search icon
என் மலர்tooltip icon

    விளையாட்டு

    விராட் கோலி
    X
    விராட் கோலி

    கேப்டன் பதவியில் விராட் கோலியின் சாதனைகள்

    கேப்டன் பதவி விவகாரம் தொடர்பாக விராட் கோலிக்கும் இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் கங்குலிக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது.
    இந்திய கிரிக்கெட்டில் 3 வடிவிலான போட்டிகளுக்கும் (டெஸ்ட், ஒரு நாள் போட்டி, 20 ஓவர்) கேப்டனாக விராட் கோலி பணியாற்றி வந்தார்.

    சமீபத்தில் நடந்த உலக கோப்பை போட்டிக்கு முன்பு 20 ஓவர் கேப்டன் பதவியில் இருந்து அவர் விலகினார்.

    இதற்கிடையே தென் ஆப்பிரிக்க தொடருக்கான ஒரு நாள் கேப்டன் பதவியில் இருந்து விராட் கோலி நீக்கப்பட்டார். அவர் பதவி விலக மறுத்ததால் கிரிக்கெட் வாரியம் அவரை நீக்கியது.

    ஒயிட் பால் (ஒரு நாள் போட்டி, 20 ஓவர்) போட்டிகளுக்கு ஒரே கேப்டன் இருப்பது நல்லது என்று கருதி இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. ஒயிட் பால் போட்டிகளுக்கு ரோகித் சர்மா கேப்டனாக நியமிக்கப்பட்டார்.

    கேப்டன் பதவி விவகாரம் தொடர்பாக விராட் கோலிக்கும் இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் கங்குலிக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இந்த விவகாரத்தில் இருவரும் தெரிவித்த கருத்துக்கள் முன்னுக்கு பின் முரனாக இருந்தன.

    இந்த நிலையில் டெஸ்ட் கிரிக்கெட் அணியின் கேப்டன் பதவியில் யாருமே எதிர்பார்க்காத வகையில் விராட் கோலி விலகினார். தென்ஆப்பிரிக்க பயணத்தில் டெஸ்ட் தொடரை இழந்த பிறகு அவர் இந்த முடிவை அறிவித்தார்.

    கோலியின் இந்த திடீர் முடிவு கிரிக்கெட் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.

    கேப்டன் பதவியில் விராட் கோலியின் 7 ஆண்டு சகாப்தம் முடிவடைந்தது. இந்திய டெஸ்ட் கேப்டன் வெற்றிகரமான கேப்டன் விராட் கோலி ஆவார். அவரது தலைமையில் தான் இந்திய அணி அதிக வெற்றிகளை பெற்றுள்ளது.

    கோலி தலைமையில் 68 டெஸ்டில் விளையாடி 40-ல் வெற்றி பெற்றது. 11 டெஸ்ட் டிரா ஆனது. 17 போட்டியில் தோற்றது. வெற்றி சதவீதம் 58.82 ஆகும்.

    கோலி தலைமையில் இந்திய அணி ஜோகன்னஸ் பர்க், நாட்டிங்காம், அடிலெடு, மெல்போர்ன் டெஸ்டில் 2018-ல் வெற்றி பெற்றது. இதன் மூலம் ஒரே ஆண்டில் அன்னிய மண்ணில் 4 டெஸ்டில் வெற்றி தேடி தந்த முதல் இந்திய கேப்டன் ஆவார்.

    மேலும் செஞ்சூரியன் டெஸ்டில் முதல் வெற்றியை தேடி தந்த ஆசிய கேப்டன் ஆவார். தென்ஆப்பிரிக்கா, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் அதிக டெஸ்ட் வெற்றியை பெற்று சாதனை படைத்தார்.

    மேலும் அவர் பல்வேறு டெஸ்ட் சாதனைகளை புரிந்து இந்தியாவுக்கு பெருமை சேர்த்துள்ளார்.
    Next Story
    ×