என் மலர்tooltip icon

    விளையாட்டு

    • தடகள போட்டியை தமிழகம் நடத்துவது இது 12-வது முறையாகும்.
    • கடைசியாக 2022-ம் ஆண்டில் இங்கு சீனியர் தேசிய தடகள போட்டி நடந்தது.

    தமிழ்நாடு தடகளம் சங்கம் சார்பில் எஸ்.டி.ஏ.டி. ஆதரவுடன் மாநிலங்களுக்கு இடையிலான 64-வது தேசிய சீனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டி சென்னை நேரு ஸ்டேடியத்தில் நாளை (புதன்கிழமை) தொடங்கி 24-ந்தேதி வரை நடைபெறுகிறது. டோக்கியோவில் அடுத்த மாதம் நடக்கும் உலக தடகள சாம்பியன்ஷிப்புக்கான இந்திய அணியில் இடத்தை எதிர்நோக்கி உள்ள குறிப்பிட்ட வீரர், வீராங்கனைகளுக்கு இது அணித் தேர்வுக்கான கடைசி போட்டியாகவும் அமைந்திருப்பதால் அந்த வகையில் முக்கியத்துவம் பெற்றுள்ளது. இது போன்ற கவுரவமிக்க தடகள போட்டியை தமிழகம் நடத்துவது இது 12-வது முறையாகும். கடைசியாக 2022-ம் ஆண்டில் இங்கு சீனியர் தேசிய தடகள போட்டி நடந்தது.

    5 நாட்கள் நடக்கும் இந்த போட்டியில் நாடு முழுவதும் இருந்து சுமார் 700 வீரர், வீராங்கனைகள் பங்கேற்கிறார்கள். இவர்கள் 10 ஆயிரம் மீட்டர், 5 ஆயிரம் மீட்டர், 800 மீட்டர், 200 மீட்டர், 100 மீட்டர் ஓட்டம், தடை ஓட்டம், தொடர் ஓட்டம், வட்டு எறிதல், குண்டு எறிதல், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், போல் வால்ட், ஈட்டி எறிதல், 3 ஆயிரம் மீட்டர் ஸ்டீபிள் சேஸ் உள்ளிட்ட பந்தயங்களில் தங்களது திறமையை வெளிப்படுத்த காத்திருக்கிறார்கள். இதில் ஆசிய தடகளத்தில் வெள்ளிப்பதக்கம் வென்றவரான டிரிபிள் ஜம்ப் வீரர் பிரவீன் சித்ரவேல், ஓட்டப்பந்தய வீராங்கனைகள் வித்யா ராம்ராஜ், 18 வயதான அபினயா, ஏஞ்சல் சில்வியா ஆகிய தமிழர்களும் அடங்குவர்.

    தமிழகத்தை தவிர்த்து, ஆசிய விளையாட்டில் இரட்டை சாம்பியனும், ஒலிம்பியனுமான குண்டு எறிதல் வீரர் தஜிந்தர்பால் சிங் (பஞ்சாப்), ஆசிய போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்றவரான டெல்லியை சேர்ந்த தேஜஸ்வின் சங்கர் (உயரம் தாண்டுதல்), முன்னாள் ஆசிய சாம்பியனான கேரளாவின் டிரிபிள் ஜம்ப் வீரர் அப்துல்லா அபூபக்கர், கார்த்திக் உன்னிகிருஷ்ணன், முரளி ஸ்ரீசங்கர் மற்றும் அம்லான் போர்கோஹைன் (அசாம்), பிரக்யான் சாகு (ஒடிசா), தேஜஸ் ஷிர்ஸ் (மகாராஷ்டிரா) உள்ளிட்ட பிற மாநிலங்களை சேர்ந்த பிரபலங்களும் களம் இறங்குகிறார்கள்.

    போட்டிக்கான ஏற்பாடுகளை தமிழ்நாடு தடகள சங்க தலைவர் டி.கே.ராஜேந்திரன், செயலாளர் சி.லதா மற்றும் நிர்வாகிகள் செய்து வருகிறார்கள்.

    • ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் செப்டம்பர் 9-ம் தேதி தொடங்குகிறது.
    • சஞ்சு சாம்சனை அணியில் சேர்க்காமல் ஷ்ரேயாஸ் ஐயர், கில்லுக்கு இடம் வழங்கியுள்ளார்.

    ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரானது யுஏஇ-ல் செப்டம்பர் 9-ம் தேதி தொடங்கி செப்டம்பர் 28-ம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் குரூப் ஏ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், ஐக்கிய அரபு அமீரகம், நேபாள் ஆகிய அணிகள் இடம்பிடித்துள்ளன. குரூப் பி பிரிவில் இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான் மற்றும் ஹாங்காங் அணிகளும் இடம்பிடித்துள்ளன.

    இத்தொடருக்கான அணிகளை அந்தந்த நாட்டு கிரிக்கெட் வாரியங்கள் அறிவித்து வரும் நிலையில், இந்திய அணி நாளைய தினம் அறிவிக்கப்படும் என்ற எதிர்பார்ப்புகள் உள்ளன. இந்நிலையில் இத்தொடருக்கான இந்திய அணியை முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் கணித்துள்ளார்.

    இதில் சஞ்சு சாம்சனை அணியில் சேர்க்காமல் விட்டுவிட்டு ஷ்ரேயாஸ் ஐயருக்கு இடம் வழங்கியுள்ளார். அதே நேரத்தில் அவர் தனது அணியில் சுப்மன் கில்லையும் சேர்த்துள்ளார்.

    இந்த தொடருக்கான இந்திய அணியில் கில் இடம்பிடிக்க மாட்டார் என்று கூறப்படும் நிலையில் கில் நிச்சயமாக ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணியில் கில் இடம்பிடிப்பார் என்று ஹர்பஜன் சிங் கூறியுள்ளார்.

    இதுகுறித்து அவர் கூறியதாவது:-

    டி20 என்பது வெறும் சிக்சர் மற்றும் பவுண்டரிகளின் விளையாட்டு அல்ல. அவரது பேட்டிங் அடிப்படைகள் மிகவும் வலுவானவை, அவரால் எந்த வடிவத்திலும் ரன்கள் எடுக்க முடியும். மேலும் அவால் 160 ஸ்ட்ரைக் ரேட்டிலும் விளையாட முடியும்.

    தற்போதுள்ள இந்திய அணியில் சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா மற்றும் அபிஷேக் சர்மா போன்ற அதிரடியான வீரர்கள் இருந்தாலும், சுப்மன் கில் போன்ற நங்கூரமிடக்கூடிய மற்றும் கியர்களை மாற்றக்கூடிய ஒரு பேட்ஸ்மேன் இருப்பது மிகவும் முக்கியம். அதனால் இந்த தொடருக்கான இந்திய அணியில் அவர் நிச்சயம் இடம்பிடிக்க வேண்டும்.

    என்று ஹர்பஜன் சிங் கூறியுள்ளார்.

    ஹர்பஜன் சிங் தேர்வு செய்த ஆசிய கோப்பைக்கான இந்திய அணி:

    யஷஸ்வி ஜெய்ஸ்வால், அபிஷேக் சர்மா, சுப்மான் கில், சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), ஹர்திக் பாண்ட்யா, ஷ்ரேயாஸ் ஐயர், வாஷிங்டன் சுந்தர், கேஎல் ராகுல்/ரிஷப் பந்த், ரியான் பராக், குல்தீப் யாதவ், அக்ஸர் படேல், முகமது சிராஜ், அர்ஷ்தீப் சிங், அர்ஷ்தீப் பும்ரா.

    • சாண்டோஸ் 0-6 என்ற கணக்கில் வாஸ்கோ டா காமாவிடம் தோல்வியடைந்தது.
    • படுதோல்வியடைந்தால் மைதானத்திலேயே அமர்ந்து நெய்மர் கதறி அழுதார்.

    பிரேசிலிய சீரி ஏ கால்பந்து தொடரில் சாண்டோஸ் அணிக்காக நெய்மர் விளையாடி வருகிறார். இதில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் வாஸ்கோ டா காமா மற்றும் சாண்டோஸ் அணி மோதியது.

    இந்த ஆட்டத்தில் சாண்டோஸ் 0-6 என்ற கணக்கில் வாஸ்கோ டா காமாவிடம் தோல்வியடைந்தது. இது நெய்மரின் தொழில்முறை வாழ்க்கையில் மிகப்பெரிய தோல்வியாகும்.

    சமீபத்தில் காயம் காரணமாக ஃபார்மை இழந்து தவித்துவரும் நெய்மர், சொந்த மண்ணில் நடைபெற்ற போட்டியில் கம்பேக் கொடுப்பார் என ரசிகர்கள் சூழ்ந்திருந்தனர். ஆனால் ஒரு கோல் கூட அடிக்கமுடியாமல் தோல்வியடைந்தது. எதிர்ப்பார்ப்புடன் மைதானத்திற்கு வந்த பல ரசிகர்கள் பாதியிலேயே மைதானத்தை விட்டு வெளியேறினர்.

    இந்நிலையில் படுதோல்வியடைந்தால் மைதானத்திலேயே அமர்ந்து நெய்மர் கதறி அழுதார். அவரை சகவீரர்களும், பயிற்சியாளரும் சமாதனம் செய்தபோதும் டக்அவுட்டுக்கு செல்லும் வழியில் அழுதபடியே வெளியேறினார். இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

    இத்தொடர் முழுக்க மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் சாண்டோஸ் அணி 19 ஆட்டங்களில் 10 தோல்விகளை சந்தித்து பட்டியலில் 15-வது இடத்தில் நீடிக்கிறது. இந்த சூழலில் அணியின் தோல்விக்காக சாண்டோஸ் அணியின் பயிற்சியாளர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

    • சுழற் பந்துவீச்சாளர்களுக்கு எதிராக அவருடைய பேட்டிங் தடுமாற்றத்தை காண்கிறது.
    • டி20 கிரிக்கெட்டில் அவருடைய ஸ்ட்ரைக் ரேட் மிகவும் குறைவாக இருக்கின்றது.

    ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் செப்டம்பர் 9-ம் தேதி முதல் 28-ம் தேதி வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற உள்ளது.

    இந்தத் தொடரில் நடப்பு சாம்பியன் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான், யுஏஇ, ஓமன் உள்பட 8 அணிகள் பங்கேற்கின்றன.

    இந்த தொடருக்கான பாகிஸ்தான் அணி அறிவிக்கப்பட்டது. இதில் முன்னணி வீரர்களான பாபர் அசாம், ரிஸ்வான் ஆகியோருக்கு இடம் கிடைக்கவில்லை.

    இந்நிலையில் ஆசிய கோப்பை தொடரில் பாபர் அசாம் இடம் பெறாதது குறித்து பாகிஸ்தான் அணியின் தலைமை பயிற்சியாளர் மைக் ஹேசன் விளக்கம் அளித்துள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    பாபர் அசாம் நல்ல வீரர் தான் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால் அவருடைய பேட்டிங்கில் சில விஷயத்தில் அவர் மாற்றிக்கொள்ள வேண்டும். சில விஷயங்களில் அவர் முன்னேற்றம் அடைய வேண்டும். குறிப்பாக சுழற் பந்துவீச்சாளர்களுக்கு எதிராக அவருடைய பேட்டிங் தடுமாற்றத்தை காண்கிறது.

    டி20 கிரிக்கெட்டில் அவருடைய ஸ்ட்ரைக் ரேட் மிகவும் குறைவாக இருக்கின்றது. இந்த விஷயத்தில் பாபர் அசாம் கடுமையாக பயிற்சி எடுக்க அறிவுறுத்தப்பட்டிருக்கிறார். அதையும் அவர் செய்து வருகின்றார். தற்போது பாபர் அசாம் போன்ற வீரர் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் பிக் பாஸ் லீக் தொடரில் பங்கு பெற்று அங்கு விளையாட வேண்டும். இதன் மூலம் டி20 கிரிக்கெட்டில் அவர் முன்னேற்றம் அடைவார் என்று நான் நம்புகிறேன்.

    டி20 கிரிக்கெட்டில் வெற்றி பெற வேண்டும் என்றால் ரன் ரேட் என்பது மிகவும் முக்கியம். நாம் பேட்டிங் செய்து ஒரு நல்ல இலக்கை நிர்ணயிக்க வேண்டும். அப்போதுதான் போட்டியில் வெற்றி பெற முடியும்.

    என்று மைக் ஹேசன் கூறியுள்ளார்.

    • தொடக்க வீரர்களாக அபிஷேக் சர்மா மற்றும் சஞ்சு சாம்சனைத் தேர்வு செய்துள்ளார்.
    • அவரது அணியில் சுப்மன் கில், யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் ரிங்கு சிங் ஆகியோரை புறக்கணித்துள்ளார்.

    ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரானது செப்டம்பர் 9-ம் தேதி முதல் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறவுள்ளது. இத்தொடரில் குரூப் ஏ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், ஐக்கிய அரபு அமீரகம், நேபாள் ஆகிய அணிகள் இடம்பிடித்துள்ளன. அதேசமயம், குரூப் பி பிரிவில் இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான் மற்றும் ஹாங்காங் அணிகளும் இடம்பிடித்துள்ளன.

    ஐபிஎல் தொடருக்கு பிறகு இந்திய அணி விளையாடும் டி20 தொடர் என்பதால், இந்த அணியில் யார் யார் இடம் பிடிப்பார்கள் என்ற எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளன.

    இந்த நிலையில் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரரும், பிரபல வர்ணனையாளருமான ஹர்ஷா போக்லே ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணியை தேர்வு செய்துள்ளார்.

    அவர் தேர்வு செய்துள்ள இந்த அணியில் தொடக்க வீரர்களாக அபிஷேக் சர்மா மற்றும் சஞ்சு சாம்சனைத் தேர்வு செய்துள்ளார். அதேசமயம் 3-ம் இடத்தில் திலக் வர்மாவையும், 4-ம் இடத்தில் சூர்யகுமார் யாதவை தேர்வு செய்துள்ளார்.

    ஆல் ரவுண்டர்களில் ஹர்திக் பாண்ட்யா, அக்சர் படேல் மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகியோரைத் தேர்ந்தெடுத்துள்ள அவர், பந்துவீச்சாளர்களாக ஜஸ்பிரித் பும்ரா, வருண் சக்ரவர்த்தி, பிரசித் கிருஷ்ணா, அர்ஷ்தீப் சிங், ரவி பிஷ்னோய் மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோரை அணியில் சேர்த்துள்ளார்.

    இருப்பினும் அவரது அணியில் சுப்மன் கில், யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் ரிங்கு சிங் ஆகியோரை புறக்கணித்துள்ளார்.

    ஹர்ஷா போக்லே தேர்வு செய்த இந்திய அணி:-

    அபிஷேக் சர்மா, சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), திலக் வர்மா, ஸ்ரேயாஸ் ஐயர், ஹார்திக் பாண்ட்யா, அக்சர் படேல், வாஷிங்டன் சுந்தர், சஞ்சு சாம்சன், ஜிதேஷ் சர்மா, ஜஸ்ப்ரீத் பும்ரா, வருண் சக்ரவர்த்தி, பிரசித் கிருஷ்ணா, அர்ஷ்தீப் சிங், ரவி பிஷ்னோய், குல்தீப் யாதவ்.

    • இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான், யுஏஇ, ஓமன் உள்பட 8 அணிகள் பங்கேற்கின்றன.
    • இந்தச் சுற்றில் முதல் 2 இடம் பிடிக்கும் அணிகள் 28-ம்தேதி இறுதிப்போட்டியில் மோதும்.

    ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் செப்டம்பர் 9-ம் தேதி முதல் 28-ம் தேதி வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற உள்ளது.

    டி20 வடிவில் நடைபெறும் இந்தத் தொடரில் நடப்பு சாம்பியன் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான், யுஏஇ, ஓமன் உள்பட 8 அணிகள் பங்கேற்கின்றன.

    தலா 4 அணிகள் என இரு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு லீக் சுற்று நடக்கிறது. இதில் இரு பிரிவிலும் முதல் 2 இடங்களைப் பிடிக்கும் அணிகள் சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெறும்.

    இந்தச் சுற்றில் முதல் 2 இடம் பிடிக்கும் அணிகள் 28-ம்தேதி பைனலில் மோதும். ஏ பிரிவில் இடம்பெற்றுள்ள இந்தியா வரும் 14-ம் தேதி பாகிஸ்தானுடன் துபாயில் மோதுகிறது.

    இந்நிலையில் இந்த தொடருக்கான ப்ரோமோவை சோனி வெளியிட்டுள்ளது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    • முதலில் நடந்த டி20 தொடரை ஆஸ்திரேலியா 2-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது.
    • இதனை தொடர்ந்து இரு அணிகளுக்கும் இடையேயான ஒருநாள் தொடர் நாளை தொடங்குகிறது.

    தென் ஆப்பிரிக்கா அணி, ஒருநாள் மற்றும் டி20 தொடரில் விளையாடுவதற்காக ஆஸ்திரேலியா சென்றுள்ளது.

    இதில் முதலில் நடந்த டி20 தொடரை ஆஸ்திரேலியா 2-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. இதனை தொடர்ந்து இரு அணிகளுக்கும் இடையேயான ஒருநாள் தொடர் நாளை தொடங்குகிறது.

    இந்நிலையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் வேகப்பந்து வீச்சாளர் க்வேனா மபாகா தென் ஆப்பிரிக்கா அணியில் இணைந்துள்ளார்.

    டி20 தொடரில் சிறப்பான பந்து வீச்சை வெளிப்படுத்தியதன் மூலம் இந்த வாய்ப்பு அவருக்கு கிடைத்துள்ளது. அவர் 3 டி20 போட்டிகளில் 9 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

    • இந்த தொடருக்கான கிழக்கு மண்டல அணியின் கேப்டனாக இஷான் கிஷன் நியமிக்கப்பட்டிருந்தார்.
    • இஷான் கிஷன் விலகிய நிலையில் கிழக்கு மண்டல அணியின் கேப்டனாக அபிமன்யு ஈஸ்வரன் நியமிக்கப்பட்டுள்ளார்.

    புதுடெல்லி:

    இந்தியாவில் நடைபெறும் உள்ளூர் கிரிக்கெட் தொடர்களில் ஒன்றான துலீப் கோப்பை கிரிக்கெட் தொடரின் நடப்பு சீசன் வரும் 28-ம் தேதி முதல் பெங்களூருவில் தொடங்கவுள்ளது. இதில் மேற்கு மண்டலம் மற்றும் தெற்கு மண்டல அணிகள் நேரடியாக அரையிறுதிக்கு தகுதிப்பெற்றுள்ளன.

    வடக்கு மண்டலம், கிழக்கு மண்டலம், வடகிழக்கு மண்டலம் மற்றும் மத்திய மண்டல அணிகள் பிளே ஆப் (காலிறுதி) போட்டிகளில் விளையாடவுள்ளது. இந்த தொடருக்கான கிழக்கு மண்டல அணியின் கேப்டனாக இஷான் கிஷன் நியமிக்கப்பட்டிருந்தார்.

    இந்நிலையில், துலீப் டிராபி தொடரில் இருந்து இஷான் கிஷன் நீக்கப்பட்டுள்ளார். காயம் காரணமாக அவர் தொடரில் இருந்து விலகி உள்ளதாக ஒடிசா கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. அவருக்கு ஆஷிர்வாட் ஸ்வைன் மாற்று வீரராக சேர்க்கப்பட்டுள்ளார்.

    இதனால் கிழக்கு மண்டல அணியின் கேப்டனாக அபிமன்யு ஈஸ்வரன் நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • செப்டம்பர் 9-ம் தேதி ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் தொடங்கவுள்ளது.
    • ஏ பிரிவில் இடம்பெற்றுள்ள இந்தியா வரும் 14-ம் தேதி பாகிஸ்தானுடன் துபாயில் மோதுகிறது

    ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் செப்டம்பர் 9-ம் தேதி முதல் 28-ம் தேதி வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற உள்ளது.

    டி20 வடிவில் நடைபெறும் இந்தத் தொடரில் நடப்பு சாம்பியன் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான், யுஏஇ, ஓமன் உள்பட 8 அணிகள் பங்கேற்கின்றன.

    தலா 4 அணிகள் என இரு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு லீக் சுற்று நடக்கிறது. இதில் இரு பிரிவிலும் முதல் 2 இடங்களைப் பிடிக்கும் அணிகள் சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெறும். இந்தச் சுற்றில் முதல் 2 இடம் பிடிக்கும் அணிகள் 28-ம்தேதி பைனலில் மோதும்.

    ஏ பிரிவில் இடம்பெற்றுள்ள இந்தியா வரும் 14-ம் தேதி பாகிஸ்தானுடன் துபாயில் மோதுகிறது

    இந்நிலையில், ஆசிய கோப்பை தொடரில் இந்திய அணி விளையாடவே கூடாது என விரும்புகிறேன் என்று பாஜக உறுப்பினரும், முன்னாள் கிரிக்கெட் வீரருமான கேதர் ஜாதவ் தெரிவித்துள்ளார்.

    ஆசிய கோப்பையில் பாகிஸ்தான் அணியை இந்தியா எதிர்கொள்வது தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த கேதர் ஜாதவ், "இந்தியா எங்கு விளையாடினாலும் வெற்றி பெறும். ஆனால் இந்தப் (பாகிஸ்தான் உடனான) போட்டியை விளையாடவே கூடாது. விளையாடவும் மாட்டார்கள். நம்பிக்கையுடன் சொல்கிறேன்" என்று தெரிவித்தார்.

    • சின்சினாட்டி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி அமெரிக்காவில் நடந்து வருகிறது.
    • ஆண்கள் இரட்டையரில் அமெரிக்காவின் ராஜீவ் ராம் ஜோடி சாம்பியன் பட்டம் வென்றது.

    சின்சினாட்டி:

    சின்சினாட்டி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி அமெரிக்காவில் நடந்து வருகிறது. இந்தப் போட்டியில் முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்று விளையாடி வருகின்றனர்.

    இதில் ஆண்கள் இரட்டையர் பிரிவில் இன்று நடந்த இறுதிப்போட்டியில் அமெரிக்காவின் ராஜீவ் ராம்- குரோஷியாவின் நிகோலா மெக்டிக் ஜோடி, இத்தாலியின் லாரன்சோ முசெட்டி-லாரன்சோ சொனேகோ ஜோடியுடன் மோதியது.

    இந்த மோதலில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்தி அபாரமாக செயல்பட்ட ராஜீவ் ராம் ஜோடி 4-6, 6-3, 10-5 என்ற செட் கணக்கில் வென்று சாம்பியன் பட்டம் கைப்பற்றி அசத்தியது.

    • சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் போட்டி அமெரிக்காவில் நடந்து வருகிறது.
    • இத்தாலி வீராங்கனை ஜாஸ்மின் பவுலினி இறுதிச்சுற்றுக்கு முன்னேறினார்.

    சின்சினாட்டி:

    சின்சினாட்டி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி அமெரிக்காவின் சின்சினாட்டி நகரில் நடந்து வருகிறது. இது அமெரிக்க ஓபனுக்கு முன்னோட்டமாக கருதப்படுகிறது. இந்தப் போட்டியில் முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்று விளையாடி வருகின்றனர்.

    இதில் இன்று நடந்த பெண்கள் ஒற்றையர் பிரிவின் 2வது அரையிறுதி சுற்றில் இத்தாலியின் ஜாஸ்மின் பவுலினி, ரஷியாவின் வெரோனிகா குடர்மெடோவா உடன் மோதினார்.

    இதில் அதிரடியாக ஆடிய பவுலினி முதல் செட்டை 6-3 என வென்றார். இதற்கு பதிலடியாக ரஷிய வீராங்கனை 2வது செட்டை 7-6 (7-2) என போராடி கைப்பற்றினார்.

    வெற்றியாளரை நிர்ணயிக்கும் 3-வது செட்டை 6-3 என கைப்பற்றிய ஜாஸ்மின் பவுலினி இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.

    நாளை நடைபெறும் இறுதிப்போட்டியில் இத்தாலி வீராங்கனை ஜாஸ்மின் பவுலினி, போலந்து வீராங்கனை இகா ஸ்வியாடெக் உடன் மோதுகிறார்.

    • தற்போது, ஒருநாள் போட்டிகளில் மட்டும் தொடர்ந்து விளையாடி வருகிறார்.
    • அடுத்த உலகக் கோப்பை வரை விளையாடுவதை இலக்காக கொண்டுள்ளார்.

    புதுடெல்லி:

    இந்திய ஒருநாள் கிரிக்கெட் அணியின் கேப்டனான ரோகித் சர்மா டி20 மற்றும் டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக திடீரென அறிவித்தார்.

    தற்போது, ஒருநாள் போட்டிகளில் மட்டும் தொடர்ந்து விளையாடி வருகிறார். அடுத்த உலகக் கோப்பை (2027) வரை விளையாடுவதை இலக்காக கொண்டுள்ளார்.

    இந்நிலையில்,ரோகித் சர்மா இந்திய அணிக்கு அவசியம் என முன்னாள் வீரரான யோக்ராஜ் சிங் தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக, இந்திய முன்னாள் வீரரான யோக்ராஜ் சிங் கூறியதாவது:

    ரோகித் சர்மா, சாம்பியன்ஸ் டிராபி தொடரில் நியூசிலாந்துக்கு எதிரான கடினமான இறுதிப்போட்டியில் 83 பந்துகளில் 76 ரன்கள் அடித்து ஆட்டநாயகன் விருதினை வென்றார்.

    ஒரு பக்கம் ரோகித் சர்மாவின் பேட்டிங், மறுபக்கம் மற்ற வீரர்களின் பேட்டிங். அந்த ஆட்டம் அவரால் 45 வயது வரை விளையாட முடியும் என்பதை நிரூபித்தது.

    தேவைப்பட்டால் தினமும் 10 கிலோமீட்டர் அவரை ஓட வையுங்கள். அப்படி அவரை பயிற்சி செய்ய சொன்னால் நிச்சயம் 45 வயது வரை அவரால் விளையாட முடியும். அடுத்த 5 வருடங்களுக்கு ரோகித் சர்மா நிச்சயமாக நமக்கு தேவை.

    ரோகித் சர்மா போன்ற வீரர்களை அணியிலிருந்து தூக்கி எறியக்கூடாது. நான் பயிற்சியாளராக இருந்தால், இதே வீரர்களை வைத்து யாராலும் வெல்ல முடியாத ஒரு அணியை உருவாக்குவேன் என தெரிவித்தார்.

    யோகராஜ் சிங் கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங்கின் தந்தை என்பது குறிப்பிடத்தக்கது.

    ×