search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ICC World Test Championship"

    • ஆஸ்திரேலிய அணி 59.09 சதவீத புள்ளிகளுடன் 3-வது இடத்தில் உள்ளது.
    • வங்காளதேசம் 4-வது இடத்திலும், பாகிஸ்தான் 5-வது இடத்திலும் உள்ளது.

    துபாய்:

    சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐ.சி.சி.) உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்று வருகிறது. இதன் புள்ளிகள் பட்டியலில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி 2-வது இடத்தில் இருந்தது. தற்போது முதல் இடத்துக்கு முன்னேறியது.

    ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணி தோற்றது. ஆஸ்திரேலியாவின் வெற்றியால் இந்தியாவுக்கு முதலிடம் கிடைத்தது. இந்திய அணி 64.58 சதவீத புள்ளிகளுடன் இருக்கிறது.

    ஆஸ்திரேலியாவிடம் தோற்றதால் நியூசிலாந்து அணி 60.00 சதவீத புள்ளிகளுடன் முதல் இடத்தில் இருந்து 2-வது இடத்துக்கு பின் தங்கியது. இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்ட்டில் வெற்றி பெறுவதன் மூலம் இந்தியா முதல் இடத்தை தக்க வைத்து கொள்ளும்.

    ஆஸ்திரேலிய அணி 59.09 சதவீத புள்ளிகளுடன் 3-வது இடத்தில் உள்ளது. வங்காளதேசம் 4-வது இடத்திலும், பாகிஸ்தான் 5-வது இடத்திலும், வெஸ்ட் இண்டீஸ் 6-து இடத்திலும் தென் ஆப்பிரிக்கா 7-வது இடத்திலும், இங்கிலாந்து 8-வது இடத்திலும், இலங்கை 9-வது இடத்திலும் உள்ளன.

    அடுத்த ஆண்டு வரை உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி நடைபெறும். முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும்.

    2019-2021 வரை நடந்த முதல் ஐ.சி.சி. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டத்தை நியூசிலாந்தும், 2021-2023 வரை நடைபெற்ற இரண்டாவது ஐ.சி.சி. உலக டெஸ்ட் சாம்பியன் ஷிப் பட்டத்தை நியூசிலாந்தும் கைப்பற்றின. இந்திய அணி 2 முறையும் இறுதிப் போட்டியில் தோற்று கோப்பையை இழந்தது.

    ×