என் மலர்
விளையாட்டு
ரசிகர்கள் இருந்தாலும் சரி, இல்லாவிட்டாலும் சரி, வீரர்கள் விளையாடியே தீர வேண்டும் என கெவின் பீட்டர்சன் தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் தொற்றால் கிரிக்கெட் போட்டிகள் அனைத்தும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. கொரோனா வைரஸ் தொற்று முடிந்த பின்னர் போட்டியை மீண்டும் தொடங்கலாம் என ஒவ்வொரு கிரிக்கெட் போர்டுகளும் நினைத்துக் கொண்டிருந்தன.
ஆனால் சூழ்நிலையை பார்க்கும்போது மக்கள் அனைவரும் சுமார் ஒரு வருடம் கொரோனாவுடன்தான் வாழ வேண்டும் என வல்லுநர்கள் தெரிவித்து வருகின்றனர்.
இதனால் ரசிகர்கள் யாரும் இல்லாமல் வெறிச்சோடிய மைதானத்தில் விளையாட்டை நடத்திக் கொள்ள போட்டி அமைப்பாளர்கள் தயாராகி வருகின்றனர். சில வீரர்கள் ரசிகர்கள் இல்லாவிடில் போட்டியில் விறுவிறுப்பு இருக்காது என்கிறார்கள்.
இந்நிலையில் ரசிகர்கள் இருந்தாலும், இல்லாவிடில் வீரர்கள் விளையாட வேண்டும் என இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் கெவின் பீட்டர்சன் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து கெவின் பீட்டர்சன் கூறுகையில் ‘‘ரசிகர்கள் மற்றும் பொதுமக்களுக்கு தற்போது மனஉறுதி அவசியம். அவர்களுடைய மனஉறுதி தற்போது எதிர்மறையாக சென்றால், எல்லாம் கெட்டுவிடும். விளையாட்டு மிகவும் மேம்பட்டது. ஏராளமான மக்களுக்கு நேர்மறையான விஷயங்களை அளிக்கும். கொரோனா வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் வரை விளைாட்டுகளை ரசிகர்கள் இல்லாமல் வெறிச்சோடிய மைதானத்தில் நடத்தலாம். விளையாட்டு வீரர்கள் இதனுடன் ஒத்துப்போவார்கள்.
ஏராளமான வீரர்களுக்கு விளையாட்டுதான் அவர்கள் வாழ்க்கையில் முக்கியமானது. அப்படி இருக்கும்போது ஏன் விளையாட விரும்பமாட்டார்கள்?. ஆகவே, அங்கு ரசிகர்கள் இருந்தால் என்ன? இல்லாவிடில் என்ன?. அங்கு ரசிகர்கள் இல்லாமல் இருக்கலாம். ஆனால் மிகப்பெரிய அளவில் நேரடி ஒளிப்பரப்பு இருக்கும்’’என்றார்.
இந்தியாவின் முன்னணி ரிஸ்ட் ஸ்பின்னர்களில் ஒருவரான அமித் மிஸ்ரா, அணியில் இருந்து நீக்கப்பட்டது குறித்து தெரிவித்துள்ளார்.
இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளராக இருந்தவர் அமித் மிஸ்ரா. 37 வயதாகும் இவர் 2003-ல் முதன்முறையாக இந்திய அணியில் அறிமுகம் ஆனார். இறுதியாக 2017-ம் ஆண்டு நடைபெற்ற டி20 போட்டியில் இந்திய அணிக்காக இங்கிலாந்தை எதிர்த்து விளையாடினார்.
சுமார் 14 ஆண்டுகள் இந்திய அணிக்காக விளையாடினாலும் 22 டெஸ்ட், 36 ஒருநாள் மற்றும் 10 டி20 போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ளார்.
மிஸ்ரா அறிமுகமான காலத்தில் அனில் கும்ப்ளே என்ற ஜாம்பவான் இருந்தார். அதன்பின் ஆஃப் ஸ்பின்னர்களான ஹர்பஜன் சிங், அஸ்வின் ஆதிக்கம் செலுத்தினர். இதனால் ரிஸ்ட் ஸ்பின்னர்களான இவரால் நிரந்தரமாக அணியில் இடம் பிடிக்க முடியவில்லை.
தற்போது ரிஸ்ட் ஸ்பின்னர்கள் ஆதிக்கம் செலுத்தி வரும் நிலையில் மிஸ்ராவுக்கு வயதாகிவிட்டது. இந்நிலையில் எனது ஆட்டத்திறன் உச்சத்தில் இருக்கும்போது அணியில் இருந்து நீக்கப்பட்டேன் என தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
இதுகுறித்து மிஸ்ரா கூறுகையில் ‘‘எனக்கு மட்டும் ஏன் இப்படி நடந்தது? என்பதை எனக்குள்ளேயே கேட்டுக்கொள்வேன். என்னுடைய சாதனை புள்ளி விவரங்களுக்கு ஒருவருமே பதில் அளிக்கவில்லை. யாராவது ஒருவர் காயத்தால் அணியில் இருந்து நீக்கப்பட்டால், காயத்தில் இருந்து மீண்ட பின் அவர் அணிக்கு திரும்ப வேண்டும் என்பது நிர்வாகத்தின் விதிமுறை. விருத்திமான் சகா சுமார் ஒன்றரை ஆண்டுகளுக்குப் பின் அணிக்கு திரும்பினார். எனக்கு ஏன் அப்படி நிகழவில்லை என்று எனக்குத் தெரியவில்லை.
நான் சிறந்த பார்மில் இருக்கும்போது கூட, மற்றோர்களுக்காக யாராவது நீக்கப்பட வேண்டும் என்ற சூழ்நிலை இருந்தால், நீக்கப்பட்ட ஆளாக நான் இருந்தேன்’’ என்றார்.
இங்கிலாந்தின் அணியின் தலைசிறந்த டெஸ்ட் பேட்ஸ்மேன் ஆன அலஸ்டைர் குக் அவர் விளையாடிய காலத்தின் தலைசிறந்த ஐந்து பேட்ஸ்மேன்களை தேர்வு செய்துள்ளார்.
இங்கிலாந்து அணியின் தலைசிறந்த இடது கை பேட்ஸ்மேன் அலஸ்டைர் குக். டெஸ்ட் கிரிக்கெட்டில் சச்சின் தெண்டுல்கரின் சாதனையை தொடக்கூடியவராக இருந்தார். ஆனால் 2018-ம் ஆண்டுடன் தனது சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையை முடித்துக் கொண்டார்.

இங்கிலாந்து அணிக்காக 161 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 12472 ரன்கள் அடித்துள்ளார். சராசரி 45.4 ஆகும். 33 சதங்கள், 57 அரைசதங்கள் அடித்துள்ளார்.
இவர் விளையாடிய காலத்தின் தலைசிறந்த ஐந்து பேட்ஸ்மேன்களை தேர்வு செய்துள்ளார். அதில் தற்போதைய இந்திய அணி கேப்டன் விராட் கோலிக்கு இடம் கொடுத்துள்ளார்.

ஒருநாள் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் தரவரிசையில் தொடர்ந்து டாப் ரேங்கில் இருப்பதாலும், சராசரி 50-க்கு மேல் வைத்துள்ளதாலும், மூன்று வகை கிரிக்கெட்டிலும் எளிதாக ரன்கள் குவிக்கும் திறமையை பெற்றிருப்பதாலும் அவரை தேர்வு செய்துள்ளார்.

வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் இடது கை பேட்ஸ்மேன் பிரையன் லாராவை தனது பட்டியலில் சேர்த்துள்ளார். அவர் விளையாடிய காலத்தில் தலைசிறந்த பேட்ஸ்மேன் என்று புகழ்ந்துள்ளார்.

ஆஸ்திரேலியாவின் ரிக்கி பாண்டிங், தென்அப்பிரிக்காவின் ஜேக்யூஸ் கல்லீஸ், இலங்கை அணியின் குமார் சங்ககரா ஆகியோரையும் தேர்வு செய்துள்ளார்.

59 போட்டிகளில் கேப்டனாக இருந்துள்ள அலஸ்டைர் குக், இந்த மூன்று பேருடன் நெருங்கி விளையாடிய அனுபவம் உள்ளது என்று தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்தில் நடைபெறும் கவுன்ட்டி கிரிக்கெட்டில் விளையாடும் எண்ணம் பும்ராவுக்கு வரக்கூடாது என்று வாசிம் அக்ரம் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் அணியின் தலைசிறந்த பந்து வீச்சாளராக திகழ்ந்தவர் வாசிம் அக்ரம். இளமைக்காலத்தில் வாசிம் அக்ரம் இங்கிலாந்தின் லாங்காஷைர் கவுன்ட்டி அணிக்காக விளையாடியுள்ளார்.
தற்போது டி20 மற்றும் ஒருநாள் போட்டிகள் அதிகரித்துவிட்டன. இந்தியாவின் நம்பர் ஒன் பந்து வீச்சாளரான பும்ரா மூன்று வகை கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாடி வருகிறார். ஏற்கனவே அவருக்கு ஒர்க்லோடு அதிகமாக உள்ளது.
கவுன்ட்டி கிரிக்கெட், முதல்-தர போட்டிகளில் விளையாடினால்தான் பந்து வீச்சு குறித்து கற்றுக்கொள்ள முடியும். இருந்தாலும், இந்த சூழ்நிலையில் கவுன்ட்டி போட்டியில் விளையாட வேண்டும் என்ற எண்ணம் பும்ராவுக்கு இருக்கக்கூடாது என்று அக்ரம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து வாசிம் அக்ரம் கூறுகையில் ‘‘இன்றைய காலக்கட்டத்தில் கிரிக்கெட் அதிகமாகவிட்டது. பும்ரா போன்ற இந்தியாவின் நம்பர் ஒன், உலகின் தலைசிறந்த பந்து வீச்சாளர்களுக்கு நான் சொல்வது, ரிலாக்ஸ் ஆக இருக்க வேண்டும். கவுன்ட்டி கிரிக்கெட்டை நோக்கி ஓடக்கூடாது என்பதுதான். இளம் வீரர்கள் முதல் தர போட்டியில் அதிக அளவில் விளையாட வேண்டும். அங்கிருந்துதான் பந்து வீச்சு குறித்து கற்றக் கொள்ள முடியும்.
டி20 கிரிக்கெட் அற்புதமானது. சிறந்த பொழுதுபோக்கு விளையாட்டு. அதிகமான பணம் கிடைக்கும். ஆனால், டி20 கிரிக்கெட் மூலம் பந்து வீச்சை கற்றுக்கொள்ள முடியாது. டி20-யில் விளையாடுவதை வைத்து வீரர்களின் தரத்தை அறிய முடியும் என்று நான் நினைக்கவில்லை. முதல்-தர கிரிக்கெட், டெஸ்ட் கிரிக்கெட்டை வைத்துதான் ஒரு வீரரின் தரத்தை தெரிந்து கொள்ள முடியும்.
குறைந்த பட்சம் ரசிகர்கள் இல்லாமலாவது பிரெஞ்ச் ஓபனை நடத்துவோம் என போட்டி அமைப்பாளர்கள் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர்.
கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டி பாரீஸ் நகரில் மே 24-ந்தேதி முதல் ஜூன் 7-ந்தேதி வரை நடக்க இருந்தது. கொரோனா வைரஸ் அச்சத்தால் இந்த போட்டி தள்ளிவைக்கப்பட்டு செப்டம்பர் 20-ந்தேதி முதல் அக்டோபர் 4-ந்தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
நிலைமையை பார்க்கும்போது இந்த போட்டி ரசிகர்கள் இன்றி பூட்டிய மைதானத்தில் நடத்தப்படலாம் என்று பிரெஞ்ச் டென்னிஸ் சங்க தலைவர் பெர்னர்ட் குடிசெலி தெரிவித்துள்ளார்.
அவர் கூறுகையில், ‘‘ரசிகர்கள் இன்றி இந்த போட்டி நடத்தப்படுவதற்கும் வாய்ப்பு உண்டு என்பதை மறுப்பதற்கில்லை. போட்டி வெற்றிகரமாக நடைபெற வேண்டும் என்பதே முக்கியம். உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள். ரசிகர்கள் இல்லாமல் நடந்தாலும் அதை டி.வி.யின் மூலம் பார்க்கும் வாய்ப்பு கிடைக்கும்’’என்றார்.
ஆண்டுதோறும் பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியை ஏறக்குறைய 5 லட்சம் ரசிகர்கள் நேரில் கண்டுகளிப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்திய விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் கே.எல். ராகுலுக்கு டி20 கிரிக்கெட்டில் பந்து வீசக் கடினம் என ஜாஃப்ரா ஆர்சர் தெரிவித்துள்ளார்.
லாக்டவுனில் மற்ற கிரிக்கெட் வீரர்களைப் போலவே இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜாஃப்ரா ஆர்சர் தன்னுடைய நேரத்தை வீட்டில் செலவழிக்கிறார். ஆர்சர் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் முன்னாள் வீரர் இஷ் சோதியுடன் உரையாடினார்.
அதில், இந்தியாவின் தொடக்க பேட்ஸ்மேன் கே.எல். ராகுல்தான் விளையாடிய அனைத்து லீக்குகளிலும் டி20 கிரிக்கெட்டில் பந்து வீசக் கடினமான பேட்ஸ்மேன் என்று நியூசிலாந்து லெக் ஸ்பின்னரிடம் ஜாஃப்ரா ஆர்சர் கூறினார். அவர் பேசிய எபிசோடில் இருந்து ஒரு கிளிப்பை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி டுவிட்டரில் பகிர்ந்து கொண்டது.
நாங்கள் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியுடன் விளையாடியபோது அவரை இரண்டு முறை சந்தித்தேன். அனேகமாக என்னைவிடச் சிறந்தவர் அவர்தான் என ஆர்சர் சோதியிடம் கூறினார்.
கே.எல். ராகுல் கடந்த ஆண்டு இந்தியன் பிரிமீயர் லீக்கில் அதிக ரன்கள் எடுத்த இரண்டாவது வீரர் ஆவார். 28 வயதான அவர் 14 ஆட்டங்களில் ஒரு ஆட்டமிழக்காத சதம் மற்றும் ஆறு அரைசதங்களுடன் 593 ரன்கள் எடுத்தார்.
ஐபிஎல் 13-வது சீசனுக்கான ஏலம் கடந்த ஆண்டு டிசம்பரில் நடந்ததை அடுத்து கே.எல். ராகுல் அணியின் கேப்டனாக தேர்வு செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் ஷபியுல்லா ஷபிக் சூதாட்டத்தில் ஈடுபட்டதால் அவருக்கு கிரிக்கெட் மற்றும் அது தொடர்பான நடவடிக்கைகளில் ஈடுபட 6 ஆண்டு தடை விதிக்கப்பட்டுள்ளது.
காபூல்:
ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் ஷபியுல்லா ஷபிக். 30 வயதான ஷபிக் ஆப்கானிஸ்தான் அணிக்காக 24 ஒரு நாள் போட்டிகளில் ஆடி 2 அரைசதம் உள்பட 430 ரன்களும், 46 இருபது ஓவர் ஆட்டங்களில் 494 ரன்களும் எடுத்துள்ளார். கடைசியாக 2019-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் அந்த அணிக்காக விளையாடி இருந்தார்.
கடந்த ஆண்டு நடந்த வங்காளதேச பிரிமீயர் லீக் 20 ஓவர் போட்டியின் போது அவர் சூதாட்ட தரகர்களிடம் பணம் பெற்றுக்கொண்டு மேட்ச் பிக்சிங் சூதாட்டத்தில் ஈடுபட முயற்சித்தது கண்டுபிடிக்கப்பட்டது. விசாரணையில் 2018-ம் ஆண்டு ஆப்கானிஸ்தான் பிரிமீயர் லீக்கிலும் தில்லாலங்கடி வேலையில் ஈடுபட்டது தெரியவந்தது.
இதையடுத்து அவர் மீது ஊழல் தடுப்பு பிரிவின் கீழ் 4 வகையான குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது. தன் மீதான புகாரை அவரும் ஒப்புக்கொண்டார். இது குறித்து விசாரணை மேற்கொண்ட ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் ஒழுங்கு நடவடிக்கை கமிட்டி அவருக்கு கிரிக்கெட் மற்றும் அது தொடர்பான நடவடிக்கைகளில் ஈடுபட 6 ஆண்டு தடை விதித்து நேற்று உத்தரவிட்டது.

கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கர் மும்பையில் உள்ள ஏழை குடும்பங்களுக்கு தன்னார்வ அமைப்பு மூலம் நிதியுதவி வழங்கி உள்ளார்.
மும்பை:
கொரோனா வைரசை கட்டுப்படுத்துவதற்காக மத்திய அரசு கடந்த மார்ச் 25-ந் தேதி முதல் நாடு முழுவதும் ஊரடங்கை அமல்படுத்தியது.
இந்த ஊரடங்கு 3-வது கட்டமாக வருகிற 17-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதனால் தினசரி கூலி தொழிலாளர்கள் வேலையின்றி வருமானம் கிடைக்காமல் சிரமப்பட்டு வருகிறார்கள்.
இந்த நிலையில் கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கர் மும்பையில் உள்ள ஏழை குடும்பங்களுக்கு தன்னார்வ அமைப்பு மூலம் நிதியுதவி வழங்கி உள்ளார்.
மும்பையில் உள்ள 'ஹய் 5' அறக்கட்டளைக்கு அவர் குறிப்பிட்ட தொகையை நன்கொடையாக வழங்கி உள்ளார். இந்த அறக்கட்டளை தெண்டுல்கரிடம் பெற்ற பணத்தை பொருளாதாரத்தில் பின்தங்கிய ஏழைகள் 4 ஆயிரம் பேருக்கு நிவாரண நிதியாக வழங்கும்.
தெண்டுல்கர் ஏற்கனவே கொரோனா தடுப்பு பணிக்கான பிரதமர் நிவாரண நிதிக்கு ரூ.25 லட்சமும், மராட்டிய மாநில அரசின் நிவாரண நிதிக்கு ரூ.25 லட்சமும் வழங்கியிருந்தார்.
இது தவிர அப்னாலயா என்ற அறக்கட்டளை மூலம் 5000 ஏழை மக்களுக்கு ஒரு மாதத்திற்கான நிதி செலவை ஏற்றார்.
தற்போது அவர் மீண்டும் நிதியுதவி அளித்துள்ளார். இதற்காக அந்த அறக்கட்டளை சார்பில் தெண்டுல்கருக்கு நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே இந்திய அணி கேப்டன் வீராட் கோலியும், அவரது மனைவி அனுஷ்கா சர்மாவும் மும்பை காவல்துறை கொரோனா பாதுகாப்பு நிதிக்காக தலா ரூ. 5 லட்சம் அளித்துள்ளனர்.
இந்தியாவில் கொரோனா பாதிப்புக்கு அதிகமாக பாதிக்கப்பட்டு முதலிடத்தில் இருப்பது மராட்டிய மாநிலம் தான். அங்கு 20,228 பேரை நோய்த்தொற்று தாக்கியுள்ளது. 2101 பேர் பலியாகி உள்ளனர். மும்பையில் மட்டும் 12,864 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். 489 பேர் இறந்துள்ளனர்.

எங்கள் நாட்டில் ஐபிஎல் தொடரை நடத்துங்கள் என்று இலங்கை விருப்பம் தெரிவித்திருந்த நிலையில், ஐக்கிய அரபு அமீரகமும் தற்போது விருப்பம் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்ததையடுத்து மார்ச் 29-ம்தேதி நடைபெறவிருந்த ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடர் ஏப்ரல் 15-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. மேலும் ஐபிஎல் போட்டிகள் செப்டம்பரில் நடத்தப்படலாம், வெளிநாடுகளில் நடக்கலாம் என்ற செய்திகள் வெளியாகின.
இதனையடுத்து அதிகாரப்பூர்வமாகச் செய்தி வெளியிட்ட பிசிசிஐ, ‘‘நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பதாலும், ஊரடங்கு உத்தரவு அரசால் செயல்படுத்தப்பட்டு வருவதாலும், அடுத்த அறிவிப்பு வரும் வரை 2020 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் போட்டிகள் ஒத்திவைக்கப்படுகின்றன. கிரிக்கெட் போட்டியைவிட தேசத்தின் பாதுகாப்பும் நலனே முக்கியம் என்பதால் பிசிசிஐ மற்றும் ஐபிஎல் அணிகளின் நிர்வாகத்தினர் இத்தகைய முடிவை எடுத்துள்ளோம்’’ எனத் தெரிவித்தது.
இதனையடுத்து ஐபிஎல் போட்டியை தங்கள் நாட்டில் நடத்தலாம் என்று இலங்கை கிரிக்கெட் வாரியம் விருப்பம் தெரிவித்தது. இந்நிலையில் ஐக்கிய அரபு அமீரகம் பிசிசிஐ-க்கு போட்டிகளை நடத்தக் கோரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து பிசிசிஐ பொருளாளர் அருண் துமல் கூறும்போது ‘‘ஐபிஎல் போட்டிகளை நடத்த ஐக்கிய அரபு அமீரகம் கோரிக்கை விடுத்துள்ளது. ஆனால் இப்போதுள்ள சூழ்நிலையில் சர்வதேச அளவில் எங்கும் பயணம் செய்ய முடியாது’’ என்றார்.
மேலும் ‘‘கிரிக்கெட் வீரர்களின் பாதுகாப்பும் உடல் நலனும் இப்போது முக்கியம். இப்போது உலகமே ஸ்தம்பித்துப் போயிருக்கிறது, எனவே இப்போது எந்த முடிவையும் எங்களால் எடுக்க முடியது’’ என்றார்.
ஏற்கனவே 2014-ம் ஆண்டு இந்தியாவில் பொதுத்தேர்தல் நடைபெற்றதன் காரணமாக ஐபிஎல் தொடரின் 20 போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
கொரோனா வைரஸ் தாக்கம் தணிந்த பிறகு ஒரே நேரத்தில் இரண்டு வடிவிலான கிரிக்கெட் போட்டிகளில் இந்திய அணி விளையாட வாய்ப்பு இருக்கிறது என்று இந்திய கிரிக்கெட் வாரிய அதிகாரி தெரிவித்தார்.
புதுடெல்லி:
கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக கடந்த மார்ச் மாதம் மத்தியில் இருந்து உலகம் முழுவதும் விளையாட்டு போட்டிகள் எதுவும் நடைபெறவில்லை. பல சர்வதேச போட்டிகள் தள்ளிவைக்கப்பட்டும், ரத்து செய்யப்பட்டும் இருக்கின்றன. இதில் சர்வதேச கிரிக்கெட் போட்டியும் அடங்கும். இதனால் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து உள்ளிட்ட பல நாடுகளின் கிரிக்கெட் வாரியங்களுக்கு பெருத்த வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் கொரோனா பிரச்சினை ஓய்ந்ததும் ரசிகர்கள் இன்றி பூட்டிய மைதானத்தில் கூட போட்டியை நடந்த கிரிக்கெட் வாரியங்கள் தயாராகி வருகின்றன.
கடந்த மார்ச் மாதம் 29-ந் தேதி தொடங்க வேண்டிய ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி காலவரையின்றி தள்ளிவைக்கப்பட்டு இருப்பது இந்திய கிரிக்கெட் வாரியத்துக்கு பெரிய தலைவலியாக உள்ளது. இந்த போட்டி ரத்து செய்யப்பட்டால் சுமார் ரூ.4000 கோடி வருவாய் இழப்பு ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக இந்திய கிரிக்கெட் வாரியம், போட்டி ஒளிபரப்பு நிறுவனம் உள்ளிட்ட பல்வேறு தரப்பினருக்கும் பொருளாதார ரீதியாக பெரும் பாதிப்பு ஏற்படும்.
கொரோனா வைரஸ் தாக்கம் தணிந்து மீண்டும் சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் தொடங்கும் போது, ஏற்கனவே ஏற்பட்ட இழப்பை ஈடுசெய்ய எல்லா அணிகளும் அதிக ஆட்டங்களில் விளையாட வேண்டிய நெருக்கடி நிச்சயம் ஏற்படும். அப்போது ஒரே சமயத்தில் டெஸ்ட் மற்றும் குறுகிய வடிவிலான (ஒருநாள், 20 ஓவர்) கிரிக்கெட் போட்டியில் விளையாட வேண்டிய அவசியம் அணிகளுக்கு நேரிடலாம். எனவே ஒவ்வொரு நாடும் டெஸ்ட் மற்றும் குறுகிய வடிவிலான போட்டிக்கு தனித்தனியாக அணியை உருவாக்க வேண்டிய நிலை உருவாகலாம். இதனை கருத்தில் கொண்டு இந்திய கிரிக்கெட் வாரியம் ஒரேநேரத்தில் இரண்டு வடிவிலான போட்டிகளில் விளையாட 2 அணிகளை உருவாக்குவது குறித்து ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது. 2 அணிகள் ஏற்படுத்துவதன் மூலம் இந்திய அணி அதிக போட்டிகளில் விளையாட முடிவதுடன், குறுகிய காலத்தில் அதிக வருவாயையும் ஈட்ட முடியும்.
இது குறித்து இந்திய கிரிக்கெட் வாரிய அதிகாரி ஒருவர் கருத்து தெரிவிக்கையில், ‘சர்வதேச கிரிக்கெட் போட்டி மீண்டும் எப்போது தொடங்கும் என்பது யாருக்கு தெரியும். ஆனாலும் ஸ்பான்சர் முதல் பார்வையாளர்கள் வரை எங்களுடைய பங்காளர்களின் நலனை நாங்கள் பாதுகாக்க வேண்டும். இதற்காக இரண்டு வெவ்வேறு அணிகளை தேர்வு செய்து, ஒரேநேரத்தில் டெஸ்ட் மற்றும் 20 ஓவர் போட்டி தொடரில் விளையாட வாய்ப்பு உள்ளது‘ என்று தெரிவித்தார்.
ஒருநாடு ஒரே சமயத்தில் இரண்டு வடிவிலான கிரிக்கெட் போட்டிகளில் விளையாடுவது என்பது எளிதான காரியம் இல்லை. வீரர்கள் தேர்வு, அணியை நிர்வகிப்பது உள்ளிட்ட பல பிரச்சினைகளை சந்திக்க வேண்டியது வரும். ஆனால் 2017-ம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி ஒரே நேரத்தில் 2 வடிவிலான போட்டிகளில் விளையாடியுள்ளது.

ஐ.பி.எல். கிரிக்கெட்டின் போது எம்எஸ் டோனி தன்னிடம் கெஞ்சியதாக ஆஸ்திரேலிய முன்னாள் அதிரடி ஆட்டக்காரர் மேத்யூ ஹைடன் தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி:
ஆஸ்திரேலிய முன்னாள் அதிரடி ஆட்டக்காரர் மேத்யூ ஹைடன் ஐ.பி.எல். கிரிக்கெட்டில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக 3 ஆண்டுகள் விளையாடி இருந்தார். இதில் சென்னை அணி பட்டம் வென்ற 2010-ம் ஆண்டு ஐ.பி.எல். தொடரில் அவர் புதுமையான பேட் ஒன்றை பயன்படுத்தினார். ‘மங்கூஸ்’ என்று அழைக்கப்பட்ட அந்த குட்டி பேட்டில் கைப்பிடி நீளமாகவும், பந்தை எதிர்கொள்ளும் தட்டையான பகுதியின் நீளம் குறைவாக இருந்தது. ஏதோ சிறுவர்களுக்கான பேட் போன்று காணப்பட்டாலும் பெரும்பாலான ஆட்டங்களில் அவர் ‘மங்கூஸ்’ பேட்டுடன் தான் களம் கண்டார். டெல்லிக்கு எதிரான ஆட்டத்தில் 43 பந்துகளில் 9 பவுண்டரி, 7 சிக்சருடன் 93 ரன்கள் நொறுக்கினார். மற்றபடி பெரிய அளவில் ஜொலிக்கவில்லை.
முதன்முதலில் ‘மங்கூஸ்’ பேட்டை பயன்படுத்தப்போவதாக கூறியதும் சென்னை அணியின் கேப்டன் டோனி என்ன சொன்னார்? என்று ஹைடனிடம் நேற்று ஆன்-லைன் வீடியோ மூலம் கேட்கப்பட்டது. அதற்கு 48 வயதான ஹைடன் கூறியதாவது:-

இவ்வாறு அவர் கூறினார்.
2010-ம் ஆண்டு ஐ.பி.எல். போட்டியில் ஹைடன் 16 ஆட்டங்களில் 346 ரன்கள் எடுத்திருந்தார். இறுதி ஆட்டத்தில் சென்னை அணி 22 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்சை வீழ்த்தி மகுடம் சூடியது.

‘உங்கள் வாழ்க்கையில் நீங்கள் விரும்பும் எதை வேண்டுமானாலும் கேளுங்கள் நான் தருகிறேன். இந்த பேட்டை மட்டும் பயன்படுத்த வேண்டாம்’ என்று டோனி என்னிடம் கூறினார். தயவு செய்து இந்த பேட்டை பயன்படுத்தாதீர்கள் என்று வற்புறுத்திக்கேட்டுக் கொண்டார். அதற்கு நான், ‘இந்த வகை பேட்டில் நான் ஒன்றரை ஆண்டுகள் பயிற்சி மேற்கொண்டு இருக்கிறேன். அது மட்டுமின்றி பேட்டின் நடுப்பகுதியில் பந்து பட்டால் 20 மீட்டர் தூரம் கூடுதலாக பறக்கும். அதனால் கவலைப்படாதீர்கள்’ என்று டோனியிடம் கூறி அவரை சமாதானப்படுத்தினேன். மங்கூஸ் பேட்டை நான் பயன்படுத்தியது, துணிச்சலான முடிவு. இந்த பேட்டுடன் உற்சாகமாக ரசித்து விளையாடினேன்.

இவ்வாறு அவர் கூறினார்.
2010-ம் ஆண்டு ஐ.பி.எல். போட்டியில் ஹைடன் 16 ஆட்டங்களில் 346 ரன்கள் எடுத்திருந்தார். இறுதி ஆட்டத்தில் சென்னை அணி 22 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்சை வீழ்த்தி மகுடம் சூடியது.
கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் மெத்தனமாக இருக்கக்கூடாது என இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் அனில் கும்பிளே வேண்டுகோள் விடுத்துள்ளார்.
பெங்களூரு:
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் அனில் கும்பிளே தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு இருக்கும் ஒரு வீடியோ பதிவில், ‘கொரோனா வைரசுக்கு எதிரான போராட்டத்தில் நாம் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டியது அவசியமானதாகும்.
இது ஒரு டெஸ்ட் போட்டி போன்றதாகும். டெஸ்ட் போட்டி வெறும் 5 நாட்கள் தான் நடைபெறும். ஆனால் இது நீண்டதாக உள்ளது. டெஸ்ட் போட்டியில் ஒவ்வொரு அணிக்கும் தலா 2 இன்னிங்ஸ் மட்டுமே உண்டு. ஆனால் இதில் அதனை காட்டிலும் அதிகமாக இருக்கலாம். முதல் இன்னிங்சில் நாம் சற்று முன்னிலையில் இருக்கிறோம் என்பதற்காக மெத்தனமாக இருக்கக்கூடாது. ஏனெனில் 2-வது இன்னிங்ஸ் உண்மையில் மிகவும் கடினமாக இருக்கலாம்.
இந்த போராட்டத்தில் நாம் முழுமையான வெற்றியை பெற வேண்டும். கொரோனாவுக்கு எதிரான போரில் தன்னலம் பார்க்காமல் ஈடுபட்டு இருக்கும் டாக்டர்கள், நர்சுகள், சுகாதார பணியாளர்கள், போலீசார் உள்ளிட்ட அனைத்து தரப்பினருக்கும் இந்த தருணத்தில் நன்றி தெரிவித்து கொள்கிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.