என் மலர்tooltip icon

    விளையாட்டு

    கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் மெத்தனமாக இருக்கக்கூடாது என இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் அனில் கும்பிளே வேண்டுகோள் விடுத்துள்ளார்.
    பெங்களூரு:

    இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் அனில் கும்பிளே தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு இருக்கும் ஒரு வீடியோ பதிவில், ‘கொரோனா வைரசுக்கு எதிரான போராட்டத்தில் நாம் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டியது அவசியமானதாகும்.

    இது ஒரு டெஸ்ட் போட்டி போன்றதாகும். டெஸ்ட் போட்டி வெறும் 5 நாட்கள் தான் நடைபெறும். ஆனால் இது நீண்டதாக உள்ளது. டெஸ்ட் போட்டியில் ஒவ்வொரு அணிக்கும் தலா 2 இன்னிங்ஸ் மட்டுமே உண்டு. ஆனால் இதில் அதனை காட்டிலும் அதிகமாக இருக்கலாம். முதல் இன்னிங்சில் நாம் சற்று முன்னிலையில் இருக்கிறோம் என்பதற்காக மெத்தனமாக இருக்கக்கூடாது. ஏனெனில் 2-வது இன்னிங்ஸ் உண்மையில் மிகவும் கடினமாக இருக்கலாம்.

    இந்த போராட்டத்தில் நாம் முழுமையான வெற்றியை பெற வேண்டும். கொரோனாவுக்கு எதிரான போரில் தன்னலம் பார்க்காமல் ஈடுபட்டு இருக்கும் டாக்டர்கள், நர்சுகள், சுகாதார பணியாளர்கள், போலீசார் உள்ளிட்ட அனைத்து தரப்பினருக்கும் இந்த தருணத்தில் நன்றி தெரிவித்து கொள்கிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளார். 
    உலகின் சிறந்த பேட்ஸ்மேன் விராட் கோலி தான் என ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் இயான் சேப்பல் தெரிவித்துள்ளார்.
    ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் இயான் சேப்பல் சமீபத்தில் ஒரு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான டெஸ்ட் தொடரை ஆவலுடன் எதிர்நோக்கி உள்ளேன். இந்த தொடர் விறுவிறுப்பும், சுவாரஸ்யமும் நிறைந்ததாக இருக்கும்.

    கடந்த முறை இந்திய அணி தொடரை வென்றதால் நம்பிக்கையுடன் வருவார்கள். ஆனால் ஸ்டீவன் சுமித்தும், டேவிட் வார்னரும் ஆஸ்திரேலிய அணிக்கு திரும்பி இருப்பதால் இந்த முறை இந்தியாவுக்கு கடினமாக இருக்கும். இவர்கள் இருவரையும் சீக்கிரம் வீழ்த்தினால் இந்தியா வெற்றி பெறலாம். இல்லாவிட்டால் ஆஸ்திரேலியா வெற்றி பெறும்.

    மூன்று வடிவிலான போட்டிகளிலும் இந்திய கேப்டன் விராட் கோலி ரன் குவித்து வரும் விதம் வியப்பூட்டுகிறது. தற்போது உலகின் சிறந்த பேட்ஸ்மேன் அவர் தான் என தெரிவித்துள்ளார்.
    கொரோனா வைரஸ் தாக்கத்திற்கு பிறகு 2 அணிகளை தயார் செய்ய இங்கிலாந்து, ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியங்கள் திட்டமிட்டுள்ளன.
    புதுடெல்லி:

    கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக உலகம் முழுவதும் கிரிக்கெட் போட்டிகள் பாதிக்கப்பட்டுள்ளது.

    கடந்த மார்ச் மாதத்திலிருந்து எந்தவொரு சர்வதேச கிரிக்கெட் போட்டி தொடரும் நடைபெறவில்லை.

    இதன் காரணமாக ஒவ்வொரு நாட்டு கிரிக்கெட் சங்கத்துக்கும் அதிகமாக வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இதை எப்படி ஈடு செய்வது என்பது குறித்து, அவைகள் ஆலோசனை செய்து வருகின்றன. இதற்கிடையே கொரோனா வைரஸ் தாக்கத்திற்கு பிறகு 2 அணிகளை தயார் செய்ய இங்கிலாந்து, ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியங்கள் திட்டமிட்டுள்ளன.

    அதாவது டெஸ்ட் போட்டிக்கு ஒரு அணியும், ஒருநாள் போட்டி மற்றும் 20 ஓவருக்கு இன்னொரு அணியையும் தயார் செய்வது என்று முடிவு செய்துள்ளன. இதன்மூலம் தொடர்ந்து போட்டிகளை நடத்தி வருவாயை பெற்று விடலாம் என்று கருதி இந்த முடிவை எடுத்துள்ளன.

    இங்கிலாந்து, ஆஸ்திரேலியா போலவே இந்திய கிரிக்கெட் வாரியமும், 2 அணிகளை களமிறக்க தயாராகியுள்ளது. இது தொடர்பாக இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாகி ஒருவர் கூறியதாவது:-

    2 அணிகளை களமிறக்க ஆஸ்திரேலியா, இங்கிலாந்து ஏற்கனவே முடிவு எடுத்துள்ளன. தேவைப்பட்டால் இந்திய கிரிக்கெட் வாரியமும், கொரோனா வைரஸ் பாதிப்புக்கு பிறகு 2 அணிகளை களத்தில் இறக்க தயாராக இருக்கிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.
    ஆஸ்திரேலியாவில் 20 ஓவர் உலக கோப்பை போட்டி நடைபெறுவது கடினமானது என்று அந்நாட்டு முன்னணி வீரர்களில ஒருவரான டேவிட் வார்னர் கூறியுள்ளார்.
    மெல்போர்ன்:

    கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் உலகம் முழுவதும் விளையாட்டுகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

    ஒலிம்பிக் போட்டி மற்றும் ஐரோப்பிய கால்பந்து ஆட்டம் ஒரு ஆண்டுக்கு தள்ளி வைக்கப்பட்டது. இதேப்போல பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியும் ஒத்திவைக்கப்பட்டது. விம்பிள்டன் டென்னிஸ் ரத்தானது.

    இந்தியாவில் பணம் கொழிக்கும் விளையாட்டான ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் காலவரையின்றி. ஒத்திவைக்கப்பட்டது.

    20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியை ஆஸ்திரேலியாவில் அக்டோபர் 18-ந் தேதி முதல் நவம்பர் 15-ந் தேதி வரை நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது.

    கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக செப்டம்பர் 30 தேதி வரை வெளிநாட்டினர் ஆஸ்திரேலியா வர அந்நாடு தடை விதித்துள்ளது. இதனால் 20 ஓவர் உலக கோப்பையின் நிலை கேள்விக்குறியாக இருக்கிறது.

    இந்த நிலையில் ஆஸ்திரேலியாவில் 20 ஓவர் உலக கோப்பை போட்டி நடைபெறுவது கடினமானது என்று அந்நாட்டு முன்னணி வீரர்களில ஒருவரான டேவிட் வார்னர் கூறியுள்ளார்.

    இதுதொடர்பாக அவர் இன்ஸ்டாகிராம் மூலம் இந்திய வீரர் ரோகித்சர்மா விடம் கூறியதாவது;

    கொரோனா வைரசின் அச்சுறுத்தல் காரணமாக ஆஸ்திரேலியாவில் இந்த ஆண்டு 20 ஓவர் உலக கோப்பை போட்டி நடைபெறாது என்று நினைக்கிறேன். ஒவ்வொரு நாட்டு வீரர்களும் (16 அணிகள்) ஒன்றிணைவது கடினமானது.

    இவ்வாறு வார்னர் கூறியுள்ளார்.
    ரசிகர்கள் இன்றி கிரிக்கெட் போட்டிகள் நடந்தால் அதில் விறுவிறுப்பு இருப்பது மிகவும் கடினம் என்று இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட்கோலி தெரிவித்தார்.
    புதுடெல்லி:

    கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் மத்தியில் இருந்து சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் அனைத்தும் தள்ளி வைக்கப்பட்டும், ரத்து செய்யப்பட்டும் இருக்கின்றன. கொரோனா பிரச்சினை தணிந்ததும் கிரிக்கெட் போட்டிகளை உரிய பாதுகாப்புடன் மீண்டும் தொடங்குவதில் எல்லா கிரிக்கெட் வாரியங்களும் முனைப்பு காட்டி வருகின்றன.

    நோய் தொற்றில் இருந்து அனைத்து தரப்பினரையும் பாதுகாக்கும் பொருட்டு ரசிகர்கள் அனுமதியின்றி பூட்டிய ஸ்டேடியத்தில் கிரிக்கெட் போட்டிகளை நடத்தலாமா? என்று ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. ரசிகர்கள் இல்லாவிட்டாலும் பரவாயில்லை, போட்டி நடந்தால் போதும் என்ற நிலைக்கு பல நாட்டு வீரர்கள் வந்து விட்டனர். எனவே கொரோனா பாதிப்பு குறைந்ததும் ரசிகர்கள் இல்லாமல் காலி மைதானத்தில் போட்டிகள் அரங்கேற அதிக வாய்ப்புள்ளது.

    இந்த நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட்கோலி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று பேசுகையில் கூறியதாவது:-

    தற்போதைய சூழ்நிலையை பார்க்கையில் ரசிகர்கள் இல்லாமல் கிரிக்கெட் போட்டி நடத்தப்படுவதற்கான சாத்தியம் இருக்கிறது. ஆனால் இதனை ஒவ்வொரு வீரரும் எப்படி எடுத்துக்கொள்வார்கள் என்பது உண்மையிலேயே எனக்கு தெரியவில்லை. ஏனெனில் ஆர்வம் மிக்க ரசிகர்கள் கூட்டத்திற்கு முன்னிலையில் விளையாடி நாங்கள் எல்லாம் பழக்கப்பட்டு விட்டோம். போட்டியில் வீரர்கள் மிகுந்த தீவிரம் காட்டுவார்கள் என்பது தெரியும். ஆனால் வீரர்களை பார்த்து ரசிகர்கள் எழுப்பும் ஆரவாரம், உற்சாகம் மற்றும் ஆட்டத்துக்குரிய பதற்றம் போன்ற உணர்வுகள் ரசிகர்கள் இல்லாத ஸ்டேடியத்தில் கிடைக்காது. அதுபோன்ற உணர்ச்சிகளை உருவாக்குவது என்பது மிகவும் கடினமாகும்.

    ரசிகர்கள் இல்லை என்றாலும் போட்டி நடைபெற தான் செய்யும். ஆனால் மைதானத்தில் ரசிகர்கள் இருக்கும் சூழலில் நடக்கும் மாயாஜாலங்கள் அவர்கள் இல்லாத நிலையில் நடக்குமா? என்பது சந்தேகம் தான். நாங்கள் எப்பொழுதும் போல் கிரிக்கெட் போட்டியை சிறப்பாகவே விளையாடுவோம். ஆனால் அதுபோன்ற மாயாஜாலத் தருணங்களை கொண்டு வருவது என்பது கடினமானதாகும். நான் நேர்மறையான சிந்தனையுடனும், மகிழ்ச்சியுடனும் எனது வாழ்க்கையை எதிர்நோக்கி வருகிறேன். இதனால் நான் எப்போது களத்துக்கு திரும்பினாலும், எந்த இடத்தில் விட்டுச்சென்றேனா? அந்த இடத்தில் இருந்து தொடங்க சிறப்பான நிலையில் இருப்பேன் என்பது எனக்கு தெரியும்.

    இவ்வாறு அவர் கூறினார். 
    கிரிக்கெட் உலகில் தவிர்க்க முடியாத இரண்டு ஜாம்பவான்களுக்கு பாகிஸ்தான் ஆல்-ரவுண்டர் ஷாஹித் அப்ரிடி இடம் கொடுக்க மறுத்துள்ளார்.
    பாகிஸ்தான் அணி கடந்த 1992-ம் ஆண்டு உலக கோப்பையை கைப்பற்றியது. அப்போது இம்ரான் கான் அந்த அணிக்கு கேப்டனாக இருந்தார். இந்தியாவின் ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கர் ஆறு உலக கோப்பையில் விளையாடியுள்ளார்.

    2011-ம் ஆண்டு நடைபெற்ற உலக கோப்பையை இந்தியா வென்றது. அந்த அணியில் சச்சின் தெண்டுல்கர் இடம் பிடித்திருந்தார். உலக கோப்பையில் 2278 ரன்கள் அடித்து அதிக ரன்கள் அடித்த வீரர்கள் என்ற சாதனையை படைத்துள்ளார்.

    ஆசிய கிரிக்கெட்டை இருவரையும் தவிர்த்து பேசிவிட முடியாது. ஆனால் பாகிஸ்தான் அணியின் அதிரடி பேட்ஸ்மேனாக திகழ்ந்த ஷாஹித் அப்ரிடி, எல்லா காலக்கட்டத்திலும் சிறந்த உலக லெவன் அணியை தேர்வு செய்துள்ளார். அதில் இருவருக்கும் அவர் இடம் கொடுக்கவில்லை.

    சயீத் அன்வர் மற்றும் ஆடம் கில்கிறிஸ்ட் ஆகியோருக்கு தொடக்க பேட்ஸ்மேன் இடத்தை வழங்கியுள்ளார். கில்கிறிஸ்ட் ஆஸ்திரேலியா 199, 2003 மற்றும் 2007 உலக கோப்பையை வென்ற அணியில் இடம் பிடித்திருந்தவர். பாகிஸ்தான் அணியில் சயீத் அன்வர் இடம் பிடித்திருந்தார்.

    இரண்டு முறை உலக கோப்பையை கையில் ஏந்திய ரிக்கி பாண்டிங்கை 3-வது இடத்திற்கு தேர்வு செய்துள்ளார். இவர் மூன்று முறை உலக கோப்பை அணிக்கு கேப்டனாக இருந்துள்ளார். 2003 மற்றும் 2007-ல் கோப்பையை வென்றுள்ளார்.

    விராட் கோலி மற்றும் இன்சமாம் உல் ஹக் ஆகியோரை அடுத்த இரண்டு இடத்திற்கு தேர்வு செய்துள்ளார். தென்ஆப்பிரிக்காவின் ஜேக்யூஸ் கல்லீஸை ஆல்-ரவுண்டராக தேர்வு செய்துள்ளார். இம்ரான் கானுக்குப் பதிலாக அவரை தேர்வு செய்துள்ளார். கல்லீஸ் 199, 1999, 2003,2007,2011 உலக கோப்பையில் விளையாடியுள்ளார்.

    வாசிம் அக்ரம், கிளென் மெக்ராத், சோயிப் அக்தர் ஆகியோரை வேகப்பந்து வீச்சாளராக தேர்வு செய்துள்ளார். ஷேன் வார்னே மற்றும் சக்லைன் முஷ்டாக் ஆகியோரை சுழற்பந்து வீச்சாளராக தேர்வு செய்துள்ளார்.
    டோட்டன்ஹாம் ஹாட்ஸ்பர்ஸ் அணிக்காக விளையாடி வரும் தென்கொரிய வீரர் சன் ஹியுங்-மின் கப்பற்படையில் ராணுவ பயிற்சியை முடித்துள்ளார்.
    தென்கொரியாவைச் சேர்ந்த கால்பந்து வீரர் சன் ஹியுங்-மின். ஆசிய மண்டலத்தில் இருந்து இங்கிலீஷ் பிரிமீயர் லீக்கில் விளையாடும் ஒரே வீரர் இவர்தான். தனது திறமையான ஆட்டத்தால் அணியின் முன்னணி வீரராக திகழ்ந்து வருகிறார்.

    கடந்த மார்ச் மாதம் 12-ந்தேதியில் இருந்து கொரோனா வைரஸ் தொற்று காரணமாக கால்பந்து போட்டிகள் அனைத்தும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. இந்த நேரத்தில் சன் ஹியுங்-மின் தென்கொரியாவின் ராணுவத்தில் இணைந்து பயிற்சி பெற முடிவு செய்தார்.

    அதன்படி கடந்த மூன்று ஆண்டுகளாக தென்கொரிய கப்பற்படை முகாமில் தீவிர பயிற்சி மேற்கொண்டார். ராணுவ அடிப்படையிலான பயிற்சிகள், பாதுகாப்பு குறித்த படிப்பு, துப்பாக்கிகளை சரியாக கையாள்வது, கண்ணீர் புகைக்குண்டுகளை பயன்படுத்துவது போன்ற பயிற்சிகளை சிறப்பாக முடித்து பாராட்டுக்களையும் பெற்றுள்ளார்.

    சன் ஹியுங்-மின் எம்-16 தாக்குதல் துப்பாக்கியை கையில் வைத்திருக்கும் படத்தை கப்பற்படை பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டு சன் ஹியுங்-மின்னுக்கு சல்யூட் அடித்த போன்ற படத்தை வெளியிட்டு கவுரவித்துள்ளது.

    தென்கொரிய நாட்டின் சட்டப்படி ஆண்கள் கட்டாயமாக இரண்டு வருடங்கள் ராணுவத்தில் பணிபுரிய வேண்டும். வடகொரியா 13 லட்சம் ராணுவ வீரர்களை கொண்டுள்ள நிலையில் தென்கொரியா ஆறு லட்சம் ராணுவ வீரர்களை மட்டுமே வைத்துள்ளது. ராணுவத்தின் பலத்தை கூட்டுவதற்காகவே இந்த பழக்கம் நடைமுறையில் உள்ளது.
    ஒலிம்பிக் போட்டிக்கு 10 ஓவர் கிரிக்கெட்டுதான் பொருத்தமானதாக இருக்கும் என இங்கிலாந்து அணி கேப்டன் மோர்கன் தெரிவித்துள்ளார்.
    கிரிக்கெட்டில் தற்போது டெஸ்ட் (5 நாள் ஆட்டம்), ஒருநாள் போட்டி (50 ஓவர்) மற்றும் 20 ஓவர் ஆட்டம் ஆகிய 3 வடிவிலான போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஜெட் வேகத்தில் வளர்ச்சி அடைந்தது.

    இதற்கிடையே 10 ஓவர் கிரிக்கெட் போட்டி அமலுக்கு வந்துள்ளது. இது தற்போது லீக் அளவில் மட்டுமே விளையாடப்பட்டு வருகிறது. இந்த நிலையில் ஒலிம்பிக் போட்டிக்கு 10 ஓவர் கிரிக்கெட் போட்டிதான் பொருத்தமானது என்று இங்கிலாந்து கேப்டன் இயோன் மோர்கன் கூறியுள்ளார்.

    இதுகுறித்து இங்கிலாந்து ஒயிட்-பால் கிரிக்கெட் அணியின் கேப்டன் மோர்கன் கூறியதாவது:-

    ஒலிம்பிக் மற்றும் காமன்வெல்த் விளையாட்டு போன்றவற்றிற்கு 10 ஓவர் கிரிக்கெட் பொருத்தமானதாக இருக்கும். மற்ற வகை கிரக்கெட்டை விடவும் 10 ஓவர் இந்த வாய்ப்பை வழங்குகிறது. ஒட்டுமொத்த போட்டியையும், 10 நாட்களில் முடித்து விடலாம். இதன்மூலம் கிரிக்கெட்டுக்கு கூடுதலான வாய்ப்புகள் கிடைக்கும். 8 முதல் 10 நாட்களில் முடிவடைகிற போட்டிதான் எல்லாவற்றிற்கும் ஏற்றதாக இருக்கும். மேலும் அதிக பொழுது போக்கையும் ரசிகர்களுக்கு அளிக்கும்

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    இந்த ஆண்டுக்கான அபுதாபி 10 ஓவர் லீக் போட்டி நவம்பர் 19 முதல் 28-ம் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த போட்டியின் ஒவ்வொரு ஆட்டங்களும் 90 நிமிடங்கள் நடக்கும். கடந்த ஆண்டு நடந்த அபுதாபி 10 ஓவர் லீக் போட்டியில் பிராவோ தலைமையிலான மராத்தா அரேபியன் அணி வெற்றி பெற்றது.
    தடைபட்டுள்ள கிரிக்கெட் போட்டிகள் மிகவிரைவில் தொடங்கப்பட வேண்டும் என பாகிஸ்தான் பயிற்சியாளர் மிஸ்பா உல் ஹக் தெரிவித்துள்ளார்.
    கொரோனா வைரஸ் தொற்றால் கிரிக்கெட் போட்டிகள் நிறுத்தப்பட்டுள்ளன. கடந்த மார்ச் மாதம் 12-ந்தேதிக்குப்பின் போட்டிகள் நடைபெறாததால் வீரர்கள் சுமார் இரண்டு மாதம் வீட்டிற்குள்ளே முடங்கிக் கிடக்கிறார்கள். அவர்களின் உடற்தகுதி குறித்து கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது. அதேவேளையில் மக்கள் கொரோனா செய்திகளை மட்டுமே கேட்டுக்கொண்டு மழு அழுத்தத்திற்கு உள்ளாகும் நிலை ஏற்பட்டுள்ளது.

    இந்நிலையில் விரைவில் கிரிக்கெட் போட்டிகளை தொடங்க வேண்டும் என பாகிஸ்தான் அணியின் தலைமை பயிற்சியாளரும், தேர்வுக்குழு தலைவருமான மிஸ்பா உல் ஹக் விருப்பம் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து மிஸ்பா உல் ஹக் கூறுகையில் ‘‘தற்போதைய சூழ்நிலையில் கிரிக்கெட் போட்டிகள் நடைபெற வேண்டும் என்று யாரும் நினைக்க மாட்டார்கள். ஒவ்வொருவடைய ஆரோக்கியமும் முக்கியமானது. அதற்குத்தான் முன்னுரிமை கொடுக்க வேண்டும். ஆனால், வெறிச்சோடிய மைதானத்தில் சரியான பாதுகாப்பு நடைமுறையுடன் போட்டிகளை நடத்த முடியும். எனக்கு அதில் எந்த பிரச்சனையும் இல்லை.

    தற்போது எல்லோரும் வீட்டில் முடங்கிக் கிடக்கிறார்கள். இந்த நேரத்தில் சில போட்டிகளை நேரடியாக ஒளிபரப்பினால் மக்கள் வீட்டிற்குள் இருந்து போட்டிகளை ரசிக்க முடியும். அவர்களுக்கு இது சிறப்பானதாக இருக்கும்.

    வெறும் கொரோனா செய்திகளை மட்டுமே பார்த்துக் கொண்மு வீட்டில் இருப்பதன் மூலம் மக்கள் சோர்வடைந்து போவதுடன் மன அழுத்தத்திற்கு உள்ளாகிறார்கள். இந்த நிலையில் விளையாட்டுகள் தொடங்கப்பட்டால், கிரிக்கெட் போட்டிகள் மீண்டும் தொடங்கினால் மக்கள் வீட்டில் இருந்து கொண்டே போட்டியை ரசிக்க முடியும். இது அவர்களுக்கு சிறந்த ஆறுதலை கொடுக்கும்’’ என்றார்.
    உலக கோப்பையை வென்ற பாகிஸ்தான் அணியில் இடம்பிடித்திருந்த அக்யூப் ஜாவித், மேட்ச்-பிக்சிங்கின் கூடாரம் இந்தியாதான் எனத் தெரிவித்துள்ளார்.
    பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் அக்யூப் ஜாவித். இந்தியாதான் அனைத்து வகை மேட்ச்-பிக்சிங்கிற்கும் ஆணிவேர் என்று தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அக்யூப் ஜாவித் கூறுகையில் ‘‘கடந்த கால ஐபிஎல் தொடர் குறித்து கேள்விகள் கேட்கப்பட்டன. மேட்ச்-பிக்சிங் மாஃபியாக்களின் கூடாரம் இந்தியாதான் என்று நினைக்கிறேன்.

    மேட்ச் பிக்சிங்கில் ஈடுபட்டவர்களை மீண்டும் அணியில் சேர்ப்பது அதை ஊக்கப்படுத்துவதாக அமையும். மேட்ச்-பிக்சிங்கிற்கு எதிராக இருப்பவர்களுக்கு இந்த நடைமுறை காயத்தை ஏற்படுத்தும்’’ என்றார்.

    மேட்ச் பிக்சிங் காரணமாக இரண்டு ஐபிஎல் அணிகளுக்கு தடைவிதிக்கப்பட்டு, சில வீரர்கள் கைது செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
    பாகிஸ்தான் மூன்று உலக கோப்பையை இழக்க வாசிம் அக்ரம்தான் காரணம் என அமிர் சோஹைல் குற்றம்சாட்டியுள்ள நிலையில், அக்ரம் பதிலடி கொடுத்துள்ளார்.
    வாசிம் அக்ரம் குறித்து அமிர் சோஹைல் ‘‘இது மிகவும் எளிது. ஒருபக்கம் 1992 உலக கோப்பையை வைத்துவிட்டு, 1996-ம் ஆண்டு நடைபெற்ற உலக கோப்பையை பற்றி பேசலாம். 1995-ல் ரமீஸ் ராஜா கேப்டனாக இருந்தார். அதற்கு முன் சலீம் மாலிக் கேப்டனாக இருந்தார். அவர் மிகவும் வெற்றிகரமாக திகழ்ந்தார். அவர் இன்னும் ஒரு வருடம் கேப்டனாக இருந்திருந்தால் வாசிம் அக்ரமால் கேப்டனாகியிருக்க முடியாது.

    2003 வரை என்ன நடந்தது என்று நீங்கள் உற்று நோக்கினால், ஒவ்வொரு உலக கோப்பைக்கும் முன் கேப்டன்கள் நீக்கப்பட்டிருப்பார்கள் என்பதை தெரிந்து கொள்ளலாம். அதில் வாசிம் அக்ரம் முக்கிய பங்காற்றியிருப்பார்.

    பாகிஸ்தான் அணிக்கு மிகப்பெரிய பங்களிப்பை கொடுத்த வாசிம் அக்ரம், 1992-ம் ஆண்டுக்குப்பின் உலக கோப்பையை பாகிஸ்தான் வெல்லாமல் இருப்பதை உருவாக்கினார். அக்ரம் பாகிஸ்தானுக்காக நேர்மையாக இருந்திருந்தால், 1996, 1999 மற்றும் 2003 உலக கோப்பைகளை வென்றிருக்கலாம்.

    இந்த காரணத்திற்காகத்தான் அனைத்து நாடகமும் நடந்தன. இதுகுறித்து விசாரணை நடத்த வேண்டும். இதற்கெல்லாம் பின்னால் உள்ள குற்றவாளியை முன்னணியில் கொண்டு வரவேண்டும்’’ எனக் கூறியிருந்தார்.

    இந்நிலையில் அவர்களை பிரபலப்படுத்த என் பெயரை பயன்படுத்துகிறார்கள் என்று வாசிம் அக்ரம் பதிலடி கொடுத்துள்ளார்.

    இதுகுறித்து வாசிம் அக்ரம் கூறுகையில் ‘‘என்னைப்பற்றி இப்படி எதிர்மறையாக விஷயங்களை கேட்கும்போதெல்லாம் மிகவும் கவலையாக உள்ளது. ஓய்வு பெற்று 17 ஆண்டுகள் ஆன பின்பும், சில வீரர்கள் அவர்களை பிரபலப்படுத்துவதற்காக என்னுடைய பெயரை பயன்படுத்துகிறார்கள்.

    அவர்களை பற்றி என்னாலும் எதிர்மறையான கருத்துக்களை உருவாக்க முடியும். அது என்ன நோக்கத்திற்கு உதவும். அதனால்தான் நான் அமைதியாக இருக்கிறேன். ஓய்வு பெற்று 17 ஆண்டுகள் ஆனப்பிறகு கூட நான், பெற்ற மரியாதை மற்றும் ரசிகர்களிடம் இருந்து கிடைத்த அன்பு ஆகியவற்றை பற்றி சிந்திக்கிறேன்’’ என்றார்.
    ரசிகர்கள் இல்லாமல் போட்டிகள் நடத்தப்பாட்டால் நிச்சயமாக மேஜிக் காணாமல் போகும் என இந்திய அணி கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார்.
    கொரோனா வைரஸ் தொற்றால் கிரிக்கெட் போட்டிகள் நடைபெறாமல் உள்ளன. கொரோனா வைரஸ் தொற்று ஜூன் மாதத்திற்குள் கட்டுக்குள் வந்துவிடும் என்று நினைத்தனர். ஆனால் இதுவரை தடுப்பூசி கண்டுபிடிக்காத நிலையில் நீண்ட காலம் நீடிக்கும் என்பது உறுதியாகியுள்ளது.

    இதனால் ஒரு பக்கம் கொரோனா வைரஸ் இருக்க மறுபக்கம் தற்பாதுகாப்புடன் மக்கள் தங்களுடைய அன்றாட வேலைகளை கவனிக்க வேண்டும் என்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

    விளையாட்டு போட்டிகள் ரசிகர்கள் ஆரவாரத்துடன் நடைபெறும். தற்போதைய நிலையில் அதற்கு வாய்ப்பில்லை. முதலில் ஒவ்வொரு கிரிக்கெட் போர்டும் யோசி்த்த நிலையில், தற்போது ரசிகர்கள் இல்லாமல் வெறிச்சோடிய மைதானத்தில் போட்டிகள் நடத்தப்பட்டாலும் பரவாயில்லை என்ற மனநிலைக்கு ஒவ்வொரு வீரர்களும் வந்துள்ளனர்.

    இந்நிலையில் ரசிகர்கள் இல்லாவிடில் நிச்சயமாக மேஜிக் தருணம் காணாமல் போகும் என இந்திய அணி கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து விராட் கோலி கூறுகையில் ‘‘தற்போதுள்ள சூழ்நிலை வெறிச்சோடிய மைதானத்தில் போட்டியை நடத்தும் நிலையில்தான் உள்ளது. இது உறுதியாக நடக்கும். என்னைப் பொறுத்தவரைக்கும் ஒவ்வொருவரும் இதை எப்படி எடுத்துக்கொள்வார்கள் என்று தெரியவில்லை. ஏனென்றால், பேரார்வம் கொண்ட மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டத்தின் நடுவே நாம் அனைவரும் விளையாடி பழக்கப்பட்டுள்ளோம்.

    இந்திய அணி கேப்டன் விராட் கோலி

    பழைய மாதிரி தீவிரத்துடன்தான் விளையாடுவாரக்ள். ஆனால் ரசிகர்கள் இருக்கும்போது அவர்களுக்கும் வீரர்களுக்கும் இடையிலான தொடர்பு, போட்டி சென்று கொண்டிருக்கும் சூழ்நிலையில் டென்சனாக இருப்பது போன்ற எமோசனை வெளிப்படுத்துவது மிகக்கடினம்.

    ரசிகர்கள் இல்லாமல் போட்டிகள் செல்லலாம். ஆனால், மைதானத்திற்கு உள்ளே நடக்கும் மேஜிக் நிகழ்வுகள் நடக்குமா? என்பது சந்தேகம்தான். ஏனெனில் சூழ்நிலை அப்படி உருவாக்கிவிடும். கிரிக்கெட் போட்டியை நாங்கள் சிறப்பாக விளையாடி விடுவோம், ஆனால், மேஜிக் தருணங்கள் அதனுடன் சேர்ந்து பயணிப்பது மிகவும் கடினம்’’ என்றார்.
    ×