என் மலர்tooltip icon

    விளையாட்டு

    ரபாடா தொடர்ந்து விளையாடி வருவதால் வேலைச்சுமை அதிகரித்துள்ளதாக தென் ஆப்ரிக்கா கிரிக்கெட் வாரியம் கூறியுள்ளது.
    பார்ல்:

    இந்திய கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையேயான 3 டெஸ்ட் கொண்ட தொடரை தென் ஆப்பிரிக்கா 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.

    இந்நிலையில் இந்தியா- தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நாளை தொடங்கவுள்ளது.

    வெள்ளை பந்து போட்டிகளுக்கு (ஒருநாள் ஆட்டம், 20 ஓவர் போட்டி) ரோகித் சர்மா கேப்டனாக நியமிக்கப்பட்டிருந்தார். ஆனால் காயம் காரணமாக அவருக்கு பதில் கே.எல் ராகுல் தலைமை பொறுப்பை ஏற்றுள்ளார்.

    இந்நிலையில் நாளை தொடங்கும் ஒருநாள் தொடரில் இருந்து தென் ஆப்ரிக்கா அணியின் முக்கிய வீரரான ககிசோ ரபாடா வெளியேற்றப்பட்டுள்ளார்.

    இதுகுறித்து தென் ஆப்ரிக்கா கிரிக்கெட் வாரியம் கூறுகையில், ’ரபாடா தொடர்ந்து பல போட்டிகளில் விளையாடி வருவதால் அவருக்கு வேலைச்சுமை அதிகரித்துள்ளது. இதனால் அவருக்கு ஓய்வு அளிக்கும் வகையில் அணியில் இருந்து அவர் நீக்கப்பட்டுள்ளார்.’ என தெரிவித்துள்ளது.

    இரண்டு முறை ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்ற பி.வி.சிந்து மற்றும் உலகின் முன்னாள் நம்பர் ஒன் வீரர் கிடாம்பி ஸ்ரீகாந்த் ஆகியோர் முறையே 7வது மற்றும் 10வது இடங்களில் நீடிக்கின்றனர்.
    புதுடெல்லி:

    பேட்மிண்டன் வீரர்களின் சர்வதேச தரவரிசைப் பட்டியலை உலக பேட்மிண்டன் கூட்டமைப்பு வெளியிட்டுள்ளது. அதில், இந்தியாவின் இளம் வீரர் லக்சயா சென், 17வது இடத்தில் இருந்து 13வது இடத்திற்கு முன்னேறி உள்ளார். சமீபத்தில் நடந்து முடிந்த இந்தியா ஓபன் தொடரில் சாம்பியன் பட்டம் வென்றதன்மூலம், இந்த இடத்திற்கு முன்னேறியிருக்கிறார். இதுவே அவரது வாழ்நாளில் சிறந்த தரநிலையாகும்.

    இதேபோல் ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்தியா ஓபனில் பட்டம் வென்ற சாத்விக்சாய்ராஜ் ரங்கிரெட்டி-சிரக் ஷெட்டி ஜோடி, சர்வதேச தரவரிசையில் 10வது இடத்தில் இருந்து 8வது இடத்திற்கு முன்னேறியது. 

    இரண்டு முறை ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்ற பி.வி.சிந்து மற்றும் உலகின் முன்னாள் நம்பர் ஒன் வீரர் கிடாம்பி ஸ்ரீகாந்த் ஆகியோர் முறையே 7வது மற்றும் 10வது இடங்களில் நீடிக்கின்றனர். பி.சாய் பிரனீத்தும் 18வது இடத்தில் நீடிக்கிறார்.
    ஏலத்திற்கு முன்னதாக மூன்று வீரர்களைத் தேர்வு செய்துள்ள நிலையில், அகமதாபாத் அணி 53 கோடி ரூபாயுடன் ஏலத்தில் நுழையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
    புதுடெல்லி:

    15வது ஐபிஎல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் லக்னோ, அகமதாபாத் ஆகிய 2 புதிய அணிகள் சேர்க்கப்பட்டுள்ளன. இதனால் இந்த சீசனில் மொத்தம் 10 அணிகள் பங்கேற்கின்றன. 

    இந்த போட்டிக்கான வீரர்களை தக்கவைத்துக்கொள்ளும் பணி பழைய 8 அணிகளுக்கும் முடிந்துவிட்டது. 8 அணிகளிலும் 27 வீரர்கள் தக்க வைக்கப்பட்டனர்.

    புதிய அணிகளான அகமதாபாத், லக்னோ ஆகியவை வருகிற 22-ம் தேதிக்குள் அவர்கள் வாங்கி உள்ள வீரர்கள் விவரத்தை கொடுக்க வேண்டும் என்று கிரிக்கெட் வாரியம் கெடு வித்திருந்தது. 

    இந்த நிலையில் அகமதாபாத் அணியில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள வீரர்கள் தொடர்பாக தகவல் வெளியாகி உள்ளது. ஹர்திக் பாண்ட்யா, ரஷீத் கான் ஆகியோரை தலா 15 கோடி ரூபாய்க்கும், சுப்மன் கில்லை 7 கோடி ரூபாய்க்கும் வாங்கியிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

    இதில் ஹர்திக் பாண்ட்யா, ரஷீத் கான் ஆகியோரை தேர்ந்தெடுத்தது எதிர்பார்த்த ஒன்றாகும். 3வது வீரராக இஷான் கிஷனை அமதாபாத் அணி தேர்வு செய்யும் என்று கருதப்பட்ட நிலையில் சுப்மன் கில்லை ஒப்பந்தம் செய்துள்ளதாக கூறப்படுகிறது. சுப்மன்கில் கடந்த சீசனில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடினார்.

    புதிய அணிகள் ஏலத்திற்கு முன்னதாக மூன்று வீரர்களைத் தேர்வு செய்ய அனுமதிக்கப்படுகிறது. எனவே, அகமதாபாத் அணி இந்த மூன்று வீரர்களையும் தேர்வு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

    புதிதாக சேர்க்கப்பட்டுள்ள இரண்டு அணிகளும் வீரர்களை ஒப்பந்தம் செய்வதற்கு தலா ரூ. 90 கோடி வரை செலவழிக்கலாம். அந்த வகையில், அகமதாபாத் அணி 53 கோடி ரூபாயுடன் ஏலத்தில் நுழையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஆஷிஷ் நெஹ்ரா, கேரி கிர்ஸ்டன் ஆகியோர் அகமதாபாத் அணிக்கு பயிற்சியளிப்பார்கள்.
    விராட் கோலி மீண்டும் ரன்கள் அடிக்க தொடங்கும்போது அவரை சீண்டியவர்களுக்கு பதிலடியாக அமையும் என ரஷித் லத்திப் கூறினார்.
    இஸ்லாமாபாத்:

    இந்திய வீரர் விராட் கோலி கடந்த 15-ம் தேதி டெஸ்ட் கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். பிசிசிஐ- விராட் கோலிக்கு இடையேயான கருத்து வேறுபாடு காரணமாக அவர் கேப்டன் பதவியில் இருந்து விலகியதாக கூறப்பட்டது. 

    இதை தொடர்ந்து இந்திய வீரர்கள் ரோகித் சர்மா, கே.எல்.ராகுல், அஸ்வின், பும்ரா உள்ளிட்ட பல வீரர்கள் விராட் கோலியின் முடிவு தங்களுக்கு அதிர்ச்சி அளிப்பதாகவும், இருப்பினும் அவரது முடிவை மதிப்பதாகவும் தெரிவித்தனர்.

    இந்நிலையில் கோலியின் பதவி விலகளுக்காக ரோகித் சர்மா, கே.எல்.ராகுல் இருவரும் காத்திருந்ததாக பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் ரஷித் லத்திப் குற்றம்சாட்டியுள்ளார்.

    ரோகித் சர்மா, விராட் கோலி, கே.எல்.ராகுல்

    இதுகுறித்து அவர் கூறியதாவது:-

    விராட் கோலி ஒரு சர்வதேச நட்சத்திரம். அவர் பதவி விலகிவிட்டார். இதையடுத்து இந்தியாவின் அடுத்த கேப்டன் யார் என்ற கேள்வி வருகிறது.

    ரோகித் சர்மா கேப்டனாக இருப்பதற்கு உடல் தகுதி இல்லாதவர். அவர் முழு தென் ஆப்ரிக்கா தொடரிலும் பங்கேற்கவில்லை. கே.எல்.ராகுலுக்கு அந்த திறமை கிடையாது. கோலி பதவி விலகுவதாக அறிவித்தவுடன், அனைத்து வீரர்களுடைய எதிர்வினைகளையும் பார்த்தேன். 

    ராகுல், ரோகித் சர்மா கோலி விலகுவதற்காக காத்திருந்தது போல தெரிகிறது. கோலி, கங்குலி, பிசிசிஐக்கு இடையே என்ன பிரச்சனை என்று தெரியாது. ஆனால் அந்த பிரச்சனை ஏற்பட்டிருக்க கூடாது. நீங்கள் என்ன பிரச்சனையை வேண்டுமானாலும் கொண்டு வாருங்கள். விராட் கோலியை விட பெரிய வீரர் உலகத்தில் கிடையாது. அவர் மீண்டும் ரன்கள் அடிக்க தொடங்கும்போது அவரை சீண்டியவர்களுக்கு பதிலடியாக அமையும். உலகில் இருப்பது ஒரே ஒரு விராட் கோலி தான்.

    இவ்வாறு ரஷித் லத்திப் தெரிவித்துள்ளார்.
    இந்தியா- தென் ஆப்பிரிக்கா அணிகள் இடையேயான 3 ஒருநாள் போட்டி தொடரின் முதல் ஆட்டம் நாளை (19-ந் தேதி) நடக்கிறது.

    பார்ல்:

    இந்திய கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையேயான 3 டெஸ்ட் கொண்ட தொடரை தென் ஆப்பிரிக்கா 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.

    இந்திய அணி தென் ஆப்பிரிக்காவில் முதல் முறையாக டெஸ்ட் தொடரை கைப்பற்றி வரலாற்று சாதனை படைக்க நல்ல வாய்ப்பு கிடைத்தது. ஆனால் வீரர்கள் அதை தவற விட்டுவிட்டனர். முதல் டெஸ்டில் வெற்றிபெற்ற இந்திய அணி அதற்கு அடுத்த 2 டெஸ்டில் தோல்வியை தழுவி ஏமாற்றத்தை அளித்தது.

    இந்தியா- தென் ஆப்பிரிக்கா அணிகள் இடையேயான 3 ஒருநாள் போட்டி தொடரின் முதல் ஆட்டம் நாளை (19-ந் தேதி) நடக்கிறது.

    டெஸ்ட் தொடரை இழந்த இந்திய அணி ஒருநாள் தொடரை கைப்பற்றுமா? என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர். லோகேஷ் ராகுல் தலைமையிலான இந்திய அணி வெற்றியுடன் கணக்கை தொடங்கும் ஆர்வத்தில் உள்ளது.

    ஒயிட் பால் போட்டிகளுக்கு (ஒருநாள் ஆட்டம், 20 ஓவர் போட்டி) ரோகித் சர்மா கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். காயம் காரணமாக அவர் விளையாடாததால் ராகுல் தலைமை பொறுப்பை ஏற்றுள்ளார்.

    பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் சமபலத்துடன் திகழும் இந்திய அணி எல்லாவகையிலும் தென் ஆப்பிரிக்காவுக்கு சவால் கொடுத்து விளையாடும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

    டெஸ்ட் தொடரை கைப்பற்றியதுபோல், ஒருநாள் தொடரையும் வென்றுவிட வேண்டும் என்ற வேட்கையில் தென் ஆப்பிரிக்கா உள்ளது. சொந்த மண்ணில் விளையாடுவது அந்த அணிக்கு கூடுதல் பலமே.

    பவுமா தலைமையிலான தென் ஆப்பிரிக்க அணியில் சிறந்த ஆல் ரவுண்டர்கள் உள்ளனர். இரு அணிகளும் சம பலத்துடன் மோதுவதால் நாளைய போட்டி விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இரு அணிகளும் நாளை மோதுவது 85-வது ஒருநாள் போட்டியாகும். இதுவரை நடந்த 84 ஆட்டத்தில் இந்தியா 35-ல், தென் ஆப்பிரிக்கா 46 -ல் வெற்றிபெற்றுள்ளன. 3 போட்டி முடிவு இல்லை.

    நாளைய ஆட்டம் இந்திய நேரப்படி பிற்பகல் 2 மணிக்கு தொடங்குகிறது. ஸ்டார் ஸ்போர்ட்ஸ் டெலிவி‌ஷனில் இந்த போட்டி நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

    இந்தியா: லோகேஷ் ராகுல் (கேப்டன்), பும்ரா (துணை கேப்டன்), ஷிகர் தவான், ருதுராஜ் கெய்க்வாட், விராட் கோலி, இஷான்கி‌ஷன், வெங்கடேஸ் அய்யர், ஸ்ரேயாஸ் அய்யர், ரி‌ஷப்பண்ட், சூர்யகுமார் யாதவ், புவனேஸ்வர் குமார், முகமது சிராஜ், ‌ஷர்துல் தாகூர், அஸ்வின், சாஹல், தீபக் சாகர், பிரசித் கிருஷ்ணா, ஜெயந்த் யாதவ்.

    தென் ஆப்பிரிக்கா: பவுமா (கேப்டன்), கேசவ் மகாராஜ் (துணை கேப்டன்), குயின்டன் டிகாக், மார்க்கிராம், ஜான்மேன் மலன், மில்லர், வான்டர் டூசன், ஹம்சா, கெய்ல்வெரீனி, ‌ஷம்சி, ரபடா, பிரிட்டோரியஸ், பெகுலுவாயோ, பர்னல், நிகிடி, சிசாந்தா மகலா, ஜான்சென்.

    விராட் கோலி இனி ரன்களை எடுக்க முயல வேண்டும். அதுதான் முக்கியம். இந்திய அணிக்காக விளையாட நினைக்கும்போது கேப்டன் பதவிக்காக யாரும் கனவு காண மாட்டீர்கள். இந்திய அணியின் வெற்றிக்கு பங்களிக்க கனவு காண்பீர்கள்.

    புதுடெல்லி:

    இந்திய கிரிக்கெட்டுக்கு 3 வடிவிலான போட்டிகளுக்கும் கேப்டனாக இருந்த விராட் கோலி முதலில் 20 ஓவரில் இருந்து விலகினார். இதைத் தொடர்ந்து ஒருநாள் போட்டிக்கான கேப்டன் பதவியில் இருந்து அவர் அதிரடியாக நீக்கப்பட்டார்.

    இந்த நிலையில் யாரும் எதிர்பார்க்காத வகையில் விராட் கோலி டெஸ்ட் கேப்டன் பதவியில் இருந்து விலகியுள்ளார்.

    விராட் கோலியின் இந்த முடிவு குறித்து இந்திய அணியின் முன்னாள் தொடக்க வீரர் கவுதம் காம்பீர் கூறியதாவது:-

    விராட் கோலி டெஸ்ட் கேப்டன் பதவியில் இருந்து விலகியது புதிதாக ஒன்றும் இல்லை. கேப்டன் பதவி என்பது யாருக்கும் சொந்தமானது இல்லை. யாருடைய பிறப்புரிமையும் அல்ல.

    காம்பீர்

    கேப்டன் பதவியை கோலிக்கு அளித்த டோனி அவரது தலைமையின் கீழ் விளையாடவும் செய்தார். அதுவும் டோனி 3 ஐ.சி.சி. மற்றும் ஐ.பி.எல். கோப்பைகளை வென்றுள்ளார்.

    விராட் கோலி இனி ரன்களை எடுக்க முயல வேண்டும். அதுதான் முக்கியம். இந்திய அணிக்காக விளையாட நினைக்கும்போது கேப்டன் பதவிக்காக யாரும் கனவு காண மாட்டீர்கள். இந்திய அணியின் வெற்றிக்கு பங்களிக்க கனவு காண்பீர்கள்.

    நாட்டுக்காக விளையாடுவது பெருமைக்குரியது என்பதால் உங்களுடைய ஆர்வம் மாறப் போவதில்லை.

    இவ்வாறு காம்பீர் கூறியுள்ளார்.

    முதல் முறையாக உலக கோப்பையை வென்று கொடுத்த கபில்தேவ் கூறியதாவது:-

    கேப்டன் பதவியில் இருந்து விராட் கோலி விலகியதை வரவேற்கிறேன். அந்த பதவியை அவர் ரசிக்கவில்லை. கேப்டன் பதவி என்பது கடினமான முடிவுகளை எடுக்க வேண்டிய பணியாகும்.

    சமீப காலமாகவே அவர் கடும் நெருக்கடியில்தான் இருந்தார். அவர் ஒரு முதிர்ச்சியான மனிதர். இந்த முக்கியமான முடிவை எடுக்கும் முன்பும் கோலி பலமுறை சிந்தித்து இருப்பார்.

    கவாஸ்கர் எனது தலைமையில் விளையாடி இருக்கிறார். ஸ்ரீகாந்த், முகமது அசாருதீன் ஆகி யோரது கேப்டன்ஷிப்பில் நான் விளையாடி இருக்கிறேன். எனக்கு எந்த ஈகோவும் இருந்ததில்லை.

    விராட் கோலி ஈகோவை உதறிவிட்டு இளம் வீரர் ஒருவரின் தலைமையில் விளையாட வேண்டும். இது அவருக்கும், இந்திய அணிக்கும் உதவும். இந்திய கேப்டனுக்கும், இளம் வீரர்களுக்கும் அவர் வழிகாட்ட முடியும். கோலி பேட்ஸ்மேனாக அணிக்கு மிகவும் முக்கியமானவர்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    டெஸ்ட் அந்தஸ்து பெற்ற அணிக்கு எதிராக வெளிநாட்டு மண்ணில் ஒருநாள் தொடரை அயர்லாந்து அணி முதல் முறையாக வென்று சாதனை படைத்துள்ளது.
    கிங்ஸ்டன்:

    அயர்லாந்து அணி வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடியது.

    இரு அணிகள் இடையிலான முதல் போட்டியில் வெஸ்ட்இண்டீஸ் 24 ரன் வித்தியாசத்திலும், 2-வது போட்டியில் அயர்லாந்து 5 விக்கெட் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றதால், ஒருநாள் தொடர் 1-1 என சமனிலையில் இருந்தன.

    இந்நிலையில், வெஸ்ட்இண்டீஸ், அயர்லாந்து அணிகள் இடையிலான 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி கிங்ஸ்டனில் நடைபெற்றது.
    டாஸ் ஜெயித்த அயர்லாந்து அணி பீல்டிங்கை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் பேட் செய்த வெஸ்ட்இண்டீஸ் அணி 44.4 ஓவரில் 212 ரன்னில் ஆல் அவுட்டானது. தொடக்க ஆட்டக்காரர் ஷாய் ஹோப் அரை சதமடித்து 53 ரன்னில் வெளியேறினார். ஜேசன் ஹோல்டர் 44 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

    அயர்லாந்து சார்பில் ஆன்டி மெக்பிரின் 4 விக்கெட்டும், கிரேக் யங் 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 213 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் அயர்லாந்து அணி விளையாடியது. ஆன்டி மெக்பிரின் 59 ரன்னும், ஹாரி டெக்டர் 52 ரன்னும் எடுத்தனர்.

    இறுதியில், அயர்லாந்து 44.5 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 214 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. இதன்மூலம் அயர்லாந்து அணி 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் போட்டி தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது.

    வெஸ்ட்இண்டீஸ் சார்பில் அகில் ஹுசைன், ரோஸ்டன் சேஸ் தலா 3 விக்கெட் சாய்த்தனர். 

    அயர்லாந்து அணி வீரர் ஆன்டி மெக்பிரின் ஆட்டநாயகன் மற்றும் தொடர்நாயகன் விருதை தட்டிச் சென்றார்.

    புரோ கபடி லீக் போட்டியின் புள்ளிப் பட்டியலில் பெங்களூரு புல்ஸ் அணி 7 வெற்றி, 3 தோல்வி, 1 டிரா என மொத்தம் 39 புள்ளிகள் எடுத்து முதல் இடம் பிடித்துள்ளது.
    பெங்களூரு:

    12 அணிகள் பங்கேற்றுள்ள 8-வது புரோ கபடி லீக் போட்டி பெங்களூருவில் ரசிகர்கள் இன்றி நடந்து வருகிறது.

    இதில் நேற்றிரவு நடந்த முதல் போட்டியில் யுபி யோதா, புனேரி பல்டான் அணிகள் மோதின. போட்டியின் ஆரம்பம் முதலே உ.பி. அணி அதிரடியாக விளையாடியது. இதனால் 50 - 40 என்ற புள்ளிக்கணக்கில் அபார வெற்றி பெற்றது.

    இந்த வெற்றியின் மூலம் உ.பி. அணி புள்ளிப்பட்டியலில் நான்காம் இடத்துக்கு முன்னேறியது. இந்தப் போட்டியில் தோற்றதன் மூலம் புனே அணி 10ம் இடத்தில் உள்ளது.

    மற்றொரு போட்டியில் பெங்கால் வாரியர்ஸ், தெலுகு டைட்டன்ஸ் அணிகள் மோதின. பரபரப்பாக நடந்த இந்தப் போட்டியில் பெங்கால் வாரியர்ஸ் 28 -27 என்ற கணக்கில் திரில் வெற்றி பெற்றது. இதன்மூலம் பெங்கால் அணி 5வது வெற்றியை பதிவுசெய்தது.
    ரோகித் சர்மாவுக்கு ஐ.பி.எல். போட்டியில் மும்பைக்கு கேப்டனான பிறகு பேட்டிங்கில் மிகப் பெரிய மாற்றம் ஏற்பட்டது. இதே நிலைதான் ரி‌ஷப்பண்டுக்கு இருக்கிறது என கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.
    மும்பை:

    இந்திய கிரிக்கெட்டின் 3 வடிவிலான போட்டிகளுக்கும் (டெஸ்ட், ஒருநாள் ஆட்டம், 20 ஓவர்) கேப்டனாக ஜொலித்தவர் விராட்கோலி. தற்போது அவர் எந்த கேப்டன் பதவியிலும் இல்லை.

    டி20 உலக கோப்பை போட்டிக்கு முன்பு 20 ஓவர் கேப்டன் பதவியில் இருந்து விராட்கோலி விலகினார். அதைத் தொடர்ந்து ஒருநாள் போட்டிக்கான கேப்டன் பொறுப்பில் இருந்து அவர் நீக்கப்பட்டார்.

    இந்த விவகாரம் தொடர்பாக விராட் கோலிக்கும், கிரிக்கெட் வாரியத்துக்கும் இடையே உச்சக்கட்ட கருத்து வேறுபாடு ஏற்பட்டது. ஒயிட்பால் போட்டிகளுக்கு (ஒருநாள் போட்டி, 20 ஓவர்) போட்டிகளுக்கு ரோகித் சர்மா கேப்டனாக நியமிக்கப்பட்டார். விராட்கோலி டெஸ்ட் போட்டிக்கு மட்டும் கேப்டனாக நீட்டிக்கப்பட்டார்.

    இந்த நிலையில் யாரும் எதிர்பார்க்காத வகையில் விராட்கோலி டெஸ்ட் கேப்டன் பதவியில் இருந்து விலகினார். தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை இழந்த பிறகு அவர் இந்த முடிவை எடுத்தார். அவரது 7 ஆண்டு கால கேப்டன் சகாப்தம் முடிந்தது.

    விராட்கோலி டெஸ்ட் கேப்டன் பதவியில் இருந்து விலகியதால் இந்திய டெஸ்ட் அணிக்கு புதிய கேப்டனாக யார்? நியமிக்கப்படுவார் என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

    ஒயிட்பால் போட்டிகளுக்கு கேப்டனாக இருக்கும் ரோகித்சர்மா, லோகேஷ் ராகுல், ரி‌ஷப்பண்ட் ஆகிய மூவரில் ஒருவர் டெஸ்ட் கேப்டனாக நியமிக்கப்படலாம் என்று கணிப்புகள் வெளியாகி உள்ளன.

    இந்த நிலையில் இந்திய டெஸ்ட் அணிக்கு ரி‌ஷப் பண்டை கேப்டனாக நியமிக்கலாம் என்று முன்னாள் கேப்டனும், டெலிவி‌ஷன் வர்ணனையாளருமான கவாஸ்கர் விருப்பம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    விராட்கோலிக்கு பிறகு டெஸ்ட் அணிக்கு ரி‌ஷப் பண்டை தான் கேப்டனாக நியமிக்க வேண்டும். அணியை வெற்றிகரமாக முன்னோக்கி அழைத்து செல்வதற்கான திறமை அவரிடம் இருக்கிறது. தேர்வு குழுவை பொறுத்தவரை கேப்டன் பதவி ஒரு விவாதமாக இருக்கும்.

    3 வடிவிலான போட்டிகளுக்கும் தானாக தேர்வு செய்யப்படுபவர் கேப்டனாக இருக்க வேண்டும். ரி‌ஷப்பண்ட் அனைத்து வடிவிலான போட்டிகளுக்கான அணியிலும் உள்ளார். என்னை பொறுத்தவரை அடுத்த டெஸ்ட் கேப்டனுக்கு அவர் தகுதியானவர்.

    கேப்டவுன் டெஸ்டில் அவர் பொறுப்புடன் விளையாடி சதம் அடித்துள்ளார். இதனால் அவருக்கு கேப்டனுக்குரிய திறமை இருக்கிறது.

    மன்சூர்அலிகான் பட்டோடி இளம்வயதில் தான் கேப்டனாக நியமிக்கப்பட்டார். கேப்டன் பதவியை ஏற்ற பிறகு வெற்றியை பெற்றார்.

    ரோகித் சர்மாவுக்கு ஐ.பி.எல். போட்டியில் மும்பைக்கு கேப்டனான பிறகு பேட்டிங்கில் மிகப் பெரிய மாற்றம் ஏற்பட்டது. இதே நிலைதான் ரி‌ஷப்பண்டுக்கு இருக்கிறது. அவர் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் கேப்டனாக இருக்கிறார்.

    ரி‌ஷப்பண்ட் இந்திய அணியை முன்னோக்கி எடுத்து செல்வார் என்ற நம்பிக்கை இருக்கிறது.

    இவ்வாறு கவாஸ்கர் கூறி உள்ளார். 
    டெஸ்ட் கேப்டன் பதவியில் இருந்து விராட்கோலி விலகியது தனக்கு அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது என்று ஒருநாள் மற்றும் 20 ஓவர் அணிக்கான இந்திய கேப்டன் ரோகித் சர்மா தெரிவித்துள்ளார்.
    மும்பை:

    இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் பதவியில் இருந்து விராட்கோலி திடீரென விலகினார். அவரது விலகல் குறித்து முன்னாள் வீரர்கள் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

    முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் இது தொடர்பாக கூறியதாவது:-

    குறுகிய கால இடைவெளியில் அனைத்தும் ஒன்றன் பின் ஒன்றாக விராட்கோலியின் வாழ்க்கையில் நடந்து விட்டது. முதலில் ஐ.பி.எல். தொடரின் கேப்டன் பதவியில் இருந்து விலகினார். அதன் பிறகு 20 ஓவர் போட்டிக்கான இந்திய அணி கேப்டன் பதவியில் இருந்து விலகினார்.

    அதன் பின்னர் ஒருநாள் கேப்டன் பதவியில் இருந்து கோலி நீக்கப்பட்டார். தற்போது டெஸ்ட் கேப்டன் பதவியில் இருந்து அவர் விலகியது யாரும் எதிர்பாராதது. முக்கியமான பொறுப்புகளில் இருந்த கோலி குறுகிய இடைவெளியில் வெளியேறி விட்டார்.

    இந்திய கிரிக்கெட்டில் யாரும் நீக்க முடியாக கேப்டனாக வலம் வர வேண்டும் என்று கோலி விரும்பினார். அதனால் தான் அந்த முடிவை கிரிக்கெட் வாரியம் எடுக்கும் முன் தாமாகவே கேப்டன் பதவியை கோலி ராஜினாமா செய்துள்ளார்.

    இவ்வாறு மஞ்ச்ரேக்கர் கூறி உள்ளார்.

    இதற்கிடையே டெஸ்ட் கேப்டன் பதவியில் இருந்து விராட்கோலி விலகியது தனக்கு அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது என்று ஒருநாள் மற்றும் 20 ஓவர் அணிக்கான இந்திய கேப்டன் ரோகித் சர்மா தெரிவித்துள்ளார்.
    உலகின் நம்பர்-1 வீரரான ஜோகோவிச் ஆஸ்திரேலிய ஓபன் போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பை இழந்தார். விசா ரத்துக்கு எதிரான அவரது அப்பீல் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
    மெல்போர்ன்:

    ஒவ்வொரு ஆண்டும் ஆஸ்திரேலிய ஓபன், பிரெஞ்சு ஓபன், விம்பிள்டன், அமெரிக்க ஓபன் ஆகிய 4 கிராண்ட்சிலாம் போட்டிகள் நடைபெறும். டென்னிசில் இந்த போட்டிகள் தான் மிகவும் பிரசித்தி பெற்றவை ஆகும்.

    இந்த ஆண்டுக்கான முதல் கிராண்ட்சிலாம் போட்டியான ஆஸ்திரேலிய ஓபன் போட்டி மெல்போர்ன் நகரில் இன்று தொடங்கியது.

    5-வது வரிசையில் இருக்கும் மரியா ‌ஷக்காரி (கிரீஸ்) தொடக்க சுற்றில் ஜெர்மனியை சேர்ந்த மரியாவை எதிர்கொண்டார். இதில் ‌ஷக்காரி 6-4, 7-6 (7-2) என்ற கணக்கில் வெற்றி பெற்று 2-வது சுற்றுக்கு முன்னேறினார்.

    15-வது வரிசையில் உள்ள எலினா சுவிட்டோலினா (உக்ரைன்) 6-1, 7-8 (7-4) என்ற கணக்கில் பிரான்சை சேர்ந்த பியானோ  பெரோவை தோற்கடித்தார்.

    மற்ற ஆட்டங்களில் 13-வது வரிசையில் உள்ள ஓசாகா (ஜப்பான்), பெலிண்டா பென்சிக் (சுவிட்சர்லாந்து) ஆகியோர் வெற்றி பெற்று 2-வது சுற்றுக்கு முன்னேறினார்கள்.

    ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த ஒரு ஆட்டத்தில் 14-வது வரிசையில் உள்ள டெனிஸ் சபோவலோவ் (கனடா) - லாஸ்லோ (செர்பியா) மோதினார்கள். இதில் சபோவலோவ் 7-6 (7-3), 6-4, 3-6, 7-6 (7-3) என்ற கணக்கில் வென்று 2-வது சுற்றுக்கு தகுதி பெற்றார்.

    இதேபோல 17-வது வரிசையில் இருக்கும் மான்பில்ஸ் (பிரான்சு), லஜோவிச் (செர்பியா) ஆகியோரும் முதல் சுற்றில் வெற்றி பெற்றார்கள்.

    உலகின் நம்பர்-1 வீரரான ஜோகோவிச் ஆஸ்திரேலிய ஓபன் போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பை இழந்தார். விசா ரத்துக்கு எதிரான அவரது அப்பீல் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து அவர் சொந்த நாட்டுக்கு திருப்பி அனுப்பப்பட்டார்.

    புதிய சாதனை படைக்க வேண்டும் என்று ஆவலுடன் காத்திருந்த ஜோகோவிச் கொரோனா தடுப்பூசி செலுத்தாததால் அந்த வாய்ப்பை இழந்து பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார். 
    ஸ்டம்பிற்கு பின் நின்றபடி இந்த வீரரால் ஆட்டத்தை எளிதாக கணிக்க முடியும் என யுவராஜ் சிங் தெரிவித்தார்.
    மும்பை:

    இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி நேற்று முன்தினம் டெஸ்ட் கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். 

    ஏற்கனவே அவர் டி20, ஒருநாள் போட்டிகளின் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகிய நிலையில்,  பிசிசிஐ - விராட் கோலிக்கு இடையே இருந்த கருத்து வேறுபாடு மற்றும் தென் ஆப்ரிக்கா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் தோல்வி ஆகிய காரணங்களால் அவர் டெஸ்ட் கேப்டன் பதவியில் இருந்து விலகியதாக கூறப்படுகிறது.

    இதையடுத்து இந்திய டெஸ்ட் அணியின் புதிய கேப்டனாக யார் நியமிக்கப்படவுள்ளனர் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. சிலர் ரோகித் சர்மாவை டெஸ்ட் கேப்டனாக நியமிக்க பரிந்துரை செய்து வருகின்றனர்.

    ரிஷப் பண்ட்

    ஆனால், முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர், ரிஷப் பண்ட் தான் புதிய கேப்டன் பதவிக்கு தகுதியானவர் என கூறியிருந்தார். இதற்கு யுவராஜ் சிங்கும் தனது ஆதரவை தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து யுவராஜ் சிங் கூறியதாவது:-

    ரிஷப் பண்ட் தான் இந்திய டெஸ்ட் அணியை வழி நடத்த சிறந்த வீரர். ஸ்டம்பிற்கு பின் நின்றபடி அவரால் ஆட்டத்தை எளிதாக கணிக்க முடியும். மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டன் பதவியில் இருந்து ரிக்கி பாண்டிங் விலகியவுடன் ரோகித் சர்மாவுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. 

    அதற்கு பின் அவரது பேட்டிங்கில் நல்ல முன்னேற்றம் தெரிந்தது. புதிதாக கிடைத்த கேப்டன் பொறுப்பு அவரை, 100 ரன்கள், 150 ரன்கள், 200 ரன்கள் கூட அடிக்க வைத்தது.

    அதேபோன்று ரிஷப் பண்டுக்கும் பொறுப்பு வழங்கப்பட்டால் அவரால் பல சதங்களை விளாச முடியும்.

    இவ்வாறு யுவராஜ் சிங் தெரிவித்தார்.
    ×