன் தங்கம் வென்று அசத்தினார்.

இந்நிலையில் ஆண்களுக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் இந்தியாவுக்கு தங்கம் கிடைத்தது. இப்போட்டியில் இந்திய வீரர் பன்வார் திவ்யன்ஷ் சிங் (வயது 17), 250.1 புள்ளிகளுடன் தங்கப்பதக்கம் வென்றார்.
இதன்மூலம் மொத்தம் 3 தங்கப்பதக்கங்களுடன் இந்தியா, பதக்க பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறியது.
உலகக்கோப்பை துப்பாக்கி சுடுதல் இறுதிச்சுற்றில் தமிழக வீராங்கனை இளவேனில் தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.
புடியான் (சீனா):
சீனாவின் புடியான் நகரில் உலகக்கோப்பை துப்பாக்கி சுடுதல் இறுதிச்சுற்று போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் தமிழகத்தின் தங்க மங்கையான இளம் வீராங்கனை இளவேனில் வாலறிவன் (வயது 20), இன்று நடைபெற்ற 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில், 250.8 புள்ளிகளுடன் தங்கம் வென்று அசத்தினார்.
சீனியர் பிரிவில் இளவேனிலுக்கு கிடைக்கும் இரண்டாவது தங்கம் இதுவாகும். இதற்கு முன்பு கடந்த ஆகஸ்ட் மாதம் பிரேசிலில் நடந்த உலகக்கோப்பை துப்பாக்கிச்சுடுதல் போட்டியிலும் இளவேனில் தங்கம் வென்றார்.
முன்னதாக இதே சீனா உலகக்கோப்பை போட்டியில் ஹரியானாவைச் சேர்ந்த 17 வயதான மனு பாக்கர் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் (ஜூனியர்) பிரிவில் தங்கம் வென்றது குறிப்பிடத்தக்கது.
இந்தியா-வங்காளதேசம் அணிகள் மோதும் 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி பகல் இரவாக நடப்பதால் கொல்கத்தா ஈடன்கார்டன் மைதானம் புதுப்பொலிவாக காட்சியளிக்கிறது.
கொல்கத்தா:
வங்காளதேச கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது.
இரு அணிகள் இடையேயான 3 போட்டிக்கொண்ட 20 ஓவர் தொடரை இந்தியா 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.
2 டெஸ்ட் தொடரில் இந்தூரில் நடந்த முதல் போட்டியில் இந்தியா இன்னிங்ஸ் மற்றும் 130 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்தியா-வங்காளதேசம் அணிகள் மோதும் 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி கொல்கத்தா ஈடன்கார்டன் மைதானத்தில் நாளை (22-ந்தேதி) தொடங்குகிறது.
இந்த டெஸ்ட் போட்டி பகல்-இரவாக நடக்கிறது. வரலாற்றில் முதல் முறையாக இந்திய அணி பகல்-இரவு டெஸ்டில் விளையாடுகிறது. இதேபோல வங்காளதேச அணியும் முதல் முறையாக பகல்-இரவில் ஆடுகிறது.
இந்த டெஸ்ட் வரலாற்று சிறப்பை பெறுகிறது. இந்திய மண்ணில் முதல்முறையாக நடைபெறும் இந்த பகல்-இரவு டெஸ்டை நடத்தும் வாய்ப்பை பாரம்பரியமிக்க ஈடன் கார்டன் மைதானம் பெற்றுள்ளது. உள்ளூர் போட்டியான துலிப் டிராபி 2016-ல் பகல்-இரவாக நடத்தப்பட்டது.

பகல்-இரவு டெஸ்டில் இளம்சிவப்பு நிற (பிங்க்) பந்துகள் உபயோகிக்கப்படும். இந்த வகையான பந்துகள் இந்திய வீரர்களுக்கு சவாலாக இருக்கும் என்று கருதப்படுகிறது. இதற்காக வீரர்கள் கடந்த சில தினங்களாக சிறப்பு பயிற்சியில் ஈடுபட்டனர்.
ஆனால் பலவீனமான வங்காளதேசத்துக்கு எதிராக விளையாடுவதால் இந்திய அணிக்கு பகல்-இரவு டெஸ்டில் எந்தவிதத்திலும் பாதிப்பு இருக்காது. வங்காளதேசத்தை எளிதில் வீழ்த்தி தனது வெற்றி பயணத்தை நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் இந்திய அணி சமபலத்துடன் உள்ளது. பேட்டிங்கில் மயங்க் அகர்வால், ரோகித்சர்மா, கேப்டன் கோலி, புஜாரா, ரகானே ஆகியோர் நல்ல நிலையில் உள்ளனர்.
இதில் தொடக்க வீரரான அகர்வால் கடந்த டெஸ்டில் இரட்டை சதம் (243 ரன்) அடித்தார். குறுகிய போட்டிகளில் இரண்டு முறை இரட்டை சதம் அடித்த 2-வது இந்தியர் என்ற பெருமை அவர் பெற்றார்.
பந்துவீச்சில் முகமதுஷமி மிகவும் சிறப்பான நிலையில் இருக்கிறார். 2-வது இன்னிங்சில் விக்கெட்டுகளை வீழ்த்துவதில் அவர் இந்திய அணிக்கு பக்கபலமாக இருந்து வருகிறார். முதல் டெஸ்டில் 7 விக்கெட் கைப்பற்றினார்.
இதேபோல வேகப்பந்தில் உமேஷ்யாதவ், இஷாந்த்சர்மா ஆகியோரும் சிறப்பாக வீசிவருகிறார்கள். சுழற்பந்தில் அஸ்வின், ஜடேஜா தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியவர்கள்.
முதல் டெஸ்டில் 3 நாட்களில் வெற்றியை நிர்ணயித்த இந்திய வீரர்கள் பகல்-இரவு டெஸ்டிலும் அதுபோன்ற வெற்றியை பெறும் வேட்கையில் இருக்கிறார்கள்.
நாளைய போட்டிக்கான இந்திய அணியில் மாற்றம் எதுவும் செய்யப்படமாட்டாது என்று தெரிகிறது. 6 பேட்ஸ்மேன்கள், 5 பந்துவீச்சாளர்களுடன் களம் இறங்கும்.
வங்காளதேச அணி தொடரை இழக்காமல் இருக்க இந்த டெஸ்டில் வெற்றி பெற வேண்டிய நெருக்கடியில் உள்ளது. ஆனால் அந்த அணியால் இந்தியாவை அதன் சொந்த மண்ணில் வீழ்த்துவது என்பது மிகவும் சவாலான ஒன்றாகும்.
வங்காளதேசம் இதுவரை இந்தியாவுக்கு எதிராக டெஸ்டில் வெற்றி பெற்றது கிடையாது. 10 முறை விளையாடி 8-ல் தோற்றது. 2 டெஸ்ட் ‘டிரா’ ஆனது. அந்த அணியில் முஷ்பிகுர் ரகீம், மகமதுல்லா, லிட்டன் தாஸ் போன்ற சிறந்த வீரர்கள் உள்ளனர்.
நாளைய பகல்-இரவு டெஸ்ட் போட்டி மதியம் 1 மணிக்கு தொடங்குகிறது. ஸ்டார் ஸ்போர்ட்ஸ் டெலிவிஷசனில் இந்த போட்டி நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.
இந்தியா: விராட்கோலி (கேப்டன்), ரோகித்சர்மா, மயங்க் அகர்வால், புஜாரா, ரகானே, விர்த்திமான் சஹா, ஜடேஜா, அஸ்வின், உமேஷ்யாதவ், முகமதுஷமி, இஷாந்த்சர்மா, ரிஷப்பந்த், சுப்மன்ஹில், குல்தீப் யாதவ், ஹனுமன் விகாரி.
வங்காளதேசம்: மொமினுல் ஹக் (கேப்டன்), இம்ருல் கய்ஸ், ஷாத்மேன் இஸ்லாம், முகமது மிதுன், முஷ்பிகுர் ரகீம், மகமதுல்லா, லிட்டன் தாஸ், மெகிதி ஹசன், அபுஜெயத், எபாதத் உசேன், அல்-அமின் உசேன், முஷ்டாபிசுர் ரகுமான், மொஸ்தக் உசேன், நயீம் ஹசன், சயீப் ஹசன், தஜில் இஸ்லாம்.

விராட்கோலி தலைமையிலான இந்திய அணி இந்த டெஸ்டிலும் வென்று தொடரை 2-0 என்ற கணக்கில் வெல்லும் ஆர்வத்தில் உள்ளது.

பாகிஸ்தானைச் சேர்ந்த நசீம் ஷா என்ற 16 வயது இளம் வேகப்பந்து வீச்சாளர் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அறிமுகமாகி உள்ளார்.
பிரிஸ்பேன்:
பாகிஸ்தான் கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கிடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி, பிரிஸ்பேனில் நடைபெற்று வருகிறது. இதில் பாகிஸ்தான் அணியின் அறிமுக வீரராக, 16 வயதே ஆன நசீம் ஷா களமிறங்கி உள்ளார். இவர் மணிக்கு 145 கிமீ வேகத்தில் பந்து வீசக்கூடியவர்.
டெஸ்ட் போட்டியில் அறிமுகமான அவருக்கு டெஸ்ட் போட்டிக்கான தொப்பியை பயிற்சியாளர் வாக்கார் யூனுஸ் அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.
டெஸ்ட் போட்டி தொடங்குவதற்கு முன்னதாக, கடந்த வாரம் ஆஸ்திரேலியாவில் நசீம் ஷா பயிற்சி ஆட்டத்தில் ஆடிக்கொண்டிருந்தபோது, அவரது தாயார் உடல்நலக்குறைவு காரணமாக இறந்துபோனார். ஆனால், இறுதிச்சடங்கிற்கு செல்லாமல் தாயார் ஆசைப்பட்டபடி தொடர்ந்து பயிற்சி ஆட்டத்தில் நசீம் விளையாடினார்.

மிக இளம் வயதில் டெஸ்ட் போட்டிகளில் அறிமுகமான வீரர்களில் நசீம் ஷாவும் ஒருவர். ஒருசில வீரர்கள் மட்டுமே 16 வயதில் அறிமுகமாகி உள்ளனர். இந்தியாவின் சச்சின் டெண்டுல்கர் 16 வயதில் டெஸ்ட் போட்டியில் அறிமுகமாகி, பின்னாளில் உலகமே உற்றுநோக்கும் கிரிக்கெட் ஜாம்பவானாக உருவெடுத்தார். பாகிஸ்தானைச் சேர்ந்த ஹசன் ரசா, தனது 14வது வயதில் டெஸ்ட் போட்டியில் அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது.
முகமது ஷமி எந்த ஆடுகளத்திலும் அபாயகரமான பவுலராக உருவெடுக்கக்கூடியவர் என்றும் எந்த நிற பந்திலும் மிரட்டக்கூடியவர் என்றும் விக்கெட் கீப்பர் விருத்திமான் சஹா கூறினார்.
வங்காளதேசத்துக்கு எதிரான பகல்-இரவு டெஸ்ட் போட்டியையொட்டி இந்திய அணியின் விக்கெட் கீப்பர் விருத்திமான் சஹா பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
எங்களது வேகப்பந்து வீச்சாளர்கள் முகமது ஷமி, இஷாந்த் ஷர்மா, உமேஷ் யாதவ் ஆகியோர் தற்போது இருக்கும் பார்மில் பிங்க் பந்து என்ன எந்த பந்திலும் தாக்கத்தை ஏற்படுத்துவார்கள். குறிப்பாக முகமது ஷமி எந்த ஆடுகளத்திலும் அபாயகரமான பவுலராக உருவெடுக்கக்கூடியவர். அவரது வேகமும், பந்தை ரிவர்ஸ்விங் செய்யும் திறமையுமே அதற்கு சான்று. களத்தில் பிங்க் பந்தின் நகரும் தன்மை எப்படி இருக்கும் என்பதை இன்னும் நாங்கள் பார்க்கவில்லை. ஆனால் எங்களது பவுலர்களின் உத்வேகம், ஆட்டத்திறனுக்கு முன் பந்தின் நிறம் ஒரு பிரச்சினையே இல்லை. வெளிச்சம் மங்கும் நேரத்தில் பேட்ஸ்மேன்கள் பந்தை எதிர்கொள்வது கொஞ்சம் கடினமாக இருக்கும். இது வேகப்பந்து வீச்சாளர்களுக்கு உதவிகரமாக அமையும். எது எப்படி என்றாலும் இந்த டெஸ்ட் பேட்ஸ்மேன்களுக்கு சவாலாக இருக்கும். பிங்க் பந்தின் மினுமினுப்பை பார்க்கும்போது, ‘ரிவர்ஸ் ஸ்விங்’ ஆவதற்கு வாய்ப்பு குறைவு தான்.
இவ்வாறு சஹா கூறினார்.

உலகக்கோப்பை துப்பாக்கி சுடுதல் இறுதிச்சுற்றில் இந்திய வீராங்கனை மனு பாக்கர் தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.
புடியான் (சீனா):
சீனாவின் புடியான் நகரில் உலகக்கோபபை துப்பாக்கி சுடுதல் இறுதிச்சுற்று போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் இந்தியாவின் இளம் வீராங்கனை மனு பாக்கர் (வயது 17), இன்று நடைபெற்ற 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில், 244.7 புள்ளிகளுடன் தங்கம் வென்று அசத்தினார். அத்துடன் ஜூனியர் பிரிவில் புதிய உலக சாதனையையும் படைத்துள்ளார்.
இந்த ஆண்டின் உலகக் கோப்பை போட்டியில் இந்தியாவுக்கு கிடைத்த முதல் தங்கம் இதுவாகும்.

செர்பிய வீராங்கனை அருணோவிக் சோரனா வெள்ளிப்பதக்கமும், சீனாவின் வாங் கியான் வெண்கலப் பதக்கமும் வென்றனர். இறுதிச்சுற்றுக்கு தகுதி பெற்ற மற்றொரு இந்திய வீராங்கனை யாஷாஸ்வினி தேஸ்வால் 6-ம் இடத்தைப் பிடித்தார்.
இந்த ஆண்டு நடந்து முடிந்த ஜூனியர் ஒலிம்பிக் மற்றும் ஆசிய சாம்பியன்ஷிப் போட்டியிலும் மனு பாக்கர் தங்கம் வென்றது குறிப்பிடத்தக்கது.
இந்த தொடர் வெற்றிகளின் மூலம், டோக்கியோவில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்பதையும் உறுதி செய்துள்ளார் மனு பாக்கர்.