search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கெவின் பீட்டர்சன்
    X
    கெவின் பீட்டர்சன்

    ரசிகர்கள் இருந்தாலும் சரி, இல்லாவிட்டாலும் சரி: வீரர்கள் விளையாட வேண்டும் என்கிறார் கெவின் பீட்டர்சன்

    ரசிகர்கள் இருந்தாலும் சரி, இல்லாவிட்டாலும் சரி, வீரர்கள் விளையாடியே தீர வேண்டும் என கெவின் பீட்டர்சன் தெரிவித்துள்ளார்.
    கொரோனா வைரஸ் தொற்றால் கிரிக்கெட் போட்டிகள் அனைத்தும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. கொரோனா வைரஸ் தொற்று முடிந்த பின்னர் போட்டியை மீண்டும் தொடங்கலாம் என ஒவ்வொரு கிரிக்கெட் போர்டுகளும் நினைத்துக் கொண்டிருந்தன.

    ஆனால் சூழ்நிலையை பார்க்கும்போது மக்கள் அனைவரும் சுமார் ஒரு வருடம் கொரோனாவுடன்தான் வாழ வேண்டும் என வல்லுநர்கள் தெரிவித்து வருகின்றனர்.

    இதனால் ரசிகர்கள் யாரும் இல்லாமல் வெறிச்சோடிய மைதானத்தில் விளையாட்டை நடத்திக் கொள்ள போட்டி அமைப்பாளர்கள் தயாராகி வருகின்றனர். சில வீரர்கள் ரசிகர்கள் இல்லாவிடில் போட்டியில் விறுவிறுப்பு இருக்காது என்கிறார்கள்.

    இந்நிலையில் ரசிகர்கள் இருந்தாலும், இல்லாவிடில் வீரர்கள் விளையாட வேண்டும் என இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் கெவின் பீட்டர்சன் வலியுறுத்தியுள்ளார்.

    இதுகுறித்து கெவின் பீட்டர்சன் கூறுகையில் ‘‘ரசிகர்கள் மற்றும் பொதுமக்களுக்கு தற்போது மனஉறுதி அவசியம். அவர்களுடைய மனஉறுதி தற்போது எதிர்மறையாக சென்றால், எல்லாம் கெட்டுவிடும். விளையாட்டு மிகவும் மேம்பட்டது. ஏராளமான மக்களுக்கு நேர்மறையான விஷயங்களை அளிக்கும். கொரோனா வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் வரை விளைாட்டுகளை ரசிகர்கள் இல்லாமல் வெறிச்சோடிய மைதானத்தில் நடத்தலாம். விளையாட்டு வீரர்கள் இதனுடன் ஒத்துப்போவார்கள்.

    ஏராளமான வீரர்களுக்கு விளையாட்டுதான் அவர்கள் வாழ்க்கையில் முக்கியமானது. அப்படி இருக்கும்போது ஏன் விளையாட விரும்பமாட்டார்கள்?. ஆகவே, அங்கு ரசிகர்கள் இருந்தால் என்ன? இல்லாவிடில் என்ன?. அங்கு ரசிகர்கள் இல்லாமல் இருக்கலாம். ஆனால் மிகப்பெரிய அளவில் நேரடி ஒளிப்பரப்பு இருக்கும்’’என்றார்.
    Next Story
    ×