என் மலர்
விளையாட்டு
பிரான்ஸ் இணையை வீழ்த்திய இந்தியாவின் சாத்விக் சாய்ராஜ் ராங்கி ரெட்டி மற்றும் சிராக் ஷெட்டி இணை இறுதி போட்டிக்கு முன்னேறி உள்ளது.
புதுடெல்லி:
டெல்லியில் உள்ள கே.டி. ஜாதவ் ஸ்டேடியத்தில் நடப்பாண்டிற்கான இந்திய ஓபன் பேட்மிண்டன் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில், ஆடவர் இரட்டையர் பிரிவு அரையிறுதி ஆட்டம் ஒன்றில், இந்தியாவின் சாத்விக் சாய்ராஜ் ராங்கி ரெட்டி மற்றும் சிராக் ஷெட்டி இணை, பிரான்ஸ் நாட்டின் பேபியன் டெல்ரூ மற்றும் வில்லியம் வில்லெஜர் இணையை எதிர்த்து விளையாடியது.
37 நிமிடங்கள் நடந்த இந்த போட்டியில் 21-10, 21-18 என்ற செட் கணக்கில் பிரான்ஸ் இணையை வீழ்த்திய இந்திய இணை, இறுதி சுற்று போட்டிக்கு முன்னேறி உள்ளது.
கோலிக்கு ஆதரவாக அலியா பட், அதியா ஷெட்டி, வாணி கபூர், சாரா டெண்டுல்கர், அர்ஜுன் கபூர் உள்ளிட்ட பல பிரபலங்கள் கருத்துக்களை பதிவிட்டுள்ளனர்.
மும்பை:
தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்துள்ள இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றது. இதில் 2-1 என்ற கணக்கில் தொடரை இழந்துள்ளது. இந்நிலையில், இந்திய டெஸ்ட் அணியின் தலைவர் பொறுப்பில் இருந்து விராட் கோலி திடீரென விலகியுள்ளார்.
தமது முடிவு குறித்து இன்ஸ்டாகிராமில், விராட் கோலி பதிவிட்டுள்ளதாவது:
"ஏழு வருடங்கள் கடின உழைப்பு, உழைப்பு மற்றும் இடைவிடாத விடாமுயற்சியுடன் ஒவ்வொரு நாளும் அணியை சரியான திசையில் கொண்டு சென்றேன். நான் முழு நேர்மையுடன் வேலையைச் செய்தேன், எதையும் விட்டுவிடவில்லை. எல்லாம் ஒரு முடிவுக்கு வர வேண்டும். ஒரு கட்டத்தில் நிறுத்துங்கள், இந்தியாவின் டெஸ்ட் கேப்டனாக இருக்கும் எனக்கு, இப்போது தான். பயணத்தில் பல ஏற்றங்கள் மற்றும் சில தாழ்வுகள் இருந்தன,
ஆனால் முயற்சியின்மையோ அல்லது நம்பிக்கையின்மையோ இருந்ததில்லை. நான் செய்யும் எல்லாவற்றிலும் எனது 120 சதவீதத்தை வழங்க வேண்டும் என்று எப்போதும் நம்புகிறேன். என் இதயத்தில் முழுமையான தெளிவு உள்ளது. மேலும் எனது அணிக்கு நான் நேர்மையற்றவராக இருக்க முடியாது. இவ்வாறு தமது பதிவில் கோலி குறிப்பிட்டிருந்தார்.
கோலியின் முடிவுக்கு ஆதரவாக இன்ஸ்டாகிராமில், நடிகர் ரன்வீர் சிங் பதிலளித்துள்ளார். அதில் 'ராஜா எப்போதும் ராஜாவாக இருப்பார்' என குறிப்பிட்டுள்ளார். நடிகர் நகுல் மேத்தா, தமது பதவில், நாங்கள் இதுவரை பாத்திராத வகையில் இந்திய டெஸ்ட் அணியை மிகச் சிறந்த அணியாக மாற்றிய உங்கள் சேவைக்கு நன்றி என தெரிவித்துள்ளார்.
கோலிக்கு ஆதரவாக அலியா பட், அதியா ஷெட்டி, வாணி கபூர், சாரா டெண்டுல்கர், அர்ஜுன் கபூர் உள்ளிட்ட பல பிரபலங்கள் கருத்துக்களை பதிவிட்டுள்ளனர்.
கேப்டன் பொறுப்பில் இருந்து கோலி விலகியது குறித்து கருத்து தெரிவித்துள்ள இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரவிசாஸ்திரி, விராட், தலை நிமிர்ந்து போகலாம். நிச்சயமாக இந்தியாவின் மிகவும் ஆக்ரோஷமான மற்றும் வெற்றிகரமானது இந்த அணி என்பதால் தனிப்பட்ட முறையில் எனக்கு சோகமான நாள். இவ்வாறு தமது பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தியா ஓபன் பேட்மிண்டன் தொடர் அரையிறுதிப் போட்டியில் இந்திய வீரர் லக்சயா சென் இன்று மலேசிய வீரரை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்
புதுடெல்லி:
இந்தியா ஓபன் பேட்மிண்டன் போட்டி தலைநகர் டெல்லியில் நடைபெற்று வருகிறது.
முன்னாள் நம்பர்-1 வீராங்கனையான பி.வி.சிந்து, இன்று நடைபெற்ற அரையிறுதி ஆட்டத்தில் தாய்லாந்தின் சுபநிதா கேத்தாங்கை சந்தித்தார்.
இப்போட்டியின் சிந்து முதல் சுற்றை 14- 21 என்ற கணக்கில் இழந்தார். இதையடுத்து, சுதாரித்துக் கொண்ட பி.வி.சிந்து இரண்டாவது சுற்றை 21 - 13 என்ற கணக்கில் வென்றார். இறுதிச்சுற்றில் சிந்து 10-21 என்ற கணக்கில் தோற்றார்.
இதேபோல் ஆடவர் இரட்டையர் பிரிவில் சாத்விக்சாய்ராஜ் ரங்கிரெட்டி- சிரக் ரெட்டி ஜோடி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. இந்த ஜோடி அரையிறுதியில் பிரான்ஸ் ஜோடியை வென்றது.
விராட் கோலி ஏற்கனவே இந்திய அணியின் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளின் கேப்டன் பதவியிலிருந்தும் விலகியுள்ளார்.
புதுடெல்லி:
தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்துள்ள இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றது. இதில் 2-1 என்ற கணக்கில் தொடரை இழந்துள்ளது.
இந்நிலையில், இந்திய அணியின் டெஸ்ட் கேப்டன் பொறுப்பில் இருந்து விராட் கோலி திடீரென விலகியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், இந்திய அணியின் டெஸ்ட் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகுகிறேன். எனக்கு ஆதரவளித்த அனைத்து ரசிகர்களுக்கும் நன்றி. மேலும், இந்திய அணியின் கேப்டனாக நீண்ட நாளாக பணியாற்ற வாய்ப்பு அளித்தமைக்காக பிசிசிஐக்கு நன்றி என குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படியுங்கள்...5 மாநில தேர்தல் - பொதுக்கூட்டங்களுக்கான தடை ஜனவரி 22 வரை நீட்டிப்பு
நெதர்லாந்து ஓபன் இறுதிப் போட்டியில் லோவிடம் தோற்ற லக்சயா சென், இந்த தொடரில் வெற்றி பெற்று சாதனை படைக்கும் உத்வேகத்துடன் களமிறங்குகிறார்.
புதுடெல்லி:
டெல்லியில் நடைபெற்று வரும் இந்தியா ஓபன் பேட்மிண்டன் தொடரில் இந்தியாவின் முன்னணி வீரர் லக்சயா சென் இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.
உலக சாம்பியன்ஷிப் போட்டியில் வெண்கலம் வென்ற லக்சயா சென், இன்று நடைபெற்ற அரையிறுதி ஆட்டத்தில், மலேசிய வீரர் நிக் சீ யாங்குடன் மோதினார். இப்போட்டியில் 19-21 21-16 21-12 என்ற செட்கணக்கில் லக்சயா சென் வெற்றி பெற்றார். நாளை நடைபெற உள்ள இறுதிப்போட்டியில் சிங்கப்பூர் வீரர் லோ கீன் யீவுடன் பலப்பரீட்சை நடத்த உள்ளார்.
5ம் தரநிலை வீரரான லோ கீன் யீவ், அரையிறுதி ஆட்டத்தில் கனடாவின் பிரையன் யாங்குடன் விளையாடுவதாக இருந்தது. ஆனால், தொண்டை வலி மற்றும் தலைவலி காரணமாக பிரையன், போட்டியில் இருந்து விலகினார். இதனால் லோ கீன் யீவ் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார்.
நெதர்லாந்து ஓபன் இறுதிப் போட்டியில் லோவிடம் தோற்ற லக்சயா சென், இந்த தொடரில் அவரை வீழ்த்தி சாதனை படைக்கும் உத்வேகத்துடன் களமிறங்குகிறார். இதுவரை இருவரும் 4 முறை நேருக்கு நேர் மோதி உள்ளனர். இருவரும் தலா வெற்றிகளுடன் சமநிலையில் உள்ளனர்.
இதையும் படியுங்கள்... ஜோகோவிச் இல்லாவிட்டாலும் ஆஸி. ஓபன் களைகட்டும்- ரபேல் நடால் கருத்து
இங்கிலாந்துக்கு எதிரான 5வது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியாவின் டிராவிஸ் ஹெட், கிரீன் ஜோடி 5வது விக்கெட்டுக்கு 121 ரன்கள் சேர்த்தது.
ஹோபர்ட்:
ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் தொடரில் விளையாடி வருகிறது. 4 போட்டிகள் முடிவில் ஆஸ்திரேலியா 3-0 என தொடரைக் கைப்பற்றியுள்ளது.
இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 5வது மற்றும் கடைசி போட்டி நேற்று தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் களமிறங்கிய ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 303 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. டிராவிஸ் ஹெட் சிறப்பாக ஆடி சதமடித்து 101 ரன்னில் அவுட்டானார். கிரீன் 74 ரன்கள் எடுத்தார். லபுசேன் 44 ரன்கள் எடுத்தார்.
இங்கிலாந்து சார்பில் பிராட், மார்க் வுட் தலா 3 விக்கெட்டும், ராபின்சன், கிறிஸ் வோக்ஸ் தலா 2 விக்கெட்டும் கைப்பற்றினர்.
இதையடுத்து, இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் களமிறங்கியது. சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் சரிந்தன. இதனால் இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 188 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. கிறிஸ் வோக்ஸ் 36 ரன்னும், ஜோ ரூட் 34 ரன்னும் எடுத்தனர்.
ஆஸ்திரேலியா சார்பில் பாட் கம்மின்ஸ் 4 விக்கெட்டும், ஸ்டார்க் 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதைத்தொடர்ந்து, 123 ரன்கள் முன்னிலை பெற்ற ஆஸ்திரேலியா இரண்டாவது இன்னிங்சை விளையாடி வருகிறது.
குடியேற்ற மந்திரி அலெக்ஸ் ஹாவ்கே, தன்னுடைய அதிகாரத்தைப் பயன்படுத்தி ஜோகோவிச்சின் விசாவை மறுபடியும் ரத்து செய்தார்.
மெல்போர்ன்:
ஆஸ்திரேலிய ஒபன் டென்னிஸ் தொடர் வரும் திங்கட்கிழமை மெல்போர்ன் நகரில் தொடங்க உள்ள நிலையில், செர்பியாவின் நட்சத்திர வீரர் நோவக் ஜோகோவிச், இப்போட்டியில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலியாவில் கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வரும் நிலையில், இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கு மட்டுமே நாட்டிற்குள் அனுமதி என ஆஸ்திரேலிய அரசு தெரிவித்த நிலையில், ஜோகோவிச் தடுப்பூசி செலுத்தாமல் சென்றதால் அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டது. ஆஸ்திரேலிய எல்லை பாதுகாப்பு படை அதிகாரிகள் அவரது விசாவை ரத்து செய்து மெல்போர்னில் தடுப்பு காவலில் வைத்திருந்தனர்.
அதன்பின்னர், இந்த தடையை மெல்போர்னில் உள்ள பெடரல் கோர்ட் ரத்து செய்தது. எனினும், குடியேற்ற மந்திரி அலெக்ஸ் ஹாவ்கே, தன்னுடைய அதிகாரத்தைப் பயன்படுத்தி ஜோகோவிச்சின் விசாவை மறுபடியும் ரத்து செய்தார். இதனால் ஜோகோவிச் மீண்டும் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டார். அத்துடன் அவர் பொது ஒழுங்குக்கு அச்சுறுத்தல் என்று கூறி அவரை நாடு கடத்துவது தொடர்பாக நீதிமன்றத்தில் அரசு தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு மீது நாளை விசாரணை நடைபெற உள்ளது.
இந்நிலையில், ஆஸ்திரேலியாவில் ஜோகோவிச்சுகு விசா மறுப்பு குறித்து ஸ்பெயின் வீரர் ரபேல் நடால் கருத்து தெரிவித்துள்ளார். ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரை விட எந்த ஒரு வீரருக்கும் கொடுக்கப்படும் முக்கியத்துவம் பெரியதல்ல என்றார் நடால். ஜோகோவிச் மிகச்சிறந்த வீரர்தான்; அவர் பங்கேற்காவிட்டாலும் ஆஸ்திரேலிய ஓபன் சிறப்பானதாகவே இருக்கும் என்றும் நடால் தெரிவித்தார்.
கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் 20 முறை சாம்பியன் பட்டங்களை வென்றுள்ள வீரர்களில் பெடரர் , நடால் ஆகியோருடன் ஜோகோவிச்சும் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தென் ஆப்பிரிக்க அணிக்கு போதுமான அழுத்தத்தை கொடுக்காததால் 3வது டெஸ்ட் போட்டியில் தோல்வி அடைந்ததாக போட்டிக்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய இந்திய அணித் தலைவர் கோலி தெரிவித்துள்ளார்.
கேப் டவுன்:
இந்தியாவுக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்ற தென் ஆப்பிரிக்க அணி 2-1 என்ற கணக்கில் தொடரையும் கைப்பற்றியுள்ளது. இந்த நிலையில் டி.ஆர்.எஸ்.முறை குறித்த இந்திய வீரர்களின் கருத்து மற்றும் இந்திய அணியின் தோல்வி குறித்து போட்டிக்கு பின்னர் செய்தியாளர்களிடம் அணித் தலைவர் கோலி பேசியதாவது:
எனக்கும் எந்தக் கருத்தும் இல்லை. களத்தில் என்ன நடந்தது என்பதை நாங்கள் புரிந்துகொண்டோம், வெளியில் இருப்பவர்களுக்கு மைதானத்தில் என்ன நடக்கிறது என்பது பற்றிய சரியான விவரங்கள் தெரியவில்லை. நாங்கள் ஆரம்பத்திலேயே மூன்று விக்கெட்டுகளை எடுத்திருந்தால், அதுவே ஆட்டத்தை மாற்றிய தருணமாக இருந்திருக்கும்.
நிலைமையின் உண்மை என்னவென்றால், இந்த டெஸ்ட் போட்டியின் போது நாங்கள் நீண்ட நேரத்திற்கு அவர்கள் மீது போதுமான அழுத்தத்தை கொடுக்கவில்லை, அதனால் நாங்கள் ஆட்டத்தை இழந்தோம்.
ஒரு சர்ச்சையை உருவாக்குவது மிகவும் உற்சாகமாக தோன்றுகிறது.
நான் அதை உருவாக்குவதில் ஆர்வம் காட்டவில்லை. அந்த தருணத்தில் இருந்து நாங்கள் நகர்ந்து விட்டோம். ஆட்டத்தில் நாங்கள் கவனம் செலுத்தினோம். விக்கெட்டுகளை விரைவாக வீழ்த்த முயற்சி செய்தோம். இவ்வாறு தமது பேட்டியின்போது கோலி குறிப்பிட்டார்.
ஆடவர் ஒற்றையர் பிரிவு காலிறுதி ஆட்டத்தில் லக்சயா சென், மற்றொரு இந்திய வீரரான பிரனோயை வீழ்த்தினார்.
புதுடெல்லி:
டெல்லியில் நடைபெற்று வரும் இந்தியா ஓபன் பேட்மிண்டன் போட்டியில் இந்திய வீரர், வீராங்கனைகள் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை பதிவு செய்துவருகிறார்கள்.
முன்னாள் நம்பர்-1 வீராங்கனையான பி.வி.சிந்து, இன்று நடைபெற்ற காலிறுதி ஆட்டத்தில், சக வீராங்கனை ஆஷ்மிதா சாலிஹாவை எதிர்கொண்டார். இப்போட்டியின் துவக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய சிந்து, 36 நிமிடங்களில் 21-7, 21-18 என்ற செட்கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறினார். அரையிறுதியில் பி.வி.சிந்து, தாய்லாந்தின் சுபநிதா கேத்தாங்கை சந்திக்க உள்ளார்.
இதேபோல் ஆடவர் ஒற்றையர் பிரிவு காலிறுதி ஆட்டத்தில் லக்சயா சென், பிரனோய் மோதினார்கள். இப்போட்டியில் 14-21 21-9 21-14 என்ற செட்கணக்கில் லக்சயா சென் போராடி வெற்றி பெற்றார். அரையிறுதியில் மலேசியாவின் நிக் சீ வாங்குடன் மோதுகிறார்.

மகளிருக்கான மற்றொரு காலிறுதி ஆட்டத்தில் இந்தியாவின் அகார்ஜி காஷ்யப், சக வீராங்கனை மாளவிகாவை வீழ்த்தினார். அரையிறுதியில் தாய்லாந்து வீராங்கனை பூசனனை எதிர்கொள்கிறார். பூசனன், காலிறுதி ஆட்டத்தில் அமெரிக்க வீராங்கனை லாரன் லாமை வீழ்த்தியிருந்தார்.
இதேபோல் ஆடவர் இரட்டையர் பிரிவில் சாத்விக்சாய்ராஜ் ரங்கிரெட்டி- சிரக் ரெட்டி ஜோடி அரையிறுதிக்கு முன்னேறியது. இந்த ஜோடி காலிறுதியில் சிங்கப்பூர் ஜோடியை வென்றது.
மகளிர் இரட்டையர் பிரிவில் ஹரிதா-ஆஷ்னா ராய் ஜோடி காலிறுதியில் ருத்ராணி ஜெய்ஸ்வால்- ஜமாலுதீன் அனீஸ் கவுசர் ஜோடியை 21-16 21-16 என்ற கணக்கில் வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது.
கேப்டவுன் டெஸ்ட் போட்டியில் இன்று 4ம் நாள் ஆட்டத்தின்போது தொடர்ந்து ஆடிய பீட்டர்சன், இந்தியாவின் வெற்றிக் கனவை தகர்த்தார்.
கேப்டவுன்:
இந்தியா- தென்ஆப்பிரிக்கா அணிகள் இடையேயான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கேப்டவுனில் நடைபெற்றது. முதல் இன்னிங்சில் இந்தியா 223 ரன்னகளும், தென் ஆப்பிரிக்கா 210 ரன்களும் எடுத்தன. இதையடுத்து 13 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை ஆடிய இந்திய அணி 198 ரன்களில் சுருண்டது.
இதையடுத்து 212 ரன்கள் இலக்கை நோக்கி தென்ஆப்பிரிக்கா அணி 2வது இன்னிங்ஸை தொடங்கியது. 3-ம் நாள் ஆட்ட முடிவில் தென்ஆப்பிரிக்கா அணி 2 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 101 ரன்கள் எடுத்து வலுவான நிலையில் இருந்தது. கீகன் பீட்டர்சன் 48 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

இன்று 4ம் நாள் ஆட்டத்தின்போது தொடர்ந்து ஆடிய பீட்டர்சன், இந்தியாவின் வெற்றிக் கனவை தகர்த்தார். நீண்ட நேரம் களத்தில் நின்று கெத்து காட்டிய அவர் 82 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து ராசி வான் டெர் டுசென் 41 ரன்களும் (நாட் அவுட்), டெம்பா பவுமா 32 ரன்களும் (நாட் அவுட்) சேர்க்க, தென் ஆப்பிரிக்க அணி 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து இலக்கை எட்டியது.
இந்த போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்திய தென் ஆப்பிரிக்க அணி, டெஸ்ட் தொடரை 2-1 என கைப்பற்றி உள்ளது. கடைசி போட்டியின் சிறந்த வீரர் மற்றும் தொடர் நாயகன் என இரண்டு விருதுகளையும் கீகன் பீட்டர்சன் தட்டிச் சென்றார்.
ஜோகோவிச்சின் விசாவை இரண்டாவது முறையாக ரத்து செய்துள்ளதால் ஆஸ்திரேலிய ஓபன் டென்னிசில் அவர் பங்கேற்பது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மெல்போர்ன்:
இந்த ஆண்டின் முதல் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடரான ஆஸ்திரேலியா ஒபன் வரும் திங்கட்கிழமை மெல்போர்ன் நகரில் தொடங்குகிறது.
கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வரும் நிலையில், இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கு மட்டுமே நாட்டிற்குள் அனுமதி என ஆஸ்திரேலியா அரசு தெரிவித்த நிலையில், ஜோகோவிச் தடுப்பூசி செலுத்தாமல் சென்றார். அவரை மெல்போர்ன் விமான நிலையத்தில் அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர்.
ஆஸ்திரேலியாவுக்குள் நுழைய அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டதுடன், ஆஸ்திரேலிய எல்லை பாதுகாப்பு படை அதிகாரிகள் அவரது விசாவை ரத்து செய்து மெல்போர்னில் தடுப்பு காவலில் வைத்திருந்தனர்.
இதற்கிஐயே, ஆஸ்திரேலிய ஓபனில் பங்கேற்க அனுமதி அளிக்க வேண்டும் எனக்கோரி ஜோகோவிச் மெல்போர்னில் உள்ள பெடரல் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். விசாரணை முடிவில் ஜோகோவிச் விசாவை ரத்து செய்த ஆஸ்திரேலிய அரசின் முடிவை ரத்து செய்து நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், தீர்ப்பு வெளியான அடுத்த 30 நிமிடங்களில் தடுப்புக் காவல் மையத்திலிருந்து ஜோகோவிச்சை விடுவிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டது.
ஆனால், குடியேற்ற மந்திரி அலெக்ஸ் ஹாவ்கே, தனிப்பட்ட அதிகாரத்தைப் பயன்படுத்தி விசாவை ரத்து செய்ய முடியும் என அரசு தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார்.
இந்நிலையில், ஆஸ்திரேலியாவின் குடியேற்ற மந்திரி அலெக்ஸ் ஹாவ்கே, தன்னுடைய அதிகாரத்தைப் பயன்படுத்தி ஜோகோவிச்சின் விசாவை மறுபடியும் ரத்து செய்துள்ளார். இதன்மூலம் ஆஸ்திரேலிய ஓபன் டென்னிசில் ஜோகோவிச் பங்கேற்பது சந்தேகமே.
பொது மக்களின் நலன் கருதி என்னுடைய அதிகாரத்தைப் பயன்படுத்தி 133சி(3) பிரிவின் கீழ் நோவக் ஜோகோவிச் விசாவை ரத்து செய்கிறேன் என அலெக்ஸ் ஹாவ்கே தெரிவித்துள்ளார்.
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3-வது டெஸ்டின் இரண்டாவது இன்னிங்சில் இந்திய வீரர் ரிஷப் பண்ட் அதிகபட்சமாக 100 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
கேப் டவுன்:
இந்தியா, தென் ஆப்பிரிக்கா அணிகள் இடையேயான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கேப்டவுனில் நடைபெற்று வருகிறது.
டாஸ் வென்ற இந்திய அணி முதல் இன்னிங்சில் 77.3 ஓவர்களில் 223 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. கேப்டன் விராட் கோலி அதிகபட்சமாக 79 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.
தென்ஆப்பிரிக்கா தரப்பில் காஜிசோ ரபடா 4 விக்கெட்டும், மார்கோ ஜான்சென் 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.
அடுத்து ஆடிய தென் ஆப்பிரிக்க அணி முதல் இன்னிங்சில் 76.3 ஓவர்களில் 210 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
இந்திய அணி தரப்பில் அதிகபட்சமாக பும்ரா 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
13 ரன்கள் முன்னிலை வகித்த இந்திய அணி 2-வது இன்னிங்சில் 198 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ரிஷப் பண்ட் அதிகபட்சமாக 100 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
தென் ஆப்பிரிக்கா சார்பில் ஜேன்சன் 4 விக்கெட்டும், ரபாடா, நிகிடி தலா 3 விக்கெட் வீழ்த்தினர்.
இதையடுத்து 212 ரன்கள் இலக்கை நோக்கி தென் ஆப்பிரிக்கா அணி 2வது இன்னிங்சை தொடர்ந்தது. 3-ம் நாள் முடிவில் அந்த அணி 2 விக்கெட்டுக்கு 101 ரன்கள் எடுத்துள்ளது.
இந்நிலையில், ஆட்டத்தின் 21-வது நிமிடத்தில் அஷ்வின் வீசிய ஓவரை கேப்டன் டீன் எல்கர் எதிர்கொண்டார். அப்போது டீன் எல்கர் கால்காப்பில் வாங்கிய பந்துக்கு அஷ்வின் உள்ளிட்ட வீரர்கள் நடுவரிடம் அப்பீல் செய்தனர். இதற்கு களநடுவர் அவுட் வழங்கினார்.
கேப்டன் எல்கர் டிஆர்எஸ்முறையில் அப்பீல் செய்தார். இதை டிவி ஸ்க்ரீனில் பார்த்த நடுவர்கள் பந்து ஸ்டெம்புக்கு மேலே செல்லும் என்று கூறி அவுட் வழங்கியதை ரத்து செய்தனர். ஆனால், எல்கர் கால்காப்பில் வாங்கியது தெளிவாகத் தெரிந்தது, அவுட் என்பதும் தெளிவாகத் தெரிந்தது.
டிஆர்எஸ் முறையில் அவுட் ரத்தானது இந்திய வீரர்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. இதையடுத்து, ஸ்டெம்ப்பில் உள்ள மைக்ரோஃபோனில் இந்திய வீரர்கள் தங்கள் அதிருப்தியை பதிவு செய்தனர்.
உங்கள் அணியில் கவனம் செலுத்துங்கள், எதிரணியின் மீது அல்ல. எல்லா நேரமும் எங்களை பின்தொடர முயற்சிக்கிறார்கள் என்றார் கேப்டன் விராட் கோலி.
இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் கே.எல்.ராகுல், 11 வீரர்களுக்கு எதிராக ஒட்டுமொத்த நாடே விளையாடுகிறது என தெரிவித்தார்.
இதையும் படியுங்கள்...2வது ஒருநாள் போட்டி - வெஸ்ட் இண்டீசுக்கு அதிர்ச்சி அளித்த அயர்லாந்து






