என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    துலீப் டிராபி: 4 பந்துகளில் 4 விக்கெட் வீழ்த்திய ஜம்மு-காஷ்மீர் வீரர்..!
    X

    துலீப் டிராபி: 4 பந்துகளில் 4 விக்கெட் வீழ்த்திய ஜம்மு-காஷ்மீர் வீரர்..!

    • இரண்டு விக்கெட்டுகள் எல்.பி.டபிள்யூ மூலம் கிடைத்தது.
    • இரண்டு விக்கெட்டுகள் போல்டு மூலம் கிடைத்தது.

    துலீப் கிரிக்கெட் காலிறுதியில் வடக்கு மண்டலம்- கிழக்கு மண்டலம் அணிகள் விளையாடி வருகின்றன. முதலில் பேட்டிங் செய்த வடக்கு மண்டலம் முதல் இன்னிங்சில் 405 ரன்கள் குவித்தது. அந்த அணியின் ஆயுஷ் படோனி அதிகபட்சமாக 76 ரன்கள் சேர்த்தார்.

    பின்னர் கிழக்கு மண்டலம் முதல் இன்னிங்சை தொடங்கியது. தொடக்க வீரர் உத்கார்ஷ் சிங் 38 ரன்களில் ஆட்டமிழந்தார். ரியான் பராக் 39 ரன்கள் அடித்தார். விராட் சிங் 69 ரன்கள் சேர்க்க மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க 230 ரன்னில் சுருண்டது.

    வடக்கு மண்டல பந்து வீச்சாளர் அக்யூப் நபி அபாரமாக பந்து வீசி தொடர்ச்சியாக கடைசி நான்கு விக்கெட்டுகளையும் 4 பந்தில் வீழ்த்தி அசத்தினார். இதன்மூலம் இந்தியாவில் நடைபெறும் முதல்தர கிரிக்கெட்டில் தொடர்ச்சியாக 4 பந்தில் 4 விக்கெட் வீழ்த்திய 4ஆவது வீரர் என்ற பெருமையை பெற்றார். அக்யூப் நபி 10.1 ஓவர்கள் வீசி 28 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 5 விக்கெட் சாய்த்தார். ஆட்டத்தின் 53ஆவது ஓவரை வீசினார். இந்த ஓவரின் 4, 5, மற்றும் 6ஆவது பந்தில் விக்கெட்டுகள் வீழ்த்தினார். பின்னர் 57ஆவது ஓவரை வீசினார். இந்த ஓவரின் முதல் பந்தில் விக்கெட் வீழத்தினார். இரண்டு விக்கெட்டுகள் போல்டு மூலமாகவம், இரண்டு விக்கெட்டுகள் எல்.பி.ட.பிள்யூ மூலமாகவும் கிடைத்தது. கிழக்கு மண்டலம் ஆல்அவுட் ஆனதும், இன்றைய 2ஆவது நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது.

    மற்றொரு காலிறுதியில் மத்திய மண்டலம்- வடகிழக்கு மண்டலம் அணிகள் விளையாடி வருகின்றன. முதலில் பேட்டிங் செய்த மத்திய மண்டலம் 532 ரன்கள் குவித்து முதல் இன்னிங்சை டிக்ளேர் செய்தது. பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய வடகிழக்கு மண்டலம் இன்றைய 2ஆவது நாள் ஆட்ட முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 168 ரன்கள் அடித்துள்ளது. வடக்கு மண்டல அணியின் டேனிஷ் மாலேவர் 203 ரன்கள் விளாசினார். ரஜத் படிதார் 125 ரன்களும், யாஷ் ரதோட் ஆட்டமிழக்காமல் 87 ரன்களும் எடுத்தனர்.

    ஜம்மு-காஷ்மீரைச் சேர்ந்த இவருக்கு 28 வயதாகிறது. 29 முதல்தர போட்டிகளில் விளையாடி 90 விக்கெட்டுகள் கைப்பற்றியுள்ளார். 29 லிஸ்ட் ஏ போட்டிகளில் 42 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார்.

    Next Story
    ×