என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள் (Tamil News)
X
‘stay at home’ பொய் அல்ல, மிகவும் கவனமாக இருங்கள்: கொரோனா பிடியில் இருந்து மீண்டுள்ள டைபாலா சொல்கிறார்
Byமாலை மலர்1 April 2020 10:31 PM IST (Updated: 1 April 2020 10:47 PM IST)
இத்தாலியின் யுவென்டஸ் அணிக்காக விளையாடி வந்த அர்ஜென்டினா வீரர் பவுலோ டைபாலா, வீட்டிலேயே இருங்கள் என்பது பொய் அல்ல. மிகவும் கவனமாக இருங்கள் என வலியுறுத்தியுள்ளார்.
கொரோனா வைரஸ் தொற்றுக் காரணமாக உலக நாடுகள் அஞ்சி நடுங்குகின்றன. இதுவரை தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்படாததால் பலி எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. குறிப்பாக இத்தாலியில் பலியானோரின் எண்ணிக்கை ஜெட் வேகத்தில் உயர்ந்து கொண்டு இருக்கிறது.
இத்தாலியின் ‘செரி ஏ’ கால்பந்து லீக் அணியான யுவென்டஸ்க்காக விளையாடி வருபவர் அர்ஜென்டினாவின் இளம் வீரர் பவுலோ டைபாலா. இவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதனால் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. தற்போது கொரோனா என்ற அரக்கனின் பிடியில் இருந்து தப்பித்து வந்துள்ளார்.
வீட்டிற்குள்ளேயே இருங்கள் (Stay at Home) இந்த வார்த்தைதான் கொரோனாவை கட்டுப்படுத்த தற்போது எல்லா நாடுகளும் கடைபிடிக்க வேண்டிய ஒரே ஆயுதமாக உள்ளது. இந்த வார்த்தை பொய்யல்ல, கொரோனா விஷயத்தில் கவனமாக இருங்கள் என டைபாலா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து டைபாலா கூறுகையில் ‘‘ஒவ்வொரு நாட்களும் ஏராளமான மக்கள் மடிந்து வருகிறார்கள். விஷயம் மிகவும் மோசமாகி வருகிறது. உங்களால் கையாள முடியவில்லை என்பதால்தான் ஏராளமான நாடுகள் டாக்டர்களை அனுப்பி வைத்துள்ளனர்.
கொரேனா வைரசால் பாதிக்கப்படுவேன் என்று நினைத்துக்கூட பார்க்கவில்லை. வீட்டுக்குள்ளேயே தங்கியிருங்கள் என்ற வார்த்தை பொய்யல்லை. மிகவும் கவனமாக இருங்கள்.
எனக்கு மோசமான இருமல் இருந்தது, தூங்கும்போது மிகவும் சோர்வாக இருந்தேன். குளிராக இருப்பது போன்று உணர்ந்தேன். முதலில் இது என்னவாக இருக்கும் என்பது குறித்து நினைக்கவில்லை. ஆனால், முதலில் எனது அணியில் உள்ள சக வீரர்கள் இருவருக்கு உறுதி செய்யப்பட்ட பிறகு, எனக்கு தொற்றிக் கொண்டது உறுதியானது.
எங்களுக்கு தலைவலி இருந்தது. ஆனால், எதையும் நாங்கள் எடுத்துக் கொள்ளவில்லை. கிளப் எங்களுக்கு விட்டமின்கள் கொடுத்தது. அதன்பின் நாங்கள் குணமடைந்து வந்ததை உணர்ந்தோம்.
இது மனநிலையை பொறுத்தது. முதலில் பயமாக இருந்தது. தற்போது சரியாகி விட்டது. தற்போது எங்களுக்கு எந்தவிதமான அறிகுறியும் இல்லை.
நான் வேகமாக சோர்வடைந்தேன். பயிற்சி எடுக்க விரும்பினேன். ஆனால், ஐந்து நிமிடத்திற்கு பிறகு மூச்சு விட திணறினேன். அப்போதுதான் எங்களுக்கு ஏதோ ஒன்று சரியில்லை என்பது தெரியவந்தது. அதன்பின் பரிசோதனையில் பாசிட்டிவ் என தெரியவந்தது’’ என்றார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X