search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டி10 கிரிக்கெட் லீக்
    X
    டி10 கிரிக்கெட் லீக்

    இந்த விஷயத்திற்காக கிரிக்கெட் போட்டி கைவிடப்பட்டது என்றால் நம்புவீர்களா?....

    அபுதாபியில் நடைபெற்ற டி10 போட்டியில் மழை குறுக்கிட்டதால் டக்வொர்த் லீவிஸ் விதியை கடைபிடிக்க முடியாததால் போட்டி கைவிடப்பட்டுள்ளது.
    கிரிக்கெட் போட்டி மழை, ஆடுகளம் மோசம், மைதானம் பீல்டிங் செய்வதற்கு உகந்ததாக இல்லை, மின்கம்பம் பழுது போன்ற காரணங்களால் பாதியில் கைவிடப்பட்டுள்ளதை அறிந்திருப்போம்.

    டக்வொர்த் லீவிஸ் விதிப்படி வரையறுக்கப்பட்ட ரன்கள் விகித விவரம் கிடைக்காததால் போட்டி கைவிடப்பட்டதை அறிந்திருக்கிறீர்களா?... ஆம்... அபுதாபியில் நடைபெற்ற டி10 போட்டியில் நடந்துள்ளது.

    நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் டெக்கான் கிளாடியேட்டர்ஸ் - டீம் அபு தாபி அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த டீம் அபு தாபி 10 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 118 ரன்கள் குவித்தது. பின்னர் 118 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் டெக்கான் கிளாடியேட்டர்ஸ் களம் இறங்கியது.

    அந்த அணி 2.2 ஓவரில் 1 விக்கெட் இழப்பிற்கு 25 ரன்கள் எடுத்திருந்தது. அப்போது மழை குறுக்கிட்டது. தொடர்ந்து மழை பெய்ததால் டக்வொர்த் லீவிஸ் விதிப்படி முடிவை அறிவிக்க போட்டி நடுவர் முடிவு செய்தார்.

    அந்த விதிப்படி ஒவ்வொரு ஓவருக்கும் எவ்வளவு ரன்கள் அடிக்க வேண்டும் என கண்க்கிட்டு இரு அணி வீரர்களுக்கும் பிரிண்ட் அவுட் எடுத்து கொடுக்கப்படும். அந்த போட்டிக்கான அந்த பிரிண்ட் எடுத்துக் கொள்ள முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் போட்டி வெற்றித் தோல்வியின்றி கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
    Next Story
    ×