என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    ஆசிய கோப்பை தொடர்: கில்- ஜெய்ஸ்வாலுக்கு இடமில்லை.. இந்திய அணியை தேர்வு செய்த முன்னாள் வீரர்
    X

    ஆசிய கோப்பை தொடர்: கில்- ஜெய்ஸ்வாலுக்கு இடமில்லை.. இந்திய அணியை தேர்வு செய்த முன்னாள் வீரர்

    • தொடக்க வீரர்களாக அபிஷேக் சர்மா மற்றும் சஞ்சு சாம்சனைத் தேர்வு செய்துள்ளார்.
    • அவரது அணியில் சுப்மன் கில், யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் ரிங்கு சிங் ஆகியோரை புறக்கணித்துள்ளார்.

    ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரானது செப்டம்பர் 9-ம் தேதி முதல் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறவுள்ளது. இத்தொடரில் குரூப் ஏ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், ஐக்கிய அரபு அமீரகம், நேபாள் ஆகிய அணிகள் இடம்பிடித்துள்ளன. அதேசமயம், குரூப் பி பிரிவில் இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான் மற்றும் ஹாங்காங் அணிகளும் இடம்பிடித்துள்ளன.

    ஐபிஎல் தொடருக்கு பிறகு இந்திய அணி விளையாடும் டி20 தொடர் என்பதால், இந்த அணியில் யார் யார் இடம் பிடிப்பார்கள் என்ற எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளன.

    இந்த நிலையில் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரரும், பிரபல வர்ணனையாளருமான ஹர்ஷா போக்லே ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணியை தேர்வு செய்துள்ளார்.

    அவர் தேர்வு செய்துள்ள இந்த அணியில் தொடக்க வீரர்களாக அபிஷேக் சர்மா மற்றும் சஞ்சு சாம்சனைத் தேர்வு செய்துள்ளார். அதேசமயம் 3-ம் இடத்தில் திலக் வர்மாவையும், 4-ம் இடத்தில் சூர்யகுமார் யாதவை தேர்வு செய்துள்ளார்.

    ஆல் ரவுண்டர்களில் ஹர்திக் பாண்ட்யா, அக்சர் படேல் மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகியோரைத் தேர்ந்தெடுத்துள்ள அவர், பந்துவீச்சாளர்களாக ஜஸ்பிரித் பும்ரா, வருண் சக்ரவர்த்தி, பிரசித் கிருஷ்ணா, அர்ஷ்தீப் சிங், ரவி பிஷ்னோய் மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோரை அணியில் சேர்த்துள்ளார்.

    இருப்பினும் அவரது அணியில் சுப்மன் கில், யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் ரிங்கு சிங் ஆகியோரை புறக்கணித்துள்ளார்.

    ஹர்ஷா போக்லே தேர்வு செய்த இந்திய அணி:-

    அபிஷேக் சர்மா, சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), திலக் வர்மா, ஸ்ரேயாஸ் ஐயர், ஹார்திக் பாண்ட்யா, அக்சர் படேல், வாஷிங்டன் சுந்தர், சஞ்சு சாம்சன், ஜிதேஷ் சர்மா, ஜஸ்ப்ரீத் பும்ரா, வருண் சக்ரவர்த்தி, பிரசித் கிருஷ்ணா, அர்ஷ்தீப் சிங், ரவி பிஷ்னோய், குல்தீப் யாதவ்.

    Next Story
    ×