search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "முகமது கைப்"

    • என்னை பொருத்தவரை அவர் உலக கோப்பை தொடருக்காக தயாராகி விட்டார் என்று நினைக்கிறேன்.
    • மிடில் ஆர்டரில் இடதுகை வீரர்கள் வேண்டும் என்பதற்காக இஷான் கிஷனையோ, அக்சர் பட்டேலையோ களமிறக்கினால் அது தவறான முடிவாகவே அமையும்.

    இந்தியாவில் அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் ஒருநாள் உலக கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெறவுள்ளது. இன்னும் ஒரு சில வாரங்களில் உலக கோப்பைக்கான இந்திய அணி உறுதி செய்யப்படும் என்று தெரிகிறது.

    அதேவேளையில் இந்திய அணியின் முன்னாள் வீரர்கள் சிலர் இந்த உலகக் கோப்பை தொடருக்கான அணியில் எந்த வீரர்கள் இடம்பெற வேண்டும் என்பது குறித்த தங்களது சொந்த கருத்துகளையும் பகிர்ந்து வருகின்றனர்.

    இந்நிலையில் மிடில் ஆர்டரில் இஷான் கிஷனுக்கு பதிலாக சஞ்சு சாம்சனை களமிறங்களாம் என இந்திய அணியின் முன்னாள் வீரரான முகமது கைப் தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான மூன்றாவது போட்டியில் சஞ்சு சாம்சன் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரைசதம் அடித்தார். இரண்டு விக்கெட் விழுந்த போதும் அவர் மிடில் ஓவர்களில் அசராமல் அடித்து ஆடியதை பார்த்து பிரமித்து விட்டேன். அவரது பேட்டிங்கால் நிச்சயம் தாக்கத்தை ஏற்படுத்த முடியும்.

    என்னை பொருத்தவரை அவர் உலக கோப்பை தொடருக்காக தயாராகி விட்டார் என்று நினைக்கிறேன். மிடில் ஆர்டரில் இடதுகை வீரர்கள் வேண்டும் என்பதற்காக இஷான் கிஷனையோ, அக்சர் பட்டேலையோ களமிறக்கினால் அது தவறான முடிவாகவே அமையும்.

    ஏனெனில் நான்காவது இடத்தில் களமிறங்கும் வீரரானவர் சுழற்பந்து வீச்சாளர்களை எதிர்த்து சிறப்பாக செயல்பட வேண்டிய அவசியம் உள்ளது. அந்த வகையில் ஸ்பின்னர்களை சரியாக கையாலும் சாம்சனை அந்த இடத்தில் களமிறக்குவது தான் நல்ல முடிவாக இருக்கும்.

    சாம்சன் சுழற்பந்து வீச்சாளர்களை இலகுவாக எளிதில் எதிர்கொள்கிறார். அதேபோன்று இடதுகை சுழற்பந்து வீச்சாளர்களையும் சாமர்த்தியமாக விளையாடுகிறார். எனவே உலகக்கோப்பை அணி தேர்வில் சஞ்சு சாம்சன் விஷயத்தில் சரியான முடிவை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு முகமது கைப் கூறினார்.

    • 2014-ம் ஆண்டு இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது ஆண்டர்சனை எதிர்கொள்ள விராட் கோலி கடுமையாக திணறினார்.
    • ஆப் ஸ்டெம்பிற்கு வெளியே சென்ற பந்தை எதிர்கொள்ள விராட் கோலி சரியாக ஆட முடியவில்லை.

    உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்திய அணி ஆஸ்திரேலிய அணியை வரும் 7-ம் தேதி எதிர்கொள்கிறது. இந்த தொடரில் இந்திய அணி வீரர்கள் விராட் கோலி, புஜாரா, சுப்மன் கில் ஆகியோர் நல்ல பார்மில் இருக்கிறார்கள்.

    இந்த நிலையில் விராட் கோலியை விட சுப்மன் கில் சிறந்த வீரராக வலம் வருகிறார் என முன்னாள் இந்திய அணி வீரர் முகமது கைப் கூறியுள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    சச்சின் டெண்டுல்கர் ஒரு முழுமையான பேட்ஸ்மேன் ஆக இருந்தார். சச்சினையும் விராட் கோலியையும் நீங்கள் ஒப்பிட்டுப் பார்த்தால் கோலிக்கு சில குறைகள் பேட்டிங்கில் இருந்தது. 2014-ம் ஆண்டு இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது ஆண்டர்சனை எதிர்கொள்ள விராட் கோலி கடுமையாக திணறினார்.

    ஆப் ஸ்டெம்பிற்கு வெளியே சென்ற பந்தை எதிர்கொள்ள விராட் கோலி சரியாக ஆட முடியவில்லை. விராட் கோலிக்கு அந்த தொடர் மிகவும் மோசமானதாக அமைந்தது. ஆனால் சுப்மன் கில்லை பொறுத்தவரையில் அவருடைய பேட்டிங் நுட்பம் டெண்டுல்கர் போல் இருக்கிறது. சுப்மன் கில்லை ஆட்டமிழக்க வைப்பது என்பது மிகவும் கடுமையான விஷயமாக தற்போது தெரிகிறது. சுப்மன் கில்லிடம் எந்த குறையும் இருப்பது போல் தெரியவில்லை. ஏனென்றால் அவருக்கு கிரிக்கெட் யுக்தியும் மன பலமும் இருக்கிறது.

    என்று முகமது கைப் கூறியுள்ளார்.

    • இந்த தொடருடன் ஐபிஎல் தொடரில் இருந்து டோனி ஓய்வுபெறுவார் என்று பரவலாக கூறப்பட்டு வருகிறது.
    • ஆனால் தனது ஓய்வு முடிவு குறித்து டோனி இதுவரையில் எந்த தகவலும் அளிக்கவில்லை.

    சென்னை:

    ஐபிஎல் கிரிக்கெட்டில் சென்னை அணியின் கேப்டனாக செயல்பட்டுவரும் டோனி, இந்த தொடருடன் ஐபிஎல் தொடரில் இருந்து ஓய்வுபெறுவார் என்று பரவலாக கூறப்பட்டு வருகிறது.

    இது தொடர்பாக அவரிடமே கேள்விகள் கேட்கப்பட்டது. ஆனால் தனது ஓய்வு முடிவு குறித்து டோனி இதுவரையில் எந்த தகவலும் அளிக்கவில்லை. டோனி இந்த தொடருடன் ஓய்வு பெற்றுவிடுவார் என்றும் சில முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் கூறி வந்தாலும், சிலரோ அவர் அடுத்த சீசனும் விளையாடுவார் என்றும் கூறி வருகின்றனர்.

    இந்நிலையில் அடுத்த ஐபிஎல் சீசனில் சென்னை கேப்டன் டோனி விளையாடமாட்டார் என இந்திய அணியின் முன்னாள் வீரர் முகமது கைப் கூறி உள்ளார்.

    டோனி ஓய்வு பெறுவாரா என்பது தொடர்பாக கேட்கப்பட்ட கேள்விக்கு பதில் அளித்துள்ள முகமது கைப், நடப்பு சீசனுடன் ஓய்வு பெறுவதை டோனி பல முறை உணர்த்திவிட்டதாகவும், அடுத்த சீசனில் அவர் ஆடமாட்டார் என்றே தனக்கு தோன்றுவதாகவும் கைப் கூறி உள்ளார். கவாஸ்கர் டோனியிடம் ஆட்டோகிராப் வாங்கியது, டோனியின் சிறப்பை வெளிப்படுத்துவதாகவும் கைப் பேசி உள்ளார்.

    • 2வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி
    • அஸ்வின் ஆட்ட நாயகனாகவும், புஜாரா தொடர் நாயகனாகவும் அறிவிப்பு.

    மிர்பூர்:

    வங்காள தேசம் அணிக்கு எதிராக மிர்பூரில் நடைபெற்ற 2வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதுடன், 2-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. கடைசி நாளான நேற்று இந்திய அணி 74 ரன்களில் 7 விக்கெட்களை இழந்து தடுமாறிய நிலையில், ரவிச்சந்திரன் அஷ்வின் ஸ்ரேயாஸ் ஐயரும் ஜோடி சேர்ந்து அணியை வெற்றி பெற செய்தனர். அஸ்வின் 42 ரன்களுடனும், ஐயர் 29 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

    இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி தொடர்ச்சியாக 16வது வெற்றியை பெற்றுள்ளது. அஸ்வின் ஆட்ட நாயகன் விருதையும், புஜாரா தொடர் நாயகன் விருதையும் பெற்றனர். இந்நிலையில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிகளில் பங்கேற்கும் இந்தியாவின் நம்பிக்கைக்குரிய வீரராக ஸ்ரேயஸ் ஐயர் திகழ்வதாக முன்னாள் வீரர் முகமது கைஃப் தெரிவித்துள்ளார்.

    நான்காவது நாள் ஆடுகளம் சுழற்பந்து வீச்சாளர்கள் சாதகமாக இருந்தாலும், ஸ்ரேயஸ் தனது திறமையை வெளிப்படுத்தியதாகவும், அடுத்த ஆண்டு ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் நடக்கும் டெஸ்ட் தொடருக்கு அவரது பார்ம் முக்கியமானதாக இருக்கும் என்றும் தமது டுவிட்டர் பதிவில் கஃப் குறிப்பிட்டுள்ளார்.

    • உலக கோப்பையை வெல்வதற்கு அழுத்தத்திற்கு அஞ்சாமல் செயல்பட வேண்டும்.
    • குறிப்பாக கடைசி 10 ஓவர்களில் இளம் பந்து வீச்சாளர்கள் வெற்றியை பினிஷிங் செய்ய முடியாமல் கோட்டை விட்டனர்.

    வங்கதேசத்துக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்தியா களமிறங்கியுள்ளது. முதல் போட்டியில் இந்தியா தோல்வியை சந்தித்தது. முதலில் பேட்டிங் செய்த இந்தியா 41.2 ஓவரில் 186 ரன்களுக்கு சுருண்டது.

    அதை தொடர்ந்து ஆடிய வங்கதேசம் அணி 46 ஓவர்களில் 187 ரன்கள் எடுத்து ஒரு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்தியா டெத் ஓவர்களில் சொதப்பியதே தோல்விக்கு காரணமென்று முன்னாள் கிரிக்கெட் வீரர் முகமது கைப் வேதனை தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    9 விக்கெட்டுகள் எடுத்ததால் வெற்றி இந்தியாவிடம் இருந்தது. பேட்டிங் மோசமாக இருந்தும் பவுலர்கள் அற்புதமாக செயல்பட்டு இந்தியாவை போட்டிக்குள் மீண்டும் கொண்டு வந்தார்கள். குறிப்பாக 40 ஓவர்கள் வரை பவுலிங் சிறப்பாக இருந்தது. ஆனால் கடைசி 10 ஓவரில் யார் நம்முடைய டெத் பவுலர்? குல்தீப் சென்னா அல்லது தீபக் சஹரா? அது போக கடைசி நேரத்தில் நாம் கேட்ச்சுகளை விட்டோம். அதற்காக ராகுலை குறை சொல்ல முடியாது ஏனெனில் அவர் சமீப காலங்களில் விக்கெட் கீப்பிங் செய்யவில்லை.

    இருப்பினும் நல்ல ஃபீல்டரான அவர் தான் டி20 உலக கோப்பையில் லிட்டன் தாஸை ரன் அவுட் செய்து இந்தியாவை வெற்றி பெற வைத்தார். ஆனால் வாஷிங்டன் சுந்தர் தாவி கேட்ச் பிடிக்க முயற்சிக்கவில்லை. அந்த வகையில் நமது ஃபீல்டர்கள் மிகவும் அழுத்தத்துடன் செயல்பட்டார்கள்.

    நாம் அழுத்தத்தில் நிறைய தவறுகளை செய்தோம். போதாக்குறைக்கு நாம் முக்கிய நேரத்தில் ஒய்ட் மற்றும் நோ-பால்களை வீசினோம். ஆனால் உலக கோப்பையை வெல்வதற்கு அழுத்தத்திற்கு அஞ்சாமல் செயல்பட வேண்டும். அதை நோக்கி தான் இங்கிலாந்து - நியூசிலாந்து போன்ற அணிகள் வளர்ந்து வருகின்றன. அதனால் தான் அவர்கள் வெள்ளை பந்து கிரிக்கெட்டில் உயரே பறக்கிறார்கள்.

    மொத்தத்தில் தொடர்ச்சியாக அழுத்தத்தில் நாம் தடுமாறுவது எனக்கு ஏமாற்றத்தை கொடுக்கிறது. 40 ஓவர்கள் வரை நம்மிடம் இருந்த வெற்றியை கடைசி நேரத்தில் மெகதி ஹசன் எப்படி விளையாட வேண்டும் என்பதை நமக்கு காட்டி வங்கதேசத்தை வெற்றி பெற வைத்து விட்டார். அதற்கு நமது கேப்டன்ஷிப் மற்றும் பவுலிங் மோசமாக இருந்ததே காரணம். குறிப்பாக கடைசி 10 ஓவர்களில் இளம் பந்து வீச்சாளர்கள் வெற்றியை பினிஷிங் செய்ய முடியாமல் கோட்டை விட்டனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×