search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொல்கத்தா ஈடன் கார்டன் பிங்க் பால் டெஸ்ட்
    X
    கொல்கத்தா ஈடன் கார்டன் பிங்க் பால் டெஸ்ட்

    ‘டே-நைட்’ போட்டியை பார்க்க ரசிகர்கள் ஆர்வம்: நான்கு நாட்களுக்கான டிக்கெட்டுக்கள் விற்று தீர்ந்தன

    கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற இருக்கும் பகல்-இரவு டெஸ்ட் போட்டிக்கான முதல் நான்கு நாட்களுக்கான டிக்கெட்டுக்கள் விற்று தீர்ந்தன.
    இந்தியா - வங்காளதேசம் அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நாளைமறுநாள் நடக்கிறது. இந்த போட்டி பகல்-இரவு ஆட்டமாக நடக்கிறது. இதில் ரெட் பந்திற்குப் பதிலாக பிங்க் பந்து பயன்படுத்தப்பட இருக்கிறது.

    முதன்முதலாக இந்திய அணி பிங்க் பந்தில் விளையாடுகிறது. வங்காளதேசம் அணி டெஸ்ட் போட்டியில் விளையாட அந்தஸ்து பெற்றபோது, முதல் போட்டியில் இந்தியாவை எதிர்த்துதான் விளையாடியது.

    தற்போது முதல் பிங்க் பால் போட்டியிலும் இந்தியாவை எதிர்த்து விளையாடுகிறது. வரலாற்று சிறப்பு வாய்ந்த இந்த போட்டியை சிறப்பாக நடத்த பிசிசிஐ மற்றும் பெங்கால் கிரிக்கெட் சங்கம் விரும்புகின்றன.

    போட்டியை வங்காளதேச பிரதமர் ஷேக் ஹசினா, பெங்கால் முதல்வர் மம்தா பானர்ஜி ஆகியோர் தொடங்கி வைக்கின்றனர்.

    சவுரவ் கங்குலி

    போட்டியின்  இடைவேளையின்போது முன்னாள் ஜாம்பவான்கள் ரசிகர்களின் முன் தோன்றி தங்களது அனுபவங்களை பகிர்ந்து கொள்ள இருக்கின்றனர்.

    கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் சுமார் 80 ஆயிரம் ரசிகர்கள் அமர்ந்து போட்டியை ரசிக்கலாம். இந்த போட்டிக்கான முதல் நான்கு நாட்களுக்கான டிக்கெட்டுக்கள் முழுவதுமாக விற்று தீர்ந்தன என்று பிசிசிஐ தலைவர் கங்குலி தெரிவித்துள்ளார்.
    Next Story
    ×