search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மேட்ச் பிக்சிங்"

    • சூரத் தொகுதியில் முகேஷ தலால் உள்பட 8 பேர் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தனர்.
    • இதில் காங்கிரஸ் வேட்பாளர் நிலேஷ் கும்பானி வேட்புமனு நிராகரிக்கப்பட்டது.

    புதுடெல்லி:

    குஜராத் மாநிலத்தில் பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு மே 7-ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. இங்குள்ள சூரத் தொகுதிக்கான தேர்தலில் பா.ஜ.க, காங்கிரஸ் மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் என பலர் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர்.

    இந்நிலையில், காங்கிரஸ் வேட்பாளர் நிலேஷ் கும்பானியின் வேட்புமனு நேற்று முன்தினம் நிராகரிக்கப்பட்டது. அவருக்கு போலியான சாட்சி கையெழுத்திடப்பட்டுள்ளது. இதேபோல், அவருக்கு பதிலாக காங்கிரஸ் சார்பில் மாற்று வேட்பாளராக அறிவிக்கப்பட்ட சுரேஷ் பத்ஷாலாவின் வேட்பு மனுவும் தகுதியற்றது என அறிவிக்கப்பட்டது. அவரது வேட்பு மனுவிலும் போலியான சாட்சி கையெழுத்துகள் இடம்பெற்றிருந்தன என தெரிவிக்கப்பட்டது.

    இதையடுத்து, இந்த வேட்பு மனு கலெக்டரால் ரத்து செய்யப்பட்டது. இதனால், போட்டியில் இருந்து காங்கிரஸ் கட்சி வெளியேறியது.

    இந்நிலையில், சூரத் தொகுதி பா.ஜ.க. வேட்பாளர் முகேஷ் தலால் போட்டியின்றி வெற்றி பெற்றுள்ளார் என தெரிவிக்கப்பட்டது.

    இதுதொடர்பாக, குஜராத் பா.ஜ.க. தலைவர் சி.ஆர்.பாட்டீல் எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், சூரத் தொகுதியில் போட்டியின்றி வெற்றி பெற்ற முகேஷ் தலாலுக்கு வாழ்த்துகள் மற்றும் பாராட்டுகள் என பதிவிட்டுள்ளார்.

    இந்நிலையில், சூரத் பாராளுமன்ற தேர்தலை மேட்ச் ஃபிக்ஸ் செய்ய பா.ஜ.க. முயற்சி செய்கிறது. ஏனெனில், மக்கள் மத்தியில் உள்ள கோபத்தைக் கண்டு அக்கட்சி பயந்துள்ளது என காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான ஜெய்ராம் ரமேஷ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

    ×