என் மலர்
விளையாட்டு
ஸ்டீவ் ஸ்மித்தை அவுட்டாக்க நான்கு பந்துகள் போதும் எனத் தெரிவித்த சோயிப் அக்தரை, மைக்கேல் ஜோர்டான் போட்டோவை பயன்படுத்தி ட்ரோல் செய்துள்ளது ஐசிசி.
கிரிக்கெட்டிற்கான பிரத்தேய இணைய தளம் ESPNcricinfo.com/ இந்த இணைய தளத்திற்குள் நுழைந்தால் கிரிக்கெட் குறித்த புள்ளி விவரங்களை துல்லியமாக அறிந்து கொள்ளலாம். மேலும் தலைசிறந்த கிரிக்கெட் ‘லைவ் ஸ்கோர்கார்டு’ வெப்சைட்.
தற்போது கிரிக்கெட் போட்டிகள் நடைபெறாமல் இருப்பதால் ரசிகர்களிடம் கேள்விகளை கேட்டு வருகிறது. அதன்படி கிரிக்கெட்டில் தலைசிறந்த விளங்கிய வீரர்களை கொண்டு (எதிரெதிராக விளையாடாத வீரர்கள்) 10 ஜோடியின் படங்களை வெளியிட்டு அதில் எந்த ஜோடியை விரும்புவீர்கள் என்று கேள்வி கேட்டிருந்தது.
அந்த படத்தில் விராட் கோலி VS வார்னே, அன்வர் VS பும்ரா, கேன் வில்லியம்சன் VS முரளீதரன், பாபர் அசாம் VS மெக்ராத், சச்சின் தெண்டுல்கர் VS ரஷித் கான், கெவின் பீட்டர்சன் VS ரபடா, ரிக்கி பாண்டிங் VS ஜாஃப்ரா ஆர்சர், பிரையன் VS வாக்னர், டி வில்லியர்ஸ் VS வாசிம் அக்ரம், ஸ்மித் VS அக்தர் ஜோடிகளை வெளியிட்டிருந்தது.
இதற்கு பதில் அளித்த சோயிப் அக்தர், பயங்கரமான மூன்று பவுன்சர் பந்துகளை ஸ்மித்திற்கு வீசி, அடுத்த பந்தில் அவுட்டாக்கிவிடுவேன் என்று பதில் அளித்திருந்தார்.
அக்தரின் கருத்துக்கு ரசிகர்கள் கிண்டல் செய்யும் வகையில் கருத்துக்கள் தெரிவித்து வந்தனர். இந்நிலையில் ஐசிசி மைக்கேல் ஜோர்டான் படத்தை வெளியிட்டு அக்தரை ட்ரோல் செய்துள்ளது.
அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் பெண்களுக்கான ஒருநாள் கிரிக்கெட் உலக கோப்பைக்கான தகுதி சுற்று தொடர் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக கடந்த மார்ச் மாதத்தில் இருந்து மே மாதம் வரை நடைபெற இருந்த கிரிக்கெட் தொடர்கள் அனைத்தும் அதிகாரப்பூர்வமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. ஜூன் மாதத்திற்குப் பிறகு கிரிக்கெட் போட்டிகள் நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் தற்போதைய சூழ்நிலையில் ஜூன், ஜூலையில் கூட கிரிக்கெட் போட்டிகள் நடைபெற சந்தேகம்தான் எனக் கருதப்படுகிறது. இதனால் அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் பெண்களுக்கான ஒருநாள் கிரிக்கெட் உலக கோப்பைக்கான தகுதிச் சுற்று தொடர் ஜூலை 3-ந்தேதியில் இருந்து 19-ந்தேதி வரை நடைபெற இருந்தது. தற்போது இந்தத் தொடர் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
அதேபோல் 2022-ம் ஆண்டுக்கான U-19 உலக கோப்பை தொடருக்கான ஐரோப்பிய மண்டலத்திற்கான தகுதிச் சுற்று ஜூலை 24-ந்தேதியில் இருந்து 30-ந்தேதி வரை நடைபெற இருந்தது. இந்தத் தொடரும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
ஜேம்ஸ் ஆண்டர்சன், ஸ்டூவர்ட் பிராட் ஓய்வு பெற்ற பிறகு, இங்கிலாந்து டெஸ்ட் அணிக்கு பந்து வீச்சாளர்கள் இருக்கிறார்களா? என கெவின் பீட்டர்சன் கேள்வி எழுப்பியுள்ளார்.
இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கெட் அணியில் ஜேம்ஸ் ஆண்டர்சன், ஸ்டூவர்ட் பிராட் ஆகியோர் தலைசிறந்த பந்து வீச்சாளர்களாக உள்ளனர். இருவரும் இணைந்து சுமார் 10 வருடத்திற்கு மேல் பணியாற்றி வருகின்றனர். இருவருக்கும் 30 வயதிற்கு மேல் ஆகியது. ஆஸ்திரேலியாவில் நடைபெற இருக்கும் ஆஷஸ் தொடருக்குப்பின் ஓய்வு குறித்து இவரும் முடிவு எடுக்கலாம்.
இருவரும் ஓய்வு பெற்றால் அதன்பின் அணியில் வேகப்பந்து வீச்சாளர்கள் என்று யார் இருக்கிறார்கன் என முன்னாள் பேட்ஸ்மேன் கெவின் பீட்டர்சன் தனது கவலையை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து கெவின் பீட்டர்சன் கூறுகையில் ‘‘ஜேம்ஸ் ஆண்டர்சன், ஸ்டூவர்ட் பிராட் ஆகியோர் அணியில் இருந்து சென்ற பிறகு, இங்கிலாந்து டெஸ்ட் அணி குறித்து நான் கவலைப்படுகிறேன். தற்போது அவர்கள் கிரிக்கெட் வாழ்க்கையின் கடைசி விளிம்பில் உள்ளனர். அவர்கள் சென்ற பிறகு அந்த இடத்தை நிரப்ப மிகமிகப் பெரிய அளவில் இடைவெளி ஏற்படும். இங்கிலாந்து அணியிடம் பந்து வீச்சாளர்கள் இருக்கிறார்களா?’’ எனத் தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் 2020 சீசன் ரத்து செய்யப்பட்டால் இந்தியா கிரிக்கெட் வாரியத்திற்கு 3994.64 கோடி ரூபாய் இழப்பு ஏற்படும் என பிசிசிஐ பொருளாளர் தெரிவித்துள்ளார்.
பிசிசிஐ-யால் நடத்தப்படும் ஐபிஎல் 13-வது சீசன் கடந்த மார்ச் மாதம் 29-ந்தேதி நடைபெற இருந்தது. ஆனால் மார்ச் மாதம் முதல் வாரத்தில் இருந்து சர்வதேச விமானங்களுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டதால் மார்ச் 29-ந்தேதி தொடங்க இருந்த ஐபிஎல் தொடரை ஏப்ரல் 14-ந்தேதி வரை ஒத்தி வைக்கப்படுவதாக பிசிசிஐ தலைவர் கங்குலி தெரிவித்தார்.
அதன்பின் இந்தியா ஏப்ரல் 14-ந்தேதி வரை ஊடரங்கு உத்தரவை அமல்படுத்தியது. அதன்பின் மே 3-ந்தேதி வரை அதை நீட்டித்தது. இதனால் மறு அறிவிப்பு வரும் வரை ஐபிஎல் தொடர் ஒத்தி வைக்கப்படுவதாக பிசிசிஐ அறிவித்தது.
ஆஸ்திரேலியாவில் அக்டோபர்-நவம்பரில் டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் நடக்கிறது. இந்தத் தொடர் ஒத்தி வைக்கப்பட்டால் ஐபிஎல் தொடரை நடத்த சாத்தியக்கூறுகள் உள்ளன எனக் கூறப்பட்டது.
தற்போதைய சூழ்நிலையில் மீண்டும் கிரிக்கெட் எப்போது தொடங்கும் என்று யாராலும் கணிக்க முடியாத நிலை உள்ளது. இந்நிலையில் முதன்முறையாக ஒருவேளை ஐபிஎல் தொடர் ரத்து செய்யப்பட்டால் 3994.64 கோடி ரூபாய் இழப்பு ஏற்படும் என்று பிசிசிஐ பொருளாளர் அருண் துமல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பிசிசிஐ பொருளாளர் அருண் துமல் கூறுகையில் ‘‘பிசிசிஐ மிகப்பெரிய வருவாய் இழப்பை எதிர்நோக்கி இருக்கிறது. ஒருவேளை ஐபிஎல் போட்டி நடைபெறாவிடில், 3994.64 கோடி ரூபாய் இழப்பை சந்திக்க வேண்டியிருக்கும்.
இந்த வருடம் ஐபிஎல் போட்டிக்கான நேரம் கிடைக்குமா? என்பது எங்களால் உறுதியாக சொல்ல முடியாது. எத்தனை போட்டிகளை இழக்கிறோம் என்பதை பொறுத்துதான் சரியான தொகையை கூற இயலும்.
பிராண்ட் மதிப்பு மூலம் 6.7 பில்லியன் டாலர் வருவாய் கிடைக்கும் என திட்டமிடப்பட்டிருந்தது. தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமம் மூலம் 220 மில்லியன் டாலர் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜோகன்னஸ்பர்க் டெஸ்ட் போட்டிக்கு முன் சவுரவ் கங்குலி என்னை நீண்ட நேரம் வலைப்பயிற்சியில் ஈடுபடுத்தியது மிகப்பெரிய அளவில் உதவியாக இருந்தது என ஸ்ரீசந்த் தெரிவித்துள்ளார்.
இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளராக திகழ்ந்தவர் ஸ்ரீசந்த். 2013 ஐபிஎல் தொடரின்போது மேட்ச்-பிக்சிங் வழக்கில் கைது செய்யப்பட்டதால் கிரிக்கெட் வாழ்க்கை பாதிக்கப்பட்டது. தற்போது நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டாலும் கிரிக்கெட் விளையாட முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.
2005 முதல் 2001 வரை இந்திய அணியின் முக்கிய நபராக இருந்தார். 2007-ம் ஆண்டு இந்தியா டி20 உலக கோப்பை அணியை வென்ற போதும், 2011-ம் ஆண்டு இந்தியா ஒருநாள் கிரிக்கெட் போட்டியின் உலக கோப்பையை வென்ற போதும் அணியில் இருந்தவர்.
இந்திய அணி தென்ஆப்பிரிக்காவில் 2006-ம் ஆண்டு சுற்றுப் பயணம் செய்து விளையாடியது. ராகுல் டிராவிட்டின் தலைமையிலான இந்திய அணி ஜோகன்னஸ்பர்க்கில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியை வென்றது. அந்த டெஸ்டில் 8 விக்கெட் வீழ்த்தி அசத்தியவர் ஸ்ரீசந்த்.
முதல் இன்னிங்சில் ஐந்து விக்கெட்டுகளும், 2-வது இன்னிங்சில் 3 விக்கெட்டும் வீழ்த்தினார். இந்த போட்டியில் சிறப்பாக பந்துவீச சவுரவ் கங்குலிதான் முக்கிய காரணமாக இருந்தார் என்று ஸ்ரீசந்த் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ஸ்ரீசந்த் கூறுகையில் ‘‘எனக்கு அந்த சம்பவத்தை இன்னும் ஞாபகப்படுத்த முடியும். டெஸ்ட் தொடருக்கு முன் போட்செஃப்ஸ்ட்ரூமில் நடைபெற்ற பயிற்சி ஆட்டத்தில் விளையாடினோம். அப்போது கங்குலி மீண்டும் அணிக்கு திரும்பிய நேரம்.
போட்டி தொடங்குவதற்கு முன் கங்குலி என்னை அழைத்து வலைப்பயிற்சியின்போது பந்து வீசக் கூறினார். அந்த நேரத்தில் நான் இடது கை சுழற்பந்து வீச்சாளருக்கு சிறப்பாக பந்து வீசியது கிடையாது. ஆனால் நீண்ட நேரம் கங்குலிக்கு பந்து வீசியது எனக்கு மிகவும் உதவிகரமாக இருந்தது.
நான் தென்ஆப்பிரிக்கா இடது கை பேட்ஸ்மேன்களுக்கு எதிராக சிறப்பாக பந்து வீசியதை நீங்கள் கவனித்திருக்க முடியும். குறிப்பாக கிரேம் ஸ்மித்திற்கு எதிராக அற்புதமாக பந்து வீசினேன். ஒவ்வொரு முறையும் பந்து வீசிய பின்னர் சச்சின் தெண்டுல்கரிடம் செல்வேன். அவர் மிட்-ஆஃப் அல்லது மிட்-ஆன் திசையில் நின்று எனக்கு ஆலோசனைக் கூறுவார்.
எனக்கு அந்த போட்டியில் ஆட்ட நாயகன் விருது கிடைத்தது. ஆனால் இது அனைத்தும் அந்த ஜாம்பவான்களால் கிடைத்தது. தென்ஆப்பிரிக்கா மண்ணில் இதுவரை இந்தியா ஏன் டெஸ்ட் தொடரை வெல்ல வில்லை என்பது குறித்து எனக்குத் தெரியவில்லை. ஜாம்பவான்களுக்கு வலைப்பயிற்சியின் போது பந்து வீசியதால், அது என்னை சிறந்த பந்து வீச்சாளராக மாற்றியது’’ என்றார்.
சோயிப் அக்தர் மிகவும் பயமுறுத்தும் நபர் போன்று இருந்தார், என்னைக் கொன்று விடுவார் என்று உணர்ந்தேன் என தமிம் இக்பால் நினைவு கூர்ந்துள்ளார்.
கொரோனா வைரஸ் தொற்றால் உள்நாட்டு கிரிக்கெட் போட்டிகளும், சர்வதேச கிரிக்கெட் போட்டிகளும் நடைபெறாமல் உள்ளன. இதனால் நட்சத்திர கிரிக்கெட் வீரர்கள் வீட்டிற்குள்ளேயே முடங்கிக் கிடக்கின்றனர்.
இந்த நேரத்தில் சமூக வலைத்தளங்கள் மூலம் சர்வதேச கிரிக்கெட் வீரர்களின் சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்து வருகின்றனர்.
பாகிஸ்தான் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோயிப் அக்தர் பந்தை எதிர்கொண்டது குறித்து வங்காளதேச அணியில் இடது கை பேட்ஸ்மேன் தமிம் இக்பால் கூறுகையில் ‘‘எனக்கு மட்டும் இந்த நிலை ஏற்படவில்லை. ஏராளமான பேட்ஸ்மேன்களுக்கும் நடந்தன.
150 கி.மீட்டர் வேகத்தில் பந்து வீசிய ஏராளமான பந்து வீச்சாளர்களை நான் எதிர்கொண்டுள்ளேன். ஆனால் முதல் முறையாக சோயிப் அக்தரை சந்திக்கும்போது மிகவும் பயந்தேன். இதை நான் ஏற்கனவே சொல்கியிருக்கிறேன். அந்த நாளில் அவர் என்னை கொன்று விடுவார் என்று உணர்ந்தேன். அவர் பயமுறுத்தும் நபராக இருந்தார்’’ என்றார்.
ராஞ்சியில் உள்ள பண்ணை வீட்டில் குடும்பத்துடன் நேரத்தை செவழித்து வரும் எம்எஸ் டோனி, செல்ல நாயுடன் விளையாடும் வீடியோவை சிஎஸ்கே டுவிட்டரில் பதிவிட்டுள்ளது.
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக ஊரடங்கு அமலில் உள்ளதால் சிஎஸ்கே கேப்டன் எம்எஸ் டோனி, ராஞ்சியில் உள்ள தனது பண்ணை வீட்டில் மனைவி சாக்ஷி, மகள் ஜிவா ஆகியோருடன் நேரத்தை செலவிட்டு வருகிறார்.
அவ்வப்போது மகளுடன் பைக்கில் செல்லும் வீடியோ போன்றவற்றை டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு வருகிறார். சில வீடியோக்களை சிஎஸ்கே தனது அதிகாரப்பூர்வ டுவிட்டரில் பதிவிடுகிறது.
நேற்று டோனி வீட்டில் உள்ள செல்ல நாயுடன் விளையாடி கொண்டிருந்தார். அப்போது எம்எஸ் டோனி பந்தை மேலே தூக்கிப்போட்டு கேட்ச் என கட்டளை பிறப்பித்தார். ஆனால் அந்த செல்ல நாய் நீங்கள் சொல்லி நான் கேட்க மாட்டேன் என்ற தொனியில் அப்படியே இருந்தது.
அதன்பின் டோனி மனைவி சாக்ஷி பந்தை தூக்கி போட்டு ‘கேட்ச்’ என்றதும் ‘லபக்’ என பிடித்தது. அப்போது சாக்ஷி டோனியிடம், நான் சொன்னால் மட்டுமே நாய் கேட்கும். நீங்கள் சொன்னால் கேட்டாது என்றார்.
மீண்டும் டோனி பந்தை வீச, சாக்ஷி உத்தரவிட்டதும் ‘லபக்’ எனப்பிடித்தது. வேடிக்கையான இந்த வீடியோ வைரல் ஆகி வருகிறது.
Thala Dhoni in #yellove, dot. #WhistlePodu 🦁💛 VC: @SaakshiSRawatpic.twitter.com/z4FrGumlxC
— Chennai Super Kings (@ChennaiIPL) May 11, 2020
கோவை மாவட்டம் தொண்டாமுத்தூரில், ஒரு ரூபாய்க்கு இட்லி விற்று வரும் கமலாத்தாள் பாட்டிக்கு, இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் முகமது கைஃப் பாராட்டு தெரிவித்துள்ளார்.
கோவை அருகே உள்ள ஆலாந்துறை வடிவேலம்பாளையத்தை சேர்ந்தவர் கமலாத்தாள் (வயது 85). இவர் 1 ரூபாய்க்கு இட்லி வழங்கி வருவதால் இவரை இட்லி பாட்டி என்றே பலரும் அழைத்து வந்தனர்.
தற்போது கொரோனா பரவல் காரணமாக நாடே ஸ்தம்பித்து இருக்கும் சூழலில் பம்பரமாக இயங்கிக்கொண்டிருக்கிறார் இட்லி பாட்டி. ஊரடங்கு உள்ள நிலையிலும் வெளியூரில் இருந்து வந்தவர்கள் மற்றும் உள்ளூரில் இருப்பவர்கள் என தினமும் 400 பேருக்கு மேல் உணவளித்து வருகின்றார்.
இந்நிலையில் ஒரு ரூபாய்க்கு இட்லி விற்று வரும் கமலாத்தாள் பாட்டிக்கு, இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் முகமது கைஃப் பாராட்டு தெரிவித்துள்ளார். இது தொடர்பான அவரது ட்விட்டர் பதிவில், கமலாத்தாள் பாட்டியின் பணி மகத்தானது என கூறியுள்ளார். மேலும், ஊரடங்கிலும் ஒரு ரூபாய்க்கு இட்லி விற்பது மிக உன்னதமான செயல் என குறிப்பிட்டுள்ள முகமது கைஃப், நமக்கெல்லாம் இது ஒரு முன்னுதாரணம் என்று தெரிவித்துள்ளார்.
தற்போது கொரோனா பரவல் காரணமாக நாடே ஸ்தம்பித்து இருக்கும் சூழலில் பம்பரமாக இயங்கிக்கொண்டிருக்கிறார் இட்லி பாட்டி. ஊரடங்கு உள்ள நிலையிலும் வெளியூரில் இருந்து வந்தவர்கள் மற்றும் உள்ளூரில் இருப்பவர்கள் என தினமும் 400 பேருக்கு மேல் உணவளித்து வருகின்றார்.
இந்நிலையில் ஒரு ரூபாய்க்கு இட்லி விற்று வரும் கமலாத்தாள் பாட்டிக்கு, இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் முகமது கைஃப் பாராட்டு தெரிவித்துள்ளார். இது தொடர்பான அவரது ட்விட்டர் பதிவில், கமலாத்தாள் பாட்டியின் பணி மகத்தானது என கூறியுள்ளார். மேலும், ஊரடங்கிலும் ஒரு ரூபாய்க்கு இட்லி விற்பது மிக உன்னதமான செயல் என குறிப்பிட்டுள்ள முகமது கைஃப், நமக்கெல்லாம் இது ஒரு முன்னுதாரணம் என்று தெரிவித்துள்ளார்.
பெண்களுக்கான பெட் கோப்பை டென்னிஸ் போட்டியில் சிறப்பாக செயல்பட்ட சானியா மிர்சா இதயம் கவர்ந்த வீராங்கனையாக தேர்வு செய்யப்பட்டார்.
புதுடெல்லி
பெண்களுக்கான பெட் கோப்பை டென்னிஸ் போட்டியில் சிறப்பாக செயல்படும் வீராங்கனைகளுக்கு ஆண்டுதோறும் இதயம் கவர்ந்தவர்(ஹார்ட் அவார்டு) விருது வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான விருதுக்கு ஒவ்வொரு மண்டலத்தில் இருந்தும் 2 வீராங்கனைகள் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டது. ‘ஆசிய-ஓசியானா’ மண்டலத்தில் இருந்து இந்திய நட்சத்திர வீராங்கனை சானியா மிர்சா, இந்தோனேஷியா வீராங்கனை பிரிஸ்கா நுக்ரோகோ ஆகியோர் பெயர் பரிந்துரை செய்யப்பட்டு இருந்தது.
இவர்களில் விருதுக்கு உரியவரை தேர்ந்தெடுக்க ஆன்லைன் மூலம் ஒரு வாரம் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. மொத்தம் 16,985 ஓட்டுகள் பதிவானது. இதில் சானியா மிர்சா 10 ஆயிரத்துக்கு அதிகமாக வாக்குகள் பெற்று இந்த பிரிவில் இருந்து இதயம் கவர்ந்த வீராங்கனை விருதுக்கு தேர்வானார். இந்த விருதை பெறும் முதல் இந்தியர் என்ற பெருமையை சானியா மிர்சா பெற்றார். இது குறித்து 33 வயதான சானியா மிர்சா கூறுகையில், ‘இந்த விருதை ஒட்டுமொத்த இந்தியாவுக்கும், உலகம் முழுவதும் உள்ள தனது ரசிகர்களுக்கும் அர்ப்பணிக்கிறேன். இதன் மூலம் கிடைக்கும் பரிசுத் தொகையான ரூ.1.½ லட்சம் கொரோனா தடுப்பு பணிகளுக்காக தெலுங்கானா முதல்வர் நிவாரண நிதிக்கு வழங்கப்படும்’ என்று தெரிவித்தார்.
பேட்டிங்கில் உச்சத்தில் இருக்கும் இந்திய ஒயிட்-பால் அணி துணைக் கேப்டன் ரோகித் சர்மா, தனது ஓய்வு எப்போது என்பது குறித்து உரையாடினார்.
கொரோனா வைரஸ் தொற்றால் உள்நாட்டு கிரிக்கெட் போட்டிகளும், சர்வதேச கிரிக்கெட் போட்டிகளும் நடைபெறாமல் உள்ளன. இதனால் நட்சத்திர கிரிக்கெட் வீரர்கள் வீட்டிற்குள்ளேயே முடங்கிக் கிடக்கின்றனர்.
இந்த நேரத்தில் இன்ஸ்டாகிராம் லைவ் மூலம் ஒருவருக்கொருவர் பேசிக் கொள்கிறார்கள். அதேபோல் ரசிகர்களின் கேள்விகளுக்கும் பதில் அளித்து வருகின்றனர்.
இந்திய அணியின் தொடக்க பேட்ஸ்மேன் ரோகித் சர்மாவும், ஆஸ்திரேலிய அணியின் தொடக்க பேட்ஸ்மேனும் நீண்ட நேரம் தற்போதைய நிலை குறித்து பேசினர்.
அப்போது ரோகித் சர்மா தனது ஓய்வு குறித்து டேவி்ட் வார்னரிடம் பேசினார். அப்போது ரோகித் சர்மா கூறியதாவது:-
நாங்கள் இந்தியாவில் வளரும்போது, கிரிக்கெட் எங்களின் வாழ்க்கை என்றே சொல்வோம். நீங்கள் 38 அல்லது 39 வயதில் கிரிக்கெட் வாழ்க்கை முடிந்துவிடும் என்று சொல்லலாம். அதற்கு இன்னும் நீண்ட காலம் செல்ல வேண்டியுள்ளது. நீங்கள் எப்போது கிரிக்கெட் வாழ்க்கையை முடிப்பீர்கள் என்று எனக்குத் தெரியாது, ஆனால் நான் உறுதியாக அதற்கு முன் முடித்துவிடுவேன்’’ என்றார்.
33 வயதாகும் ரோகித் சர்மா கடந்த 2007-ம் ஆண்டு தனது 20 வயதில் இந்திய அணியில் அறிமுகம் ஆனார். 13 வருடம் கிரிக்கெட் விளையாடியுள்ள அவர், 224 ஒருநாள் போட்டியில் 9115 ரன்கள் குவித்துள்ளார். சராசரி 49.27 ஆகும். இதில் 29 சதங்கள் அடங்கும். தற்போதுதான் தொடர்ச்சியாக டெஸ்ட் போட்டியில் விளையாடும் வாய்ப்பு கிடைத்துள்ளது.
டெஸ்ட் போட்டிக்கான அணிகள் தரவரிசையில் இந்தியாவிடம் இருந்து முதல் இடத்தை பறித்தது குறித்து கவுதம் கம்பிர் கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணி கடந்த 42 மாதங்களாக ஐசிசி தரவரிசையில் முதல் இடத்தில் இருந்து வந்தது. இந்த மாதம் தொடக்கத்தில் ஐசிசி தரவரிசையை வெளியிட்டது. அப்போது 2016-2017 சீசனுக்கான புள்ளிகள் நீக்கப்பட்டன.
இதனால் ஆஸ்திரேலியா முதல் இடத்தையும், நியூசிலாந்து 2-வது இடத்தையும் பிடித்தன. இந்தியா 3-வது இடத்திற்கு தள்ளப்பட்டது.
ஐசிசி அறிமுகம் செய்யப்பட்டுள்ள உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் உள்நாட்டில் மட்டுமே வெற்றி பெற்ற ஆஸ்திரேலியாவுக்கு நம்பர் ஒன் இடத்தை வழங்கியது கேலிக்கூத்தானது என்று கவுதம் கம்பிர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து கவுதம் கம்பிர் கூறுகையில் ‘‘இந்தியா 3-வது இடத்திற்கு தள்ளப்பட்டது குறித்து நான் ஆச்சர்யம் அடையவில்லை. புள்ளிகள் மற்றும் தரவரிசை முறையை என்னால் நம்ப முடியவில்லை. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் சொந்த நாட்டில் இருந்து வெளியே சென்று விளையாடி வெற்றி பெற்றாலும், உள்நாட்டில் விளையாடி வெற்றி பெற்றாலும் சமமான புள்ளிகள் வழங்கப்படுவது மிகமிக மோசம். இது கேலிக்கூத்தானது.
நீங்கள் ஒட்டுமொத்த அளவில் டெஸ்ட் கிரிக்கெட்டை பார்த்தீர்கள் என்றால், இந்திய அணி உள்நாட்டை தவிர்த்து வெளிநாட்டில் நடைபெற்ற டெஸ்ட் தொடர்களை இழந்துள்ளது. ஆனால், ஆஸ்திரேலியாவுக்கு எதிராக வெற்றி பெற்றுள்ளது. மிகவும் போட்டியான அணி. தென்ஆப்பிரிக்கா, இங்கிலாந்து மண்ணில் வெற்றிகளை ருசித்துள்ளன. மற்ற நாடுகள் இதுபோன்று செய்யவில்லை.
இந்திய அணிக்குதான் நம்பர் ஒன் இடத்தை கொடுத்திருக்கனும். ஆஸ்திரேலியாவுக்கு நம்பர் ஒன் இடத்தை கொடுத்தது குறித்து எனக்கு மிகப்பெரிய சந்தேகம் உள்ளது. உள்நாட்டை தவிர்த்து வெளிநாட்டு மண்ணில் ஆஸ்திரேலியா அணியின் நிலை முற்றிலும் பரிதாபகரமானது’’ என்றார்.
தற்போதுள்ள இந்திய அணி வீரர்களிடம் பீல்டர்களுக்கான பண்பில் சற்று குறைபாடுகள் உள்ளன என முன்னாள் வீரர் முகமது கைஃப் தெரிவித்துள்ளார்.
இந்திய அணியின் முன்னாள் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் முகமது கைஃப். இவர் யுவராஜ் சிங் உடன் இணைந்து அணியில் அறிமுகம் ஆனார். இருவரும் பீல்டிங் செய்வதில் வல்லவர்கள். பந்தை டைவ் அடித்து பிடிப்பது, பிடித்த வேகத்தில் பந்தை ஸ்டம்பை நோக்கி எறிவதில் கில்லாடிகள்.
தற்போதுள்ள பீல்டர்களிடம் யுவராஜ் சிங் மற்றும் என்னைப் போன்று பீல்டர்களுக்கான ஒட்டுமொத்த பண்புகளும் இல்லை என முகமது கைஃப் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து முகமது கைஃப் கூறுகையில் ‘‘பந்தை சிறப்பாக கேட்ச் பிடிப்பவர், ஸ்டம்பை அடிக்கடி தாக்கக்கூடிய வகையில் பந்தை எறியும் திறமை படைத்தவர், பந்தை நோக்கி வேகமாக ஓடும் திறமைப் படைத்தவர், மைதானத்தில் பந்து பட்டு திரும்பும் திசையை சரியான கணித்து பிடிக்கும் டெக்னிக் போன்றவைகளை கொண்டவர்கள்தான் முழுமையாக தொகுப்பு கொண்ட பீல்டர்கள்.

நாங்கள் விளையாடிய காலத்தில், நானும் யுவராஜ் சிங்கும் சிறந்த பீல்டர்கள் என்ற அடையாளத்தை பதித்தோம். தற்போது, இந்திய அணியில் நீங்கள் சிறந்த பீல்டர்களை கண்டுபிடிக்கலாம். ஆனால், அவர்கள் பீல்டர்களுக்கான முழுமையான பண்புகளை கொண்டவர்களாக இருக்கிறார்கள் என்று என்னால் நினைக்க முடியவில்லை.
ஒரு வீரராக ஸ்லிப் திசை, ஷார்ட்-லெக், லாங்-ஆன் பவுண்டரியில் வேகமாக ஓடி பந்தை பிடிக்க முடியும். தற்போதைய அணியில் இந்த பேக்கேஜ் மிஸ்சிங்’’ என்றார்.






