search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Michael Jordan"

    • ஒலிம்பிக்கில் 2 முறை அமெரிக்கா தங்கம் வெல்ல காரணமாக இருந்தவர் ஜோர்டன்
    • ஜோர்டனின் 6 ஜோடி ஷூக்கள் சோத்பி'ஸ் ஏல நிறுவனத்தில் விற்பனைக்கு வந்தது

    அமெரிக்காவில் மிகவும் பிரபலமான விளையாட்டு, "பாஸ்கெட் பால்" (basketball) எனும் கூடைப்பந்து. கூடைப்பந்து விளையாட்டில் மிகவும் புகழ் பெற்ற அமெரிக்க சாதனையாளர், மைக்கேல் ஜோர்டன்.

    1980களிலும், 90களிலும் கூடைப்பந்து விளையாட்டு பிரபலம் அடைய மைக்கேல் ஜோர்டன் ஒரு முக்கிய காரணம்.

    1984 தொடங்கி 2003 வரை ஆண்டுதோறும் நடைபெறும் என்பிஏ ஃபைனல்ஸ் (NBA Finals) எனப்படும் அந்நாட்டின்"தேசிய கூடைப்பந்து சங்கம்" (National Basketball Association) நடத்தும் போட்டித் தொடரில் 6 முறை "சிகாகோ புல்ஸ்" அணிக்காக சாம்பியன்ஷிப் வென்றார் ஜோர்டன்.

    மேலும், ஒலிம்பிக் பந்தயங்களிலும் 2 முறை ஜோர்டன் தங்க பதக்கம் வென்றார்.

    2003ல் கூடைப்பந்து விளையாட்டுகளில் இருந்து ஓய்வு பெற்ற ஜோர்டனுக்கு தற்போது 60 வயது ஆகிறது.


    இந்நிலையில், மைக்கேல் ஜோர்டன் பயன்படுத்திய "ஸ்னீக்கர்ஸ்" (sneakers) எனப்படும் விளையாட்டுக்கான காலணிகள் ஏலத்தில் விற்பனைக்கு வந்தன. பருமனான கேன்வாஸ் துணியால் தயாரிக்கப்பட்டு ரப்பரில் செய்யப்பட்ட ஸோல்கள் அமைந்த ஜோர்டன் அணிந்த ஸ்னீக்கர்களின் ஏலம் பெரிதும் எதிர்பார்ப்பை உண்டாக்கியது.

    பிரபல சோத்பி'ஸ் (Sotheby's) ஏல நிறுவனம் நடத்திய இந்த ஏலத்தில் ஜோர்டன் பயன்படுத்திய 6 ஜோடி ஸ்னீக்கர்கள், ரூ.66,39,96,400.00 ($8 மில்லியன்) தொகைக்கு ஏலம் போனது.

    இந்த ஷூக்களை, ஜோர்டன், 1991, 1992, 1993, 1996, 1997 மற்றும் 1998 ஆண்டுகளில் சாம்பியன்ஷிப் போட்டிகளில் அணிந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

    இவற்றை ஏலத்தில் வாங்கியவரின் விவரங்களை ஏல நிறுவனம் தற்போது வரை வழங்கவில்லை.

    ஜோர்டன் அணிந்திருந்த ஜெர்ஸி, 2022ல், சுமார் 10 மில்லியன் அமெரிக்க டாலருக்கு விலை போனது குறிப்பிடத்தக்கது.

    • 1998-ம் ஆண்டு என்.பி.ஏ. போட்டியின் இறுதிச்சுற்றில் 13எஸ் வகை காலணிகளை ஜோர்டன் அணிந்திருந்தார்.
    • ஜோர்டனின் சிக்காகோ புல்ஸ் அணி வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது.

    பிரபல கூடைப்பந்து வீரரான மைக்கேல் ஜோர்டன் போட்டிகளின் போது அணிந்திருந்த 'பிரெட்' ஏர் ஜோர்டனின் 13எஸ் வகை காலணிகள் ஏலத்தில் விடப்பட்டு உள்ளது. 1998-ம் ஆண்டு என்.பி.ஏ. போட்டியின் இறுதிச்சுற்றில் இந்த காலணிகளை ஜோர்டன் அணிந்திருந்தார். அந்த போட்டியில் ஜோர்டனின் சிக்காகோ புல்ஸ் அணி வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது.

    இந்நிலையில் அந்த காலணிகள் ஏலம் விடப்பட்ட நிலையில் அவை 2.2 மில்லியன் டாலருக்கு (இந்திய மதிப்பில் சுமார் 18 கோடி ரூபாய்) விற்பனையாகி உள்ளது. ஜோர்டன் போட்டிகளின் போது அணிந்திருந்த காலணிகள், ஜெர்சி சட்டைகள் ஆகியவற்றுக்கான தேவை எதிர்பார்த்ததை விட அதிகமாக இருப்பதை இது நிரூபிப்பதாக ஏலத்தை நடத்திய நிறுவன தலைவர் கூறியுள்ளார்.

    ×