search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    போக்லர்கா கபாஸ்
    X
    போக்லர்கா கபாஸ்

    ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற நீச்சல் வீராங்கனைக்கு  கொரோனா

    ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்ற அங்கேரி நீச்சல் வீராங்கனை போக்லர்கா கபாஸ் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்.
    புடாபெஸ்ட்:

    கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் 203 நாடுகளை தாக்கியுள்ளது. இதுவரை 9 லட் சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டு உள்ளனர். 47ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகினர்.

    இந்த நிலையில் 2016-ம் ஆண்டு பிரேசிலில் உள்ள ரியோடி ஜெனிரோவில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்ற அங்கேரி நீச்சல் வீராங்கனை போக்லர்கா கபாஸ் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். இவர் ஒலிம்பிக்கில் 800 மீட்டர் பிரீஸ்டைல் பிரிவில் வெண் கலப்பதக்கம் பெற்று இருந்தார்.

    உலகச் சாம்பியனான அவருக்கு முதல் கட்ட சோதனையில் பாதிப்பு இல்லை என்று தெரியவந்தது. ஆனால் 2வது கட்ட சோதனையில் உறுதிசெய்யப்பட்டது. இதை அவர் சமூகவலைதளத்தில் தெரிவித்து உள்ளார். இதைப்போல மேலும் 8 நீச்சல் வீரர் வீராங்கனைகளுக்கு அந்நாட்டில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

    அங்கேரியில் கொரோனாவுக்கு 525 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 20 பேர் இறந்துள்ளனர்.

    அமெரிக்க டேவிஸ் கோப்பை அணியின் முன்னாள் கேப்டன் பாட்ரிக் மெக்கன்ரோவுக்கும் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. இவர் டென்னிஸ் ஜாம்பவானும், 7 முறை கிராண்ட்சிலாம் பட்டம் பெற்றவருமான ஜான் மெக்கன்ரோவின் இளைய சகோதரர் ஆவார்.

    கொரோனா அதிகம் பாதித்த நாடுகளில் முதன்மையாக இருப்பது அமெரிக்காவாகும். அங்கு 2 லட்சத்திற்கும் அதிகமானோரை இந்த வைரஸ் தாக்கி உள்ளது.
    Next Story
    ×