search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டேவிட் வார்னர்
    X
    டேவிட் வார்னர்

    வார்னர் அபாரம்: ஆஸ்திரேலியா ஒரு விக்கெட் இழப்பிற்கு 312 ரன்கள் குவிப்பு

    பிரிஸ்பேன் டெஸ்டில் டேவிட் வார்னர் 151 ரன்களும், ஜோ பேர்ன்ஸ் 97 ரன்களும் விளாச ஆஸ்திரேலியா 1 விக்கெட் இழப்பிற்கு 312 ரன்கள் குவித்துள்ளது.
    ஆஸ்திரேலியா - பாகிஸ்தான் அணிகள் மோதும் முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நேற்று பிரிஸ்பேனில் தொடங்கியது. முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி தொடக்கம் சிறப்பாக இருந்தது. ஆனால் தொடக்க ஜோடி பிரிந்ததும் விக்கெட்டுகள் சரிந்தது.

    அந்த அணி 86.2 ஓவரில் 240 ரன்னுக்கு ஆல்-அவுட் ஆனது. அதிகபட்சமாக ஆசாத் ‌ஷபிக் 76 ரன் எடுத்தார். கேப்டன் அசார் அலி 39 ரன்னும், முகமது ரிஸ்வான் 37 ரன்னும், ஷான் மசூத் 27 ரன்னும் எடுத்தனர். ஆஸ்திரேலிய தரப்பில் ஸ்டார்க் 4 விக்கெட்டும் கம்மின்ஸ் 3 விக்கெட்டும் வீழ்த்தினர். பாகிஸ்தான் ஆல்-அவுட் ஆனதுடன் நேற்றைய முதல் நாள் ஆட்டம் முடிவடைந்தது.

    இன்று 2-வது நாள் ஆட்டம் தொடங்கியதும் ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் பேட்டிங் செய்தது. தொடக்க வீரர்களாக டேவிட் வார்னர், ஜோ பேர்ன்ஸ் களம் இறங்கினர். இருவரும் சிறப்பான தொடக்கம் கொடுத்தனர். அவர்கள் பாகிஸ்தான் பந்துவீச்சை திறம்பட சமாளித்து ரன்களை சேர்த்தனர்.

    இந்த ஜோடியை பிரிக்க முடியாமல் பாகிஸ்தான் பவுலர்கள் திணறினார்கள். ஆஸ்திரேலியா 25-வது ஓவரில் 100 ரன்களை தொட்டது. டேவிட் வார்னர் 56 ரன்னில் இருந்தபோது 16 வயது வேகப்பந்து வீச்சாளர் நசீம்ஷா பந்தில் கேட்ச் ஆனார். ஆனால் அது நோ-பால் என்று அறிவிக்கப்பட்டது.

    அவுட்டானதில் இருந்து தப்பிய சிறப்பாக விளையாடி சதம் அடித்தார். ஜோ பேர்ன்ஸ் சதம் அடிப்பார் என்ற நிலையில் 97 ரன்னில் ஆட்டமிழந்தார். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 60.5 ஓவர்களில் 222 ரன்கள் குவித்தது.

    அடுத்து டேவிட் வார்னருடன் மார்னஸ் லாபஸ்சாக்னே ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடியும் சிறப்பாக விளையாடியது. லாபஸ்சாக்னே சிறப்பாக விளையாடி அரைசதம் அடித்தார். வார்னர் 150 ரன்னைக் கடந்தார்.

    மார்னஸ் லாபஸ்சாக்னே

    இருவரும் இன்றைய 2-வது நாள் ஆட்டம் முடியும் வரை விக்கெட் கொடுக்காமல் பார்த்துக் கொண்டனர். இதனால் ஆஸ்திரேலியா 2-வது நாள் ஆட்ட முடிவில் 1 விக்கெட் இழப்பிற்கு 312 ரன்கள் குவித்துள்ளது. டேவிட் வார்னர் 151 ரன்னுடனும், ஜோ பேர்ன்ஸ் 97 ரன்னுடனும் களத்தில் உள்ளனர்.

    தற்போது வரை ஆஸ்திரேலியா 72 ரன்கள் முன்னிலைப் பெற்றுள்ளது. நாளை 3-வது நாள் முழுவதும் பேட்டிங் செய்தால் பாகிஸ்தானை விட 300 ரன்களுக்கு மேல் முன்னிலை வகிக்க வாய்ப்புள்ளது. 300 ரன்களுக்கு மேல் முன்னிலைப் பெற்றால் இன்னிங்ஸ் வெற்றி பெற வாய்ப்புள்ளது.
    Next Story
    ×