என் மலர்tooltip icon

    விளையாட்டு

    இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையில் நடைபெற இருக்கும் நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் ஆஷஸ் தொடரை போன்றதாகும் என டிம் பெய்ன் தெரிவித்துள்ளார்.
    சர்வதேச கிரிக்கெட் கமிட்டி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் என்ற தொடரை அறிமுகம்படுத்தியது. டெஸ்ட் போட்டிகள் விளையாடும் ஒன்பது அணிகள் 2019 ஆகஸ்ட் மாதத்தில் இருந்து 2021 ஜூன் வரை 72 போட்டிகளில் விளையாடும். இதனடிப்படையில் புள்ளிகள் பட்டியலில் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதி போட்டிக்கு முன்னேறும்.

    இறுதி போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற இருக்கிறது. தற்போது கொரோனா வைரஸ் தொற்று காரணமாக ஆஸ்திரேலியா ஆறு மாதத்திற்கு நாட்டின் எல்லையை மூடியுள்ளது. ஆகவே செப்டம்பர் மாதம்தான் ஆஸ்திரேலியாவில் விளையாட்டு போட்டிகளை பார்க்க முடியும்.

    கொரோனா வைரசின் தொற்று ஒருவேளை முன்னதாகவே கட்டுப்படுத்தப்பட்டால் நிலைமை மாறலாம். இதனால் ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிகள் பாதிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இதற்கிடையே இந்த வருடம் இறுதியில் இந்தியா ஆஸ்திரேலியா சென்று நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இந்தத் தொடரில் சிறப்பாக விளையாடி போட்டிகளில் வெற்றி பெற்றால்தான் புள்ளிகள் பட்டியலில் நம்பர் ஒன் இடத்தை இரு அணிகளும் பிடிக்க முடியும்.

    மேலும் கடந்த முறை இந்தியா ஆஸ்திரேலிய மண்ணில் முதன்முறையாக டெஸ்ட் தொடரை கைப்பற்றி சாதனைப் படைத்தது. இதற்கு பதிலடி கொடுக்க ஆஸ்திரேலியா விரும்புகிறது.

    இதனால் இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான டெஸ்ட் தொடர் ஆஷஸ்க்கு இணையானதாக இருக்கும் என ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் டிம் பெய்ன் தெரிவித்துள்ளார்.

    டிம் பெய்ன் இதுகுறித்து கூறுகையில் ‘‘நாங்கள் டெஸ்ட் கிரிக்கெட் விளையாடுவது வெற்றி பெறுவதற்காக. ஒவ்வொரு டெஸ்ட் போட்டியும் முக்கியமானது. எங்களுடைய நோக்கம் டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டிக்கு முன்னேற வேண்டும் என்பதுதான். ஆகவே அவர்கள் என்ன செய்தார்கள் என்னதை விட புள்ளிகள் முக்கியமானது, டெஸ்ட் போட்டி முக்கியமானது. ஆகவே கடந்த முறை என்ன நடந்தது என்று நினைக்காமல் தற்போது நடக்க வேண்டியதில் கவனம் செலுத்துவோம்.

    தற்போது நாங்கள் மிகவும் வேறுபட்ட அணி. அவர்களுடைய அணியும் சற்று வித்தியாசமானதுதான் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால் இரண்டும் தரனமான அணிகள். இது மிகவும் எதிர்பார்க்கக்கூடிய தொடராக இருக்கும். ஏனென்றால் இதற்கு முன் இப்படி கிரிக்கெட்டின் தரத்தை பார்க்கும் நிலை இல்லாமல் இருந்தது. இதனால் இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான தொடர் சற்று ஆஷஸ் தொடர் போன்று இருக்கும். நாங்கள் இதை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம்’’ என்றார்.
    கங்குலி தலைமையின் கீழ் விளையாடிய காலக்கட்டத்தில்தான் அதிகமான நினைவுகள் சம்பவங்கள் உள்ளன என்று யுவராஜ் சிங் தெரிவித்துள்ளார்.
    இந்திய அணியின் முன்னணி மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனாக திகழ்ந்தவர் யுவராஜ் சிங். எம்எஸ் டோனி தலைமையின் கீழ் இவர் விளையாடும்போதுதான் 2011-ல் இந்தியா 50 ஓவர் உலக கோப்பையையும், 2007-ல் டி20 உலக கோப்பையையும் கைப்பற்றியது. 2011 உலக கோப்பையின்போது தொடர் நாயகன் விருதை பெற்றார்.

    இருந்தாலும் கங்குலி தலைமையின் கீழ் விளையாடும்போதுதான் நினைத்துப் பார்க்கக்கூடிய ஏராளமான சம்பவங்கள் உள்ளன என்று யுவராஜ் சிங் தெரிவித்துள்ளார்.

    17 வருடங்கள் சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடிய யுவராஜ் சிங் இதுகுறித்து கூறுகையில் ‘‘நான் சவுரவ் கங்குலி தலைமையின் கீழ் விளையாடும்போது அவரிடம் இருந்து அதிக அளவில் ஆதரவு கிடைத்தது. அவரது கேப்டன்ஷிப்பில் விளையாடியபோது நினைத்து பார்க்கக்கூடிய ஏராளமான சம்பவங்கள் உள்ளன. ஏனென்றால் அவர் எனக்கு ஆதரவு கொடுத்தார். அவர் அளித்தது போன்ற ஆதரவு எம்எஸ் டோனி மற்றும் விராட் கோலியிடம் இருந்து கிடைக்கவில்லை.

    முத்தையா முரளீதரன் பந்தை எதிர்கொள்வதற்கு நான் மிகப்பெரிய அளவில் திணறினேன். அவரது பந்தை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்பது குறித்து எந்த யுக்தியும் தெரியவில்லை. அப்புறம் சச்சின் தெண்டுல்கர் என்னிடம் வந்து, ஸ்வீப்பிங் ஆடக் கூறினார். எனக்க அதன்பின் எளிதாக இருந்தது.

    அவுட் ஸ்விங் பவுலிங் மூலம் மெக்ராத் எனக்கு மிகப்பெரிய அளவில் நெருக்கடி கொடுத்தார். அதிர்ஷ்டம், நான் டெஸ்ட் போட்டிகளில் அவருக்கு எதிராக விளையாடவில்லை. வெளியில் இருந்து ஆட்டத்தை பார்த்து சீனியர் வீரர்களை உற்சாக மூட்டிக் கொண்டிருந்தேன்’’ என்றார்.
    இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தலைவரான கங்குலி லாக்டவுன் ஆன இந்த நேரத்தை வீட்டில் எப்படி செலவிடுகிறார் என்பதை அவரது மனைவி விவரித்துள்ளார்.
    கொரோனா வைரஸ் தொற்று இந்தியாவை மட்டுமல்ல உலகத்தையே முடக்கியுள்ளது. ஏறக்குறைய அனைத்து நாடுகளும் விமான போக்குவரத்தை ரத்து செய்துள்ளன. மேலும் நாட்டின் எல்லைகளை மூடியுள்ளது. இதனால் கூலித் தொழிலாளர்களில் இருந்து பெரும் தொழில்அதிபர்கள் வரை வீட்டிலேயே முடங்கியுள்ளனர்.

    விளையாட்டு வீரர்களும், அதிகாரிகளுக்கும் இதே நிலைமைதான். இந்நிலையில் எப்போதும் பரபரப்பாக செயல்பட்டு கொண்டிருக்கும் பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி வீட்டில் இருப்பதை குறித்து அவரது மனைவி டோனா விவரித்துள்ளார்.

    பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி வீட்டிற்குள்ளேயே இருப்பது குறித்து அவரது மனைவி டோனா கூறுகையில் ‘‘இதுபோன்று நீண்ட நாட்கள் சவுரவ் கங்குலி வீட்டில் இருந்த சம்பவத்தை என்னால் நினைவுப்படுத்த முடியவில்லை. ஆண்டு முழுவதும் அவருக்கு பரபரப்பான பயண அட்டவணை இருந்து கொண்டே இருக்கும்.

    தற்போது அவர் காலையில் மிகவும் தாமதமாக எழுந்திருக்கிறார். குறிப்பிட்ட நேரத்தை ஜிம்மில் செலவிடுகிறார். பெரும்பாலான நேரம் வீட்டிலேயே இருந்து படம் பார்க்கிறார். எங்களுடன் பேசிக் கொண்டிருக்கிறார்.

    பெரும்பாலான படங்களை நெட்பிளிக்ஸ் மூலம் பார்க்கிறார். இன்று ஆர்ட்டிக்கிள் 15 படத்தை பார்த்தார். முன்னதாக எங்கள் மகள் சானாதான் அடிக்கடி படம் பார்ப்பாள். தற்போது நாங்கள் எல்லோரும் படம் பார்க்கிறோம். நேற்று ‘தி பிரேக்-அப்’ படத்தை பார்த்தோம். எங்களுக்கு பிடித்த படங்களை மற்றவர்களுக்கு தெரியப்படுத்துவோம்’’ என்றார்.
    ஊழல் தடுப்பு விதிமுறைகளை கடுமையான வகையில் கடைபிடிக்கும் வகையில் வீரர்கள் ஸ்மார்ட்வாட்ச்கள் பயன்படுத்தத் தடை விதிக்க இங்கிலாந்து கிரிக்கெட் போர்டு முடிவு செய்துள்ளது.
    கிரிக்கெட் வீரர்கள் சிலர் சூதாட்டத்தில் ஈடுபடுகின்றனர். இதனால் ஒட்டுமொத்த கிரிக்கெட் மீதும் ரசிகர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஒவ்வொரு நாடுகளும் ஊழல் கண்காணிப்புக்குழுவை ஏற்படுத்தி சூதாட்ட தரகர்கள் வீரர்களை தொடர்பு கொள்ளாத வண்ணம் கண்காணித்து வருகிறார்கள்.

    இங்கிலாந்தில் நடைபெற்று வரும் கவுன்ட்டி கிரிக்கெட் போட்டிகள் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகின்றனர். இந்த போட்டிகளில் விளையாடும் வீரர்கள் ஸ்மார்ட்வாட்ச்கள் பயன்படுத்தி வருகின்றனர். ஸ்மார்ட்வாட்ச்கள் மூலம் தகவல்களை எளிதாக பரிமாற்றிக் கொள்ள முடியும். இதன்மூலம் தரகர்கள் வீரர்களை தொடர்பு கொள்ளக்கூடும் என இங்கிலாந்து கிரிக்கெட் போர்டு நினைக்கிறது.

    இதனால் போட்டியின் நம்பகத்தன்மையை அதிகரிக்கும் வகையில் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்படும் போட்டிகளில் பங்கேற்கும் வீரர்கள் ஸ்மார்ட்வாட்ச்கள் பயன்படுத்த தடைவிதிக்க முடிவு செய்துள்ளது. வீரர்களின் டிரெஸ்சிங் அறை, பால்கனிகள், தங்குமிடத்தில் பயன்படுத்த தடைவிதிக்கப்பட்டுள்ளது.
    நியூயார்க்கில் கொரோனா வைரஸ் தொற்றின் பாதிப்பு அதிகமாக இருப்பதால் அமெரிக்கா ஓபன் டென்னிஸ் நடைபெறும் வளாகம் தற்காலிக மருத்துவமனையாக மாற இருக்கிறது.
    கொரோனா வைரஸ் உலகளில் மிகப்பெரிய அச்சுறுத்தலாக விளங்கி வருகிறது, தொடக்க காலத்தில் அமெரிக்கா போதுமான அளவு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காத காரணமாக தற்போது இத்தாலி, சீனாவை விட கொரோனா தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை அமெரிக்காவில்தான் அதிகம்.

    தற்போது வரை ஒரு லட்சத்து 66 ஆயிரத்து 214 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். பலி எண்ணிக்கை 3 ஆயிரத்தை தாண்டியுள்ளது. இதில் நியூயார்க்கில் மட்டும் பாதிக்கப்பட்டவர்கள், பலியானோர் எண்ணிக்கை பாதியாகும். இதனால் நியூயார்க் நிர்வாகம் என்ன செய்வது என்று தெரியாமல் தத்தளித்து வருகிறது.

    மருத்துவமனையில் இடம் இல்லாமல் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் தவித்து வருகிறார்கள். வரிசையில் நின்ற படுக்கையை உறுதி செய்ய வேண்டிய அவல நிலை ஏற்பட்டுள்ளது. வென்டிலேட்டர்கள் பற்றாக்குறையால் நிலைமை கட்டுக்கடங்காமல் சென்று கொண்டிருக்கிறது.

    இதனால் உலகின் பல இடங்களில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள கப்பல்களை வரவழைத்து தற்காலிக மருத்துவமனையாக மாற்ற அமெரிக்கா திட்டுமிட்டுள்ளது. மேலும் பொது இடங்களான பூங்கா போன்றவற்றில் அவசர மருத்துவமனை தயார்படுத்த ஏற்பாடு நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில் டென்னிஸ் மிகப்பெரிய போட்டியாக கருதப்படும் அமெரிக்க ஓபன் நடைபெறும் வளாகம் மிகப்பெரியது. இந்த இடத்தில் உள்ள உள்விளைாட்டு அரங்கத்தை தற்காலிக மருத்துவமனையாக மாற்ற அமெரிக்க டென்னிஸ் அசோசியேசன் சம்மதம் தெரிவித்துள்ளது. இதனால் 350 படுக்கைகள் கொண்ட மருத்துவமனையாக மாற்றப்படுகிறது.

    இதுகுறித்து அமெரிக்க டென்னிஸ் அசோசியேசனின் செய்தி தொடர்பாளர் கிறிஸ் விட்மையர் கூறுகையில் ‘‘நாங்கள் இங்கே உதவி செய்வதற்காக இருக்கிறோம். இதைத்தவிர வேறு ஏதும் இல்லை. நியூயார்க் எங்கள் வீடு. இதில் நாங்கள் அனைவரும் ஒருங்கிணைந்து இருப்போம்’’ என்றார்.

    நியூயார்க் நகர அவரசநிலை மேலாண்மை இந்ததிட்டத்தை நேற்று தெரிவித்திருந்தது. இந்த நிலையில் தற்போது இடம் வழங்கப்பட்டுள்ளது. நியூயார்க் நகர அவரசநிலை மேலாண்மை செய்தி தொடர்பாளர் இதுகுறித்து கூறுகையில் ‘‘இந்த இடம் கொரோனா வைரஸ் தொற்று இல்லாதவர்களுக்காக பயன்படுத்தப்படலாம். ஆனால் தேவையைப் பொறுத்து மதிப்பீடு செய்வோம். ஐந்து நகரங்களில் மருத்துவமனைகளை அதிகரிப்பதற்கான இடத்தை கண்டறிந்துள்ளோம்’’ என்றார்.
    டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கான மறுதேதி அறிவிக்கப்பட்டுள்ளதால் அதற்கான திட்டமிடுதலை தொடங்குங்கள் என தேசிய விளையாட்டு பெடரேசன்களை ஐஓஏ கேட்டுக்கொண்டுள்ளது.
    இந்தியாவில் ஒவ்வொரு விளையாட்டுக்கும் தனித்தனியாக பெடரேசன் உள்ளது. ஒலிம்பிக் போட்டிக்கென இந்திய ஒலிம்பிக் அசோசியேசன் உள்ளது. இதன் ஆலோசனைப்படி ஒலிம்பிக் போட்டிகளுக்கு அந்தந்த பெடரேசன் தயாராகும்.

    ஒரு ஒலிம்பிக் தொடர் முடிந்த உடன் நான்கு ஆண்டுகள் கழித்து நடைபெற இருக்கும் ஒலிம்பிக் போட்டிக்கான திட்டமிடல் தொடங்கிவிடும்.

    அதன்படி 2016-ல் பிரேசிலில் நடைபெற்ற ஒலிம்பிக் தொடருக்குப்பின் இந்த ஆண்டு டோக்கியோவில் நடைபெற இருந்த ஒலிம்பிக் போட்டிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் அந்தந்த பெடரேசன்கள் செய்து வந்தன. இந்நிலையில் ஒலிம்பிக் போட்டி அடுத்த ஆண்டு தள்ளி வைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது.

    இதனால் ஒலிம்பிக் போட்டிக்கான திட்டமிடுதலை மாற்றியமைக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கான வேலையை உடனடியாக தொடங்குங்கள் என இந்திய ஒலிம்பிக் அசோசியேசன் தேசிய பெடரேசன்களை கேட்டுக்கொண்டுள்ளது.

    இந்தியா சார்பில் தடகளம், வில்வித்தை, குத்துச்சண்டை, குதிரையேற்றம், ஹாக்கி, துப்பாக்கிசுடுதல், மல்யுத்தம் விளையாட்டுகளில் இருந்து சுமார் 80 பேர் ஒலிம்பிக் போட்டிகயில பங்கேற்ற தகுதி பெற்றுள்ளனர்.
    பாகிஸ்தான் சூப்பர் லீக்கில் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்திய 19 வயதேயான ஹைதர் அலி, ரோகித் சர்மாதான் முன்மாதிரி என்று தெரிவித்துள்ளார்.
    தென்ஆப்பிரிக்காவில் நடைபெற்ற இளையோருக்கான 50 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட்டில் பாகிஸ்தான் அணியில் இடம் பிடித்திருந்தவர் ஹைதர் அலி. இவர் பாகிஸ்தான் சூப்பர் லீக் டி20-யில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 9 போட்டிகளில் 239 ரன்கள் விளாசினார்.

    இளம் வீரரான ஹைதர் அலி பாபர் அசாம் அல்லது விராட் கோலி போன்று வளர வாய்ப்புள்ளது என்று கிரிக்கெட் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.

    ஆனால் ரோகித் சர்மாதான் எனக்கு முன்மாதிரி என்று ஹைதர் அலி தெரிவித்துள்ளார். இதுகுறித்து ஹைதர் அலி கூறுகையில் ‘‘என்னுடைய முன்மாதிரி ரோகித் சர்மா. அவரைப் பற்றிய சிறந்த விஷயம், அவருடைய ஸ்டிரைக் ரேட்தான். என்னுடைய ஆட்டத்திலும் அப்படி இருக்க விரும்புகிறேன்’’ என்றார்.

    ஏற்கனவே, நான் விராட் கோலியை போன்று விளையாட விரும்பவில்லை. பாபர் அசாம் போன்று விளையாட விரும்புகிறேன் என்று தெரிவித்திருந்தார்.
    பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் அனுபவ வீரரான முகமது ஹபீஸ், ஓய்வுக்கு முன் டி20 உலக கோப்பையில் விளையாட வேண்டும் என விருப்பம் தெரிவித்துள்ளார்.
    பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் மூத்த வீரர்களில் ஒருவர் முகமது ஹபீஸ். 39 வயதாகும் இவர் டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வு பெற்றுள்ளார். தற்போது ஒயிட்பால் கிரிக்கெட்டில் மட்டும் விளையாடி வருகிறார்.

    ஆஸ்திரேலியாவில் நடைபெற இருக்கும் டி20 உலக கோப்பை தொடருக்குப்பின் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற இருப்பதாக தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து முகமது ஹபீஸ் கூறுகையில் ‘‘டி20 உலக கோப்பை தொடருக்குப்பின் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற முடிவு செய்துள்ளேன். அதன்பிறகு டி20 லீக்குகளில் விளையாடுவதில் கவனம் செலுத்துவேன். பயிற்சியாளராக பணியாற்ற வேண்டும் என்ற எண்ணம் உள்ளது. ஆனால் மன்தில் அது எப்போது உதிக்கும் என்பது குறித்து எனக்குத் தெரியாது’’ என்றார்
    இந்திய கிரிக்கெட் அணியில் சில சிறந்த பாடகர்கள் உள்ளனர் என்று சுழற்பந்து பந்து வீச்சாளர் சாஹல் நினைவு கூர்ந்துள்ளார்.
    கொரோனா வைரஸ் தொற்று காரணமாக கிரிக்கெட் போட்டி நடைபெறவில்லை. இதனால் வீரர்கள் வீட்டில் முடங்கிக் கிடக்கின்றனர். அப்போது சமூக வலைத்தளங்கள் மூலமாக ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளித்து வருகின்றன. சில வீரர்கள் ஆன்லைன் லைவ் மூலம் ரசிகர்களுடன் உரையாடி வருகின்றனர்.

    இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளரான சாஹல் இன்ஸ்ட்கிராம் மூலம் பாலிவுட் பாடகர் ராகுல் வைத்யா உடன் லைவ் செசனில் கலந்து கொண்டார். அப்போது சாஹல் கூறுகையில் ‘‘இந்திய அணியில் சில பாடகர்கள் இருந்தனர். சுரேஷ் ரெய்னா மிகவும் சிறப்பாக பாடுவார். அப்புறம் மோகித் சர்மாவும் சிறப்பாக பாடுவார். தற்போது அணியில் உள்ள ஹர்திக் பாண்ட்யா மோசம் என்று கூற முடியாது. நன்றாக பாடுவார்.

    நாம் கொரோனா வைரஸ் தொற்று குறித்து அதிக அளவில் பேசி வருகிறோம். ஆகவே மியூசிக் கற்றுக் கொள்வது, அதைப்பற்றி ஏன் பேசக்கூடாது உன நினை்கிறேன்’’ என்றார்.
    டி20 உலக கோப்பையை நடத்தும் திட்டத்தில் இருப்பதாகவும், இதுவரை தள்ளி வைப்பது குறித்து பேசவில்லை என்றும் ஐசிசி தெரிவித்துள்ளதால் ஐபிஎல் நடைபெறுவது சந்தேகம் எனத் தெரிய வந்துள்ளது.
    ஐபிஎல் 2020 சீசன் மார்ச் 29-ந்தேதி (நேற்றுமுன்தினம்) தொடங்குவதாக இருந்தது. ஆனால் கடந்த மாதம் இந்தியாவில் கொரோனா வைரஸ் காலடி எடுத்து வைத்தது. முன்னெச்சரிக்கை காரணமாக விளைாட்டு போட்டிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டன.

    ஆனால் ஐபிஎல் தொடர் மட்டும் ஏப்ரல் 15-ந்தேதி வரைக்கும் ஒத்தி வைக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் அடுத்த இரண்டு வாரங்களில் மிகப்பெரிய அளவில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    ஆனால், உலகளவில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திள்ளது. இதனால் உலகம் முழுவதும் கொரோனாவில் இருந்து எப்போது விடுபடும் என்பது யாருக்கும் தெரியவில்லை. இந்தியாவில் ஏப்ரல் 15-ந்தேதிக்குப்பின் என்ன நிலைமை என்று தெரிந்துவிடும். இதனால் ஐபிஎல் போட்டியின் நிலை குறித்து பிசிசிஐ இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படாமல் உள்ளது.

    அதேவேளையில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து போன்ற நாடுகளில் விளையாட்டு போட்டிகள் மீண்டும் நடப்பதற்கு குறைந்தது ஆறு மாதங்கள் ஆகும் என கூறப்படுகிறது. இதனால் ஐபிஎல் 2020 சீசன் நடைபெறும் சந்தேகம் எனத் தெரிகிறது.

    அதேவேளையில் ஆஸ்திரேலியாவில் அக்டோபர் 18-ந்தேதியில் இருந்து நவம்பர் 15-ந்தேதி வரை டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற இருக்கிறது. இந்தத் தொடர் தள்ளி வைக்கப்பட்டால் அக்டோபர்-நவம்பரில் ஐபிஎல் போட்டியை நடத்த வாய்ப்புள்ளது என பிசிசிஐ நினைக்கிறது.

    ஆனால், ஐசிசி டி20 உலக கோப்பை தொடரை தள்ளி வைக்குமா? என்று தெரியவில்லை. இதுகுறித்து பிசிசிஐ அதிகாரி ஐசிசி-யிடம் கேட்டதாகவும், அதற்கு ஐசிசி-யை தற்போது வரை உலக கோப்பையை நடத்தும் திட்டத்தல் உள்ளதாகவும், தள்ளிப்போடுவது குறித்து பேசவில்லை என்றும் தெரிவித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் ஐபிஎல் 2020 சீசன் நடைபெற வாய்ப்பில்லை என்பது ஏறக்குறைய உறுதியாகியுள்ளது.
    இந்திய டென்னிஸ் வீராங்கனையான சானியா மிர்சா கொரோனா வைரஸ் தொற்று ஊடரங்கு உத்தரவால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு உதவுவதற்காக 1.25 கோடி ரூபாய் நிதி திரட்டியுள்ளார்.
    கொரோனா வைரஸ் தொற்று உலகத்தையே அச்சுறுத்தி வருகிறது. இந்தியாவில் நோயை கட்டுப்படுத்த போராடி வரும் நிலையில் 21 நாள் ஊடரங்கு உத்தரவால் பொதுமக்கள் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு சாப்பாடு வழங்குதல் போன்ற அடிப்படை வசதிகளை தொண்டு நிறுவனங்கள், சமூக ஆர்வலர்கள் செய்து வருகிறார்கள்.

    இந்திய டென்னிஸ் வீராங்கனையான சானியா மிர்சா இதுபோன்று பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி வருகிறார். இதற்கென தன்னுடன் சிலரை இணைத்துக் கொண்டு சேவை செய்ய தொடங்கியுள்ளார். இதுவரை 1 லட்சம் பேருக்கு உதவும் வகையில் 1.25 கோடி ரூபாய் நிதி திரட்டியுள்ளதாகவும், 10 ஆயிரம் பேருக்கு உணவு அளித்துள்ளதாகவும் டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
    டெஸ்ட் கிரிக்கெட்டில் தொடக்க வீரராக களம் இறங்கி அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தும் மனநிலையை உருவாக்கியவர் சேவாக் அல்ல, அப்ரிடிதான் என்று வாசிம் அக்ரம் தெரிவித்துள்ளார்.
    ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் போட்டியை விட டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மிகவும் வித்தியாசமானது. டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் பயன்படுத்தப்படும் ரெட் பால் அதிக அளவில் ஸ்விங் ஆகும்.

    இதனால் தொடக்க பேட்ஸ்மேன்கள் முதல்நாள் மதிய உணவு இடைவேளை வரை தாக்குப்பிடித்தால் மிகப்பெரிய விஷயமாக பார்க்கப்படும். அப்படி நின்றாலும் அதிக ரன்கள் அடிப்பதில்லை. இந்த மனநிலையை மாற்றி தொடக்கத்தில் இருந்தே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி ரன்கள் குவிக்கும் மனநிலைக்கு போட்டியை மாற்றியதில் இந்திய அணியின் அதிரடி பேட்ஸ்மேன் சேவாக்குக்கு மிகப்பெரிய பங்கு உண்டு.

    இந்த யுக்தியை பயன்படுத்தி தொடக்க பந்து வீச்சாளர்களின் எண்ணத்தை சிதறடித்துவிடுவார். இந்த யுக்தியை பயன்படுத்திதான் இரண்டு முறை முச்சதம் அடித்துள்ளார்.

    ஆனால் தொடக்க பேட்ஸ்மேன்களின் மனநிலையை மாற்றியவர் சேவாக் அல்ல, அப்ரிடிதான் என பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சு ஜாம்பவான் வாசிம் அக்ரம் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து வாசிம் அக்ரம் கூறுகையில் ‘‘டெஸ்ட் கிரிக்கெட்டில் சேவாக் தாமதமாக வந்தார். ஆனால், 1999 - 2000-த்தில் டெஸ்ட் கிரிக்கெட்டில் தொடக்க பேட்ஸ்மேன்களின் மனநிலையை மாற்றியவர் ஷாகித் அப்ரிடி.

    நான் கூட அவருக்கு பந்து வீசினால் கூட, என்னால் அவரை ஆட்டமிழக்கச் செய்ய முடியும் என்பது எனக்குத் தெரியும். அதேவேளையில் என்னுடைய பந்தை பவுண்டரிக்கும் விரட்டுவார் என்பதும் தெரியும்.

    1999 - 2000 இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்வதற்கு முன் இம்ரான் கானுக்கு போன் செய்து, அவரிடம் ஒரு கேப்டனாக ஷாஹித் அப்ரிடியை இந்திய தொடருக்கான பாகிஸ்தான் அணியில் சேர்க்க விரும்புகிறேன் என்றேன். ஆனால், சில தேர்வுக்குழு உறுப்பினர்கள் அதற்கு எதிராக இருந்தனர்.

    அவர் என்னிடம், அப்ரிடியை கட்டாயம் கொண்டு செல்ல வேண்டும். அவரை தொடக்க வீரராக களம் இறக்கினால் ஒன்று அல்லது இரண்டு போட்டிகளில் வெற்றியைத் தேடித்தர முடியும் என்று கூறினார். நான் பொதுவாக இம்ரான் கானுடன் ஆலோசிப்பது உண்டு, அது தொடருக்கு முன்னதாகவும் இருக்கும். அல்லது தொடர் நடந்து கொண்டிக்கும்போதும் இருக்கும். அவருடைய ஆலோசனை எப்போதும் கைக்கொடுக்கும். சென்னை போட்டியில் அனில் கும்ப்ளே மற்றும் ஜோஷி ஆகியோரின் பந்து வீச்சை துவம்சம் செய்து 141 ரன்கள் விளாசினார்’’ என்றார்.

    சென்னை போட்டியில் பாகிஸ்தான் வெற்றி பெற்றதோடு தொடரை 2-1 என வென்றது. இருந்தாலும் ஷாஹித் அப்ரிடியால் தொடர்ந்து டெஸ்ட் அணியில் விளையாட முடியவில்லை. 27 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி சுமார் 500 ரன்களே அடித்துள்ளார். ஆனால் சேவாக் இந்திய அணிக்காக 104 போட்டிகளில் விளையாடி 23 சதங்கள் விளாசியுள்ளார்.
    ×