search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Mosaddek Hossain"

    வங்காள தேச கிரிக்கெட் அணியின் இளம் வீரரான மொசாடெக் ஹுசைன் மீது அவரது மனைவி வரதட்சணை புகார் அளித்துள்ளார். #MosaddekHossain
    வங்காள தேச கிரிக்கெட் அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் மொசாடெக் ஹுசைன். இவர் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் செப்டம்பர் 13-ந்தேதி முதல் 28-ந்தேதி வரை நடைபெறும் ஆசிய கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கான வங்காள தேச அணியில் இடம்பிடித்துள்ளார்.

    22 வயதாகும் இவர் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு தனது உறவுக்கார பெண்ணை திருமணம் செய்துள்ளார். தற்போது 1 மில்லியன் டாகா (12,003 அமெரிக்க டாலர்) கேட்டு சித்ரவதை செய்வதாகவும், உட்சக்கட்டமாக கடந்த 15-ந்தேதி வீட்டை விட்டு வெளியேற்றியதாகவும் வக்கீல் மூலம் புகார் அளித்துள்ளார்.

    இதுகுறித்து மொசாடெக் ஹுசைன் ஏதும் கூற மறுத்துவிட்ட நிலையில், அவரது சகோதரர் மொசாபெர் ஹுசைன் மூன் இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ளார்.



    இதுகுறித்து மொசாபெர் ஹுசைன் மூன் கூறுகையில் ‘‘அவர்கள் இருவருக்கும் திருமணம் ஆனதில் இருந்தே கருத்து வேறுபாடு நிலவி வந்தது. எனது சகோதரர் ஆகஸ்ட் 15-ந்தேதியே விவாகரத்து லெட்டர் அனுப்பிவிட்டார். ஆனால், அவரது மனைவி அதிக பணம் கேட்டார். பணம் கிடைக்காததால், பொய்யான தகவலை பரவ விட்டு, தற்போது வழக்கு தொடர்ந்துள்ளார்’’ என்றார்.

    மொசாடெக் ஹுசைன் வங்காள தேச அணிக்காக இரண்டு டெஸ்ட், 21 ஒருநாள் மற்றும் 8 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார்.
    ஆப்கானிஸ்தானுக்கு எதிராக மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடும் வங்காள தேச அணி அறிவிக்கப்பட்டுள்ளது. #AFGvBAN
    வங்காள தேச டி20 கிரிக்கெட் அணி ஆப்கானிஸ்தானுக்கு எதிராக மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இந்த போட்டி இந்தியாவில் உள்ள டேராடூனில் அடுத்த மாதம் நடைபெறுகிறது. இதற்கு வங்காளதேச அணி அறிவிக்கப்பட்டுள்ளது. சாகிப் அல் ஹசன் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

    சுமார் ஒரு வருடத்திற்குப்பின் பேட்ஸ்மேன் மொசாடெக் ஹொசைன் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். இம்ருல் கெய்ஸ், தஸ்கின் அஹமது, விக்கெட் கீப்பர் நுருல் ஹசன் ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர்.



    ஜூன் 3, 4 மற்றும் 7-ந்தேதி நடக்கும் இந்த தொடருக்கான வங்காள தேச அணியில் இடம்பிடித்துள்ள வீரர்கள் விவரம்:-

    1. சாகிப் அல் ஹசன், 2. மெஹ்முதுல்லா, 3. தமிம் இக்பால், 4. சவுமியா சர்கார், 5. லித்தோன் தாஸ், 6. முஷ்பிகுர் ரஹிம், 7. சபிர் ரஹ்மான், 8. மொசாடெக் ஹொசைன், 9. அரிபுல் ஹக்யூ. 10. மெஹிது ஹசன் மிராஸ், 11. நஸ்முல் இஸ்லாம், 12. முஸ்டாபிஜூர் ரஹ்மான், அபு ஹைடர், 13. ருபெல் ஹொசைன், 4. அபு ஜாயத்.
    ×