என் மலர்
விளையாட்டு
இந்தியா ஓபன் பேட்மிண்டன் தொடரின் ஆடவர் இரட்டையர் பிரிவு இறுதி ஆட்டத்தில் இந்தியாவின் சாத்விக், சிராக் ஜோடி இந்தோனேசிய ஜோடியை வீழ்த்தி பட்டம் வென்றது.
புதுடெல்லி:
இந்தியா ஓபன் பேட்மிண்டன் தொடர் தலைநகர் டெல்லியில் நடைபெற்றது.
இன்று நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் லக்ஷயா சென்னும், சிங்கப்பூர் வீரர் லோ கீன் யீவுடன் மோதினார்.
இதில் 24-22, 21-17 என்ற புள்ளிக்கணக்கில் வீழ்த்தி லக்சயா சென் சாம்பியன் பட்டம் வென்றார்.
இதையும் படியுங்கள்...இந்திய ஓபன் பேட்மிண்டன் - இரட்டையர் பட்டம் வென்றது இந்திய ஜோடி
டெல்லியில் நடந்து வரும் இந்தியா ஓபன் பேட்மிண்டன் தொடரில் இந்தியாவின் முன்னணி வீரர் லக்சயா சென் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளார்.
புதுடெல்லி:
தலைநகர் டெல்லியில் உள்ள கே.டி.ஜாதவ் ஸ்டேடியத்தில் நடப்பாண்டிற்கான இந்திய ஓபன் பேட்மிண்டன் போட்டிகள் நடைபெற்று வருகின்றன.
இதில், ஆடவர் இரட்டையர் பிரிவு இறுதி ஆட்டத்தில் இந்தியாவின் சாத்விக் சாய்ராஜ் ராங்கி ரெட்டி மற்றும் சிராக் ஷெட்டி இணை, இந்தோனேசியாவின் முகமது அஷன் மற்றும் ஹேந்திர செதியவான் இணையை எதிர்த்து விளையாடியது.
43 நிமிடங்கள் நடந்த இந்த போட்டியில் 21-16, 26-24 என்ற நேர் செட் கணக்கில் இந்தோனேசிய இணையை வீழ்த்தி பட்டம் வென்றது.
இதையும் படியுங்கள்...ஆஷஸ் தொடர் - இங்கிலாந்தை 4-0 என வீழ்த்தியது ஆஸ்திரேலியா
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 5-வது டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்சில் இங்கிலாந்து 124 ரன்னில் சுருண்டு பரிதாபமாக தோற்றது.
ஹோபர்ட்:
ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் தொடரில் விளையாடி வருகிறது. 4 போட்டிகள் முடிவில் ஆஸ்திரேலியா 3-0 என தொடரைக் கைப்பற்றியுள்ளது.
இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 5வது மற்றும் கடைசி போட்டி ஹோபர்ட்டில் நடைபெற்றது. டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் களமிறங்கிய ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 303 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. டிராவிஸ் ஹெட் சிறப்பாக ஆடி சதமடித்து 101 ரன்னில் அவுட்டானார்.
இங்கிலாந்து சார்பில் பிராட், மார்க் வுட் தலா 3 விக்கெட்டும், ராபின்சன், கிறிஸ் வோக்ஸ் தலா 2 விக்கெட்டும் கைப்பற்றினர்.
தொடர்ந்து ஆடிய இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 188 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. கிறிஸ் வோக்ஸ் 36 ரன்னும், ஜோ ரூட் 34 ரன்னும் எடுத்தனர்.
ஆஸ்திரேலியா சார்பில் பாட் கம்மின்ஸ் 4 விக்கெட்டும், ஸ்டார்க் 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.
123 ரன்கள் முன்னிலை பெற்ற ஆஸ்திரேலியா இரண்டாவது இன்னிங்சில் 155 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அலெக்ஸ் கேரி 49 ரன்னில் அவுட்டானார்.
இங்கிலாந்து சார்பில் மார்க் வுட் 6 விக்கெட்டும், பிராட் 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதையடுத்து, 271 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து அணி இரண்டாவது இன்னிங்சை விளையாடியது. தொடக்க ஆட்டக்காரர்கள் ரோரி பர்ன்ஸ், ஜாக் கிராலி ஆகியோர் நிதானமாக ஆடினர். முதல் விக்கெட்டுக்கு இந்த ஜோடி 68 ரன்களை சேர்த்தது. ரோரி பர்ன்ஸ் 26 ரன்னில் அவுட்டாகினர்.
அடுத்து கிராலி 36 ரன்னில் அவுட்டானார். அப்போது இங்கிலாந்து 2 விக்கெட்டுக்கு 82 ரன்கள் எடுத்திருந்தது. அதன்பின் வந்த வீரர்களை ஆஸ்திரேலியா பந்துவீச்சாளர்கள் விரைவில் வெளியேற்றினர்.
இறுதியில், இங்கிலாந்து அணி இரண்டாவது இன்னிங்சில் 124 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதன்மூலம் ஆஸ்திரேலியா 146 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இதனால் ஆஷஸ் தொடரில் ஆஸ்திரேலியா 4-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றி அசத்தியுள்ளது. ஆட்ட நாயகன் விருது மற்றும் தொடர் நாயகன் விருது டிராவிஸ் ஹெட்டுக்கு வழங்கப்பட்டது.
இதையும் படியுங்கள்...கேப்டன் பதவியில் விராட் கோலியின் சாதனைகள்
நீதிமன்ற தீர்ப்பை மதித்து, நாட்டை விட்டு வெளியேறுவது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் நடவடிக்கைக்கு ஒத்துழைப்பதாக ஜோகோவிச் தெரிவித்தார்.
மெல்போர்ன்:
செர்பிய டென்னிஸ் வீரர் ஜோகோவிச்சின் விசாவை ஆஸ்திரேலிய அரசு ரத்து செய்தது. தடுப்பூசி செலுத்திக் கொள்ளாததால் ஜோகோவிச்சின் விசாவை ஆஸ்திரேலிய அரசு ரத்து செய்தது. இதனை எதிர்த்து ஜோகோவிச் தாக்கல் செய்த மனுவை கோர்ட் தள்ளுபடி செய்தது. இதனால், நாளை தொடங்கும் ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பை இழந்தார் ஜோகோவிச்.
நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பினால் ஜோகோவிச் கடும் ஏமாற்றம் அடைந்தார். ஆஸ்திரேலிய ஓபனில் விளையாடும் நம்பிக்கை சிதைந்துவிட்டதாகவும் அவர் கூறினார்.
‘எனது விசாவை ரத்து செய்வது தொடர்பான அமைச்சரின் முடிவை, நீதித்துறை மறுஆய்வு செய்வதற்கான எனது மனுவை நிராகரித்து நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பால் நான் மிகவும் ஏமாற்றமடைந்தேன். எனவே, நான் ஆஸ்திரேலியாவில் தங்கி ஆஸ்திரேலிய ஓபனில் பங்கேற்க முடியாது. நீதிமன்றத்தின் தீர்ப்பை மதிக்கிறேன். மேலும் நான் நாட்டை விட்டு வெளியேறுவது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் நடவடிக்கைக்கு ஒத்துழைப்பேன்’ என்றார் ஜோகோவிச்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 5-வது டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்சில் இங்கிலாந்தின் மார்க் வுட் 6 விக்கெட் வீழ்த்தி அசத்தினார்.
ஹோபர்ட்:
ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் தொடரில் விளையாடி வருகிறது. 4 போட்டிகள் முடிவில் ஆஸ்திரேலியா 3-0 என தொடரைக் கைப்பற்றியுள்ளது.
இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 5வது மற்றும் கடைசி போட்டி ஹோபர்ட்டில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் களமிறங்கிய ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 303 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. டிராவிஸ் ஹெட் சிறப்பாக ஆடி சதமடித்து 101 ரன்னில் அவுட்டானார். கிரீன் 74 ரன்கள் எடுத்தார். லபுசேன் 44 ரன்கள் எடுத்தார்.
இங்கிலாந்து சார்பில் பிராட், மார்க் வுட் தலா 3 விக்கெட்டும், ராபின்சன், கிறிஸ் வோக்ஸ் தலா 2 விக்கெட்டும் கைப்பற்றினர்.
தொடர்ந்து ஆடிய இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 188 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. கிறிஸ் வோக்ஸ் 36 ரன்னும், ஜோ ரூட் 34 ரன்னும் எடுத்தனர்.
ஆஸ்திரேலியா சார்பில் பாட் கம்மின்ஸ் 4 விக்கெட்டும், ஸ்டார்க் 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.
123 ரன்கள் முன்னிலை பெற்ற ஆஸ்திரேலியா இரண்டாவது இன்னிங்சை விளையாடியது. இங்கிலாந்து அணியினரின் துல்லியமான பந்துவீச்சில் சிக்கிய ஆஸ்திரேலியா விரைவில் விக்கெட்டுகளை இழந்தது.
அதன்படி, ஆஸ்திரேலியா இரண்டாவது இன்னிங்சில் 155 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அலெக்ஸ் கேரி மட்டும் ஓரளவு தாக்குப் பிடித்து 49 ரன்னில் அவுட்டானார்.
இங்கிலாந்து சார்பில் மார்க் வுட் 6 விக்கெட்டும், பிராட் 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதையடுத்து, 271 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து அணி இரண்டாவது இன்னிங்சை விளையாடி வருகிறது.
கேப்டன் பதவி விவகாரம் தொடர்பாக விராட் கோலிக்கும் இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் கங்குலிக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது.
இந்திய கிரிக்கெட்டில் 3 வடிவிலான போட்டிகளுக்கும் (டெஸ்ட், ஒரு நாள் போட்டி, 20 ஓவர்) கேப்டனாக விராட் கோலி பணியாற்றி வந்தார்.
சமீபத்தில் நடந்த உலக கோப்பை போட்டிக்கு முன்பு 20 ஓவர் கேப்டன் பதவியில் இருந்து அவர் விலகினார்.
இதற்கிடையே தென் ஆப்பிரிக்க தொடருக்கான ஒரு நாள் கேப்டன் பதவியில் இருந்து விராட் கோலி நீக்கப்பட்டார். அவர் பதவி விலக மறுத்ததால் கிரிக்கெட் வாரியம் அவரை நீக்கியது.
ஒயிட் பால் (ஒரு நாள் போட்டி, 20 ஓவர்) போட்டிகளுக்கு ஒரே கேப்டன் இருப்பது நல்லது என்று கருதி இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. ஒயிட் பால் போட்டிகளுக்கு ரோகித் சர்மா கேப்டனாக நியமிக்கப்பட்டார்.
கேப்டன் பதவி விவகாரம் தொடர்பாக விராட் கோலிக்கும் இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் கங்குலிக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இந்த விவகாரத்தில் இருவரும் தெரிவித்த கருத்துக்கள் முன்னுக்கு பின் முரனாக இருந்தன.
இந்த நிலையில் டெஸ்ட் கிரிக்கெட் அணியின் கேப்டன் பதவியில் யாருமே எதிர்பார்க்காத வகையில் விராட் கோலி விலகினார். தென்ஆப்பிரிக்க பயணத்தில் டெஸ்ட் தொடரை இழந்த பிறகு அவர் இந்த முடிவை அறிவித்தார்.
கோலியின் இந்த திடீர் முடிவு கிரிக்கெட் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.
கேப்டன் பதவியில் விராட் கோலியின் 7 ஆண்டு சகாப்தம் முடிவடைந்தது. இந்திய டெஸ்ட் கேப்டன் வெற்றிகரமான கேப்டன் விராட் கோலி ஆவார். அவரது தலைமையில் தான் இந்திய அணி அதிக வெற்றிகளை பெற்றுள்ளது.
கோலி தலைமையில் 68 டெஸ்டில் விளையாடி 40-ல் வெற்றி பெற்றது. 11 டெஸ்ட் டிரா ஆனது. 17 போட்டியில் தோற்றது. வெற்றி சதவீதம் 58.82 ஆகும்.
கோலி தலைமையில் இந்திய அணி ஜோகன்னஸ் பர்க், நாட்டிங்காம், அடிலெடு, மெல்போர்ன் டெஸ்டில் 2018-ல் வெற்றி பெற்றது. இதன் மூலம் ஒரே ஆண்டில் அன்னிய மண்ணில் 4 டெஸ்டில் வெற்றி தேடி தந்த முதல் இந்திய கேப்டன் ஆவார்.
மேலும் செஞ்சூரியன் டெஸ்டில் முதல் வெற்றியை தேடி தந்த ஆசிய கேப்டன் ஆவார். தென்ஆப்பிரிக்கா, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் அதிக டெஸ்ட் வெற்றியை பெற்று சாதனை படைத்தார்.
மேலும் அவர் பல்வேறு டெஸ்ட் சாதனைகளை புரிந்து இந்தியாவுக்கு பெருமை சேர்த்துள்ளார்.
இந்த தொடரில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் உலக கோப்பை போட்டிகளுக்கு தகுதி பெறும்.
புது தில்லி:
மகளிருக்கான ஆசிய கோப்பை ஹாக்கி தொடர் வரும் 21 முதல் 28-ஆம் தேதி வரை ஓமனில் நடைபெறவுள்ளது. இதற்காக 18 பேர் கொண்ட மகளிர் அணி ஓமனுக்கு பயணம் மேற்கொண்டுள்ளது.
நடப்பு சாம்பியனான இந்திய அணி சீனா, இந்தோனேசியா, ஜப்பான், மலேசியா, சிங்கப்பூர், தென் கொரியா, தாய்லாந்து ஆகிய அணிகளுடன் மோதவுள்ளது.
இந்த தொடரில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் இந்த ஆண்டு ஸ்பெயின் மற்றும் நெதர்லாந்தில் நடைபெறவுள்ள மகளிர் ஹாக்கி உலகக்கோப்பையில் விளையாடுவதற்கு தகுதிப்பெறும்.

இதுகுறித்து இந்திய மகளிர் ஹாக்கி அணியின் கேப்டன் சவிதா கூறுகையில், இந்த ஆண்டு உலகக்கோப்பை, ஆசிய போட்டிகள் என அடுத்தடுத்த பெரிய தொடர்கள் வருகின்றன. நாங்கள் ஒலிம்பிக்கிற்கு பிறகு பெரிதாக போட்டிகளில் விளையாடாததால் இந்த தொடர் எங்களை தயார் செய்துக்கொள்வதற்கு உதவும் என தெரிவித்தார்.
இந்தியா தனது முதல் போட்டியை ஜனவரி 21-ம் தேதி மலேசியாவிற்கு எதிராக விளையாடவுள்ளது.
காயம் காரணமாக இந்திய அணியின் கேப்டன் ராணி ராம்பாலுக்கு பதில் சவிதா கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த அணியில் இடம்பெற்றுள்ள 16 வீராங்கனைகள் டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் விளையாடியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆஸ்திரேலிய குடியுரிமை மந்திரி அலெக்ஸ் ஹாவ்கே தனது தனிப்பட்ட அதிகாரத்தை பயன்படுத்தி ஜோகோவிச்சின் விசாவை ரத்து செய்தார்.
மெல்போர்ன்:
ஆஸ்திரேலிய ஒபன் டென்னிஸ் போட்டி மெல்போர்ன் நகரில் நாளை தொடங்க உள்ள நிலையில், கொரோனா தடுப்பூசி போட்டுகொண்டவர்கள் மட்டுமே போட்டியில் பங்கேற்க முடியும் என்று புதிய விதிமுறை அமல்படுத்தப்பட்டது. ஆனால், நடப்பு சாம்பியனான, நம்பர் ஒன் வீரர் நோவக் ஜோகோவிச் (வயது 34), தடுப்பூசி செலுத்திக்கொள்ளாததால் போட்டியில் பங்கேற்பதில் சிக்கல் ஏற்பட்டது.
எனினும், இந்த போட்டியில் பங்கேற்க போட்டி அமைப்பு குழுவின் மருத்துவ கமிட்டியிடம் மருத்துவ விதிவிலக்கு பெற்று கடந்த 5-ந் தேதி மெல்போர்ன் சென்றார். ஆனால் அவர் எல்லை பாதுகாப்பு படையினரால் தடுத்து நிறுத்தபட்டதுடன், அவரது விசாவும் அதிரடியாக ரத்து செய்யப்பட்டது. இதனால் அவர் மெல்போர்னில் தடுப்பு காவலில் வைக்கப்பட்டார். தனது விசா ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து மெல்போர்னில் உள்ள பெடரல் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்த ஜோகோவிச் தனக்கு சாதகமான தீர்ப்பை பெற்றார்.

ஜோகோவிச்சின் விசா ரத்தை திரும்ப பெற நடவடிக்கை எடுக்க உத்தரவிட்ட கோர்ட்டு அவரை தடுப்பு காவலில் இருந்து விடுவிக்க வேண்டும் என்று கடந்த 10-ந் தேதி தீர்ப்பளித்தது. இதனை அடுத்து அவர் ஆஸ்திரேலிய ஓபனுக்கு தயாராக பயிற்சியில் ஈடுபட்டு வந்தார். ஆனால், ஆஸ்திரேலிய குடியேற்ற மந்திரி அலெக்ஸ் ஹாவ்கே தனது தனிப்பட்ட அதிகாரத்தை பயன்படுத்தி ஜோகோவிச்சின் விசாவை நேற்று முன்தினம் மீண்டும் ரத்து செய்தார். இதனால் அவர் மறுபடியும் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளார். பொதுமக்களின் நலன் கருதி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அவர் நாடு கடத்தப்படும் நிலை ஏற்பட்டது.
நாடு கடத்தும் இந்த நடவடிக்கையை எதிர்த்து ஜோகோவிச், பெடரல் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தார். பெடரல் கோர்ட் தலைமை நீதிபதி ஜேம்ஸ் ஆல்சோப் மற்றும் இரண்டு நீதிபதிகள் இந்த வழக்கை இன்று விசாரித்து தீர்ப்பை ஒத்திவைத்தனர்.
பின்னர் இன்று பிற்பகல் தீர்ப்பு வழங்கப்பட்டது. அப்போது, ஜோகோவிச்சின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்வதாக நீதிபதிகள் அறிவித்தனர். ஜோகோவிச்சின் விசாவை ரத்து செய்து அவரை நாடு கடத்துவது தொடர்பாக குடியேற்ற மந்திரி எடுத்த முடிவையும் நீதிபதிகள் உறுதி செய்தனர். இதனால் ஆஸ்திரேலிய ஓபனில் பங்கேற்று, சாம்பியன் பட்டத்தை தக்கவைக்கும் வாய்ப்பை ஜோகோவிச் இழந்துள்ளார்.
இதையும் படியுங்கள்... 19 வயதுக்குட்பட்டோருக்கான உலக கோப்பை கிரிக்கெட் - முதல் போட்டியில் இந்திய அணி வெற்றி
தமிழ் தலைவாஸ் 10-வது லீக் ஆட்டத்தில் ஜெய்ப்பூர் பிங் பாந்தர்ஸ் அணியை எதிர்கொள்கிறது. ஜெய்ப்பூரை வீழ்த்தி தமிழ் தலைவாஸ் அணி 4-வது வெற்றியை பெறுமா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.
பெங்களூர:
8-வது புரோ கபடி ‘லீக்’ போட்டி பெங்களூரில் நடைபெற்று வருகிறது.
சென்னையை மையமாக கொண்ட தமிழ் தலைவாஸ் அணி 9 ஆட்டத்தில் 3 வெற்றி, 4 டை, 2 தோல்வியுடன் 27 புள்ளிகள் பெற்று 7-வது இடத்தில் உள்ளது.
தமிழ் தலைவாஸ் அணி 36-26 என்ற கணக்கில் புனே பல்தானையும், 39-33, என்ற கணக்கில் உ.பி.யோதவையும்,45-26 என்ற கணக்கில் அரியா னாவை தோற்கடித்து இருந் தது.
பெங்களூர் அணியிடம் 30-38 என்ற கணக்கிலும், பெங்கால் வாரியர்சிடம் 28-37 என்ற கணக்கிலும் தோற்று இருந்து. தெலுங்கு டைடன்ஸ் (40-40), யு மும்பை (30-30), தபாங் டெல்லி (30-30), பாட்னா பைரேட்ஸ் (30-30) ஆகிய அணிகளுடன் டை செய்திருந்தது.
தமிழ் தலைவாஸ் 10-வது லீக் ஆட்டத்தில் ஜெய்ப்பூர் பிங் பாந்தர்ஸ் அணியை இன்று இரவு 7.30 மணிக்கு எதிர்கொள்கிறது. ஜெய்ப்பூரை வீழ்த்தி தமிழ் தலைவாஸ் அணி 4-வது வெற்றியை பெறுமா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.
ஜெய்ப்பூர் அணி 9 ஆட்டத்தில் 5 வெற்றி, 4 தோல்வியுடன் 28 புள்ளிகள் பெற்று 5-வது இடத்தில் உள்ளது.
இன்று நடைபெறும் மற்றொரு ஆட்டத்தில் பாட்னா-பெங்களூர் அணிகள் மோதுகின்றன.
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போர்னில் நாளை தொடங்குகிறது. ‘நம்பர் ஒன்’ வீரரான ஜோகோவிச்சின் ‘விசா’ மீண்டும் ரத்து செய்யப்பட்டு இருப்பதால் அவர் இந்த போட்டியில் பங்கேற்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
மெல்போர்ன்:
ஆண்டின் முதல் கிராண்ட்ஸ்லாம் போட்டியான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போர்னில் நாளை (திங்கட்கிழமை) முதல் வருகிற 30-ந் தேதி வரை நடக்கிறது.
இந்த போட்டியில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் ‘நம்பர் ஒன்’ வீரரும், ஆஸ்திரேலிய ஓபனை 9 முறை வென்றவரும், நடப்பு சாம்பியனுமான நோவக் ஜோகோவிச் (செர்பியா), முன்னாள் நம்பர் ஒன் வீரரும், தரவரிசையில் 6-வது இடத்தில் இருப்பவருமான ரபெல் நடால் (ஸ்பெயின்), ஒலிம்பிக் சாம்பியன் அலெக்சாண்டர் ஸ்வெரேவ் (ஜெர்மனி), அமெரிக்க ஒபன் சாம்பியன் டேனில் மெட்விடேவ் (ரஷியா), சிட்சிபாஸ் (கிரீஸ்), ஆந்த்ரே ரூப்லெவ் (ரஷியா) உள்பட 32 முன்னணி வீரர்கள் களம் இறங்குகிறார்கள்.
கிராண்ட்ஸ்லாம் போட்டியில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் ஜோகோவிச், ரபெல் நடால், ரோஜர் பெடரர் (சுவிட்சர்லாந்து) ஆகியோர் தலா 20 முறை சாம்பியன் பட்டம் வென்று சமநிலை வகிக்கின்றனர். இதில் பெடரர் காயம் காரணமாக இந்த போட்டியில் கலந்து கொள்ளவில்லை. கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளாததால் சர்ச்சையில் சிக்கி சட்ட போராட்டம் மூலம் சாதகமான தீர்ப்பை பெற்ற ஜோகோவிச் சர்ச்சைக்கு மத்தியில் போட்டி அட்டவணையில் இடம் பெற்றுள்ளார். கோகோவிச், நடால் இடையே அதிக கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வெல்பவர் யார்? என்பதில் நேரடி போட்டி நிலவுவதால் இந்த போட்டி அதிக எதிர்பார்ப்பை பெற்றுள்ளது. 35 வயதான நடால் பிரெஞ்ச் ஓபனை 13 முறை வென்று இருந்தாலும், ஆஸ்திரேலிய ஓபனை ஒருமுறை (2009-ம் ஆண்டு) மட்டுமே சுவைத்து இருக்கிறார். ஆஸ்திரேலிய ஓபனில் ஜோகோவிச்சின் ஆதிக்கம் தொடருமா? அல்லது அவரது வெற்றிப்பயணத்துக்கு நடால் முட்டுக்கட்டை போட்டு அதிக கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை கைப்பற்றி உலக சாதனை படைப்பாரா? என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.
கொரோனா தடுப்பூசி போட்டுகொண்டவர்கள் மட்டுமே ஆஸ்திரேலிய ஓபன் போட்டியில் பங்கேற்க முடியும் என்று புதிய விதிமுறை அமல்படுத்தப்பட்டு இருப்பதால் இந்த போட்டியில் பங்கேற்க போட்டி அமைப்பு குழுவின் மருத்துவ கமிட்டியிடம் மருத்துவ விதிவிலக்கு பெற்று கடந்த 5-ந் தேதி மெல்போர்ன் சென்ற 34 வயது ஜோகோவிச் எல்லை பாதுகாப்பு படையினரால் தடுத்து நிறுத்தபட்டதுடன், அவரது விசாவும் அதிரடியாக ரத்து செய்யப்பட்டது. இதனால் அவர் மெல்போர்னில் தடுப்பு காவலில் வைக்கப்பட்டார். தனது விசா ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து மெல்போர்னில் உள்ள பெடரல் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்த ஜோகோவிச் தனக்கு சாதகமான தீர்ப்பை பெற்றார். ஜோகோவிச்சின் விசா ரத்தை திரும்ப பெற நடவடிக்கை எடுக்க உத்தரவிட்ட கோர்ட்டு அவரை தடுப்பு காவலில் இருந்து விடுவிக்க வேண்டும் என்று கடந்த 10-ந் தேதி தீர்ப்பளித்தது. இதனை அடுத்து அவர் ஆஸ்திரேலிய ஓபனுக்கு தயாராக பயிற்சியில் ஈடுபட்டு வந்தார்.
இந்த நிலையில் ஆஸ்திரேலிய குடியுரிமை மந்திரி அலெக்ஸ் ஹாவ்கே தனது தனிப்பட்ட அதிகாரத்தை பயன்படுத்தி ஜோகோவிச்சின் விசாவை நேற்று முன்தினம் மீண்டும் ரத்து செய்தார்.. இதனால் அவர் மறுபடியும் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளார். பொதுமக்களின் நலன் கருதி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ஆஸ்திரேலிய ஓபன் போட்டியில் ஜோகோவிச் மீண்டும் பங்கேற்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. தன் மீதான இந்த நடவடிக்கையை எதிர்த்து ஜோகோவிச் கோர்ட்டில் மேல்முறையீடு செய்து இருக்கிறார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்து கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கின் முடிவை பொறுத்தே ஜோகோவிச் போட்டியில் களம் இறங்குவாரா? என்பதில் இறுதி முடிவு தெரியும். போட்டி தொடங்க இன்னும் ஒரு நாள் மட்டுமே இருக்கும் நிலையில் ஜோகோவிச்சுக்கு மீண்டும் பிரச்சினை உருவாகி இருப்பதால் 21-வது கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வெல்லும் அவரது கனவுக்கு முட்டுக்கட்டை ஏற்படும் நிலை உள்ளது.
ஜோகோவிச் தனது முதல் சுற்று ஆட்டத்தில் சக நாட்டு வீரர் மியோமிர் மெக்மனோவிச்சையும், ரபெல் நடால், அமெரிக்காவின் மார்கோஸ் ஜிரோனையும் எதிர்கொள்கிறாரகள். ஜோகோவிச் இந்த போட்டியில் இருந்து விலக நேரிட்டாலும், ரபெல் நடால் பட்டத்தை கைப்பற்ற அலெக்சாண்டர் ஸ்வெரேவ், சிட்சிபாஸ், மெட்விடேவ் உள்ளிட்ட வீரர்களின் கடும் சவாலை சமாளிக்க வேண்டியது இருக்கும்.
பெண்கள் ஒற்றையர் பிரிவில் நடப்பு சாம்பியன் நவோமி ஒசாகா (ஜப்பான்), உலக தரவரிசையில் முதலிடத்தில் இருக்கும் ஆஷ்லி பார்ட்டி (ஆஸ்திரேலியா), சபலென்கா (பெலாரஸ்), சிமோனா ஹாலெப் (ருமேனியா), கார்பின் முகுருஜா (ஸ்பெயின்) மரியா சக்காரி (கிரீஸ்), பிரெஞ்ச் ஓபன் சாம்பியன் பார்போரா கிரெஜ்சிகோவா (செக் குடியரசு), அமெரிக்க ஓபன் சாம்பியன் எம்மா ரடுகானு (இங்கிலாந்து) ஆகியோர் இடையே பட்டம் வெல்வதில் கடும் போட்டி நிலவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உள்ளூர் வீராங்கனையான ஆஷ்லி பார்ட்டி நல்ல பார்மில் இருக்கிறார். இதனால் அவரது கை ஓங்க அதிக வாய்ப்புள்ளது. முதல் சுற்று ஆட்டங்களில் நவோமி ஒசாகா, கொலம்பியாவின் கமிலா ஒசோரியாவையும், ஆஷ்லி பார்ட்டி, உக்ரைனின் சுரென்கோவையும் சந்திக்கிறார்கள்.
ஆஸ்திரேலிய ஓபன் போட்டியின் மொத்த பரிசுத்தொகை ரூ.405 கோடியாகும். ஒற்றையர் பிரிவில் சாம்பியன் பட்டம் வெல்பவர்களுக்கு ரூ.23 ¾ கோடியும், 2-வது இடத்தை பெறுபவர்களுக்கு ரூ.11¾ கோடியும் பரிசாக கிடைக்கும். முதல் சுற்றில் வெற்றி பெற்றாலே ரூ.40 லட்சத்தை பெறலாம். இந்திய நேரப்படி நாளை அதிகாலை 5.30 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை சோனி சிக்ஸ், சோனி டென் 2, 3, 4 ஆகிய சேனல்கள் நேரடியாக ஒளிபரப்பு செய்கின்றன.
எதிர்காலத்தில் இந்திய அணியை புதிய உயரங்களுக்கு எடுத்து செல்வதற்கு கோலியின் பங்கு முக்கியமானதாக இருக்கும் என கங்குலி தெரிவித்தார்.
மும்பை:
இந்திய வீரர் விராட் கோலி தனது டெஸ்ட் கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாக நேற்று மாலை அறிவித்தார். ஏற்கனவே அவர் டி20, ஒருநாள் போட்டிகளின் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகிய நிலையில், தற்போது டெஸ்ட் கேப்டன் பொறுப்பில் இருந்தும் விலகியது அவரது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஏற்கனவே பிசிசிஐ - விராட் கோலிக்கு இடையே இருந்த கருத்து வேறுபாடு மற்றும் தென் ஆப்ரிக்கா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் தோல்வி ஆகிய காரணங்களே விராட் கோலியின் விலகளுக்கு காரணமாக இருக்கலாம் என பேசப்படுகிறது.

இந்நிலையில் இந்த அறிவிப்பு குறித்து பிசிசிஐ தலைவர் கங்குலி ட்விட்டரில் கூறியதாவது:-
’விராட் கோலியின் தலைமையில் இந்திய கிரிக்கெட் அணி அனைத்து வகையான கிரிக்கெட்டிலும் விரைவான முன்னேற்றம் கண்டுள்ளது. டெஸ்ட் கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாக அவர் எடுத்த முடிவு, அவரது தனிப்பட்ட முடிவாகும். அந்த முடிவை பிசிசிஐ மதிக்கிறது.
எதிர்காலத்தில் இந்திய அணியை புதிய உயரங்களுக்கு எடுத்து செல்வதற்கு அவரது பங்கு முக்கியமானதாக இருக்கும். அவர் ஒரு சிறந்த வீரர்’
இவ்வாறு சவுரவ் கங்குலி தெரிவித்தார்.
தொடக்க ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்க அணியை 45 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது.
கயானா:
19 வயதுக்கு உட்பட்டோருக்கான ஐ.சி.சி. உலக கோப்பை கிரிக்கெட் போட்டி வெஸ்ட் இண்டீசில் நடைபெற்று வருகிறது. இதில் இந்திய அணி ‘பி’ பிரிவில் இடம் பெற்று உள்ளது. தென் ஆப்பிரிக்கா, அயர்லாந்து, உகாண்டா ஆகிய நாடுகள் அந்த பிரிவில் இடம் பெற்று உள்ளன.
இந்திய அணி நேற்று தொடக்க ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்காவை எதிர்கொண்டது. கயானாவில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. மழை காரணமாக போட்டி 40 நிமிடங்கள் தாமதமாக தொடங்கியது.
முதலில் விளையாடிய இந்திய அணி, 46.5 ஓவர்கள் முடிவில் 232 ரன்கள் அடித்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக கேப்டன் யாஷ் துல் 82 ரன்கள் குவித்தார். மற்றொரு வீரர் கௌஷல் தம்பே 35 ரன்கள் அடித்தார்.
232 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பின்னர் களம் இறங்கிய தென் ஆப்பிரிக்க அணி 45.4 ஓவர்கள் முடிவில் 187 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இந்திய பந்து வீச்சாளர் விக்கி ஓஸ்ட்வால் 5 விக்கெட்களையும், ராஜ்பாவா 4 விக்கெட்களையும் கைப்பற்றினர். இதையடுத்து 45 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது.






