என் மலர்
விளையாட்டு

பிரபல கூடைப்பந்து வீரர் மைக்கேல் ஜோர்டனின் காலணிகள் ரூ.18 கோடிக்கு ஏலத்தில் விற்பனை
- 1998-ம் ஆண்டு என்.பி.ஏ. போட்டியின் இறுதிச்சுற்றில் 13எஸ் வகை காலணிகளை ஜோர்டன் அணிந்திருந்தார்.
- ஜோர்டனின் சிக்காகோ புல்ஸ் அணி வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது.
பிரபல கூடைப்பந்து வீரரான மைக்கேல் ஜோர்டன் போட்டிகளின் போது அணிந்திருந்த 'பிரெட்' ஏர் ஜோர்டனின் 13எஸ் வகை காலணிகள் ஏலத்தில் விடப்பட்டு உள்ளது. 1998-ம் ஆண்டு என்.பி.ஏ. போட்டியின் இறுதிச்சுற்றில் இந்த காலணிகளை ஜோர்டன் அணிந்திருந்தார். அந்த போட்டியில் ஜோர்டனின் சிக்காகோ புல்ஸ் அணி வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது.
இந்நிலையில் அந்த காலணிகள் ஏலம் விடப்பட்ட நிலையில் அவை 2.2 மில்லியன் டாலருக்கு (இந்திய மதிப்பில் சுமார் 18 கோடி ரூபாய்) விற்பனையாகி உள்ளது. ஜோர்டன் போட்டிகளின் போது அணிந்திருந்த காலணிகள், ஜெர்சி சட்டைகள் ஆகியவற்றுக்கான தேவை எதிர்பார்த்ததை விட அதிகமாக இருப்பதை இது நிரூபிப்பதாக ஏலத்தை நடத்திய நிறுவன தலைவர் கூறியுள்ளார்.
Next Story






