என் மலர்tooltip icon

    விளையாட்டு

    இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலிக்கு, பீட்டா அமைப்பின் சார்பில் 2019ம் ஆண்டுக்கான சிறந்த மனிதர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
    புதுடெல்லி:

    பீட்டா அமைப்பின் சார்பில் 2019-ம் ஆண்டுக்கான சிறந்த மனிதர் விருது இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலிக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அவருக்கு விரைவில் இந்த விருது வழங்கப்பட உள்ளது. 

    இதுகுறித்து பீட்டா அமைப்பு வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியுள்ளதாவது:

    விலங்குகள் மீது அதிகமான பாசமும், நேசமும் விராட் கோலி வைத்துள்ளார். சமீபத்தில் அமர் கோட்டையில் ஒரு யானையை 8 பேர் கொண்ட குழு துன்புறுத்தியதைப் பார்த்த விராட் கோலி உடனடியாக பீட்டா அமைப்பைத் தொடர்பு கொண்டு பேசினார்.

    இதுதொடர்பாக கடிதமும் எழுதி விலங்குகள் துன்புறுத்தப்படுவதைத் தடுக்கக் கோரினார். இதையடுத்து மால்டி நகர போலீசார் உதவியுடன் அந்த யானை மீட்கப்பட்டது. விலங்குகள் துன்புறுத்தல் சட்டத்தின் கீழ் தவறு செய்தவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

    அதைத்தொடர்ந்து பெங்களூருவில் சாலையில் அனாதையாகக் காயத்துடன் இருக்கும் நாய்களுக்கு வசிப்பிடம் அமைக்கக் கோலி உதவினார். மேலும், தனது ரசிகர்களுக்குக் கோரிக்கை விடுத்து, நாய்களைத் தத்தெடுத்து வளர்க்கவும் அறிவுறுத்தினார்.

    விலங்குகள் நலனின் மீது ஆர்வமாக இருக்கும் விராட் கோலிக்கு 2019-ம் ஆண்டின் சிறந்த மனிதர் விருது பீட்டா சார்பில் வழங்கப்பட உள்ளது என தெரிவித்துள்ளது.

    ஏற்கனவே, பீட்டா அமைப்பின் சார்பில் காங்கிரஸ் எம்.பி. சசி தரூர், முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி கே.எஸ்.பனிக்கர் ராதாகிருஷ்ணன், நடிகர்கள் அனுஷ்கா சர்மா, சன்னி லியோன், சோனம் கபூர், கபில் சர்மா, ஹேமமாலினி, ஆர்.மாதவன், ஜாக்குலின் பெர்னாண்டஸ் ஆகியோருக்கு விருதுகள் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
    இங்கிலாந்து பிரிமீயர் லீக் கால்பந்தில் விளையாடும் டோட்டன்ஹாம் ஹாட்ஸ்பர் அணி ஜோஸ் மவுரினோவை தலைமை பயிற்சியாளராக நியமித்துள்ளது.
    போர்ச்சுக்கல் நாட்டைச் சேர்ந்த கால்பந்து பயிற்சியாளர் ஜோஸ் மவுரினோ. இவர் மான்செஸ்டர் யுனைடெட் அணியின் தலைமை பயிற்சியாளர் பதவியில் இருந்து கடந்த ஆண்டு நீக்கப்பட்டார்.

    அதன்பின் எந்த அணியிலும் சேராமல் இருந்தார். இந்நிலையில் டோட்டன்ஹாம் ஹாட்ஸ்பர் அணி அவரை தலைமை பயிற்சியாளரான நியமித்துள்ளது. 2022-23 பிரிமீயர் லீக் சீசன் வரை அந்த அணியின் பயிற்சியாளராக செயல்படுவார்.

    மவுரினோவை தலைமை பயிற்சியாளராக நியமித்தது குறித்து டோட்டன்ஹாம் ஹாட்ஸ்பர் அணியின் உரிமையாளர் கூறுகையில் ‘‘கால்பந்து போட்டியில் ஜோஸ் மவுரினோ வெற்றிகரனமான பயிற்சியாளராக விளங்கியவர்.

    அவருக்கு சிறந்த அனுபவம் உள்ளது. அவரால் அணிக்கு உத்வேகத்தை ஏற்படுத்த முடியும். சிறந்த யுக்திகளை கொண்டவர். அவர் பணியாற்றிய ஒவ்வொரு கிளப்புகளிலும், மரியாதையை வென்றுள்ளார். வீரர்களுக்கு இடையில் எனர்ஜியை அவரால் கொண்டு வர முடியும் என நாங்கள் விரும்புகிறோம்’’ என்றார். 
    டி20 கிரிக்கெட் உலகக்கோப்பை தொடருக்குப்பின் ஓய்வு பெறுவேன் என்று தெரிவித்திருந்த மலிங்கா, தற்போது அதில் இருந்து பின்வாங்கியுள்ளார்.
    இலங்கை அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்கா. துல்லியமான யார்க்கர் பந்து வீச்சால் உலகளவில் புகழ் பெற்றார். டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடுவதற்காக 2011-ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார். 30 டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே விளையாடியிருந்தார்.

    கடந்த ஜூலை மாதம் 50 ஓவர் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார். 226 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளார்.

    அடுத்த வருடம் ஆஸ்திரேலியாவில் நடைபெற இருக்கும் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருடன் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற இருப்பதாக மலிங்கா கூறியிருந்தார்.

    தற்போது அந்த கருத்தில் இருந்து பின்வாங்கி, மேலும் இரண்டு ஆண்டுகள் விளையாட முடியும் என்று தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து மலிங்கா கூறுகையில் ‘‘டி20 கிரிக்கெட்டில் நான்கு ஓவர்கள்தான் வீச வேண்டும். என்னுடைய திறமைக் கொண்டு என்னால் டி20 கிரிக்கெட் பந்து வீச்சாளராக செயல்பட முடியும் என்று உணர்கிறேன். உலகில் உள்ள ஏராளமான டி20-களில் நான் விளையாடி உள்ளேன். இதனால் இன்னும் இரண்டு ஆண்டுகள் டி20 போட்டிகளில் விளையாட முடியும்’’ என்றார்.
    டேவிஸ் கோப்பை டென்னிஸில் ரபேல் நடால் ஆட்டத்தால் ரஷியாவை 2-1 என வீழ்த்தியது ஸ்பெயின்.
    டேவிஸ் கோப்பை டென்னிஸில் ஸ்பெயின் - ரஷியா அணிகள் மோதின. ஒரு கட்டத்தில் ஸ்பெயின் 0-1 என பின்தங்கியிருந்தது. அதன்பின் ஸ்பெயின் அணியின் நட்சத்திர வீரர் நடால் ரஷியாவைச் சேர்ந்த காச்சனோவ் 6-3, 7-6(9-7) என நடால் வெற்றி பெற்றார்.

    இரட்டையர் பிரிவில் ஸ்பெயின் அணியின் மார்சல் கிரெனோலர்ஸ் - பெலிசியானோ லோபாஸ் ஜோடி ரிஷியாவின் காச்சனோவ் - ஆண்ட்ரே ருப்லேவ் ஜோடியை எதிர்கொண்டது. இதில் ஸ்பெயின் ஜோடி 3-6, 6-3, 7-6 (7-0) என வெற்றி பெற்றது.
    கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற இருக்கும் பகல்-இரவு டெஸ்ட் போட்டிக்கான முதல் நான்கு நாட்களுக்கான டிக்கெட்டுக்கள் விற்று தீர்ந்தன.
    இந்தியா - வங்காளதேசம் அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நாளைமறுநாள் நடக்கிறது. இந்த போட்டி பகல்-இரவு ஆட்டமாக நடக்கிறது. இதில் ரெட் பந்திற்குப் பதிலாக பிங்க் பந்து பயன்படுத்தப்பட இருக்கிறது.

    முதன்முதலாக இந்திய அணி பிங்க் பந்தில் விளையாடுகிறது. வங்காளதேசம் அணி டெஸ்ட் போட்டியில் விளையாட அந்தஸ்து பெற்றபோது, முதல் போட்டியில் இந்தியாவை எதிர்த்துதான் விளையாடியது.

    தற்போது முதல் பிங்க் பால் போட்டியிலும் இந்தியாவை எதிர்த்து விளையாடுகிறது. வரலாற்று சிறப்பு வாய்ந்த இந்த போட்டியை சிறப்பாக நடத்த பிசிசிஐ மற்றும் பெங்கால் கிரிக்கெட் சங்கம் விரும்புகின்றன.

    போட்டியை வங்காளதேச பிரதமர் ஷேக் ஹசினா, பெங்கால் முதல்வர் மம்தா பானர்ஜி ஆகியோர் தொடங்கி வைக்கின்றனர்.

    சவுரவ் கங்குலி

    போட்டியின்  இடைவேளையின்போது முன்னாள் ஜாம்பவான்கள் ரசிகர்களின் முன் தோன்றி தங்களது அனுபவங்களை பகிர்ந்து கொள்ள இருக்கின்றனர்.

    கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் சுமார் 80 ஆயிரம் ரசிகர்கள் அமர்ந்து போட்டியை ரசிக்கலாம். இந்த போட்டிக்கான முதல் நான்கு நாட்களுக்கான டிக்கெட்டுக்கள் முழுவதுமாக விற்று தீர்ந்தன என்று பிசிசிஐ தலைவர் கங்குலி தெரிவித்துள்ளார்.
    தமிழகத்தைச் சேர்ந்த முன்னாள் கிரிக்கெட் வீரர் எல். சிவராம கிருஷ்ணன் இந்திய அணியின் புதிய தேர்வுக்குழு தலைவராக இருக்கிறார்.
    இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பி.சி.சி.ஐ.) சீனியர் தேர்வுக்குழு தலைவராக முன்னாள் விக்கெட் கீப்பர் எம்.எஸ்.கே. பிரசாத் உள்ளார். இவரது தலைமையிலான குழுதான் இந்திய வீரர்களை தேர்வு செய்கிறது.

    தேவங்காந்தி, ககன் கோடா, ஜதின் பரஞ்பே, சரன்தீப் சிங் ஆகிய 4 பேர் தேர்வுக்குழு உறுப்பினர்களாக உள்ளனர்.

    தேர்வுக்குழு தலைவர் எம்.எஸ்.கே. பிரசாத்தின் பதவி காலம் இந்த ஆண்டு இறுதியில் முடிவடைகிறது. இதனால் புதிய தேர்வுக் குழுவை கிரிக்கெட் வாரியம் அறிவிக்க உள்ளது.

    முன்னாள் சுழற்பந்து வீரரும், தமிழகத்தை சேர்ந்தவருமான எல். சிவராமகிருஷ்ணன் புதிய தேர்வுக்குழு தலைவராக நியமிக்க வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

    பி.சி.சி.ஐ.யின் வருடாந்திர பொதுக்குழு கூட்டம் டிசம்பர் 1-ந்தேதி நடக்கிறது. இந்த கூட்டத்தின்போது புதிய தேர்வுக்குழு தலைவர் அறிவிக்கப்படலாம் என்று தெரிகிறது. தேர்வுக்குழு உறுப்பினர்களில் தேவங்காந்தி, ஜதின் பரஞ்பே, சரன்தீப் சிங் ஆகியோருக்கு அடுத்த ஆண்டு இறுதி வரை பதவி காலம் இருக்கிறது. இதனால் இந்த 3 பேரும் தொடர்ந்து தேர்வுக்குழு உறுப்பினராக நீடிக்கலாம் என்று எதிர் பார்க்கப்படுகிறது.

    ககன் கோடா இடத்தில் வேறு ஒரு தேர்வுக்குழு உறுப்பினர் நியமிக்கப்படலாம் . ஜூனியர் தேர்வாளரான ஞானேந்திர பாண்டே, ஆசிஷ் நெக்ரா, தீப்தாஸ் குப்தா ஆகியோரில் ஒருவர் இதற்கான வாய்ப்பில் உள்ளனர். தற்போதைய தேர்வுக்குழு கடைசியாக வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான வீரர்களை தேர்வு செய்யும்.

    இதேபோல தேர்வுக்குழு உறுப்பினர்களின் ஊதியத்தை உயர்த்தவும் பி.சி.சி.ஐ. கூட்டத்தில் முடிவு செய்யப்படும்.

    தேர்வுக்குழு தலைவருக்கு தற்போது ரூ.1½ கோடி ஊதியம் வழக்கப்படுகிறது. இனி அது ரூ.2 கோடியாக உயர்த்தப்படும் என்று தெரிகிறது. இதேபோல தேர்வுக்குழு உறுப்பினர்களுக்கு தலா ரூ.90 லட்சம் வழங்கப்படுகிறது. இனி அது ரூ.1.25 கோடியாக உயர்த்தி வழங்கப்படலாம்.
    ஐரோப்பிய நாடுகளுக்கு இடையில் நடைபெறும் யூரோ சாம்பியன்ஸ் லீக் தொடரில் விளையாட வேல்ஸ் அணி தகுதி பெற்றுள்ளது.
    16-வது ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டி அடுத்த ஆண்டு ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் நடக்கிறது. இதற்கான தகுதி சுற்று ஆட்டங்கள் நடைபெற்று வருகிறது. ஏற்கனவே 19 நாடுகள் தகுதி பெற்றன.

    கார்டிஃபில் நேற்று நடந்த ஆட்டத்தில் வேல்ஸ் அணி 2-0 என்ற கோல் கணக்கில் அங்கேரியை வீழ்த்தியது. இதன்மூலம் ‘எப்’ பிரிவில் 4 வெற்றி, 2 டிரா, 2 தோல்வியுடன் 14 புள்ளிகள் பெற்று 2-வது இடத்தை பிடித்து ஐரோப்பிய போட்டிக்கு தகுதி பெற்றது. 2-வது முறையாக அந்த அணி தகுதி பெற்றுள்ளது.

    ஐரோப்பிய கால்பந்து போட்டிக்கு இதுவரை 20 அணிகள் தகுதி பெற்றுள்ளன. இன்னும் 4 நாடுகள் தகுதி பெற வேண்டும்.
    வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான ஒருநாள் மற்றும் 20 ஓவர் போட்டிக்கான இந்திய அணி நாளை அறிவிக்கப்படும் நிலையில் ரோகித் சர்மாவுக்கு ஓய்வு அளிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
    கொல்கத்தா:

    இந்திய கிரிக்கெட் அணி தற்போது வங்காளதேசத்துடன் விளையாடி வருகிறது. 3 போட்டிக்கொண்ட 20 ஓவர் தொடரை இந்தியா 2-1 என்ற கணக்கில் கைப்பற்றி இருந்தது.

    2 டெஸ்ட் தொடரில் இந்தூரில் நடந்த முதல் டெஸ்டில் இந்தியா இன்னிங்ஸ் வெற்றி பெற்றது. 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் பகல்-இரவாக கொல்கத்தாவில் வருகிற 22-ந்தேதி தொடங்குகிறது. 26-ந்தேதியுடன் வங்காளதேசத் தொடர் முடிகிறது.

    இந்திய அணி அடுத்து வெஸ்ட் இண்டீசுடன் விளையாடுகிறது. அந்த அணியுடன் மூன்று 20 ஓவர் போட்டி மற்றும் 3 ஒருநாள் ஆட்டத்தில் ஆடுகிறது.

    20 ஓவர் போட்டிகள் டிசம்பர் 6 (மும்பை), 8 (திருவனந்தபுரம்) மற்றும் 11 (ஐதராபாத்) ஆகிய தேதிகளிலும், ஒருநாள் போட்டிகள் டிசம்பர் 15 (சென்னை), 18 (விசாகப்பட்டினம்) மற்றும் 22 (கட்டாக்) ஆகிய தேதிகளிலும் நடக்கிறது.

    வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான ஒருநாள் மற்றும் 20 ஓவர் போட்டிக்கான இந்திய அணி நாளை (21-ந்தேதி) அறிவிக்கப்படுகிறது. எம்.எஸ்.கே.பிரசாத் தலைமையிலான தேர்வுக் குழுவினர் கொல்கத்தாவில் கூடி வீரர்களை தேர்வு செய்கிறார்கள்.

    ஒருநாள் தொடரில் அதிரடி வீரரும், தொடக்க ஆட்டக்காரருமான ரோகித் சர்மாவுக்கு ஓய்வு கொடுக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வங்காள தேசத்துக்கு எதிரான 20 ஓவர் தொடரில் கேப்டன் விராட்கோலிக்கு ஓய்வு கொடுத்ததுபோல் அவருக்கு ஓய்வு அளிக்க தேர்வுக் குழுவினர் திட்டமிட்டு உள்ளனர்.

    ரோகித்சர்மாவுக்கு ஓய்வு அளிக்கப்படும் பட்சத்தில் டெஸ்டில் சிறப்பாக விளையாடும் மயங்க் அகர்வாலுக்கு வாய்ப்பு கிடைக்கலாம். மேலும் மற்றொரு தொடக்க வீரரான தவானின் ஆட்டமும் மோசமாக இருக்கிறது. இதனால் அவரும் நீக்கப்படுவதற்கான நிலையில் உள்ளார்.

    இதன்காரணமாக ஒருநாள் போட்டி அணியில் அகர்வால் இடம்பெறுவதற்கான தகுதிநிலையில் உள்ளார். தொடக்க வீரரான அவர் டெஸ்டில் 8 இன்னிங்சில் 2 முறை இரட்டை சதம் அடித்து சாதித்து இருந்தார்.

    காயம் அடைந்த வேகப்பந்து வீரர் புவனேஷ்வர்குமார் உடல் தகுதியுடன் இருப்பதால் வெஸ்ட் இண்டீஸ் தொடரில் இடம் பெறலாம் என்று தெரிகிறது. கலீல் அகமது இடத்திற்கு அவர் தேர்வு செய்யப்படலாம்.

    மற்றொரு வேகப்பந்து வீரரும், இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திர வீரருமான பும்ரா வெஸ்ட் இண்டீஸ் தொடரிலும் இடம்பெறமாட்டார். நியூசிலாந்து பயணத்தில் அவர் அணியுடன் இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
    ஆஸ்திரேலியா-பாகிஸ்தான் அணிகள் மோதும் முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பிரிஸ்பேனில் நாளை தொடங்குகிறது.
    பிரிஸ்பேன்:

    பாகிஸ்தான் கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. 20 ஓவர் தொடரை 0-2 என்ற கணக்கில் இழந்த பாகிஸ்தான் அணி அடுத்ததாக 2 போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது.

    இதன்படி ஆஸ்திரேலியா-பாகிஸ்தான் அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி பிரிஸ்பேனில் நாளை (வியாழக்கிழமை) தொடங்குகிறது. இந்த தொடர் உலக சாம்பியன்ஷிப்புக்கு உட்பட்டது என்பதால் ஒவ்வொரு வெற்றிக்கும் தலா 60 புள்ளிகள் வழங்கப்படும். இந்த தொடரில் இருந்து பாகிஸ்தான் அணி டெஸ்ட் சாம்பியன்ஷிப் பயணத்தை தொடங்குகிறது.

    டிம் பெய்ன் தலைமையிலான ஆஸ்திரேலியா, பேட்டிங் மற்றும் பந்து வீச்சு இரண்டிலும் பலம் வாய்ந்த அணியாக விளங்குகிறது. ஆஷஸ் தொடரில் 3 சதம், 3 அரைசதம் உள்பட 774 ரன்கள் குவித்து வியப்பூட்டிய ஸ்டீவன் சுமித் அந்த அணியின் முதுகெலும்பாக திகழ்கிறார். கிட்டத்தட்ட 2 ஆண்டுகளுக்கு பிறகு சொந்த மண்ணில் டெஸ்டில் விளையாட உள்ளார். அவருடன் டேவிட் வார்னர், டிராவிஸ் ஹெட், மேத்யூ வேட், மார்னஸ் லபுஸ்சேன், ஜோ பர்ன்ஸ் ஆகியோரும் பேட்டிங்கில் வலு சேர்க்கிறார்கள்.

    பந்து வீச்சில் மிட்செல் ஸ்டார்க், ஹேசில்வுட், கம்மின்ஸ் உள்ளிட்டோர் மிரட்ட காத்திருக்கிறார்கள். பிரிஸ்பேனில் 1988-ம் ஆண்டுக்கு பிறகு ஆஸ்திரேலிய அணி ஒரு போதும் தோற்றது கிடையாது. அதன் பிறகு 30 டெஸ்டுகளில் ஆடியுள்ள ஆஸ்திரேலியா 23-ல் வெற்றியும், 7-ல் டிராவும் கண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

    அசார் அலி தலைமையிலான பாகிஸ்தான் அணியில் ஆசாத் ஷபிக், பாபர் அசாம், இமாம் உல்-ஹக், ஹாரிஸ் சோகைல், ஷான் மசூட் என்று திறமையான பேட்ஸ்மேன்கள் உள்ளனர். ஆனால் ஆஸ்திரேலிய பந்து வீச்சை எப்படி சமாளிக்கப்போகிறார்கள் என்பது தான் கேள்விக்குறியாக உள்ளது.

    ஸ்டீவன் சுமித்தை கட்டுப்படுத்தினால் தங்களுக்கு வெற்றி வாய்ப்பு கிடைக்கும் என்று நம்பும் பாகிஸ்தான் அணியின் தலைமை பயிற்சியாளர் மிஸ்பா உல்-ஹக் நேற்று அளித்த பேட்டியில் ‘ஸ்டீவன் சுமித் உலகத்தரம் வாய்ந்த பேட்ஸ்மேன் என்பதில் சந்தேகமில்லை. அவரது விக்கெட்டை சீக்கிரம் வீழ்த்துவதற்கு சில திட்டங்கள் வைத்துள்ளோம். ஆப்-ஸ்டம்புக்கு சற்று மேல்வாக்கில் பந்து செல்லும் வகையில் அவருக்கு பந்து வீச வேண்டும். அதுவும் இடைவிடாது ஒரே பகுதியில் பந்தை பிட்ச் செய்து வீச வேண்டும். இவ்வாறு தொடர்ந்து செய்தால் அவருக்கு நெருக்கடி உருவாகி, தவறிழைக்க வாய்ப்பு உண்டு. இந்த வியூகத்தை எங்களது வேகப்பந்து வீச்சாளர்கள் சரியாக செயல்படுத்துவார்கள் என்று நம்புகிறேன்’ என்றார்.

    இந்திய நேரப்படி நாளை அதிகாலை 5.30 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை சோனி சிக்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.

    ‘பிங்க் பால்’ ரிஸ்ட் ஸ்பின்னர்களுக்கு சாதகமாகவும், ஃபிங்கர் ஸ்பின்னர்களுக்கு சவாலாகவும் இருக்கும் என ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார்.
    இந்தியா - வங்காளதேசம் அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் பகல்-இரவு ஆட்டமாக நடக்கிறது. இதில் பிங்க் பால் பயன்படுத்தப்படுகிறது. எஸ்.ஜி. நிறுவனம் இந்த பந்தை தயார் செய்துள்ளது.

    இரவு நேரத்தில் பனிப்பொழிவு இருக்கும் என்பதால் குறிப்பாக சுழற்பந்து வீச்சாளர்களுக்கு சவாலாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்நிலையில் ஹர்பஜன் சிங் ‘பிங்க் பால்’ குறித்து கூறுகையில் ‘‘ரிஸ்ட் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு சற்று சாதகமாக இருக்கும். சுழற்பந்து வீச்சாளர்கள் சீம்-ஐ (black stitches) பிடிக்க கடினமானதாக இருக்கும்.

    இந்தியாவில் குல்தீப் யாதவ் மட்டும்தான் ரிஸ்ட் ஸ்பின்னர். ஆனால், தேர்வு குறித்து நான் பேச முடியாது. அதுகுறித்து அணி நிர்வாகம் முடிவு செய்யும். ஆனால், சுழற்பந்து வீச்சை எதிர்கொள்வதற்கு முன், வங்காள தேசம் வேகப்பந்து வீச்சுக்கு சாதமான ஆடுகளத்தில் இந்தியாவை சமாளிக்க வேண்டும்.

    மூன்றரை மணியில் இருந்து நான்கரை மணி வரையிலான நேரத்தில் கொல்கத்தாவில் சூரியன் மறையும் நேரம். அப்போது வேகப்பந்து வீச்சாளர்கள் போமான அளவிற்கு சேதம் விளைவிப்பார்கள். ஆனால், அதிகமான பகல்-இரவு டெஸ்ட் போட்டிகளில் விளையாட விரும்பினால், ஸ்பின்னர்களை பற்றி நாம் சிந்திக்க வேண்டும்.

    துலீப் டிராபி போட்டிகளை கவனித்தீர்கள் என்றால், குல்தீப் யாதவின் ரிஸ்ட் ஸ்பின்னரை சரியாக  எதிர்கொள்ள முடியவில்லை. லெக் ஸ்பின்னர் ஏராளமான விக்கெட்டுக்களை வீழ்த்தினர்.

    பந்து மீது அதிகமான கலர் பூசப்பட்டிருக்கும். இதனால் பிடிமானம் எளிதாக கிடைக்காது. குறிப்பாக ஃபிங்கர் ஸ்பின்னருக்கு இந்த பிரச்சனை இருக்கும். கையில் இருந்து பந்து வழுக்கிச் செல்லும்’’ என்றார்.
    டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் மிகக் குறைந்த வயதில் களம் இறங்கிய வீரர் என்ற பெருமையை நசீம் ஷா பெற இருக்கிறார்.
    கிரிக்கெட்டில் ஏராளமான புது வீரர்களை அறிமுகப்படுத்திய பெருமை பாகிஸ்தான் அணிக்கு உண்டு. இளம் வயதில் சர்வதேச அணியில் அறிமுகம் ஆன பெரும்பாலான வீரர்கள் ஜொலிக்காமல் சென்றுள்ளனர். சிலர் ஜொலித்துள்ளனர்.

    ஷாகித் அப்ரிடி 17 வயதில் களம் இறங்கி அதிவேக சதம் அடித்த வீரர் என்ற சாதனையை படைத்திருந்தார். 1996-ம் ஆண்டு ஹசன் ராசா தனது 14 வயதில் பாகிஸ்தான் அணியில் அறிமுகம் ஆகி, மிக இளம் வயதில் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடிய வீரர் என்ற சாதனையை பெற்றார். பின்நாளில் அவரது வயது குறித்த சர்ச்சை விவாதமாக மாறியது.

    இந்திய அணியின் சச்சின் தெண்டுல்கர்தான் 16 வயதில் டெஸ்ட் போட்டியில் விளையாடிய இளம் வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

    இந்நிலையில் ஆஸ்திரேலிய அணிக்கெதிரான பிரிஸ்பேன் டெஸ்டில் பாகிஸ்தான் அணி 16 வயதான நீசம் ஷாவை களம் இறக்க இருக்கிறது.

    ஆஸ்திரேலியா ‘ஏ’ அணிக்கெதிரான ஆட்டத்தில் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் 8 ஓவர்களை மிகவும் அபாரமாக வீசினார். அவரது பந்து வீச்சில் அனல் பறந்தது. நசீம் ஷா பந்து வீச்சு அனைவரையும் ஈர்த்தது. இதனால் பிரிஸ்பேன் டெஸ்டில் அவரை பாகிஸ்தான் அணி களம் இறக்க திட்டமிட்டுள்ளது.

    ‘‘நசீம் ஷா அவரது பந்து வீச்சை கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும். இதுதான் எங்களுக்கான சிறந்த யோசனை.
     அவர் சிறந்த பந்து வீச்சு ஆக்சனை பெற்றுள்ளார். பந்து வீச்சை அவரால் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க முடியும்.

    அவருடைய பந்து வீச்சு திறன் அவருக்குத் தெரியும். முதல்தர போட்டிகளில் மிகவும் சிறப்பாக பந்து வீசியுள்ளார். ஆஸ்திரேலிய மண்ணில் கூட சிறப்பாக பந்து வீசினார். எங்களின் முக்கிய பந்து வீச்சாளராக இருப்பார். அவர் பந்து வீசுவதை பார்க்கும்போது, எங்களது மேட்ச் வின்னராக இருக்க முடியும்’’ என பாகிஸ்தான் தலைமை பயிற்சியாளர் மிஸ்பா உல் ஹக் தெரிவித்துள்ளார்.

    ‘‘நசீம் ஷாவுக்கு என்னுடைய வயதில் பாதி வயதுதான் ஆகிறது. அவருக்கு 16 வயதுதான். அவரும் நானும் மோதுவது சுவாரஸ்யமாக இருக்கும்.

    டெஸ்ட் போட்டியில் 16 வயதில் விளையாடும்போது படபடப்பாக இருக்கும். குறிப்பாக வெளிநாட்டு மண்ணில் விளையாடும்போது கூடுதலாக இருக்கும். அவரை பாகிஸ்தான் அணி தேர்வு செய்தால், அவர் உண்மையிலேயே சில சிறப்பு வாய்ந்த திறமையை பெற்றிருப்பார். எதையும் எளிதாக எடுத்துக் கொள்ள முடியாது.

    எங்களை பொறுத்த வரைக்கும் அவரை ஏராளமான ஓவர்கள் வீச வைத்து, சோர்ந்து போக முயற்சிப்போம். அவரால் ஏராளமான ஓவர்கள் வீச முடியாது. இதுதான் எங்களது திட்டமாக இருக்கும்’’ என்று ஆஸ்திரேலியாவின் முன்னணி பேட்ஸ்மேன் ஸ்மித் தெரிவித்துள்ளார்.
    இந்திய கிரிக்கெட்டின் எந்த காலக்கட்டத்திலும் அனில் கும்ப்ளேதான் மிகப்பெரிய மேட்ச் வின்னர் என்று விவிஎஸ் லக்‌ஷ்மண் தெரிவித்துள்ளார்.
    இந்திய அணியில் சச்சின் தெண்டுல்கர், ராகுல் டிராவிட், விவிஎஸ் லக்‌ஷ்மண் மற்றும்  கங்குலி ஆகியோர் தலைசிறந்த டெஸ்ட் பேட்ஸ்மேன்களாக திகழ்ந்தனர். இவர்கள் காலத்தில் சுழற்பந்து வீச்சாளர் அனில் கும்ப்ளே மாயாஜால பந்து வீச்சால் இந்திய அணிக்கு வெற்றிகளை தேடிக்கொடுத்தார்.

    விவிஎஸ் லக்‌ஷ்மணிடம் இந்திய அணியின் எந்த காலக்கட்டத்திலும் மிகப்பெரிய மேட்ச் வின்னர் யார் என்று கேட்கப்பட்டது.

    அதற்கு விவிஎஸ் லக்‌ஷ்மண் ‘‘என்னுடைய நண்பர் அனில் கும்ப்ளேதான் இந்தியாவின் மிகப்பெரிய மேட்ச் வின்னர். நான் விளையாடியபோது மிகப்பெரிய மேட்ச் வின்னராக திகழ்ந்தார்’’ என்றார்.
    ×