என் மலர்tooltip icon

    விளையாட்டு

    வீட்டிற்குள்ளேயே இருப்பதால் வெப்-சீரியஸை பார்க்கும் ஸ்ட்ரீமிங் வெப்சைட்டுகள், நெட்பிளிக்ஸ், அமேசான் உள்ளிட்ட பலவற்றின் சந்தாதாரராகியுள்ளேன் என பும்ரா தெரிவித்துள்ளார்.
    கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இந்தியாவில் 21 நாட்கள் ஊடரங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் கிரிக்கெட் போட்டிகள் ஏதும் நடைபெறவில்லை. ஆகவே வீரர்கள் வீட்டுக்குள்ளேயே முடங்கி கிடக்கின்றனர். இதனால் வெப்-சீரியஸ் பார்த்து நேரத்தை கழித்து வருகின்றனர்.

    மேலும் முன்னணி வீரர்கள் லைவ்-சாட் மூலம் தகவல்களை பகிர்ந்து கொண்டு ரசிகர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்து வருகின்றனர். இந்திய அணியின் தொடக்க பேட்ஸ்மேனும், முன்னணி வேகப்பந்து வீச்சாளருமான பும்ரா ஆகியோர் லைவ்-சாட்டின்போது பல தகவல்களை பகிர்ந்து கொண்டனர்.

    21 நாள் லாக்டவுன் காரணமாக வீட்டில் இருக்கும்போது வெப்-சீரிஸ் பார்த்து வருகிறேன் என்று பும்ரா தெரிவித்துள்ளார். இதுகுறித்து பும்ரா கூறுகையில் ‘‘இந்த நேரத்தில் அம்மாவுக்கு உதவி செய்து கொடுக்கிறேன். மேலும் கார்டனில் வேலைகள் செய்கிறேன். இது முற்றிலும் மாறுபட்ட அனுபவம்.

    ஒவ்வொரும் நாளும் எழுந்த பிறகு, என்ன செய்ய வேண்டும் என நினைக்கிறேன். தற்போது சில விஷேசமான செயலிகளை பார்த்து வருகிறேன். ஸ்ட்ரீமிங் வெப்சைட்டுகள், நெட்பிளிக்ஸ், அமேசான் போன்றவற்றில் தற்போது சந்தாதாரராகியுள்ளேன். தற்போது எல்லாவற்றையும் பார்க்க முயற்சி செய்து வருகிறேன்’’ என்றார்.
    மழையால் போட்டி பாதிக்கப்படும்போது கையாளப்படும் டக்வொர்த் லீவிஸ் விதியை உருவாக்கியவர்களில் ஒருவரான டோனி லீவிஸ் 78 வயதில் காலமானார்.
    ஒருநாள் கிரிக்கெட் போட்டி, டி20 கிரிக்கெட் போட்டிகளில் மழையால் பாதிக்கப்பட்டால் ‘ரிசர்வ் டே’ என அழைக்கப்படும் அடுத்த நாள் போட்டி தொடர்ந்து நடைபெறும். இதனால் நேரம் வீணாகுவதோடு ரசிகர்கள் மற்றும் ஒளிபரப்பாளர்களுக்கு சிரமம் ஏற்பட்டது.

    இதை கருத்தில் கொண்டு டோனி லீவிஸ் - பிராங்க் டக்வொர்த்து ஆகியோர் ஒன்றிணைந்து ஒரு கணக்கு பார்முலாவை உருவாக்கினர். முதல் அணி எத்தனை ஓவர்கள் விளையாடுகிறது. எவ்வளவு ரன்கள் அடித்துள்ளது. எவ்வளவு விக்கெட்டுக்களை இழந்தது என்பதை கணக்கில் கொண்டு சேஸிங் அணிக்கு எவ்வளவு ரன்கள் இலக்காக நிர்ணயிக்க வேண்டும் என்பதற்கான பார்முலாவை இவர்கள் உருவாக்கினர்.

    இந்த பார்முலாவை ஐசிசி ஏற்றுக்கொண்டு ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் போட்டிகளில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளனர். இருவரின் பெயரையும் சேர்த்து டக்வொர்த் லீவிஸ் என அதற்கு பெயரிட்டுள்ளனர்.

    அதை உருவாக்கியவர்களில் ஒருவரான டோனி லீவிஸ் 78 வயதில் காலமாகியுள்ளார். 1997-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட இந்த விதி 1999-ம் ஆண்டு நடைபெற்ற உலக கோப்பையில் நடைமுறைப்படுத்தப்பட்டது. இவரது மறைவுக்கு ஐசிசி இரங்கல் தெரிவித்துள்ளது.

    2014-ல் டி20-க்கும் சேர்த்து அந்த விதியில் பல மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. ஆஸ்திரேலியாவின் ஸ்டீவன் ஸ்டெர்னின் பெயரையும் சேர்த்து டக்வொர்த் லீவிஸ் ஸ்டெர்ன் விதி என பெயர் மாற்றப்பட்டுள்ளது.
    அமெரிக்காவின் நியூ ஜெர்சியில் உள்ள பள்ளிக்கூடத்தில் பேஸ்பால் விளையாட்டு ஆசிரியராக கொரோனா வைரஸ் தொற்றால் பலியாகியுள்ளார்.
    கொரோனா வைரஸ் அமெரிக்காவில் மிகத் தீவிரமாக பரவி வருகிறது. கொரேனா வைரஸ் தொற்று தாக்கியவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்தை தாண்டியுள்ள நிலையில் பலியானோரின் எண்ணிக்கை ஐந்தாயிரத்தை தாண்டியுள்ளது. நியூயார்க் நகரம்தான் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில் நியூஜெர்சியில் உள்ள கிளிஃப்சைட் பார்க் பள்ளியில் பேஸ்பால் பயிற்சியாளராக இருந்து வந்த 30 வயதேயான பென் லுடெரர் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்புக்குள்ளாகி உயிரிழந்துள்ளார்.

    உயிரிழந்த பென் லுடெரர் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவிப்பதாக பள்ளி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
    கொரோனாவால் விம்பிள்டன் டென்னிஸ் ரத்து செய்யப்பட்ட நிலையில், ஆகஸ்ட் 31-ந்தேதி தொடங்க இருக்கும் அமெரிக்க ஓபன் குறிப்பிட்ட தேதியில் நடக்கும் என அமைப்பாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளன.
    ஐரோப்பிய நாடுகளில் இத்தாலி, ஸ்பெயின், பிரான்ஸ் ஆகிய நாடுகள் கொரோனா வைரசால் மிகவும் பாதிப்புக்குள்ளாகி உள்ளன. ஒவ்வொரு நாளும் இந்த நாடுகளில் 500-க்கு மேற்பட்டோர் பலியாகி வருகின்றனர்.

    ஆனால் யாரும் எதிர்பார்க்காத வகையில் இங்கிலாந்தில் நேற்று ஒரே நாளில் 500-க்கு மேற்பட்டோர் பலியாகினர். இது அந்த நாட்டு மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. கொரோனா வைரஸ் தொற்று எப்படியும் இன்னும் ஒரு மாதத்திற்குள் குறைந்துவிடும் என்று நினைத்திருந்த விளையாட்டு அமைப்பாளர்களுக்கு இது மிகப்பெரிய அதிர்ச்சிசை அளித்தது.

    இதனால் உடனடியாக விம்பிள்டன் டென்னிஸ் தொடர் ரத்து செய்யப்பட்டது. ஐரோப்பிய நாடுகளுக்கு இடையில் நடைபெறும் ஒட்டு மொத்த கால்பந்து தொடர்களும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன.

    ஐரோப்பா நாடுகளைத் தொடர்ந்து தற்போது கொரோனா வைரஸ் தொற்று அமெரிக்காவை உலுக்கி வருகிறது. இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இரண்டு லட்சத்தை தாண்டியுள்ள நிலையில், பலியானோர் எண்ணிக்கை 5112 ஆக உயர்ந்துள்ளது.

    குறிப்பாக நியூயார்க்கில் நகரில் மட்டும் 50 சதவிகிதம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் அமெரிக்காவில் கொரோனாவின் தாக்கம் எப்போது அடங்கும் என்று தெரியவில்லை.

    இந்நிலையில் ஆகஸ்ட் 31-ந்தேதி தொடங்க இருக்கும் அமெரிக்க ஓபன் இதுவரை நடைபெறுவதற்கான சாத்தியக்கூறுகளோடு சென்று கொண்டிருக்கிறது என்று அமைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

    இதுகுறித்து அமெரிக்கா டென்னிஸ் அசோசியேசன், ‘‘இந்த நேரம் வரை, அட்டவணைப்படி போட்டியை நடத்துவதற்கான எண்ணத்தோடுதான் அமெரிக்கா டென்னிஸ் அசோசியேசன் இருந்து வருகிறது. போட்டியை நடத்துவதற்கான திட்டங்களை தொடர்ந்து செய்து வருகிறோம்.

    நாங்கள் கொரோனா வைரஸ் தொற்றால் அதிரடியாக மாறிவரும் சூழ்நிலையை கண்காணித்து வருகிறோம். எதிர்பாரத வகையில் நடக்கும் நிகழ்வுகளை சமாளிக்க தயாராகிக் கொண்டு வருகிறோம்’’ எனத் தெரிவித்துள்ளது.
    கொரோனா வைரஸ் தொற்று காரணமாக வீட்டிற்குள்ளேயே முடங்கிக் கிடக்கும் வீரர்கள் தொடருக்கு தயாராக குறைந்தது ஆறு வாரங்கள் தேவை என தென்ஆப்பிரிக்கா கிரிக்கெட் போர்டு இயக்குனர் ஸ்மித் தெரிவித்துள்ளார்.
    கொரோனா வைரஸ் தொற்று காரணமாக சர்வதேச, உள்ளூர் என அனைத்து கிரிக்கெட் போட்டிகளிலும் நிறுத்தப்பட்டுள்ளன. இதனால் வீரர்கள் வீட்டிற்குள்ளேயே முடங்கிக் கிடக்கின்றனர். சிறிது நேரம் உடற்பயிற்சிக்குப்பின் சமூக வலைத்தளங்கள் மூலம் ரசிகர்களுடன் உரையாடி பொழுதை போக்குகின்றனர்.

    கொரோனா வைரஸ் தொற்று கட்டுப்பாட்டுக்குள் வந்த பின்னர் வீரர்கள் தயாராக குறைந்த 42 நாட்கள் ஆகும் என தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் போர்டின் இடைக்கால இயக்குனர் கிரேம் ஸ்மித் தெரிவித்துள்ளார்.

    கிரேம் ஸ்மித் கூறுகையில் ‘‘ஒவ்வொரு வாரமும் கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் குறித்து ஆராய்ந்து வருகிறோம். ஆனால், எந்தவொரு கிரிக்கெட் தொடருக்கும் வீரர்கள் தயாராக, அதற்கு முன் 42 நாட்கள் தேவை என்று மதிப்பிடுகிறோம்’’ என்றார்.

    தென்ஆப்பிரிக்கா அணி ஜூன் மாதத்தில் இலங்கை சென்று தலா மூன்று ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட இருக்கிறது. ஸ்மித் கூறுவதை வைத்து பார்த்தார் மே மாதத்தில் கொரோனா வைரஸ் தொற்று கட்டுப்பாட்டுக்கள் வந்தால் கூட இலங்கை தொடர் சாத்தியமில்லை.

    அதன்பின் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிராக டெஸ்ட் மற்றும் டி20 தொடரில் விளையாடுகிறது. இந்தத் தொடர் ஜூலை 15-ந்தேதிக்குப்பின் நடக்க இருக்கிறது. நிலைமை கட்டுக்குள் வந்தால் தென்ஆப்பிரிக்கா இந்தத் தொடரில் இருந்து கிரிக்கெட்டை தொடங்க வாய்ப்புள்ளது.
    டென்னிஸ் தொடர்களில் மிகவும் உயரியதாக கருதப்படும் விம்பிள்டன் டென்னிஸ் ரத்து செய்யப்பட்டுள்ளதாக ஆல் இங்கிலாந்து டென்னிஸ் கிளப் தெரிவித்துள்ளது.
    கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற போட்டிகளில் மிக உயரியதான கருதப்படுவது விம்பிள்டன் டென்னிஸ் தொடர். 134-வது விம்பிள்டன் டென்னிஸ் தொடர் ஜூன் 29-ந்தேதி முதல் ஜூலை 12-ந்தேதி வரை லண்டனில் நடத்தப்பட இருந்தது.

    கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இந்த போட்டியை ரசிகர்கள் இன்றி மூடப்பட்ட மைதானத்தில் நடத்தவோ அல்லது தள்ளிவைக்கப்படவோ சாத்தியமில்லை என்று போட்டி அமைப்பாளர்கள் ஏற்கனவே கூறியிருந்தனர். 

    நேற்று இங்கிலாந்தில் ஒரே நாளில் இந்த கொடிய கொரோனா வைரஸ் 500-க்கும் மேற்பட்டோர் உயிரை பறித்தது. தொற்று இங்கிலாந்திலும் மின்னல் வேகத்தில் பரவுவதால் வீரர்கள், ரசிகர்கள் உள்ளிட்டோரின் நலனை கருத்தில் கொண்டு விம்பிள்டனை ரத்து செய்வதாக ஆல் இங்கிலாந்து டென்னிஸ் கிளப் நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

    நூற்றாண்டு கால பழமைவாய்ந்த விம்பிள்டன் டென்னிஸ் போட்டி இதற்கு முன்பு முதலாவது மற்றும் 2-வது உலகப்போரின் போது ரத்து செய்யப்பட்டது.

    அதாவது 1945-ம் ஆண்டுக்கு பிறகு முதல் முறையாக விம்பிள்டனை நடத்த முடியாத நிலைமை உருவாகி இருக்கிறது. இதனால் சாம்பியன்கள் ஜோகோவிச், பெடரர், செரீனா வில்லியம்ஸ், ஹாலெப் போன்ற முன்னணி வீரர், வீராங்கனைகள் மிகுந்த ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
    ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்ற அங்கேரி நீச்சல் வீராங்கனை போக்லர்கா கபாஸ் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்.
    புடாபெஸ்ட்:

    கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் 203 நாடுகளை தாக்கியுள்ளது. இதுவரை 9 லட் சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டு உள்ளனர். 47ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகினர்.

    இந்த நிலையில் 2016-ம் ஆண்டு பிரேசிலில் உள்ள ரியோடி ஜெனிரோவில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்ற அங்கேரி நீச்சல் வீராங்கனை போக்லர்கா கபாஸ் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். இவர் ஒலிம்பிக்கில் 800 மீட்டர் பிரீஸ்டைல் பிரிவில் வெண் கலப்பதக்கம் பெற்று இருந்தார்.

    உலகச் சாம்பியனான அவருக்கு முதல் கட்ட சோதனையில் பாதிப்பு இல்லை என்று தெரியவந்தது. ஆனால் 2வது கட்ட சோதனையில் உறுதிசெய்யப்பட்டது. இதை அவர் சமூகவலைதளத்தில் தெரிவித்து உள்ளார். இதைப்போல மேலும் 8 நீச்சல் வீரர் வீராங்கனைகளுக்கு அந்நாட்டில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

    அங்கேரியில் கொரோனாவுக்கு 525 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 20 பேர் இறந்துள்ளனர்.

    அமெரிக்க டேவிஸ் கோப்பை அணியின் முன்னாள் கேப்டன் பாட்ரிக் மெக்கன்ரோவுக்கும் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. இவர் டென்னிஸ் ஜாம்பவானும், 7 முறை கிராண்ட்சிலாம் பட்டம் பெற்றவருமான ஜான் மெக்கன்ரோவின் இளைய சகோதரர் ஆவார்.

    கொரோனா அதிகம் பாதித்த நாடுகளில் முதன்மையாக இருப்பது அமெரிக்காவாகும். அங்கு 2 லட்சத்திற்கும் அதிகமானோரை இந்த வைரஸ் தாக்கி உள்ளது.
    இத்தாலியின் யுவென்டஸ் அணிக்காக விளையாடி வந்த அர்ஜென்டினா வீரர் பவுலோ டைபாலா, வீட்டிலேயே இருங்கள் என்பது பொய் அல்ல. மிகவும் கவனமாக இருங்கள் என வலியுறுத்தியுள்ளார்.
    கொரோனா வைரஸ் தொற்றுக் காரணமாக உலக நாடுகள் அஞ்சி நடுங்குகின்றன. இதுவரை தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்படாததால் பலி எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. குறிப்பாக இத்தாலியில் பலியானோரின் எண்ணிக்கை ஜெட் வேகத்தில் உயர்ந்து கொண்டு இருக்கிறது.

    இத்தாலியின் ‘செரி ஏ’ கால்பந்து லீக் அணியான யுவென்டஸ்க்காக விளையாடி வருபவர் அர்ஜென்டினாவின் இளம் வீரர் பவுலோ டைபாலா. இவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதனால் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. தற்போது கொரோனா என்ற அரக்கனின் பிடியில் இருந்து தப்பித்து வந்துள்ளார்.

    வீட்டிற்குள்ளேயே இருங்கள் (Stay at Home) இந்த வார்த்தைதான் கொரோனாவை கட்டுப்படுத்த தற்போது எல்லா நாடுகளும்  கடைபிடிக்க வேண்டிய ஒரே ஆயுதமாக உள்ளது. இந்த வார்த்தை பொய்யல்ல, கொரோனா விஷயத்தில் கவனமாக இருங்கள் என டைபாலா தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து டைபாலா கூறுகையில் ‘‘ஒவ்வொரு நாட்களும் ஏராளமான மக்கள் மடிந்து வருகிறார்கள். விஷயம் மிகவும் மோசமாகி வருகிறது. உங்களால் கையாள முடியவில்லை என்பதால்தான் ஏராளமான நாடுகள் டாக்டர்களை அனுப்பி வைத்துள்ளனர்.

    கொரேனா வைரசால் பாதிக்கப்படுவேன் என்று நினைத்துக்கூட பார்க்கவில்லை. வீட்டுக்குள்ளேயே தங்கியிருங்கள் என்ற வார்த்தை பொய்யல்லை. மிகவும் கவனமாக இருங்கள்.

    எனக்கு மோசமான இருமல் இருந்தது, தூங்கும்போது மிகவும் சோர்வாக இருந்தேன். குளிராக இருப்பது போன்று உணர்ந்தேன். முதலில் இது என்னவாக இருக்கும் என்பது குறித்து நினைக்கவில்லை. ஆனால், முதலில் எனது அணியில் உள்ள சக வீரர்கள் இருவருக்கு உறுதி செய்யப்பட்ட பிறகு, எனக்கு தொற்றிக் கொண்டது உறுதியானது.

    எங்களுக்கு தலைவலி இருந்தது. ஆனால், எதையும் நாங்கள் எடுத்துக் கொள்ளவில்லை. கிளப் எங்களுக்கு விட்டமின்கள் கொடுத்தது. அதன்பின் நாங்கள் குணமடைந்து வந்ததை உணர்ந்தோம்.

    இது மனநிலையை பொறுத்தது. முதலில் பயமாக இருந்தது. தற்போது சரியாகி விட்டது. தற்போது எங்களுக்கு எந்தவிதமான அறிகுறியும் இல்லை.

    நான் வேகமாக சோர்வடைந்தேன். பயிற்சி எடுக்க விரும்பினேன். ஆனால், ஐந்து நிமிடத்திற்கு பிறகு மூச்சு விட திணறினேன். அப்போதுதான் எங்களுக்கு ஏதோ ஒன்று சரியில்லை என்பது தெரியவந்தது. அதன்பின் பரிசோதனையில் பாசிட்டிவ் என தெரியவந்தது’’ என்றார்.
    ஐரோப்பிய கால்பந்து சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் நடத்தப்படும் அனைத்து கால்பந்து தொடர்களும் கொரோனா வைரஸ் தொற்றால் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
    கொரோனா வைரஸ் தொற்று இத்தாலியில் அதிகரித்ததன் காரணமாக ‘செரி ஏ’ கால்பந்து லீக் ஒத்திவைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து ஸ்பெயின், பிரான்ஸ் ஆகிய நாடுகளில் நடைபெறும் கால்பந்து லீக்குகளும் ஒத்திவைக்கப்பட்டன.

    ஐரோப்பிய கால்பந்து சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் நடைபெறும் போட்டிகள் அனைத்தும் ஜூன் மாதத்திற்கு பிறகே நடைபெற இருந்ததால் போட்டி நடக்கும் என்ற நம்பிக்கை இருந்தது. ஆனால் இத்தாலி, ஸ்பெயின், பிரான்ஸ் நாடுகளில் கொரோனா வைரசுக்கு தினமும் 500-க்கு மேற்பட்டோர் உயிரிழந்த வண்ணம் உள்ளனர்.

    இந்நிலையில் இங்கிலாந்தில் முதன்முறையாக இன்று 500-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இதனால் ஐரோப்பிய கால்பந்து சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் நடத்தப்படும் சாம்பியன்ஸ் லீக், ஐரோப்பா லீக், யூரோ 2020 தொடருக்கான தகுதிச்சுற்று பிளே-ஆப்ஸ் ஆட்டங்கள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன.
    கொரோனா வைரஸ் தொற்று காரணமாக கிரிக்கெட் போட்டி நடைபெறாமல் இருப்பதால் வீரர்களின் ஊதியம் பிடித்தம் குறித்து பேச்சுவார்த்தை ஏதும் நடத்தவில்லை என பிசிசிஐ பொருளாளர் தெரிவித்துள்ளார்.
    கொரோனா வைரஸ் தொற்று காரணமாக மார்ச் மாதம் முதல் வாரத்தில் இருந்து கிரிக்கெட் போட்டி ஏதும் நடைபெறவில்லை. மீண்டும் எப்போது கிரிக்கெட் தொடங்கும் என்பதை யாராலும் உறுதி்யாக சொல்ல முடியாத நிலை தற்போது நிலவி வருகிறது.

    ஐரோப்பிய நாடுகளில் நடைபெறும் கால்பந்து லீக்குகளும் தள்ளி வைக்கப்பட்டுள்ளன. இதனால் ஒவ்வொரு கிளக் அணிகளும் கோடிக்கணக்கில் இழப்பை சந்திக்க நேரிடும். இதனால் வீரர்களின் ஊதியத்தில் பிடித்தம் செய்யப்படலாம் என்ற கருத்து நிலவி வருகிறது, பார்சிலோனா அணிக்காக விளையாடி வரும் மெஸ்சி ஊதியம் பிடித்தத்தை ஏற்றுக் கொண்டுள்ளார்.

    அதேபோல் இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கும் ஊதியம் பிடித்தம் செய்யப்படும் என்ற பேச்சு எழுந்துள்ளது. ஆனால் பிசிசிஐ பொருளாளர் இதை மறுத்துள்ளார்.

    இதுகுறித்து பிசிசிஐ பொருளாளர் அருண் துமல் கூறுகையில் ‘‘நாங்கள் ஊதியம் பிடித்தம் குறித்து பேசவில்லை. இந்த பின்னடைவுக்குப் பிறகு என்ன நடவடிக்கைகள் எடுத்தாலும், அனைவரின் நலனை கருத்தில் கொண்டுதான் எடுக்கப்படும். எந்தவொரு நடவடிக்கை எடுத்தாலும் நன்றாக சிந்திக்க வேண்டும். தற்போது அதுகுறித்து நாங்கள் சிந்திக்கவில்லை. இது உண்மையிலேயே மிகப்பெரிய பின்னடைவுதான். நாங்கள் எடுக்கும் முடிவால் யாரும் பாதிக்கப்படக் கூடாது. இதுகுறித்த இறுதி நிலைக்கு வந்தபின், விவாதிக்க முடியும்’’ என்றார்.
    கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு காரணமாக மக்கள் திண்டாடி வரும் நிலையில் வங்காளதேச கிரிக்கெட் வீரர் நலிந்த குடும்பங்களுக்கு உணவு மற்றும் ஆடைகள் வழங்கி உதவி செய்துள்ளார்.
    கொரோனா வைரஸ் தொற்று உலகையே ஸ்தம்பிக்க வைத்துள்ளது. பெரும்பாலான நாடுகளில் ஊடரங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் நலிந்த குடும்பத்தினர் மற்றும் தெருவில் வசிப்போர் உணவு இன்றி தவித்து வருகிறார்கள்.

    வங்காளதேசத்தில் இப்படி கஷ்டப்படும் நபர்களுக்கு அந்நாட்டு கிரிக்கெட் வீரர் மொசாடெக் ஹொசைன் உணவுகள் மற்றும் ஆடைகள் வழங்கி உதவியுள்ளார்.

    இதுகுறித்து அவர் கூறுகையில் ‘‘ஒவ்வொருவரும் நலமாக இருக்க வேண்டும். இந்தத் தொற்றில் இருந்து விடுபடுவார்கள் என்று நம்புகிறேன். என்னால் முடியும் அளவிற்கு நான் உதவி செய்கிறேன். ஒவ்வொருவரும் அவர்கள் தகுதிக்கு ஏற்ப ஏழை மக்களுக்கு உதவி செய்ய முன் வரவேண்டும்.

    ஒட்டுமொத்த உலகமும் கொரோனா வைரசால் ஸ்தம்பித்துள்ளது. இதுபோன்ற மோசமான நெருக்கடியை யாரும் அறிந்திருக்க மாட்டார்கள். 6 கோடி மக்கள் தொகை கொண்ட ஏழைநாடு உதவி இன்றி இருக்கிறது’’ என்றார்.
    கொரோனா வைரஸ் தொற்றால் நிறுத்தப்பட்டுள்ள ஆட்டங்கள் நடைபெறும் வகையில் உலக சாம்பியன்ஷிப்புக்கான காலஅவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என மிஸ்பா உல் ஹக் தெரிவித்துள்ளார்.
    கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இங்கிலாந்து, இலங்கை, பாகிஸ்தான், வங்காளதேசம் இடையிலான டெஸ்ட் தொடர்கள் நிறுத்தப்பட்டுள்ளன. இங்கிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் இடையிலான தொடர் தள்ளிப்போகலாம் என இங்கிலாந்து அறிவித்துள்ளது.

    ஜூலை-ஆகஸ்ட் மாதம் நடைபெற இருக்கும் தென்ஆப்பிரிக்கா - நியூசிலாந்து இடையிலான தொடர் நடக்குமா? என்பது சந்தேகம். டிசம்பர் - ஜனவரியில் (2021) ஆஸ்திரேலியா- இந்தியா இடையிலான டெஸ்ட் தொடர் நடைபெற வாய்ப்பு உள்ளது.

    இதனால் தள்ளி வைக்கப்பட்டுள்ள தொடர்கள் ரத்து செய்யப்பட்டால் இறுதிப் போட்டியில் விளையாடுவதற்கான வாய்ப்பு பெரும்பாலான அணிக்கு கிடைக்காமல் போய்விடும். இதனால் ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கான காலக்கட்டத்தை நீட்டித்து தள்ளிவைக்கப்பட்டுள்ள தொடர்களை நடத்த ஏற்பாடு செய்ய வேண்டும் என பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழு தலைவரும், பயிற்சியாளருமான மிஸ்பா உல் ஹக் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து மிஸ்பா உல் ஹக் கூறுகையில் ‘‘ஒத்திவைக்கப்பட்ட போட்டிகள் மீண்டும் விளையாடும் வகையில் போட்டி அட்டவணை தயாரிக்கப்பட்டால் அனைத்து அணிகளுக்கும் சாம்பியன்ஷிப்பில் இணையான வாய்ப்புகள் கிடைக்கும்.

    மீண்டும் கிரிக்கெட் போட்டிகள் தொடங்கும்போது ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு முன்னேற முயற்சி செய்யும் வகையில் அனைத்து அணிகளுக்கும் வாய்ப்பு கொடுக்கப்பட வேண்டும். 2021 இறுதி வரை தொடரை நீட்டிக்க முடியும்.

    தொடர் நீட்டிக்கப்பட வேண்டும் என்பது என்னுடைய பார்வை. இது ஒன்றுதான் தொடரை பேலன்ஸ் ஆக வைக்க ஒரே வழி. தொடர் நீட்டிக்கப்பட்டால் போட்டி அட்டவணையை மாற்றி அமைக்க முடியும்’’ என்றார்.
    ×