என் மலர்
விளையாட்டு
நட்சத்திர பேட்ஸ்மேன் பாபர் அசாமை ஒருநாள் அணியின் கேப்டனாக நியமித்துள்ளது பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு.
பாகிஸ்தான் கிரிக்கெட் அணி உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் தோல்வி அடைந்ததையொட்டி சர்பராஸ் அகமதுவை கேப்டன் பதவியில் இருந்து நீக்க பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு தீர்மானித்தது.
இதற்கிடையே டி20 கிரிக்கெட் அணியின் கேப்டனாக பாபர் அசாம் நியமிக்கப்பட்டார். இவரது தலைமையில்தான் வங்காளதேசம், இலங்கை அணிக்கெதிரான தொடரை பாகிஸ்தான் சந்தித்தது.
இந்நிலையில் பாபர் அசாம் ஒருநாள் கிரிக்கெட் அணியின் கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளார். அதேவேளையில் அசார் அலி டெஸ்ட் கிரிக்கெட் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி இந்த ஆண்டில் ஆசிய கோப்பை, ஐசிசி டி20 உலக கோப்பை, 9 டெஸ்ட், 6 ஒருநாள் மற்றும் 20 டி20 போட்டிகளில் விளையாட இருக்கிறது. ஆனால் கொரோனா வைரஸ் தொற்றால்
இத்தனை போட்டிகளில் பாகிஸ்தான் விளையாடுமா? என்பது சந்தேகமே...
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ‘சின்ன தல’ என்று அழைக்கப்படும் சுரேஷ் ரெய்னா, சர்வதேச கிரிக்கெட் அணிக்கு மீண்டும் திரும்புவேன் என்று தெரிவித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் இடது கை பேட்ஸ்மேனாக விளையாடியவர் சுரேஷ் ரெய்னா. இவர் இந்திய அணிக்காக கடைசியாக 2018-ம் ஆண்டு ஜூலை மாதம் இங்கிலாந்து தொடரில் விளையாடினார். அதன்பின் இந்திய அணியில் இடம் கிடைக்கவில்லை.
ஆனால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் டோனிக்கு அடுத்த நிலையில் உள்ளார். சிஎஸ்கே ரசிகர்கள் இவரை ‘சின்ன தல’ என்று அழைக்கின்றனர்.
கடந்த இரண்டு வருடங்களாக விளையாடவில்லை என்றால் உடற்தகுதி போன்றவற்றில் கவனம் செலுத்தி வருகிறேன். மீண்டும் இந்திய அணியில் இடம் பிடிப்பேன் என்று தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து சுரேஷ் ரெய்னா கூறுகையில் ‘‘என்னை நானே திருத்திக் கொண்டேன். மூட்டு காயத்தில் இருந்து மீண்டும் உடற்தகுதியில் முன்னேற்றம் அடைந்துள்ளேன். ‘யோ-யோ’பயிற்சிலும் தேர்ச்சி பெற்றுள்ளேன். அணியில் இடம் பெறுவதற்காக கடின பயிற்சி மேற்கொண்டு வருகிறேன். எனக்கு நேரம் சரியில்லாத காலத்தில் பெரிய வீரர்கள் ஆதரவாக இருந்துள்ளனர். எனக்கான சர்வதேச கிரிக்கெட் இன்னும் மீதமுள்ளது’’ என்றார்.
பாகிஸ்தான் சட்ட ஆலோசகர் அனுப்பிய அவதூறு வழக்கு நோட்டீஸில் குறைபாடு உள்ளது, என்னை அவர் அவமானம் செய்ய முயற்சிக்கிறார் என சோயிப் அக்தர் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக இருந்தவர் உமர் அக்மல். மேட்ச் பிக்சிங்கில் ஈடுபட்டதால் பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு அக்மல் கிரிக்கெட்டில் விளையாடுவதற்கு தடைவித்துள்ளது.
இதுகுறித்து சமூக வலைத்தள சேனலில் கருத்துக் கூறிய சோயிப் அக்தர், பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டின் சட்ட ஆலோசகர் தபாஸ்ஜுல் ரிஸ்வியை தனிப்பட்ட முறையில் விமர்சித்ததாக கூறப்படுகிறது.
இதனால் ரிஸ்வி சோயிப் அக்தர் மீது அவதூறு வழக்கு தொடர முடிவு செய்தார். இதுகுறித்து அக்தருக்கு நோட்டீஸ் அனுப்பினார். அதற்கு சோயிப் அக்தர் தற்போது பதில் அளித்துள்ளார்.
ரிஸ்வி நோட்டீஸில் சட்ட குறைபாடு உள்ளது. பகிரங்கமாக அவமானப்படுத்துதல், இழிவுபடுத்துதல், அவதூறு செய்தல் மற்றும் கேலி செய்தல் போன்ற செயல்களில் ரிஸ்வி செயல்பட்டுள்ளார். இதற்காக என்னிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என அக்தர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து சோயிப் அக்தர் செய்தி நிறுவனம் ஒன்றிற்கு பதில் அளிக்கையில் ‘‘என்னுடைய சேனலில் நான் என்னவெல்லாம் கூறினேனோ, அதுவெல்லாம் பாகிஸ்தான் கிரிக்கெட் சரியான திசையில் செல்வதற்கு என்ன செய்ய வேண்டும் என்பதை குறித்துதான். அதேபோல் ரிஸ்வியை பற்றி கூறியது எல்லாம், நான் தனிப்பட்ட முறையில் அவரிடம் பேசியதை வைத்துதான்’’ என்றார்
மத்திய அரசு வழங்கும் விளையாட்டுத்துறைக்கான அர்ஜுனா விருதுக்கு இரண்டு வீராங்கனை பெயர்களை பரிந்துரை செய்கிறது பிசிசிஐ.
விளையாட்டுத்துறைகளில் சாதித்தவர்களுக்கு ஆண்டுதோறும் மத்திய அரசு விருதுகள் வழங்கி கவுரவித்து வருகிறது. ஒவ்வொரு விளையாட்டின் சங்கத்திடமும் தகுதியான வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் பெயர்களை அனுப்பி வைக்க மத்திய விளையாட்டு அமைச்சகம் கேட்டுக்கொண்டுள்ளது.
சங்கங்கள் பரிந்துரை செய்யும் வீரர்கள் தகுதியானவர்கள்தானா? என்பதை இதற்கான ஆய்வு கமிட்டி ஆராய்ந்து மத்திய விளையாட்டுத்துறை அமைச்சகத்திற்கு பரிந்துரை செய்யும்.

இதனடிப்படையில் பிசிசிஐ ஷகா பாண்டே, தீப்தி ஷர்மா ஆகிய வீராங்கனைகளின் பெயர்களை பரிந்துரை செய்ய இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இருவரும் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டி20 உலக கோப்பையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். மேலும், சிறப்பாக விளையாடி வரும் இருவரும் கிரிக்கெட் செயல்பாட்டு குழுவால் ஈர்க்கப்பட்டதால் பரிந்துரை செய்ய இருக்கிறது.
கேப்டன் பதவியை விட்டுக்கொடுக்க விராட் கோலி நிச்சயம் விரும்பமாட்டார் என இங்கிலாந்து முன்னாள் வீரர் நசீர் ஹுசைன் தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் தொற்றால் தற்போது கிரிக்கெட் போட்டிகள் நடைபெறாமல் உள்ளன. மீண்டும் கிரிக்கெட் தொடங்கியதும் எவ்வளவு போட்டிகளை நடத்த முடியுமோ, அவ்வளவு போட்டிகளை நடத்த ஒவ்வொரு கிரிக்கெட் போர்டுகளும் திட்டமிட்டுள்ளன.
ஒரே நேரத்தில் வெவ்வேறு இடங்களில் டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் போட்டிகளை நடத்தலாம் என்ற கருத்து நிலவி வருகிறது. அப்படி நடந்தால் ஒவ்வொரு கிரிக்கெட் போர்டுகளும் தலா இரண்டு அணிகளை தயார் செய்ய வேண்டும்.
இங்கிலாந்து, ஆஸ்திரேலியா அணிகள் இதற்கு தயாராக இருக்கின்றன. இங்கிலாந்து கிரிக்கெட்டை பொறுத்த வரையில் டெஸ்ட் அணிக்கு ஜோ ரூட் கேப்டனாக இருக்கிறார். ஒயிட்-பால் கிரிக்கெட் அணிக்கு மோர்கன் கேப்டனாக உள்ளார்.
இங்கிலாந்து டெஸ்ட் மற்றும் ஒயிட்-பால் அணி முற்றிலும் மாறுபட்டது. இதனால் இங்கிலாந்து எளிதாக இரண்டு அணிகளை தயார் செய்து விடும்.
அதேபோல் ஆஸ்திரேலியாவில் டெஸ்ட் அணிக்கு டிம் பெய்ன் கேப்டனாக உள்ளார். ஒயிட்-பால் கிரிக்கெட் அணிக்கு ஆரோன் பிஞ்ச் கேப்டனாக உள்ளார். வீரர்களை பிரிப்பதில்தான் பிரச்சனை ஏற்படும்.

ஆனால் இந்திய அணியில் மூன்று வடிவிலான கிரிக்கெட்டுக்கும் விராட் கோலிதான் கேப்டனாக இருக்கிறார். இந்திய கிரிக்கெட் வாரியமும் இரண்டு அணிகளை தயார் செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகின. அப்படி பிரிக்கப்பட்டால் விராட் கோலி கேப்டன் பதவியை இழக்க வேண்டியிருக்கும்.
ஆனால் விராட் கோலி ஒருபோதும் கேப்டன் பதவியை விட்டுக்கொடுக்க விரும்பமாட்டார் என்று இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் நசீர் ஹுசைன் தெரிவித்துள்ளார்.
நியூசிலாந்தின் மூன்று வடிவிலான கிரிக்கெட் அணிக்கும் கேன் வில்லியம்சன்தான் கேப்டனாக இருக்கிறார்.
இரண்டு உலக கோப்பையை இந்தியா வெல்வதற்கு முக்கிய காரணமாக இருந்த யுவராஜ் சிங்கிற்கு 2014 டி20 உலக கோப்பை இறுதிப் போட்டி மிகவும் மோசமாக அமைந்தது.
இந்திய கிரிக்கெட் அணி 2007-ம் ஆண்டு டி20 உலக கோப்பை, 2011-ம் ஆண்டு நடைபெற்ற 50 ஓவர் உலக கோப்பை இரண்டையும் இந்திய அணி கைப்பற்ற யுவராஜ் சிங் முக்கிய பங்கு வகித்தார் என்பதில் யாருக்கும் சந்தேகம் இருக்க முடியாது.
2014-ம் ஆண்டு வங்காளதேசத்தில் டி20 உலக கோப்பை இறுதிப் போட்டி நடைபெற்றது. இதில் இந்தியா - இலங்கை அணிகள் இறுதிப் போட்டியில் பலப்பரீட்சை நடத்தின. டெத் ஓவர்களை யுவராஜ் சந்தித்தார். அதிரடியாக விளையாடுவார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில் மிகவும் திணறினார்.
ஒரு கட்டத்தில் யுவராஜ் சிங் அவுட்டாகி சென்றால் நன்றாக இருக்கும் என ரசிகர்கள் நினைக்க தொடங்கிவிட்டனர். இறுதியில் 21 பந்தில் 11 ரன்கள் மட்டுமே அடித்தார். இதனால் இந்திய அணி தோல்வியை சந்திக்க நேரிட்டது. அதன்பிறகு யுவராஜ் சிங்கின் கிரிக்கெட் வாழ்க்கை சரியத் தொடங்கியது என்று கூறலாம்.
வீரர்கள் இந்தியா திரும்பிய நிலையில் யுவராஜ் சிங்கின் வீட்டின் மீது கற்களை வீசி ரசிகர்கள் கோபத்தை வெளிப்படுத்தினர்.
அந்த சம்பவம் யாரோ ஒருவரை யாரோஒருவரை கொலை செய்துவிட்டு ஜெயிலுக்கு போவது போன்று உணர்ந்தேன் என யுவராஜ் சிங் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து யுவராஜ் சிங் கூறுகையில் ‘‘ஒட்டுமொத்த இன்னிங்ஸ்-க்கும் நானே பொறுப்பு எடுத்துக் கொள்கிறேன் என்று ஏற்கனவே சொல்லியிருக்கிறேன். நான் சிறப்பாக விளையாடவில்லை. துரதிருஷ்டவசமாக அது உலக கோப்பை இறுதி போட்டியாக அமைந்து விட்டது. அது மற்ற போட்டியாக இருந்திருந்தால் இந்த அளவிற்கு ஆய்வு இருந்திருக்காது.
நான் வீட்டிற்கு திரும்பியபோது, என்னை வில்லன் போன்று உணர்ந்தேன். நான் விமான நிலையத்திற்கு வந்தபோது என்னைத் தாக்கினார்கள். நல்லவேளையாக ஹெட்போன் மாட்டியிருந்தேன். என்னை நோக்கி கத்திக் கொண்டிருந்தார்கள்.
எனது வீட்டின் மீது சிலர் கற்களை எறிந்தனர். அப்போது யாரோ ஒருவர் மற்றொருவரை கொலை செய்து ஜெயிலுக்கு சென்று கொண்டிருந்த குற்றவாளி போன்று என்னை உணர்ந்தேன். ஆனால் அதில் இருந்து உடனடியாக பழைய நிலைக்கு திரும்பினேன். அப்போது நடந்ததை என்னால் தற்போதும் நினைத்து பார்க்க முடியும்’’ என்றார்.
ஒருநாள் கிரிக்கெட்டில் சர்வதேச அளவில் சச்சின் தெண்டுல்கர் - கங்குலி ஜோடிதான் மிகச்சிறந்தது என ஐசிசி தெரிவித்துள்ளது.
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், ‘‘சச்சின் தெண்டுல்கர் - சவுரவ் கங்குலி இணைந்து 176 போட்டிகளில் விளையாடியுள்ளனர். இந்த ஜோடி 8227 ரன்கள் குவித்துள்ளது. சராசரி 47.55. வேறு எந்த ஜோடியும் 6,000 ரன்களை தாண்டவில்லை’’ எனப் பதிவிட்டிருந்தது.
இதுகுறித்து சச்சின் பதில் அளிக்கையில் ‘‘நமது சிறப்பான தருணங்களை நினைவுபடுத்துகிறது தாதா’’ எனத் தெரிவித்துள்ளார்.
Sachin Tendulkar ➕ Sourav Ganguly in ODIs:
— ICC (@ICC) May 12, 2020
👉 Partnerships: 176
👉 Runs: 8,227
👉 Average: 47.55
No other pair has crossed even 6,000 runs together in ODIs 🤯 pic.twitter.com/VeWojT9wsr
This brings back wonderful memories Dadi.
— Sachin Tendulkar (@sachin_rt) May 12, 2020
How many more do you think we would’ve been able to score with the restriction of 4 fielders outside the ring and 2 new balls? 😉@SGanguly99@ICChttps://t.co/vPlYi5V3mo
ரன் இலக்கை விரட்டிப்பிடிப்பதில் தெண்டுல்கரை விட கோலியே சிறந்தவர் என்று தென்ஆப்பிரிக்க வீரர் டிவில்லியர்ஸ் கூறியுள்ளார்.
புதுடெல்லி:
தென்ஆப்பிரிக்காவைச் சேர்ந்த அதிரடி ஆட்டக்காரர் டிவில்லியர்ஸ் ஐ.பி.எல். கிரிக்கெட்டில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். ‘இன்ஸ்டாகிராம்’ கலந்துரையாடலில் அவரிடம் விராட் கோலி (இந்தியா), ஸ்டீவன் சுமித் (ஆஸ்திரேலியா) ஆகியோரில் சிறந்த பேட்ஸ்மேன் யார்? என்று கேட்கப்பட்டது. அதற்கு டிவில்லியர்ஸ் சாதுர்யமாக பதில் அளித்தார்.
அவர் கூறுகையில், ‘இது கடினமான கேள்வி. ஆனால் விராட் கோலி இயல்பாகவே பந்தை அடித்து ஆடும் திறமைபடைத்தவர். அதில் எந்த சந்தேகமும் இல்லை. இவர்களை டென்னிஸ் பிரபலங்களுடன் ஒப்பிட்டு பார்க்கலாம். விராட் கோலியை டென்னிஸ் விளையாட்டின் ரோஜர் பெடரர் (சுவிட்சர்லாந்து) போன்றவர் என்று சொல்வேன். ஸ்டீவன் சுமித், டென்னிசின் ரபெல் நடால் (ஸ்பெயின்) மாதிரி. மனரீதியாக மிகவும் வலுவானவர். ஆனால் அவரது ரன் குவிப்பும், களத்தில் நிற்கும் விதமும் அது இயல்பான ஒன்றாக தெரியாது. எது எப்படியோ கிரிக்கெட்டில் சுமித் நிறைய சாதனைகளை முறியடிக்கப்போகிறார். நான் பார்த்தமட்டில் உலகில் மனதளவில் வலிமைமிக்க சிறந்த வீரர்களில் சுமித்தும் ஒருவர். விராட் கோலியும் உலகம் முழுவதும் நடக்கும் போட்டிகளில் ரன்கள் குவிக்கிறார். நெருக்கடிக்கு மத்தியில் ஆட்டங்களில் வெற்றி தேடி தருகிறார்’ என்றார்.
இந்திய ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கர்-விராட் கோலி ஆகியோரை ஒப்பிடும்படி எழுப்பப்பட்ட கேள்விக்கு டிவில்லியர்ஸ் கூறுகையில், ‘எங்கள் இருவருக்கும் (கோலி, டிவில்லியர்ஸ்) முன்மாதிரி தெண்டுல்கர் தான். தான் விளையாடிய காலத்தில் மெச்சத்தகுந்த வீரராக ஜொலித்தார். அவரது சாதனையும், நளினமான பேட்டிங்கும், செயல்பாடும் அவரை பின்பற்றும் இளம் வீரர்களுக்கு மிகச்சிறந்த முன்உதாரணங்கள். கோலியும் இதைத் தான் சொல்வார்.
ஆனால் இலக்கை வெற்றிகரமாக துரத்திப்பிடிப்பதில் (சேசிங்) விராட் கோலியே கில்லாடி என்பது எனது தனிப்பட்ட கருத்து. அனைத்து வகையிலான போட்டிகளிலும், எல்லாவிதமான சூழலிலும் தெண்டுல்கரின் ஆட்டம் வியப்புக்குரியது தான். ஆனால் நெருக்கடிக்கு இடையே ‘சேசிங்’ செய்வதில் தெண்டுல்கரை விட கோலியே முன்னணியில் உள்ளார். இந்த வகையில் கோலியை மிஞ்சுவது கடினம். கோலி களத்தில் நிற்கும் போது எதிரணிக்கு எந்த இலக்கும் பாதுகாப்பானது கிடையாது. எதிரணி 330 ரன்களுக்கு மேல் குவித்தாலும், கோலி அந்த இலக்கை விரட்டிப்பிடித்து விடுவார்’ என்றார்.
ஐ.பி.எல். கிரிக்கெட்டில் டோனியின் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடுவீர்களா? என்று மற்றொரு கேள்விக்கு 36 வயதான டிவில்லியர்ஸ் கூறுகையில், ‘பெங்களூரு அணிக்காகவே எஞ்சிய காலமும் விளையாட வேண்டும் என்று விரும்புகிறேன். பெங்களூரு அணிக்காக உற்சாகமாக அனுபவித்து விளையாடுகிறேன். இங்கு எனக்கு நிறைய நண்பர்களும் கிடைத்துள்ளனர். அவர்களை பிரியமாட்டேன். எனவே சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாட வாய்ப்பில்லை. அதே சமயம் சென்னை அணிக்கு எதிராக ஆடுவேன். அது எப்போதும் கடும் போட்டி நிறைந்ததாக இருக்கும்’ என்றார்.
‘விராட் கோலி எனது சிறந்த நண்பர். ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியின் போது மட்டுமல்ல, ஆண்டு முழுவதும் அவ்வப்போது பேசுவோம். கோலி புதுப்புது விசயங்களை செய்வதில் ஆர்வம் கொண்டவர்’ என்றும் டிவில்லியர்ஸ் குறிப்பிட்டார்.

வெளிநாட்டு வீரர்கள் இல்லை என்றால் எங்களுக்கு ஐபிஎல் 2020 சீசன் இல்லை என்று சென்னை சூப்பர் கிங்ஸ் தரப்பில் இருந்து செய்திகள் வெளியாகியுள்ளன.
கொரோனா வைரஸ் தொற்றால் ஐபிஎல் 2020 சீசன் நடைபெறுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. ஐபிஎல் போட்டி ரத்தானால் 4 ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்படும் என பிசிசிஐ தெரிவித்துள்ளது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணி இந்திய வீரர்களை கொண்டு தொடரை நடத்தலாம் என ஆலோசனை தெரிவித்திருந்தது.
இந்நிலையில் வெளிநாட்டு வீரர்கள் இல்லை என்றால் ஐபிஎல் 2020 சீசனுக்கு ‘NO’ சொல்வோம் என்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சென்னை சூப்பர் கிங்ஸ் தரப்பில் இருந்து வெளியான செய்தியில் ‘‘சென்னை சூப்பர் கிங்ஸ் அணியால் வெளிநாட்டு வீரர்கள் இல்லாமல் ஐபிஎல் போட்டியை பார்க்க இயலாது. இது மற்றொரு சையத் முஷ்டாக் அலி டிராபி (உள்ளூர் டி20 தொடர்) போன்றுதான் இருக்கும்.
கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் மோசமான சூழ்நிலைக்குப் பிறகு அணிகள் பிசிசிஐ-யை தொடர்பு கொள்ளவில்லை. இந்த வருடத்தின் இறுதியில் ஐபிஎல் தொடர் நடக்கலாம் என்ற நம்பிக்கை உள்ளது’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பார்சிலோனா அணியின் கேப்டனான மெஸ்சி, சொந்த நாட்டின் மருத்துவமனைகளுக்கு கொரோனாவை எதிர்த்து போராட ஐந்து கோடி ரூபாய் நிதியுதவி வழங்கியுள்ளார்.
அர்ஜென்டினா கால்பந்து அணியின் கேப்டன் மெஸ்சி, ஸ்பெயினின் தலைசிறந்த பார்சிலோனா கிளப் அணிக்காக விளையாடி வருகிறார். தற்போது கொரோனாவால் போட்டிகள் அனைத்தும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. மெஸ்சி ஏற்கனவே கொரோனா வைரஸ் எதிர்ப்பு நடவடிக்கைக்கு பண உதவி செய்துள்ளார்.
தென்அமெரிக்கா நாடான அர்ஜென்டினாவிலும் கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் உள்ளது. அங்குள்ள மருத்துவமனைகள் கொரோனாவுக்கு எதிரான போரில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில் அங்குள்ள மருத்துவமனைகளுக்கு உபகரணங்கள் வாங்கும் வகையில் மெஸ்சி 4 கோடி ரூபாய் (5.4 லட்சம் டாலர்) நிதியுதவி வழங்கியுள்ளார்.
பார்சிலோனா அணி வழங்கும் சம்பளத்தில் 70 சதவீதத்தை விட்டுக்கொடுக்க தயார் என்று கூறிய மெஸ்சி, கிளப்பின் ஸ்டாஃப்கள் 100 சதவீதம் சம்பள பெறுவதற்கு உறுதி அளிப்போம் என்று தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஸ்டீவ் ஸ்மித்தை அவுட்டாக்க நான்கு பந்துகள் போதும் எனத் தெரிவித்த சோயிப் அக்தரை, மைக்கேல் ஜோர்டான் போட்டோவை பயன்படுத்தி ட்ரோல் செய்துள்ளது ஐசிசி.
கிரிக்கெட்டிற்கான பிரத்தேய இணைய தளம் ESPNcricinfo.com/ இந்த இணைய தளத்திற்குள் நுழைந்தால் கிரிக்கெட் குறித்த புள்ளி விவரங்களை துல்லியமாக அறிந்து கொள்ளலாம். மேலும் தலைசிறந்த கிரிக்கெட் ‘லைவ் ஸ்கோர்கார்டு’ வெப்சைட்.
தற்போது கிரிக்கெட் போட்டிகள் நடைபெறாமல் இருப்பதால் ரசிகர்களிடம் கேள்விகளை கேட்டு வருகிறது. அதன்படி கிரிக்கெட்டில் தலைசிறந்த விளங்கிய வீரர்களை கொண்டு (எதிரெதிராக விளையாடாத வீரர்கள்) 10 ஜோடியின் படங்களை வெளியிட்டு அதில் எந்த ஜோடியை விரும்புவீர்கள் என்று கேள்வி கேட்டிருந்தது.
அந்த படத்தில் விராட் கோலி VS வார்னே, அன்வர் VS பும்ரா, கேன் வில்லியம்சன் VS முரளீதரன், பாபர் அசாம் VS மெக்ராத், சச்சின் தெண்டுல்கர் VS ரஷித் கான், கெவின் பீட்டர்சன் VS ரபடா, ரிக்கி பாண்டிங் VS ஜாஃப்ரா ஆர்சர், பிரையன் VS வாக்னர், டி வில்லியர்ஸ் VS வாசிம் அக்ரம், ஸ்மித் VS அக்தர் ஜோடிகளை வெளியிட்டிருந்தது.
இதற்கு பதில் அளித்த சோயிப் அக்தர், பயங்கரமான மூன்று பவுன்சர் பந்துகளை ஸ்மித்திற்கு வீசி, அடுத்த பந்தில் அவுட்டாக்கிவிடுவேன் என்று பதில் அளித்திருந்தார்.
அக்தரின் கருத்துக்கு ரசிகர்கள் கிண்டல் செய்யும் வகையில் கருத்துக்கள் தெரிவித்து வந்தனர். இந்நிலையில் ஐசிசி மைக்கேல் ஜோர்டான் படத்தை வெளியிட்டு அக்தரை ட்ரோல் செய்துள்ளது.
அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் பெண்களுக்கான ஒருநாள் கிரிக்கெட் உலக கோப்பைக்கான தகுதி சுற்று தொடர் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக கடந்த மார்ச் மாதத்தில் இருந்து மே மாதம் வரை நடைபெற இருந்த கிரிக்கெட் தொடர்கள் அனைத்தும் அதிகாரப்பூர்வமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. ஜூன் மாதத்திற்குப் பிறகு கிரிக்கெட் போட்டிகள் நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் தற்போதைய சூழ்நிலையில் ஜூன், ஜூலையில் கூட கிரிக்கெட் போட்டிகள் நடைபெற சந்தேகம்தான் எனக் கருதப்படுகிறது. இதனால் அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் பெண்களுக்கான ஒருநாள் கிரிக்கெட் உலக கோப்பைக்கான தகுதிச் சுற்று தொடர் ஜூலை 3-ந்தேதியில் இருந்து 19-ந்தேதி வரை நடைபெற இருந்தது. தற்போது இந்தத் தொடர் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
அதேபோல் 2022-ம் ஆண்டுக்கான U-19 உலக கோப்பை தொடருக்கான ஐரோப்பிய மண்டலத்திற்கான தகுதிச் சுற்று ஜூலை 24-ந்தேதியில் இருந்து 30-ந்தேதி வரை நடைபெற இருந்தது. இந்தத் தொடரும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.