என் மலர்
நீங்கள் தேடியது "துலீப் டிராபி 2025"
- டாஸ் வென்ற மேற்கு மண்டல அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
- அந்த அணியின் ருதுராஜ் கெய்க்வாட் சிறப்பாக ஆடி சதமடித்து அசத்தினார்.
பெங்களூரு:
துலீப் கோப்பை கிரிக்கெட் தொடரின் 2-வது அரையிறுதி போட்டி பெங்களூருவில் நடைபெற்று வருகிறது. இதில் மேற்கு மற்றும் மத்திய மண்டல அணிகள் விளையாடி வருகின்றன. டாஸ் வென்ற மேற்கு மண்டல அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
அதன்படி, மேற்கு மண்டல அணி முதலில் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் ஜெய்ஸ்வால் 4 ரன்னில் அவுட்டானார். ஸ்ரேயாஸ் அய்யர் 25 ரன்னில் ஆட்டமிழந்தார்.
ஒருபுறம் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும் அனுபவ வீரரான ருதுராஜ் கெய்க்வாட் பொறுப்புடன் ஆடி ரன்குவிப்பில் ஈடுபட்டார். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய கெய்க்வாட், சதமடித்து அசத்தினார்.
முதல் நாள் முடிவில் மேற்கு மண்டல அணி 87 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 363 ரன்கள் குவித்துள்ளது. ருதுராஜ் கெய்க்வாட் 206 பந்துகளில் ஒரு சிக்சர், 25 பவுண்டரி உள்பட 184 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.
சமீபத்தில் நடந்த புச்சிபாபு கிரிக்கெட் தொடரிலும் ருதுராஜ் கெய்க்வாட் சதமடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
- இரண்டு விக்கெட்டுகள் எல்.பி.டபிள்யூ மூலம் கிடைத்தது.
- இரண்டு விக்கெட்டுகள் போல்டு மூலம் கிடைத்தது.
துலீப் கிரிக்கெட் காலிறுதியில் வடக்கு மண்டலம்- கிழக்கு மண்டலம் அணிகள் விளையாடி வருகின்றன. முதலில் பேட்டிங் செய்த வடக்கு மண்டலம் முதல் இன்னிங்சில் 405 ரன்கள் குவித்தது. அந்த அணியின் ஆயுஷ் படோனி அதிகபட்சமாக 76 ரன்கள் சேர்த்தார்.
பின்னர் கிழக்கு மண்டலம் முதல் இன்னிங்சை தொடங்கியது. தொடக்க வீரர் உத்கார்ஷ் சிங் 38 ரன்களில் ஆட்டமிழந்தார். ரியான் பராக் 39 ரன்கள் அடித்தார். விராட் சிங் 69 ரன்கள் சேர்க்க மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க 230 ரன்னில் சுருண்டது.
வடக்கு மண்டல பந்து வீச்சாளர் அக்யூப் நபி அபாரமாக பந்து வீசி தொடர்ச்சியாக கடைசி நான்கு விக்கெட்டுகளையும் 4 பந்தில் வீழ்த்தி அசத்தினார். இதன்மூலம் இந்தியாவில் நடைபெறும் முதல்தர கிரிக்கெட்டில் தொடர்ச்சியாக 4 பந்தில் 4 விக்கெட் வீழ்த்திய 4ஆவது வீரர் என்ற பெருமையை பெற்றார். அக்யூப் நபி 10.1 ஓவர்கள் வீசி 28 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 5 விக்கெட் சாய்த்தார். ஆட்டத்தின் 53ஆவது ஓவரை வீசினார். இந்த ஓவரின் 4, 5, மற்றும் 6ஆவது பந்தில் விக்கெட்டுகள் வீழ்த்தினார். பின்னர் 57ஆவது ஓவரை வீசினார். இந்த ஓவரின் முதல் பந்தில் விக்கெட் வீழத்தினார். இரண்டு விக்கெட்டுகள் போல்டு மூலமாகவம், இரண்டு விக்கெட்டுகள் எல்.பி.ட.பிள்யூ மூலமாகவும் கிடைத்தது. கிழக்கு மண்டலம் ஆல்அவுட் ஆனதும், இன்றைய 2ஆவது நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது.
மற்றொரு காலிறுதியில் மத்திய மண்டலம்- வடகிழக்கு மண்டலம் அணிகள் விளையாடி வருகின்றன. முதலில் பேட்டிங் செய்த மத்திய மண்டலம் 532 ரன்கள் குவித்து முதல் இன்னிங்சை டிக்ளேர் செய்தது. பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய வடகிழக்கு மண்டலம் இன்றைய 2ஆவது நாள் ஆட்ட முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 168 ரன்கள் அடித்துள்ளது. வடக்கு மண்டல அணியின் டேனிஷ் மாலேவர் 203 ரன்கள் விளாசினார். ரஜத் படிதார் 125 ரன்களும், யாஷ் ரதோட் ஆட்டமிழக்காமல் 87 ரன்களும் எடுத்தனர்.
ஜம்மு-காஷ்மீரைச் சேர்ந்த இவருக்கு 28 வயதாகிறது. 29 முதல்தர போட்டிகளில் விளையாடி 90 விக்கெட்டுகள் கைப்பற்றியுள்ளார். 29 லிஸ்ட் ஏ போட்டிகளில் 42 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார்.
- மத்திய மண்டலம் அணி 2 விக்கெட் இழப்பிற்கு 432 ரன்கள் குவித்துள்ளது.
- வடக்கு மண்டலம் 6 விக்கெட் இழப்பிற்கு 308 ரன்கள் அடித்துள்ளது.
துலீப் டிராபி காலிறுதி போட்டிகள் இன்று தொடங்கின. பெங்களூருவில் நடைபெற்று வரும் ஒரு காலிறுதி போட்டியில் மத்திய மண்டலம்- வடகிழக்கு மண்டலம் அணிகள் விளையாடி வருகின்றன.
டாஸ் வென்ற வடகிழக்கு மண்டலம் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி மத்திய மண்டல அணி முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணியின் தொடக்க வீரர் ஆயுஷ் பாண்டே 3 ரன்னில் வெளியேறினார். மற்றொரு தொடக்க வீரர் ஆர்யன் ஜுயல் 60 ரன்கள் எடுத்த நிலையில் ரிட்டையர்டு ஹர்ட் மூலம் வெளியேறினார்.
அடுத்து டேனிஷ் மாலேவார் உடன் கேப்டன் ரஜத் படிதார் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. ரஜத் படிதார் 96 பந்தில் 21 பவுண்டரி, 3 சிக்சருடன் 125 ரன்கள் விளாசினார். மறுமுனையில் விளையாடிய டேனிஸ் வாலேவார் சதம் அடித்ததுடன், இரட்டை சதம் நோக்கி முன்னேறினார். அவர் 219 பந்தில் 198 ரன்கள் எடுத்திருந்த நிலையில் முதல்நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது. அவருடைய ஸ்கோரில் 35 பவுண்டரிகள், 1 சிக்சர் அடங்கும். முதல்நாள் ஆட்ட முடிவில் மத்திய மண்டலம் 2 விக்கெட் இழப்பிற்கு 432 ரன்கள் குவித்துள்ளது.
பெங்களூருவில் நடைபெற்று வரும் மற்றொரு காலிறுதியில் வடக்கு மண்டலம்- கிழக்க மண்டலம் அணிகள் மோதி வருகின்றன. டாஸ் வென்ற கிழக்கு மண்டல அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.
வடக்கு மண்டல அணி வீரர்கள் அதிக ரன்கள் குவிக்கவில்லை என்றாலும், குறிப்பிடத்தகுந்த வகையில் ரன்கள் சேர்த்தனர். அதேவேளையில் விக்கெட்டுகளையும் இழந்தனர்.
ஷுபம் கஜூரியா 26 ரன்களும், அன்கித் குமார் 30 ரன்களும், யாஷ் துல் 39 ரன்களும், ஆயுஷ் படோனி 68 ரன்களும், நிஷாந்த் சிந்து 47 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். வடக்கு மண்டலம் 75.2 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 308 ரன்கள் எடுத்திருக்கும்போது மழை குறுக்கீடு செய்தது. இதனால் ஆட்டம் நிறுத்தப்பட்டுள்ளது. ஏறக்குறை இத்துடன் முதல்நாள் ஆட்ட நிறைவடைய வாய்ப்புள்ளது. கணையா வதாவன் 42 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார். கிழக்கு மண்டலம் அணி சார்பில் மணிஷி 3 விக்கெட் வீழ்த்தியுள்ளார்.
- இந்த தொடருக்கான கிழக்கு மண்டல அணியின் கேப்டனாக இஷான் கிஷன் நியமிக்கப்பட்டிருந்தார்.
- இஷான் கிஷன் விலகிய நிலையில் கிழக்கு மண்டல அணியின் கேப்டனாக அபிமன்யு ஈஸ்வரன் நியமிக்கப்பட்டுள்ளார்.
புதுடெல்லி:
இந்தியாவில் நடைபெறும் உள்ளூர் கிரிக்கெட் தொடர்களில் ஒன்றான துலீப் கோப்பை கிரிக்கெட் தொடரின் நடப்பு சீசன் வரும் 28-ம் தேதி முதல் பெங்களூருவில் தொடங்கவுள்ளது. இதில் மேற்கு மண்டலம் மற்றும் தெற்கு மண்டல அணிகள் நேரடியாக அரையிறுதிக்கு தகுதிப்பெற்றுள்ளன.
வடக்கு மண்டலம், கிழக்கு மண்டலம், வடகிழக்கு மண்டலம் மற்றும் மத்திய மண்டல அணிகள் பிளே ஆப் (காலிறுதி) போட்டிகளில் விளையாடவுள்ளது. இந்த தொடருக்கான கிழக்கு மண்டல அணியின் கேப்டனாக இஷான் கிஷன் நியமிக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில், துலீப் டிராபி தொடரில் இருந்து இஷான் கிஷன் நீக்கப்பட்டுள்ளார். காயம் காரணமாக அவர் தொடரில் இருந்து விலகி உள்ளதாக ஒடிசா கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. அவருக்கு ஆஷிர்வாட் ஸ்வைன் மாற்று வீரராக சேர்க்கப்பட்டுள்ளார்.
இதனால் கிழக்கு மண்டல அணியின் கேப்டனாக அபிமன்யு ஈஸ்வரன் நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.






